வெளியேற்றப்பட்ட முஸ்லீம்களை வரவேற்று அவர்களின் மீள்குடியேற்றத்திற்கு உதவ தமிழ் அரங்கம் முன்வர வேண்டும்! ரிபிசி வானொலி – தேசம்நெற் கூட்டான செய்திக்குறிப்பு

Tamil_Arangamவெளியேற்றப்பட்ட யாழ் முஸ்லீம்களை மீண்டும் வரவேற்று அவர்களின் மீள் குடியேற்றத்திற்கு உதவ தமிழ் கட்சிகளின் ஒன்றியமாகச் செயற்படும் தமிழ் அரங்கம் பெருந்தன்மையுடன் முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர். யாழ் முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டு 20 ஆண்டுகளைக் குறிக்கும் கலந்துரையாடல் ஒக்ரோபர் 31 2010ல் ரிபிசி வானொலியில் இடம்பெற்ற போதே இக்கருத்து முன்வைக்கப்பட்டது. இரு மணிநேரம் இடம்பெற்ற இக்கலந்துரையாலில் ரிபிசி வானொலியும் தேசம்நெற் உம் இணைந்து ‘வெளியேற்றப்பட்ட முஸ்லீம்களின் மீள்குடியேற்றத்தில் தமிழ் அரங்கம் முன்மாதிரியாகச் செயற்பட்டு அம்மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கிடைக்கச் செய்ய வேண்டும்’ என்ற கோரிக்கையை வைத்தனர்.

இக்கலந்துரையாடலில் ரிபிசி பணிப்பாளர் வி ராம்ராஜ், ஆய்வாளர் வி சிவலிங்கம், தயாரிப்பாளர் வை லோகநாதன் ஆகியோருடன் தேசம்நெற் ஆசிரியர்கள் த ஜெயபாலன், ரி சோதிலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர். இக்கலந்துரையாடலில் யாழ் முஸ்லீம் ஒன்றியம் (பிரித்தானியா) செயலாளர் பாசில் கபூர், அமைப்பாளர் ரமேஸ் மூசின், மொகமட் பலீல், யங் ஏசியா தொலைக்காட்சியின் முன்னாள் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் அஜீட் இக்பால் ஆகியோர் கலந்தகொண்டனர். இவர்கள் அனைவரும் 20 ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் யாழ்ப்பாணத்தில் இருந்து யாழ் மாநகரசபை உறுப்பினர் மௌலவி சுப்பியான் அவர்களும் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் ரிபிசி நேயர்களும் இணைந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.

பொதுவாக மீள் குடியேற்றம் தொடர்பில் அரசு அசமந்த போக்கை கடைப்பிடிப்பதாகவும் கடந்த 20 ஆண்டுகளாக முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் அரசு காத்திரமான பங்களிப்பைச் செய்யவில்லை என்றும் கலந்துரையாடலில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. ஆனால் அரசு நிதி நெருக்கடிகளை எதிர்நோக்குவதாகவும் இந்த மீள் குடியேற்றத்திற்கு ஏனைய நாடுகளும் தனவந்தர்களும் தமிழ் மக்களும் தங்களாலான உதவிகளை வழங்க முன்வர வேண்டும் என்று யாழ் மாநகரசபை உறுப்பினர் மௌலவி சுப்பியான் தெரிவித்தார். இக்கருத்தை ஏனையவர்கள் மறுத்ததுடன் அரசின் பொறுப்புணர்வை வலியுறுத்தினர். தமிழ் மக்கள் இன்றைய நிலையில் மிகுந்த இன்னல்களுக்கு உள்ளாகி இருக்கும் நிலையில் அவர்களை எதிர்பார்க்க முடியாது இது அரசினுடைய பொறுப்பு என்பதை அஜீட் இக்பால் வலியுறுத்தினார்.

Muslim_IDPs_Get_Supportதமிழ் மக்கள் பலரும் தங்களை வரவேற்று தங்களாலான ஒத்துழைப்புகளை வழங்கி வருவதாகத் தெரிவித்த மௌலவி சுப்பியான் தமிழ் கட்சிகளிடம் இருந்து பெருந்தன்மையான வரவேற்பு வரவிலலை என்ற வருத்தத்தை வெளியிட்டார். அப்போதே ‘வெளியேற்றப்பட்ட முஸ்லீம்களின் மீள்குடியேற்றத்தில் தமிழ் அரங்கம் முன்மாதிரியாகச் செயற்பட்டு அம்மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கிடைக்கச் செய்ய வேண்டும்’ என்றும் ‘வெளியேற்றப்பட்ட யாழ் முஸ்லீம்களை மீண்டும் வரவேற்று அவர்களின் மீள் குடியேற்றத்திற்கு உதவ தமிழ் அரங்கம் பெருந்தன்மையுடன் முன்வர வேண்டும்’ என்றும் தேசம்நெற், ரிபிசி வானொலி சார்பில் தமிழ் அரங்கத்தை நோக்கி கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு முஸ்லீம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் கிடைக்க ஒத்துழைக்க வேண்டும் எனவும் அங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

முஸ்லீம்களுக்கு எதிராக வடமாகாணத்தில் நிகழ்த்தப்பட்டது ஒரு இனச்சுத்திகரிப்பு என்றும் இவ்விரு சமூகங்களுக்கு இடையேயும் உள்ள நம்பிக்கையீனங்களை இல்லாமல் செய்வதற்கு தொடர்ச்சியான கருத்துப் பரிமாற்றங்கள் அவசியம் என்பதும் அங்கு வலியுறுத்தப்பட்டது. முஸ்லீம்களுக்கு என்று தனியான பலமான ஊடக அமைப்புகள் இல்லாத சூழலில் தமிழ் ஊடகங்கள் முஸ்லீம்களின் அரசியல் விடயங்களுக்கு மதிப்பளித்து அவர்களுடைய அரசியல் குரல்களைக் கேட்கச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. தேசம்நெற், ரிபிசி வானொலி ஆகிய இரு ஊடகங்களுமே முஸ்லீம் அரசியல் விடயங்களுக்கு தக்க களம் அமைத்து வருவதை ராம்ராஜ் சுட்டிக்காட்டியதுடன் முஸ்லீம் நிகழ்ச்சி ஒன்றுக்கு நேரம் வழங்குவதற்கும் முன்வந்தார்.

இரு சமூகங்களிடையேயும் உள்ள தவறான சிந்தனைப் போக்குகளைவிட்டு புரிந்துணர்விற்கான சிந்தனையை வளர்த்தெடுக்க காத்திரமான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்பதும் இக்கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. அதற்கு இரு சமூகங்களிடையேயும் கலாச்சாரப் பரிமாற்றங்கள், இரு சமூகங்களினதும் பாடசாலைகளுக்கு இடையேயான உறவுகள் விளையாட்டுப் போட்டிகள், கண்காட்சிகள் போன்ற தொடர்ச்சியான உறவாடலுக்கு வழிவகைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என சில ஆலோசணைகளும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட யாழ் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த அனைவருமே தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியில் தமிழ் மக்கள் தொடர்புபட்டு இருக்கவில்லை என்பதை வலியுறுத்தியதுடன் தமிழ் மக்களுடனான தங்கள் உறவுகள் மீண்டும் புத்துயிர் பெற்று வருகின்றது என்பதை வலியுறுத்தினர்.

Related Articles:

20வது வருடத்தில் மீண்டும் துளிர்ப்போம்! – யாழ் முஸ்லீம்களின் 20 வருட அனுபவப் பகிர்வு.

தமிழ் – முஸ்லிம் உறவுகள்: வடக்கு முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம் – 20 வருடங்களுக்குப் பின்பு! : SLIF & SLDF

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

39 Comments

  • Kusumpu
    Kusumpu

    முஸ்லீம்களுடன் கூடவாழவேண்டும் என்று அழுத்துவது வில்லங்கத்துக்குக் கல்யாணம் கட்டி வைப்பது போன்றது. சோனகர்கள் என்ன யாழ்பாணத்தின் ஆதிகுடியா? கய்பர் கால்வாய் ஊடாகவும் வியாபாரத்துமாக வந்து எம்மைக் கொள்ளையடித்தவர்களுடன் எம்மை சேர்ந்த வாழுமாறு வற்புறுத்துவது நிஜாயம் அற்றது. எமக்கும் சிங்களவருக்கும் ஓரளவு இரத்த கலை கலாச்சார ஒற்றுமைகள் உண்டு. சோனகர்கள் இலங்கையிலுள்ள எந்த இனத்துடனும் ஒவ்வாதவர்கள் என்பதை அறிந்த கொள்வது முக்கியம்.

    Reply
  • ashroffali
    ashroffali

    இலங்கையின் மக்கள் பரம்பலே இந்தியாவில் இருந்து வந்ததுதான். அதன் வழி வந்த பரம்பரையே பிற்காலத்தில் பெளத்தம் இந்து மற்றும் கிறிஸ்தவம் என வெவ்வேறு மதங்களைப் பின்பற்றத் தலைப்பட்டனர்.

    இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரை அரபியக் கலப்பு என்பது வெகு குறைவானது. தென்னிந்திய முஸ்லிம்கள் தான் இலங்கையில் நிரந்தரமாக குடியேறியிருக்க முடியும் என்று திருமலை வரலாறு தொடர்பான நுhல் ஒன்றில் நான் வாசித்துள்ளேன். தவிரவும் அதில் பெரும்பான்மையான உண்மையும் உள்ளது.

    தவிரவும் முஸ்லிம்கள் ஒருபோதும் இன்னொரு இனத்தைக் கொள்ளைடித்ததில்லை. அது ஒரு அபாண்டம் மட்டுமே. ஆதாரங்களை முன் வைக்க முடியுமா?

    Reply
  • Ajith
    Ajith

    இடம்பெயர்ந்த எல்லா மக்களும் தங்கள் இடங்களில் மீள குடியேற்றபட வேண்டும் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. ஆனால் யாழ் மாநகரசபை உறுப்பினர் மௌலவி சுப்பியான் தெரிவித்த கருத்து முஸ்லிம்கள் மீதான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இலங்கை அரசு நிதி நெருக்கடியை எதிர் நோக்குவதால் இவர்களது குடியேற்றத்திற்கு தமிழ் மக்களை உதவி கேட்கின்ற இவர் முஸ்லிம், சிங்கள மக்களை ஏன் கேட்கவில்லை. அத்துடன் இலங்கை அரசு சிங்கள மக்களை குடியேற்றவும் சிங்கள இராணுவ மயமாக்கலுக்கும் எங்கிருந்து நிதியை பெறுகின்றது. இந்த நாட்டில் ஏற்பட்ட சகல அனர்த்தங்களுக்கும் சிங்கள ஆட்சியாளர்களே பொறுப்பு எடுக்க வேண்டும். வடக்கு கிழக்கு தமிழர் பேசும் இலங்கையில் வாழுகின்ற தமிழ் பேசும் சோனக சமூகம் தம்மை ஒரு மத ரீதியான இனமாக கருதினாலும் அவர்களுடைய தாய் மொழி தமிழ் என்ற உண்மையை ஏற்று தமிழ் பேசும் மக்கள் என்ற ரீதியில் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயகம் என்ற கோட்பாட்டை ஏற்க வேண்டும். இலங்கை அரசியலில் முஸ்லிம் மக்கள் இரட்டை வேடம் போடுபவர்கள் என்ற பரவலான கருத்து தமிழ் மக்கள் மத்தியிலும் சிங்கள மக்கள் மத்தியிலும் உண்டு. இந்த குற்ற சாட்டுக்கள் பொய்யானவை என்பதை தமிழ் பேசும் முஸ்லிம் மக்கள் தான் நிருபிக்க வேண்டும். குறிப்பாக தமிழ் மக்கள் மீதான சிங்கள அரசும் இராணுவமும் செய்த வன்முறைகளுக்கு எதிராக எந்த காலத்திலும் குரல் எழுப்பியதில்லை.

    Reply
  • Kusumpu
    Kusumpu

    அசுரப்! சோனகருக்கும் இந்தியாவுக்கும் பெரிய தொடர்பு எதுவும் கிடையாது. இலங்கையின் இனப்பரம்பல் இந்தியாவில் இருந்த வந்தது என்னும் கதையை குப்பையில் போடுங்கள். இலங்கையின் ஆதிகுடிகளான இயக்கர்: நாகர் என்ற இனம் இருந்ததாக வரலாற்று ஆய்வாளர்களும் வரலாறும் ஒத்துக் கொண்ட விசயம். நானும் ஏன் நாங்களும் சோனர்களுடன் ஒன்றிவாழ மட்டுமல்ல அவர்களைத் தமிழர்களாகவுமே எண்ணினோம். சோனகரும் முஸ்லீங்களும் தாங்கள் தனித்துத்தான் நிற்கவேண்டும் என்று அடம்பிடித்தார்கள் ஏன் நிஸ்தாரே சிலமாதத்தின் முன் போரே ஆடினார். நீங்கள் என்ன புதிசாக ஏதோ கொண்டுவாறீர்கள். இந்தியச் சோனகர் பாக்கிஸ்தானுக்குப் போகாமல் ஏன் இன்னும் இந்தியாவில் இருந்த கொண்டு மற்ற இன மதத்தவர்களின் உயிரை எழுத்துக் கொண்ட இருக்கிறார்கள். ஜின்னா தானே அறைகூவல் விடுத்தார் பாக்கிஸ்தான் என்பது தனி முஸ்லீம் நாடு எல்லா முஸ்லீங்களும் பாக்கிஸ்தானுக்கு வருக என்றார். ஏன் இன்னும் போகாமல் இருக்கிறார்கள். சிங்களவனுடன் சேர்ந்து வாழ்தாலும் சோனகருடன் வாழ இயலாது. தயவுசெய்து பிரபாகரனை நல்லவனாக்கி விடாதீர்கள்

    Reply
  • thurai
    thurai

    //குறிப்பாக தமிழ் மக்கள் மீதான சிங்கள அரசும் இராணுவமும் செய்த வன்முறைகளுக்கு எதிராக எந்த காலத்திலும் குரல் எழுப்பியதில்லை.//அஜீத்

    புலிகளின் போராட்டம் ஈழத்தமிழர்களை முள்ளிவாய்க்காலிற்கு அழைத்துச் செல்கின்றதென்பதை தமிழர்கள் பலர் முன் கூட்டியே அறிந்திருந்தனர். இவர்கள் புலிகளின் பயங்கரவாதத்தால் வாய்மூடியே வாழ்ந்தனர். இதனையும் மீறி வாய் திறந்தவர்களையெல்லாம் துரோகிக்ளாக்கி போட்டுத்தள்ளினர். இதற்கெல்லாம் 30 ஆண்டுகளாக புலிகளிற்கு ஆதரவு கொடுத்தோரை விடவா முஸ்லிம்கள் தமிழர்களிற்கு துரோகம் செய்துள்ளார்கள். இன்னமும் புலிகளின் உலகக் கட்டமைப்பு எவ்வாறு மோசடிகளில் ஈடுபட்டு தமிழரையும் உலகினையும் ஏமாற்றுகின்றதென்பதை புரியாதவ்ர்கள் தமிழர்களிர்காக குரல் கொடுப்பதைவிட முஸ்லிம்கள் போல் அமைதியாக வாழ்ந்தால் தமிழினம் அழிவிலிருந்து தன்னைத்தானே காத்துக்கொள்ழும்.– துரை

    Reply
  • நந்தா
    நந்தா

    இந்துக்களுடன் வாழ முடியாது என்று தனினாடு கேட்டு பாகிஸ்தானைப் பெற்றனர். ஆயினும் பாகிஸ்தானுக்கு இந்தியாவிலுள்ள முஸ்லிகளில் பெரும்பான்மையினர் போகவில்லை எனபதுதான் உண்மை. ஜின்னாவின் மகளும் உறவினர்களும் கூட பாகிஸ்தான் போக மறுத்து விட்டனர். ஆனால் தற்போது பாகிஸ்தானியரிடம் பணம் பெற்று சில முஸ்லிம்கள் இந்துக்களுக்கெதிரான அட்டூளியங்கள் செய்து வருகின்றனர்.

    இலங்கை முஸ்லிம்கள் தமிழ்நாட்டிலிருந்தும், கேரளாவிலிருந்தும் வந்தவர்கள். அதனால்த்தான் தமிழ் பேசுகிறார்கள். பாகிஸ்தான் பிரிவினையை தொடர்ந்து இலங்கை முஸ்லிம்களும் “தனி”யாக போய்விட்டனர்.

    குசும்புவின் கருத்து சரியானதே. “வில்லங்கத்துக்கு” கலியாணம் கட்டி வைத்து வம்பை விலைக்கு வாங்குவது சரியல்ல.

    இந்தியா கட்டிக் கொடுக்க முன்வந்துள்ள 50,000 வீடுகளில் தங்களுக்கும் ஒரு பகுதி என்று முஸ்லிம்கள் ஏன் கேதிறார்கள்? ஈந்தியாவை விட பாகிஸ்தானை வணங்கும் இவர்கள் இந்தியாவிடமிருந்து எதற்காக உதவிகளை எதிர்பார்க்க வேண்டும்? பாகிஸ்தான் கொடுத்தால் அது முஸ்லிம்களுக்கு மட்டும் என்று இயம்பும் முஸ்லிம்கள் தமிழர்களிடம் பங்கு கேட்டு உபத்திரவம் கொடுக்காமல் இருப்பது நல்லது.

    பாகிஸ்தானில் இனச்சுத்திகரிப்பு எப்பொளுதோ நடத்தப்பட்டு விட்டது. நடந்து கொண்டும் இருக்கிறது.

    பவுத்தர்களும் இந்துக்களும் கூடி வாழத் தடைகள் இல்லை. ஆனால் முஸ்லிம்கள் கூடி வாழ்வதென்பது நடக்க முடியாத பிரச்சனை. ஏனென்றால் அவர்களுக்கு எல்லாமே “தனித்தனியாக” வேண்டும்! பாடசாலைகள் ஒரு உதாரணம்!

