கிளிநொச்சியில் ஆடைத்தொழிற்சாலை ஒன்று அமைக்கப்படவுள்ளதாகவும், இதில் ஆயிரம் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் எனவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரான இ.அங்கஜன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் ஆடைத்தொழிற்சாலை ஒன்றை அமைப்பதற்காக 10 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இத்தொழிற்சாலைக்கான அடிக்கல்லை நாட்டி வைத்ததாகவும், வடமாகாண அபிவிருத்திப்பணிகளில் இந்த ஆடைத்தொழிற்சாலை முக்கிய இடத்தை வகிக்கும் எனவும் அங்கஜன் தெரிவித்தார். இத்தொழிற்சாலையில் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள புலி உறுப்பினர்களுக்கும் தொழில்வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கிளிநொச்சியில் அமையவுள்ள இந்த ஆடைத் தொழிற்சாலையை இயக்குவதற்கு ‘றை ஸ்ரார் அப்பறெல்’ நிறுவனத்தின் தலைவர் குமார் தேவபுர முன்வந்துள்ளதாகவும் அங்கஜன் தெரிவித்துள்ளார்.
nepolean
Ankajen ok ok Mr Sritharan MP blamed an army soldier raped our woman in poonagari. What do you going to say now? Our Minister douglas is busy. He is really helping our people. people like you i mean (SLFP) People looking our votes. Common this is our sister . Can you do something ——atleast punish that criminal?
மாயா
நெப்போலியன் ; அங்கஜன் ஆடைத் தொழிற்சாலைதான் ஆரம்பிக்கிறார். அவர் காவல் நிலையம் திறக்கவில்லை. இது வெறும்கையோடு நிற்கும் மக்களுக்கு ஒரு வேலை வாய்ப்பை கொடுப்பதற்காகவே.
குற்றங்கள் உலகின் அனைத்து இடங்களிலும் நடக்கிறது? சிகப்பு விளக்கு பகுதிகள் உள்ள வெளிநாடுகளிலேயே நடக்கிறது. எவனுக்காவது கொழுப்பெடுத்தால் அங்கு போகலாம். இருந்தாலும் ; எல்லாம் செய்ய முடிந்த வெளிநாடுகளிலேயே நடக்கும் போது ; இலங்கையில் குற்றமே நடக்காது என அறுதியிட்டு சொல்ல முடியாது. நடக்கும் ; அதைத் தவிர்க்க வழி காண வேண்டும்.
nepolean
அங்கஜன் ஆடைத் தொழிற்சாலைதான் ஆரம்பிக்கிறார். அவர் காவல் நிலையம் திறக்கவில்லை. இது வெறும்கையோடு நிற்கும் மக்களுக்கு ஒரு வேலை வாய்ப்பை கொடுப்பதற்காகவே./maya
There is already a problem for Srilanka’s textile industry because of the GSP+. They open garments factory in Atchuvely,Vavuniya, Kilinochchi and etc. Why? Any way, if any good thing happened to our people I will be happy.
மாயா
//There is already a problem for Srilanka’s textile industry because of the GSP+.//
GSP+ பற்றி நாங்கள் கவலைப்பட வேண்டுமா? அதுவும் கடந்து போகும். இதுவே உலகம். அங்கே அல்லல்படுவோருக்கு வாழ வழி தேவை. அதற்கு வேலை வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும். யாரும் ஆயும் கொடுப்பதையோ அல்லது அந்த மக்கள் தற்கொலை செய்து கொள்வதையோ எம்மால் ஆதரிக்க முடியாது. வேலைக்கு போகும் போது எமக்கு முதளாளி சம்பளம் தருவாரா என்பதே தொழிலாளியின் பிரச்சனை. அவர் யாரோடு வியாபாரம் செய்வார்? செய்ய மாட்டார் என்பது தொழிலாளியின் பிரச்சனையில்லை. அவருக்கு நட்டம் வந்தால் மூடட்டும். வேறு இடத்தில் வேலைக்கு போறதுதானே? இதுதானே வழமையான நிலமை?
சாப்பாடே வெளிநாட்டில் இருந்து வராமல் தடுத்த காலத்தில் மரவெள்ளிக் கிழங்கு சாப்பிட்டவர்கள் நாங்கள். அதையும் நாங்களே நட்டு- வளர்த்து – பிடுங்கி சாப்பிட்டவர்கள்.
GSP+ , for Us Jujubi.
சாந்தன்
இந்த அங்கஜன் குடும்பம் பற்றி ஏற்கனவே இன்னொரு தலைப்பில் எழுதி இருக்கிறேன். இவர்கள் ஒன்றும் நாட்டுக்காகச் இதைச் செய்யவில்லை. BCCI வங்கி வெளிநாட்டு வைப்புகளையே கொள்ளையிடப்போய் மாட்டிக்கொண்டது இவர்களின் வரலாறு. மறுப்பாரா அங்கஜன். அவ்வாறான குடும்பம் இப்போது என்ன்னத்தைக் கொள்ளையிட வந்திருக்கிறார்களோ? அங்கஜனின் குடும்பம் பற்றி தெரிந்தவர்கள் யாரும் இவர்கள் ஸ்ரீலங்கா அரசியலுக்குள் வருவதை விரும்பவில்லை!
மாயா சொல்வதுபோல் வழமையான அரச ‘கதையாடல்கள்’ .’உறுதிமொழிகள்’ போல இதுவும் கடந்துபோகும்!
மாயா
அரசியல்வாதிகள் அனைவரும் திருடர்களே. இயக்கங்கள் அனைத்தும் கொள்ளை : கொலைகாரர்களே. இதுதான் உண்மை சாந்தன்.
எமது நாட்டு மக்கள் ; தன் மக்களையே வெட்டிச் சாப்பாடாமல் வாழ ; இப்படியாவது ஏதாவது தொழில் கிடைத்து தற்காலீகாமாகவாவது உயிர் வாழ வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் ஆபிரிக்காவில் போல மடிந்து போவார்கள். புலத்தில் கோடிகளாக பணம் வைத்திருக்கும் புலிகள் தமது பணத்தை அந்த மக்களின் நல்வாழ்வுக்கு கொடுக்கத் தயாராக இல்லை. இதுவும் பலரால் மறுக்க முடியாத உண்மை.
மலைக் கள்ளன் போன்ற திருடர்களும் மனமிரங்கி இப்படி ஏதாவது செய்யும் போது அதை தடை செய்யலாகாது. காலம் பதில் சொல்லும். கடந்த கால உலக வரலாறுகளில் யுத்தங்கள் நடந்த தேசங்கள் இன்று செழிப்போடு இருக்கின்றன. அதுபோல நிச்சயம் நமது மக்களும் செழிப்போடு வாழ்வார்கள். அதற்காக இன்னொரு யுத்தம் தேவை என சொல்ல மாட்டேன்.