    யாழ் முஸ்லிம்கள் விரும்பினால் அவர்களுடைய நிலங்களில் குடியேறுவதை தடை செய்யக் கூடாது. ஆனால் தமிழ் மக்கள் அவர்களை வரவேற்று ஆராத்தி எடுக்க வேண்டும் என்பதில் எனக்கு உடன் பாடில்லை!

    முஸ்லிம் மத போதனைகள் மற்றைய மதத்தவர்கள் தங்களை விடக் கீழானவர்கள் என்று போதிப்பது முக்கிய காரணம்! சமத்துவம் என்பது முஸ்லிம்களிடம் கிடையாத ஒன்று!

    Reply
  • thurai
    thurai

    //இலங்கை முஸ்லிம்கள் தமிழ்நாட்டிலிருந்தும், கேரளாவிலிருந்தும் வந்தவர்கள். அதனால்த்தான் தமிழ் பேசுகிறார்கள்//நந்தா
    இலங்கையில் வாழும் சிங்களவ்ர்களின் மொழி வேறெந்த நாட்டிலுமில்லை எனவே இலங்கை சிங்களவர்களிற்கே சொந்தமானது. அவ்ர்களின் மதமும் புத்த மதமே. எனவே முஸ்லிம்கழுடன் தமிழரும் சேர்ந்து வந்த இடங்களிற்கே கப்பலேற வேண்டியதுதானே.

    //யாழ் முஸ்லிம்கள் விரும்பினால் அவர்களுடைய நிலங்களில் குடியேறுவதை தடை செய்யக் கூடாது. ஆனால் தமிழ் மக்கள் அவர்களை வரவேற்று ஆராத்தி எடுக்க வேண்டும் என்பதில் எனக்கு உடன் பாடில்லை!//நந்தா
    தெற்கில் சிங்களவ்ர்களிடம் அடிவாங்கி வடக்கிற்கு வந்தவர்கள் 3 மாதத்தினுள்ளே அடிநோ மாற முன்பே திரும்பிப் போனார்கள். ஆனால் முஸ்லிம்கள் 30 வருடமானாலும் திரும்பி வரத் தயங்குகின்றார்கள். காரணம் சிங்களவ்ர் தமிழரை அடிக்கும்போது பல சிங்கள்வ்ர்களே தமிழரைப் பாதுகாத்துள்ளார்கள். ஆனால் முஸ்லிம்கள் துரத்தப்படும்போது ஒரு தமிழனாவது பாதுகாப்புக் கொடுத்தானா? தமிழரிடம் மனிதாபிமான்ம் என்பது குறைவு. சமய விவாதம் இங்கு முக்கியமல்ல.

    //இந்தியா கட்டிக் கொடுக்க முன்வந்துள்ள 50,000 வீடுகளில் தங்களுக்கும் ஒரு பகுதி என்று முஸ்லிம்கள் ஏன் கேதிறார்கள்? ஈந்தியாவை விட பாகிஸ்தானை வணங்கும் இவர்கள் இந்தியாவிடமிருந்து எதற்காக உதவிகளை எதிர்பார்க்க வேண்டும்? //நந்தா

    தமிழ்மொழிக்காக பாடுபட்ட முஸ்லிம்கள் உலகிலில்லையா? இதேபோல் இந்தியாவிற்காக உயிரைவிட்ட முஸ்லிம்கள் இல்லையா? இந்தியாவென்றால் இந்து சம்யமா? இலங்கையென்றால் புத்தசம்யமா? ஈழத்தமிழரென்றால் இந்துக்களிற்கு மட்டும்தானா சொந்தம்? இவ்வாறான கருத்துக்கள் எங்களை காட்டுமிராண்டித்தன்முள்ள ஆதிவாசிகளாகவே உலகினிற்கு காட்டி நிற்கின்றன.– துரை

    Reply
  • ashroffali
    ashroffali

    //ஜின்னா தானே அறைகூவல் விடுத்தார் பாக்கிஸ்தான் என்பது தனி முஸ்லீம் நாடு எல்லா முஸ்லீங்களும் பாக்கிஸ்தானுக்கு வருக என்றார். ஏன் இன்னும் போகாமல் இருக்கிறார்கள். சிங்களவனுடன் சேர்ந்து வாழ்தாலும் சோனகருடன் வாழ இயலாது. //
    குசும்பு… ஜின்னா எப்போது அப்படிக் கூப்பிட்டார் .. நான் கேள்விப்பட்டதேயில்லை.. அது சரி.. எங்கோ ஓர் ஜின்னா கூப்பிட்டதற்காக நாங்கள் போக வேண்டுமென்பது என்ன நியாயம்..?அப்படியென்றால் நேபாள நாட்டின் தலைவர்கள் இந்து என்ற வகையில் உங்களைக் கூப்பிட்டால் நீங்கள் போக வேண்டியதுதானோ… என்ன குசும்பு நியாயமாக இருக்கின்றதா?

    சரி.. சிங்களவருடன் சேர்ந்து வாழ விருப்பமா..? யார் தடுத்தது? அப்படி தடுப்பதற்கு எங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. தடுக்கவும் முடியாது. பதிலாக நான் வரவேற்கின்றேன்…

    //இந்தியா கட்டிக் கொடுக்க முன்வந்துள்ள 50,000 வீடுகளில் தங்களுக்கும் ஒரு பகுதி என்று முஸ்லிம்கள் ஏன் கேதிறார்கள்?//
    எங்கே கேட்டார்கள்..? யார் கேட்டார்கள்.. சரி.. அப்படியே வைத்துக் கொண்டாலும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் என்று வரும்போது முஸ்லிம்களும் உள்ளடக்கம் தானே நந்தா.. அதை ஏன் உங்களால் பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை..

    //பாகிஸ்தான் கொடுத்தால் அது முஸ்லிம்களுக்கு மட்டும் என்று இயம்பும் முஸ்லிம்கள் தமிழர்களிடம் பங்கு கேட்டு உபத்திரவம் கொடுக்காமல் இருப்பது நல்லது.//
    எப்போது அப்படி கூறியிருக்கின்றார்கள்.. கொஞ்சம் கூற முடியுமா?

    //யாழ் முஸ்லிம்கள் விரும்பினால் அவர்களுடைய நிலங்களில் குடியேறுவதை தடை செய்யக் கூடாது.// வாழ்த்துக்கள் நந்தா.. வரவேற்கின்றேன்…

    //முஸ்லிம் மத போதனைகள் மற்றைய மதத்தவர்கள் தங்களை விடக் கீழானவர்கள் என்று போதிப்பது முக்கிய காரணம்! சமத்துவம் என்பது முஸ்லிம்களிடம் கிடையாத ஒன்று!// இஸ்லாம் சமத்துவத்தை எப்படி போதிக்கின்றது என்பதற்கு நான் ஆதாரங்களை எடுத்து வைத்து விட்டேன். அதை மறுக்கும்படியான எந்த ஆதாரமும் உங்களிடம் இல்லை நந்தா..

    //தமிழ்மொழிக்காக பாடுபட்ட முஸ்லிம்கள் உலகிலில்லையா? இதேபோல் இந்தியாவிற்காக உயிரைவிட்ட முஸ்லிம்கள் இல்லையா? இந்தியாவென்றால் இந்து சம்யமா? இலங்கையென்றால் புத்தசம்யமா? ஈழத்தமிழரென்றால் இந்துக்களிற்கு மட்டும்தானா சொந்தம்? //

    என் மனமார்ந்த பாராட்டுக்கள் துரை.. நம் மத்தியில் இருக்கும் ஒரு சிலரைத் தாண்டி நாமெல்லோரும் கைகோர்க்கும் போது தான் நம்பிக்கையின் கீற்று என்பதைப் போன்று நமது நாளைய விடியல் நலமாக இருக்கும். கூடு சேர்ந்த பறவைகளாக நாம் கூடி வாழ முடியும். அந்த நாள் வரும்போது நாம் இருப்போமோ தொரியாது. இருந்தும் நம்பிக்கையுடன் உழைப்போம். நமது சந்ததியாவது ஒற்றுமையாய் வாழட்டும்…. நம்வாழ்த்துக்களுடன்.

    Reply
  • நந்தா
    நந்தா

    தமிழ் என்று தங்களை அடையாளப்படுத்த விரும்பாத இலங்கை முஸ்லிம்கள் தங்களுடைய வரலாற்றையே “புரட்டுகிறார்கள்”.

    இந்தியா “தமிழ்” மக்களுக்கே வீடு கட்டிக் கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளது. “முஸ்லிம்” மக்களுக்கு அல்ல!

    முஸ்லிம்கள் இந்தியாவிலிருந்து பிரிந்து தனினாடு பெற்று 60 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அப்போ இந்தியாவில் இருப்பவர்கள் யார்? அவர்கள் இன்னமும் வெளியிலிருந்து வருபவர்களைத் தலை மேல் தூக்கி சாமியாடவில்லை என்று கவலையா?

    இந்திய உதவிகளை “தமிழர்’ என்று அடையாளப்படுத்துபவர்கள் கேட்பதில் தவறில்லை! தமிழ் பேசிக் கொண்டே “நாங்கள் தமிழர்களல்ல. இந்தியாவுக்கும் எங்களுக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை” என்று அறைகூவும் இலங்கை முஸ்லிம்களுக்கு இந்திய உதவிகளைக் பெற எந்த வித தார்மீக உரிமையும் உள்ளதாக கருத வேண்டாம்!

    Reply
  • thurai
    thurai

    அஸ்ரோவலி அவர்களே பாராட்டுடதலிற்கு நன்றிகள். முஸ்லிம்களை தமிழர்களிற்கு எதிரானவர்களாக சிலர் இங்கு காட்ட முனைகின்றார்கள். யாழ்ப்பாண்த்தில் சில தமிழ் சமூகங்களின் வாழ்வே முஸ்லிம்மக்கழுடன் இணந்து வாழ்ந்ததால்தான் தலையெடுக்க முடிந்தது.

    புலம்பெயர்நாடுகளில் வாழ்ந்து கொண்டு வாழும் நாட்டின் சரித்திரமோ அன்றி,பிறந்த நாட்டின் சரிதிரமோ சரிவர அறியாமல் எல்லோரையும் குறைகூறுவதிலும், குற்ரம் காணுவதிலுமேயே பல்ர் உள்ளனர். உலகில் இரண்டு சுலபமான காரியங்கள். ஒன்று மற்ரவர்களில் பிழை கண்டுபிடிப்பது. இரண்டாவது பிறரிற்குப் புத்தி சொல்வது. இதில் ஈழத்தமிழர்கள் உலகசாதனை படைத்துள்ளார்கள்.– துரை

    Reply
  • thurai
    thurai

    //இந்திய உதவிகளை “தமிழர்’ என்று அடையாளப்படுத்துபவர்கள் கேட்பதில் தவறில்லை! தமிழ் பேசிக் கொண்டே “நாங்கள் தமிழர்களல்ல. இந்தியாவுக்கும் எங்களுக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை” என்று அறைகூவும் இலங்கை முஸ்லிம்களுக்கு இந்திய உதவிகளைக் பெற எந்த வித தார்மீக உரிமையும் உள்ளதாக கருத வேண்டாம்!//நந்தா

    ரஜீவ் காந்தியைக் கொல்லும்போதும், வடக்கில் முஸ்லிம்களை துரத்தும்போதும் வாய்மூடி இருந்த தமிழர்களிற்கு இந்திய, முஸ்லிம் உறவுகளைப் பற்ரிப் பேச வாய் கூசவில்லயா?– துரை

    Reply
  • ashroffali
    ashroffali

    //இந்தியா “தமிழ்” மக்களுக்கே வீடு கட்டிக் கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளது. “முஸ்லிம்” மக்களுக்கு அல்ல!//

    நந்தா.. உங்களையறியாமல் நீங்களே சறுக்கி விட்டீர்கள். முஸ்லிம்கள் தங்களை தமிழர்கள் என்று அழைத்துக் கொள்வதில்லை என்று குறை கூறி வந்த நீங்களே முஸ்லிம்கள் தமிழர்கள் இல்லை என்று அடித்துச்சொல்லி விட்டீர்கள்….. என்ன ஒரு முரண்பாடு…

    துன்பங்களில் மட்டும் என்னுடனிரு.. நன்மைகள் கிடைக்கும் போது மட்டும் நான் விலகிப்போய் விடுவேன். அதில் உனக்குப் பங்கில்லை… என்றால் அதன் அர்த்தம் என்ன நந்தா… நீயும் நானும் வேறு வேறு என்பது தானே.. அதை ஏன் இவ்வளவு நாளாக மறைத்துக் கொண்டிருந்தீர்கள்?

    அதன் பின் நீங்கள் இப்படியும் கூறுவது தான் அதை விட உலக மகா முரண்பாடு…
    //தமிழ் பேசிக் கொண்டே “நாங்கள் தமிழர்களல்ல. இந்தியாவுக்கும் எங்களுக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை” என்று அறைகூவும் இலங்கை முஸ்லிம்களுக்கு //

    Reply
  • விளங்காமுடி
    விளங்காமுடி

    இருந்தவர்களுக்கு இருப்பிடம் கொடுக்கப்பட வேண்டும் என்பதில் எவருக்கும் முரண்பாடு இருக்காது.ஆனால் எல்லாம் இழந்தவர்களைப் புறக்கணித்து விட்டு, எதற்கோ முன்னுரிமை கொடுப்பதும், வாதிப்பதும், அறிக்கை விடுவதும் “வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக”ப் படவில்லையா?

    Reply
  • mohamed nisthar
    mohamed nisthar

    இந்தியாவுக்கும் சோனவருக்கும் இடையே தொடர்பு உண்டே குசும்பு. கீழைக்கரைக்கு போயிருக்கிறீகளா? அந்த மக்களுடன் பேசி, பழகி இருக்கிறீர்களா? இந்தியர்களின் மன்னார், புத்தளம் பகுதிக்கான குடியேற்றம் இந்திய சோனகர்களையும் கொண்டது.

    அத்துடன் அனைத்து இந்திய முஸ்லிம்களும் சோனகர் அல்ல என்பது உங்களால் விளங்கமுடியாதுள்ளது தெரிகின்றது. அப்படி தெரிந்திருந்தால் இந்திய சோனகர் “ஏன் பாகிஸ்தானுக்கு போகாமல்…” என்று கேட்டிருக்கமாட்டீர்கள். அவர்களுக்கென்ன அங்கு வேலை?

    ஒரு வேளை இந்திய பஞஜாபி முஸ்லிம் பாகிஸ்தனுக்கு போக விரும்பினால் ஏதோ ஒரு வகையில் நியாயம் காட்டலாம். இனத்தை மதத்துடன் சேர்த்து குழம்பிப் போவது குசும்புவின் பழக்க தோஷம் போல் தெரிகிறது.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //….துன்பங்களில் மட்டும் என்னுடனிரு.. நன்மைகள் கிடைக்கும் போது மட்டும் நான் விலகிப்போய் விடுவேன்….//

    துன்பத்தில் எதிரியுடன் இரு. இன்பம் வரும்போது பங்கு கேள்! ,அதுதான் ஸ்ரீலங்காவின் அதிகாரமட்டத்தில் இருக்கும் முஸ்லிம்கள் செய்தது. அரசில் மினிஸ்ரர் ஆனால் நோர்வே பேச்சுவார்த்தையில் தனித்தரப்பு. இப்போ எல்லாம் அம்போ!

    Reply
  • நந்தா
    நந்தா

    நான் அடித்துச் சொல்லுகிறேன்.நீங்களும் அதனை பின்பற்றுகிறீர்கள்.

    முஸ்லிம்கள் தமிழர்கள் அல்ல! போதுமா!

    அந்தக் கருத்தை எப்பொளுதும் பகிரங்கமாகப் பின்பற்றுவது நல்லது.

    Reply
  • ashroffali
    ashroffali

    //நான் அடித்துச் சொல்லுகிறேன். நீங்களும் அதனை பின்பற்றுகிறீர்கள். முஸ்லிம்கள் தமிழர்கள் அல்ல! போதுமா! அந்தக் கருத்தை எப்பொளுதும் பகிரங்கமாகப் பின்பற்றுவது நல்லது.//

    நந்தா.. இதை அப்படியே சாந்தனிற்கும் சொல்லி விடுங்கள்.. உங்கள் கருத்துக்கு நேர்மாறான கருத்துக்களை அவர் கொண்டிருக்கின்றார்… அதுதான்..

    நான் தமிழ் பேசும் முஸ்லிம். எனது மொழி தமிழ். மதம் இஸ்லாம். போதுமா… நான் என்றைக்கும் தமிழர்களுடனும் நல் மனம் கொண்ட சிங்களவர்களுடனும் நல்லுறவைக் கொண்டிருப்பேன். அது எனது உரிமை. அதனை யாரும் மறுக்க முடியாது…

    Reply
  • ashroffali
    ashroffali

    //துன்பத்தில் எதிரியுடன் இரு. இன்பம் வரும்போது பங்கு கேள்! இஅதுதான் ஸ்ரீலங்காவின் அதிகாரமட்டத்தில் இருக்கும் முஸ்லிம்கள் செய்தது. அரசில் மினிஸ்ரர் ஆனால் நோர்வே பேச்சுவார்த்தையில் தனித்தரப்பு. இப்போ எல்லாம் அம்போ!//

    சாந்தன் .. ஒன்றை மட்டும் தெளிவாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது முஸ்லிம்கள் தனித்தரப்பு கேட்டது தமிழர்களின் உரிமைகளைப் பறிக்க அல்ல. தங்களுடைய உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளத்தான். அதை யாரும் தவறென்று கூற முடியாது. கூறுவதற்கு உரிமையும் இல்லை.

    அடுத்தது இலங்கை அரசாங்கம் தீர்வு என்று ஒன்று வரும்போது அதற்கு முஸ்லிம்கள் தடை என்று பிரச்சாரப்படுத்திவிடக் கூடாது என்பதற்காகத் தான் முஸ்லிம்கள் தனித்தரப்பாக கலந்து கொள்ள விரும்பினார்கள். அதன் மூலம் பேச்சுவார்த்தையில் எட்டப்படும் முடிவுகளில் தாங்களும் இணக்கம் கண்டிருப்பதாக அவர்கள் வெளிக்காட்ட முயன்றார்கள். அதன் போது முஸ்லிம்கள் தரப்பின் ஆலோசனைகளைத் தனியாக ஆராய வேண்டும் என்று அரசாங்கம் தீர்வுத் திட்டங்களை இழுத்தடித்து விடக் கூடாது என்பதற்கும் தனித்தரப்பு கோரியமைக்கும் தொடர்பு இருந்தது. அத்துடன் அரசாங்கத் தரப்பு பிரதிநிதியாக பேச்சில் கலந்து கொள்ளும் போது அரசாங்கம் செய்த தவறுகளை முன் வைக்க முடியாது. தனித்தரப்பாக கலந்து கொள்ளும் போது அதனைச் செய்ய முடியும். இப்படியான விடயங்கள் மூலமாக தமிழ்-முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வு பழுதடையாமல் பாதுகாக்க முடியும் என்ற நோக்கத்தில் தான் அதனைக் கேட்டார்கள்.

    அதையெல்லாம் தப்பு என்று சொல்ல வருகின்றீர்களா சாந்தன்..?

    இப்போ தனித்தரப்பு சமதரப்பு எதுவும் இல்லையென்றாகிப் போன பின்பாவது நீங்கள் கண் திறக்க மாட்டீர்களா? நான் அடிக்கடி குறிப்பிடுவது போன்று தமிழர்களின் கலாசார தனித்துவங்களை முஸ்லிம்கள் மதித்துக் கொண்டும் முஸ்லிம்களின் கலாச்சாரங்களை தமிழர்கள் மதித்துக் கொண்டும் பரஸ்பர நம்பிக்கையுடனான புரிந்துணர்வைக் கொண்டு கட்டியெழுப்பப்படும் செயற்பாடுகளின் மூலமாக மட்டுமே நம் முன்னால் வரப் போகும் எதிர்கால சவால்களை வெற்றி கொள்ள முடியும். அதை விட்டு இப்படி முட்டி மோதி நாமே நமது எதிர்கால சந்ததிக்கான குழியைத் தோண்டிக் கொள்ளப் போகின்றோமா?

    Reply
  • mohamed nisthar
    mohamed nisthar

    அன்புடன் அஸ்ரப் அலிக்கு,

    முட்டி மோதுவதால் நாம் அடையப்போவது தோல்வியே, இதைத்தான் நான் மீண்டும் மீண்டும் வழியுறுத்துகிறேன். ஆனாலும் சின்ன சிக்கல் இங்கிருப்பதையும், அந்த சிக்கலில் இருந்து வெளிவரமுடியாமல் ஏதோ ஒன்று தடுப்பதையும் நந்தா, சாந்தன், பீ.சி போன்றோரின் முஸ்லிம்/இஸ்லாமிய எதிர்ப்பு வாதத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

    தழிழ் மொழி எமது தாய் மொழி இல்லை என்று என்ன அடிப்படையில் கூறுகிறார்களோ தெரியவில்லை. அதே போல் நம் தாய் மொழி தமிழ் என்று நாம் கூறும் போது நம்மை இன ரீதியாக தமிழர் என்று முதலாம் வகுப்பு பாடம் கற்றுத்தர அவர்கள் வெளிக்கிடுவதும் ஏன் என்றும் புரியவில்லை, அடக்கியாள்வது தவிர எந்த நோக்கம் வில்லை என்றால்.

    தென் அமெரிக்க நாடுகளில் ஸ்பெனிஷ் தாய் மொழியாகக் கொண்டோர் இருக்க, அநேக நாடுகளில் ஸ்பெனிஷ் ஆட்சி மொழியாய் இருப்பதனால் அந்த மக்களலெல்லாம் ஸ்பெனிஷ் என்றால் சிருப்பு வரும். அதேபோல் அமெரிக்கர் எல்லாம் ஆங்கிலம் பேசுகிறார்கள், ஆகவே அவர்கள் எல்லாம் ஆங்கிலேயர் என்று குதர்க்கம் பேசினால் என்ன செய்வது.

    மூன்று வருடங்களுக்கு முன் ஓசியாய் வாசிக்க “ஒரு பேப்பர்” என்ற மகுடத்தில் வெளிவரும் புலி சார்பு பத்திரிகையில் மகாலிங்கம் என்ற ஒருவர் ” ஒன்று பட்டால் உண்டு வாழ்வு” என்ற கட்டுரை எழுதி அதில் முஸ்லிம்கள் ஏன் கைகட்டி , வாய் பொத்தி புலிகள் தருவதை பெற்றுக் கொண்டு, அனுமதிப்பதை செய்து கொண்டு வாழ வேண்டும் என்ற தோரணையில் பக்கம் பக்கமாக எழுதி அதை நியாயப்படுத்தும் ஒரு காரணம் சென்னாலும் சொன்னார், அதாவது, யாழ் மாநகராட்சியில் உதவி மேயர் பதவி கொடுத்து கொளரவித்தார்களாம் அதனால்.

    “ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு” என்று எதிர் கட்டுரை பறந்தது, சுதந்திர காலத்தில் இருந்து கட்டுரை வெளியான நாள் வரையில் சபா நாயகர் பதவி முதல், உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிகள் ஈறாக பொறுப்பான அமைச்சுப் பதவிகள் வரையிலான பட்டியலுடன் ஒரு நியாயமான கேள்வியுடனும். அந்த கேள்வி ” ஒரு உதவி மேயர் பதவிக்காக எம்மை அடிமை படுத்த விரும்பினால், இத்தனையும் செய்த சிங்கள அரசியல் வாதிகளிடம் சரணடையவது மேல் என நான் நினைக்கிறேன்,நீங்கள் என்ன சொல்லிறீர்கள்? என்பதே. இன்னும் பதில் இல்லை.

    மாறாக, த.தே.மு முதல் நான்கு விடயம் தெரிந்தவர்களாக தங்களை காட்டவருவோரும் கூட பல்லின மக்கள் வாழும் இலங்கையை இருவின நாடாக காட்டி ஆதயம் பெற முயற்சிப்பது எமது அடிப்படை உரிமை மீறல் மாத்திரமல்ல , எமது உரிமை மீதான அத்துமிறலுமாகும். அதன் அத்திவாரமே இலங்கை முஸ்லிம்களை பாக்கிஸ்தானுடன் பினணப்பதும், எம் மதம் பற்றி கதைத்தால் அல்-கய்டா, தலபான் சாயம் பூசுவதும்.

    அஸ்ரப் அலி இலங்கை என்பது நம் தாய் திரு நாடு அதில் நாம் எப்படி, யாருடன் சேர்ந்து, ஏன் வாழ வேண்டும் என்பது எமது தேர்வாகதத்தான் இருக்க முடியுமே தவிர, யாரும் யாரையும் அடிமை கொள்ள நினத்தால் அதை விட முட்டாள்தனம் எதுவும் இருக்க முடியாது.

    ஒரு முறை நந்தா இப்படியும் பின்னூட்டம் விட்டிருந்தார், “நீங்கள் தமிழர் இல்லையா, அப்படியானால் தமிழருக்கு கிடைக்கும் கோட்டாவில் பங்கு கேட்க வந்து விடாதீர்கள்”, பி.சி சொன்னார், “சிங்கள தலைமையை ஏற்றுக் கொள்ளலாம் ஆனால் முஸ்லிம்களின் தலைமையை ஏற்றுக் கொள்ள முடியாது”

    பார்த்தீர்களா அற்ப விடயங்களுக்காக நம் இனத்தை விற்க கோருகின்றனரே. இவர்கள் கூறும் வாள், கொலை மிறட்டல், மத மாற்றல் என்ற பொய் குற்றச்சாட்டுகளை விட எவ்வளவு கொடுமை இது என்பது எமக்கு புரியாததென்று கனவு காண்கிறார்களா?

    Reply
  • Thalaphathy
    Thalaphathy

    இங்கு பின்னோட்ட கருத்துப்பரிமாறல் செய்யும் தமிழ், முஸ்லிம் சகோதரர்களுக்கு எனது தாழ்மையான கருத்து. இங்கு எழுதுபவர்களின் கருத்துக்கள் தனிமனித கருத்துக்களே தவிர, சமூகப்பிரதிநிதிகளினதோ அல்லது ஒட்டுமொத்த ஒரு சமூகத்தின் நிலைப்பாடோ அல்ல, ஆதலினால் இங்கு எழுதப்படும் கருத்துக்களை எவரும் பொதுவான கருத்து என்று எடுத்துக்கொள்ளாமல், தனிமனிதனின் கருத்துச்சுதந்திரத்தின் சில வெளிப்பாடுகளே இவை என்பதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை நாங்கள் எல்லோரும் ஏற்றுக்கொள்வோமாக.

    Reply
  • BC
    BC

    //பி.சி சொன்னார், “சிங்கள தலைமையை ஏற்றுக் கொள்ளலாம் ஆனால் முஸ்லிம்களின் தலைமையை ஏற்றுக் கொள்ள முடியாது” //
    மொகமெட் நிஸ்தர், நான் எங்கே அப்படி சொன்னேன் என்று எடுத்து காட்ட முடியுமா? அஷ்ரொப்அலி தான் தமிழ் பேசும் முஸ்லிம்கள் என்று சொன்னார். நீங்கள் எப்போதும் அதை சொல்ல தயங்கியே நின்றீர்கள்.

    Reply
  • நந்தா
    நந்தா

    முஸ்லிம்கள் தமிழர்கள் ஆனால் தமிழர்கள் அல்ல. இது என்ன வாதமோ நானறியேன்! அப்படியாயின் “முஸ்லிம்” பாடசாலைகள் என்று இருக்க வேண்டும் என்பதன்நோக்கம் என்ன?

    முஸ்லிம் என்றும் பதவிகள், அரச உதவிகள் என்பனவும் வேண்டும். தமிழ் என்று வரும்பொழுதும் “தமிழரின்” பதவிகளிலும் கை வைக்க வேண்டும்!
    முஸ்லிம்களின் இரட்டை வேஷத்தின் நோக்கம் புரிந்திருக்கும்!

    Reply
  • நந்தா
    நந்தா

    பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட “கள்ளநோட்டுக்களுடன்” இரண்டு யாழ் முஸ்லிம் வாலிபர்கள் தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

    இன்றைய “தேனீ” இணையத்தளத்தில் வந்த செய்தி.

    அப்பாவிகளா அல்லது ஜிகாத் ஆரம்பமா?

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…தமிழர்களின் உரிமைகளைப் பறிக்க அல்ல. தங்களுடைய உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளத்தான். அதை யாரும் தவறென்று கூற முடியாது. கூறுவதற்கு உரிமையும் இல்லை….//

    அப்போ ஏன் அரசாங்க சார்பாகவும் முஸ்லிம் அமைச்சர் வந்தார்? ஏன் நீங்கள் சார்ந்த பணிப்பாளராக இருந்த அரசாங்கத்தில் உங்களுக்கே நம்பிக்கை இல்லையா? அவ்வாறாயின் அரச பிரதிநிதியாக வந்திருக்க தேவையில்லை. அஷ்ரஃப் அலி அவர்களே அரசுடன் இருந்து எல்லா வசதிகளையும் அனுபத்திவிட்டு எவ்வளவோ இடர்களுக்குப் பின்னர் நோர்வே மத்தியஸ்தம் என வந்த போது தனித்தரப்பு என்கின்ற ஒரு தடையைப்போட்டீர்களே! நீங்கள் வேண்டுமென்றால் அதற்கு அழகான சொல்லாடல்களுடன் நியாயப்படுத்தலாம். ஆனால் ஸ்ரீலங்காவைச்சேர்ந்த முஸ்லிம் பேராசிரியரே முஸ்லிம்கள் எந்த முயற்சியும் இல்லாமல் வாய்பொத்தி அரசுடன் இருந்துவிட்டு இப்போது அரசு அதனைக் குழப்புவதற்கு வசதியாக செய்ற்படுவத்து முஸ்லிம்களுக்கு நல்லதல்ல எனச் சொல்லி இருக்கிறார்.

    //…முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வு பழுதடையாமல் பாதுகாக்க முடியும் என்ற நோக்கத்தில் தான் அதனைக் கேட்டார்கள்.
    அதையெல்லாம் தப்பு என்று சொல்ல வருகின்றீர்களா சாந்தன்..? …//

    ஆம் மிகத்தப்பு. நான் மட்டும் சொல்லவில்லை பேராசிரியர் இம்தியாஸ்கூடச் சொல்லி இருக்கிறார். அதுமட்டுமல்ல இப்போது நிகழும் செயற்பாடுகளும் அதையே காட்டிநிற்கின்றன என நீங்களே ஒத்துக்கொண்டதுதான்.

    //….இப்போ தனித்தரப்பு சமதரப்பு எதுவும் இல்லையென்றாகிப் போன பின்பாவது நீங்கள் கண் திறக்க மாட்டீர்களா?…//
    கண்ணைக்குத்திக் கொண்டதுடன் மற்றவர் உயிரையும் எடுப்பதற்குத் துணைபோனது யார்? இப்போது உங்களுக்கு கண்ணில்லை , ஏதாவது ஒப்பிரேசன் செய்தாவது கண்னைப்பெறலாம்ஆனால் எமக்கு உயிரே இல்லை என்றாகிவிட்டது நண்பரே!

    //…. அதை விட்டு இப்படி முட்டி மோதி நாமே நமது எதிர்கால சந்ததிக்கான குழியைத் தோண்டிக் கொள்ளப் போகின்றோமா?…//
    நல்லது அஷ்ரஃப் அலி. உங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துகிறேன். ஆனால் எனக்கு நம்பிக்கை இல்லை.

    போராட்டத்தை ஆரம்பியுங்கள். முஸ்லிம் மீள்குடியேற்ரம், புலிகள் தொல்லை , மன்னிப்புக்கேட்கவேண்டும் என நாளொருமேனியும் பொழுதொரு வண்னமும் அறிக்கைகள் விட்ட முஸ்லிம்கள் ஏன் தமது உரிமைகளுக்காகப் போராட முன்வருகிறார்களில்லை? தமிழ் மக்களுக்கு (முஸ்லிம் அல்லாத) நம்பிக்கை தரும் வகையில் என்ன அரசியல் போராட்ட செய்ற்பாடுகளை இந்த ஒருவருடத்தில் ஆரம்பித்தீர்கள்? காலங்காலமாக இருகட்சிகளிலும் ஆள்வைத்து அரசியல் செய்த பழக்கதோஷம் மாறும் நாள் வருமா? எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்!

    //…..அதன் போது முஸ்லிம்கள் தரப்பின் ஆலோசனைகளைத் தனியாக ஆராய வேண்டும் என்று அரசாங்கம் தீர்வுத் திட்டங்களை இழுத்தடித்து விடக் கூடாது என்பதற்கும்….//

    அரசு ‘இழுத்தடிக்கும்’ எனத்தெரிந்துகொண்டும் பணிப்பாளர் வேலையில் அமர்ந்து ஊதுகுழல் அறிக்கைகளின் சன்மானமாக வந்த அலுமாரி நிறைந்த எஸ்.எம்.ஏ பால்மாவில் குளித்திருக்கிறீர்கள். ஆனால் தனித்தரப்பு விளையாட்டுக்கும் ஆதரவு. இதனைத்தான் டபிள் கேம் என்பார்களோ?

    Reply
  • accu
    accu

    இங்கு கொழுப்பெடுத்த யாழ்ப்பாண மேட்டுக்குடிகளின் கருத்துக்கள் பதிவாகின்றதை காணமுடிகிறது. முஸ்லிம்கள் மீளக்குடியேறுவதை எதிர்த்துக் கருத்தெழுத எவருக்கும் உரிமையில்லை. ஈழத்தமிழனின் இன்றைய இழிநிலைக்கான காரணத்தை எங்கும் தேடவேண்டிய அவசியமில்லை தேசத்தின் பல பின்னூட்டங்களே பறைசாற்றி நிற்க்கின்றன.

    Reply
  • ashroffali
    ashroffali

    //முஸ்லிம்கள் தமிழர்கள் ஆனால் தமிழர்கள் அல்ல. இது என்ன வாதமோ நானறியேன்! அப்படியாயின் “முஸ்லிம்” பாடசாலைகள் என்று இருக்க வேண்டும் என்பதன்நோக்கம் என்ன?//
    நீங்கள் தான் பார்தா அணியாமல் தடைவிதிக்க வேண்டும் என்று வாதிடும்போது நாங்கள் எப்படி முஸ்லிம் பாடசாலைகள் தேவை என்று கோராமல் இருக்க முடியும் நந்தா.. என்ன நந்தா.. அடிக்கடி உங்களுடன் நீங்களே முரண்பட்டுக் கொள்கின்றீர்களே…

    கள்ள நோட்டு விடயம் பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டது என்பது ஒரு ஊகம் தான். கள்ள நோட்டு அச்சடிப்பவன் அச்சடிக்கும் நாட்டையும் குறிப்பிட்டு அச்சடிப்பான் என்றால் அவன் கள்ள நோட்டு அடிப்பதற்கே லாயக்கற்றவன்.

    அது சரி.. கைது செய்தவுடன் பாக்கிஸ்தானில் அச்சடிக்கப்பட்டது என்பதை கண்டு பிடிக்கும் அளவுக்கு இந்திய பொலிசார் அவ்வளவு திறமைசாலிகளா.. புல்லரிக்கிறதே.. இதெல்லாம் ஒரு கட்டுக்கதை நந்தா.. இந்தியாவில் எது சட்டவிரோதமாக நடந்தாலும் அதனைப் பாக்கிஸ்தானுடன் முடிச்சுப் போட்டால் தான் பிரபலமாகும். அது போல் தான் இதுவும்..

    இன்னொரு புறத்தில் பார்த்தால் பாக்கிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட நோட்டு இலங்கைக்கு எப்படி வந்தது..? இலங்கை சுங்கப் புலனாய்வுத் துறை கண்மூடிக் கொண்டிருந்ததா.. அல்லது அவர்களும் பாக்கிஸ்தானின் கையாட்களா..?

    கள்ள நோட்டு கிரெடிட் கார்ட் மோசடி என்பதெல்லாம் அவரவர் விடயம் நந்தா.. அது சட்டவிரோதமானது அதனால் தண்டிக்கப்படத் தான் வேண்டும். அதில் எனக்கும் மாற்றுக் கருத்தில்லை…

    சாந்தன்.. உங்களுக்கு அடுத்த கருத்துக் களத்தில் பதில் தந்துள்ளேன்;. வாசித்துப் பாருங்கள். ஒரே விடயத்தை இரண்டு தடவைகள் பதிவேற்றுவது அநாவசியம். உங்கள் நேரம் வீணடிக்கப்படும். அதுதான்.

    Reply
  • மாயா
    மாயா

    //இங்கு கொழுப்பெடுத்த யாழ்ப்பாண மேட்டுக்குடிகளின் கருத்துக்கள் பதிவாகின்றதை காணமுடிகிறது. முஸ்லிம்கள் மீளக்குடியேறுவதை எதிர்த்துக் கருத்தெழுத எவருக்கும் உரிமையில்லை. ஈழத்தமிழனின் இன்றைய இழிநிலைக்கான காரணத்தை எங்கும் தேடவேண்டிய அவசியமில்லை தேசத்தின் பல பின்னூட்டங்களே பறைசாற்றி நிற்க்கின்றன. – accu//

    இங்கே முஸ்லிம்களுக்கு, எதிராக கருத்தெழுவோர் குறித்து நாம் வரவேற்க வேண்டும். அப்படியானால்தான் தமிழரது உண்மையான முகம் அனைவருக்கும் புரியும்.

    ஒரே மொழி பேசும் முஸ்லிம்களை தமிழரான எம்மால் ஏற்றுக் கொள்ள மனம் வராதபோது ; எமது மொழியே புரியாத சிங்களவனிடம் எப்படி, எம்மை ஏற்றுக் கொள்ளச் சொல்லுவது?

    தமிழர் , முஸ்லிம்களுக்கு செய்வதைத்தான் , சிங்களவன் தமிழனுக்குச் செய்கிறான். எனவே சிங்களவர் செய்வதும் சரியானதே. தமிழரெல்லாம் தமிழ்நாட்டில் இருந்து கள்ளத் தோணிகளாக வந்ததென்பதும் உண்மையே? ஏன் நீங்களும் முஸ்லிம்களை அப்படித்தானே சொல்கிறீர்கள்? அந்நியப்படுத்துகிறீர்கள்? அச்சு அழகாக சொல்லியிருக்கிறார்.

    “வாளெடுத்தவன் வாளால் சாவான்” என யேசுநாதர் சொன்னது போல , நீ எதைச் செய்கிறாயோ, அது உனக்கும் நடக்கும். நீ அடுத்தவனை ஏற்றுக் கொள்ளாத போது , உன்னை அடுத்தவனும் ஏற்றுக் கொள்ள மாட்டான்.

    ஒரே மொழி பேசும் இந்துவும் ; கிறிஸ்தவனும் ; முஸ்லிமும் தமது மதத்தை முன்னிலைப்படுத்தி முரண்படும் போது , எங்கே தமிழன்? எதற்கு தமிழீழம்?

    வெக்கம். நீங்கள் எல்லாம் புலத்துக்கு வந்தும் திருந்தவில்லையென்றால் இனித் திருந்த மாட்டீர்கள்.

    Reply
  • thurai
    thurai

    \\இங்கு கொழுப்பெடுத்த கருத்துக்கள் பதிவாகின்றதை காணமுடிகிறது. முஸ்லிம்கள் மீளக்குடியேறுவதை எதிர்த்துக் கருத்தெழுத எவருக்கும் உரிமையில்லை\\ அக்கு
    ஈழத்தமிழரின் இன்றைய நிலைமைக்கு மட்டுமல்ல உலகத்தமிழரையே தலைகுனிய வைத்தவர்கள் யாழ்ப்பாண மேட்டுக்குடிகள்தான்.– துரை

    Reply
  • நந்தா
    நந்தா

    பர்தா அணிவது அல்லது சுன்னத்து செய்வது உங்கள் வீட்டுப் பிரச்சனை. பொதுப் பிரச்சனையல்ல. பர்தாவுக்கும், “தனி” பாடசாலைகளுக்கும் என்ன சம்பந்தம்?

    அலி இப்பொழுது பாகிஸ்தானுக்கு வக்காலத்து வாங்குவதன் நோக்கம் தெரிந்த விடயமே!

    தமிழ்நாட்டில் நடந்த கள்ள நோட்டு பிரச்சனைக்கு அலி “தீர்ப்பு” சொல்லிவிட்டார்.

    அதாவது இந்தியாக்காரன் முட்டாள் என்றும், பாகிஸ்த்தான் காரன் அப்பாவி என்றும் கயிறு திரிக்கிறார்.

    கள்ளநோட்டு அடிப்பவன் நாட்டையும் போட்டு அச்சடித்தால்த்தான் கண்டு பிடிக்க முடியும் என்று அலி சொல்லுகிறார். திருடர்களும், கொலைகாரர்களும் “சாட்சியங்களை” வைத்து விட்டுத்தான் தமது தொழில்களை செய்வார்களோ தெரியவில்லை!

    Reply
  • மாயா
    மாயா

    //நந்தா – ” பர்தா அணிவது அல்லது சுன்னத்து செய்வது உங்கள் வீட்டுப் பிரச்சனை. பொதுப் பிரச்சனையல்ல. பர்தாவுக்கும், “தனி” பாடசாலைகளுக்கும் என்ன சம்பந்தம்”//

    உன் விரல் என் மூக்கு வரை நீளலாம். அதுவே என் மூக்கில் பட்டால்தான் பிரச்சனை ஆரம்பம். அதுபோல அவர்கள் பர்தா அணிவதில் எமக்கென்ன பிரச்சனை? எங்களையா பர்தா அணியச் சொல்கிறார்கள்? இல்லையே?

    தென் பகுதியில் வாழும் தமிழர்கள் மட்டுமல்ல ; இலங்கை வாழ் அனைத்து தமிழரும் சாறி ; வேட்டி அணிகிறார்கள். திருநீறு தடவி ; குங்குமம் இட்டு நடக்கிறார்கள். எந்த சிங்களவனாவது ” நீ இதெல்லாம் அணிய தடை. திருநீறு – குங்குமத்தை அழி. எங்களைப் போல சீத்தை – சட்டை – சாரம்தான் அணிய வேண்டும் ” என்பதா? நல்ல கும்மாளம்யா?

    மொழிவாரியான பாடசாலைகளும் ; மத வாரியான பாடசாலைகளும் எவ்வளவு காலமாக இருக்கிறது? நல்ல காலம் தமிழனுக்கு நாடு கிடைக்காதது. அமெரிக்கா இந்தியாவுக்கு மட்டுமல்ல அந்த ஆண்டவனுக்கே விளங்கித்தான் இந்த அழிவே நடந்திருக்கு. அந்த ஆண்டவனுக்கு நன்றி. (குறிப்பு : சோசலிச – கமியுனிசவாதிகளாக இருந்தால் ஆண்டவனுக்கு பதிலாக அனைத்து மக்களும் சமம் என்ற கோட்பாட்டில் மேலே உள்ளதை எடுத்துக் கொள்வார்களாக.)

    Reply
  • mohamed nisthar
    mohamed nisthar

    அன்புடன் மாயா,
    சின்ன திருத்தம், முஸ்லிம்கள் தமது சமயத்தை முதன்மைபடுத்துவது மற்றவரின் சமயத்தை சிறுமை படுத்தவல்ல. எமக்கிருக்கும் மத உரிமையை அனுபவிக்கவே. எனது உரிமையை மற்றவருக்கு இடைஞல் இல்லாமல் நான் அனுபவிக்க அனுமதி இல்லை என்றால் நான் முழுமை பெறவில்லை. என்னை இழந்துதான் மற்றவர் முன்னால் என்னை பொய் மனிதனாக காட்டவேண்டுமென்றால் அந்த நிலைமையே தனிப்பட்ட முறையில் எனக்கு வேண்டாம். இதுதான் 1951ம் ஆண்டின் ஜெனிவா பிரகடணத்தின் அடிப்படை.

    Reply
  • ashroffali
    ashroffali

    //பர்தா அணிவது அல்லது சுன்னத்து செய்வது உங்கள் வீட்டுப் பிரச்சனை. பொதுப் பிரச்சனையல்ல. பர்தாவுக்கும்இ “தனி” பாடசாலைகளுக்கும் என்ன சம்பந்தம்?//நந்தா
    முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து தான் பாடசாலை செல்வார்கள். அப்படியிருக்க உங்களைப் போன்ற ஒருவர் அதிபராக இருந்து விட்டால் தமிழ்ப்பாடசாலையில் பார்தா அணிய முடியுமா..? கொழும்பு இந்துக் கல்லூரி மற்றும் பண்டாரவளை பாடசாலை ஒன்று என்பவற்றில் மட்டுமன்றி சில சிங்களப் பாடசாலைகளிலும் அது நடைபெற்றதே.. அதனால் தான் தனிப் பாடசாலை …

    //பாகிஸ்த்தான் காரன் அப்பாவி என்றும் கயிறு திரிக்கிறார். // எப்போது நான் பாக்கிஸ்தான் காரனை அப்பாவி என்று சொன்னேன்..?

    //திருடர்களும், கொலைகாரர்களும் “சாட்சியங்களை” வைத்து விட்டுத்தான் தமது தொழில்களை செய்வார்களோ தெரியவில்லை!//
    அப்படி வாங்க வழிக்கு.. நான் சொன்னதை நீங்கள் வேறு வார்த்தைகளால் ஏற்றுக் கொண்டிருக்கின்றீர்கள்… அவ்வளவுதான். திருடன் ஆதாரம் வைத்துவிட்டு திருட மாட்டான். அப்படியிருக்க எந்த வித விசாரணையும் இல்லாமல் ஸ்பொட்டுக்கு வந்தவுடன் இது பாக்கிஸ்தான்காரன் வேலை என்று கண்டுபிடிக்க தமிழ்நாட்டுப் பொலிசார் என்ன ஜோதிட சிகாமணிகளா..? இல்லை பாக்கிஸ்தானில் மட்டும் விசேட மை கொண்டு அச்சடிக்கின்றார்களா?

    அதற்குப் பின் நான் பதிந்துள்ளவற்றை நீங்கள் வாசிக்கவில்லை என்று நினைக்கின்றேன். முழுமையாக வாசித்துவிட்டு கருத்தெழுதுங்கள்…

    Reply
  • மாயா
    மாயா

    //இதுதான் 1951ம் ஆண்டின் ஜெனிவா பிரகடணத்தின் அடிப்படை.//

    நான் கடந்து வந்த பாதையில் மனிதநேயத்தையும் ; மனச் சாட்சியையும் தவிர வேறு எந்தப் பிரகடணத்தையும் ஏற்பவனல்ல மொகமட். இவை எல்லாம் ஒரு சிலரால் எழுதப்படுபவை. ஒரு சிலரது உணர்வுகள். அதுவும் வாக்கெடுப்பினால் சட்டமாக்கப்படுகிறது.

    சாட்சிகளின் அடிப்படையில் தூக்கு கயிற்றில் தொங்கிய பலர் உண்மையிலேயே நிரபாரதிகளாக இருந்ததுண்டு. பல விஞ்ஞானிகளை சாகடித்து விட்டு ; அவர்களுக்கே விருது கொடுத்த உலகம் இது சகோதரனே.

    Reply
  • mohamed nisthar
    mohamed nisthar

    ஆகவே மாயா, நான் என் சமயத்தை தூக்கி வீச வேண்டும் என்று சொல்கிறிர்களா?

    உலகம் எப்படிப்பட்டதென்று நீங்கள் சொல்வதில் எனக்கு கருத்தொறுமைப் பாடுண்டு. ஆனாலும் நீஙகள் காலையில் எழுந்து வெளியே செல்லும் போது சுவிஸ் நாட்டு பாதை பாவிப்பு சரத்துக்களை மீறி இதுவெல்லாம் ஒரு சிலரின் உணர்வுகளின் வெளிப்பாடு என்று உங்கள் பாட்டுக்கு நடந்தால் நீங்கள் வைத்தியசாலையில் கிடக்க வேண்டிவருமே.

    மனிதன் ஏதோ 21ம் நூற்றாண்டில் இருக்கிறானே தவிர பலரின் குணம் ,அதனால் செயற்படும் முறை எல்லாம் அப்படியே குரங்கு தன்மையில்தானே இருக்கிறது.

    அதற்காகவே சமயம். அவனை இந்த உலகத்தில் ஆகக் குறைந்து மிருகமாக இல்லாமல் வாழ தூண்டுவது. ஆனால் நாம் என்ன செய்ய, அல்கைடா ஒரு புறம், புலி மறு புறம், தலபான் ஒரு புறம், சிங்கள உருமைய மறு புறம், கி(H)ந்து பர்ஷத் ஒரு புறம், அமெரிக்க படை மறு புறம் என்றால் நாம் என்ன செய்ய முடியும்.

    என் உரிமையை விளங்காதவனுக்கு, அப்படி ஒன்று இருக்கின்றது என்பதை விளங்கப்படுத்தவே இத்தனை முயற்சிகள். இது வீணாகிறதே என்பதை நினைக்கும் போது….

    Reply
  • Ajith
    Ajith

    ஒரே மொழி பேசும் இந்துவும் ; கிறிஸ்தவனும் ; முஸ்லிமும் தமது மதத்தை முன்னிலைப்படுத்தி முரண்படும் போது , எங்கே தமிழன்? எதற்கு தமிழீழம்? – மாயா

    தமிழ் பேசும் இந்துக்களும் கிறிஸ்தவர்களும் மதத்தை முன்வைத்து வேறுபடவில்லை. தமிழ் பேசும் மக்கள் மத ரீதியாக தம்மை என்றுமே முன்படுத்தி நின்றதில்லை. தமிழ் பேசும் மக்கள் ஒரு இனம். அவர்கள் இந்த இலங்கை தீவின் வட கிழக்கை தாயகமாக கொண்ட மக்கள். அவர்களுக்கு தாம் பேசும் மொழியின் அடிப்படையில் தமக்கான நிர்வாக அமைப்பை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கில் எந்த கருத்து முரண்பாடும் இல்லை. முஸ்லிம்கள் தாம் பேசும் மொழியை விட மதத்தையும் இனத்தையும் இணைத்து தேவைகேற்ப முரண்படுகிறார்கள். இதனை நீங்கள் உங்கள் வசதிக்கேற்ப திரித்து அடிப்படையை மாற்ற முயல்கிறீர்கள்.

    மதங்களுக்கு இடையே வேறுபாடுகள் உண்டு, ஆனால் மதங்களை முன்னிலைபடுத்தி அரசியல் நடத்துவது ஆபத்தானது. இலங்கையின் கடந்த கால அழிவுகளுக்கெல்லாம் பௌத்த சிங்கள அடிபடைவாதமும், அதனை வைத்து அரசியல் லாபம் தேடும் சிங்கள தலைமகளும் தான். இங்கு முஸ்லிம்கள் ஏன் தம்மை முஸ்லிம் என்று ஒரு தனி இனமாகப் பார்க்கவேண்டும். அவர்களும் இந்த பிரதேசத்தை தாயகமாக கொண்டவர்கள். அவர்கள் போரின் காரணமாக இடம் பெயர்ந்தவர்கள். அவர்களுக்கு தமிழ் பேசும் இந்துகள் கிறிஸ்தவர்கள் பௌத்தர்கள் போல் இங்கு மீள குடியேறுவதற்கு சட்ட ரீதியாக எல்லா உரிமையும் உண்டு, இதற்கான பொறுப்பு அரசையும் அரச அதிகாரிகளையும் சார்ந்தது. ஆனால் அவர்கள் தங்களை மதத்தை வைத்து ஒரு வேறுபட்ட இனமாக கருத வேண்டும் என்று கூறுவது தவறானது. அவர்கள் மற்றைய தமிழ் பேசும் மக்களிடம் இருந்து வேறுபடுவது மதத்தால் மாத்திரம் தான். அவர்களுடைய மத வழிபாட்டுக்கு ஏனைய தமிழர்கள் எபோதும் இடையூறாக இருந்ததில்லை.

    அவர்கள் தாங்கள் ஒரு தனி இனம் அவர்களுக்கு என ஒரு தனி கலை கலாச்சாரம், மொழி, பண்பாடு, பொருளாதரம், பிரதேசம் என்று உண்டென்றால் அதற்காக அவர்கள் சிங்கள ஆட்சியாளரிடம் கேட்டு போராடவேண்டும். ஏனெனில் இன்று முழு இலங்கை தீவையும் தமது இராணுவ பலத்தால் அவர்கள் ஆக்கிரமித்து வைத்துள்ளார்கள்.

    இங்கு தமிழ் மக்களுக்கு சுயாட்சி வேண்டுமென்று கேட்கும்போது மாத்திரம் நீங்கள் தனி இனம் இல்லாவிடில் நீங்கள் முஸ்லிம் மதத்தவர் என்ற இரட்டை நாடகம் வேண்டாம்.

    Reply
  • மாயா
    மாயா

    தமிழீழம் கிடைத்தாலும் (அது கிடைக்காது); இந்தப் பிரச்சினை முடியாது போல இருக்கு. நீங்களே வாதிட்டு ; நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள். வாசிக்க நாங்கள் இருக்கிறோம். பிரச்சனை என்றால் தீர்வு இருக்கும். இது கானல் நீரை தொட முயல்வதான முயற்சி. நல்ல காலம் நாட்டில் நீங்கள் இல்லை.

    Reply
  • London boy
    London boy

    அஸ்ரப்அலி முள்ளிவாய்காலில் புலிகளுக்கு என்ன? நடந்தது என்று உங்கள் நேரடி அனுபவத்தை இங்கு பகிர முடியுமா? பலர் கேட்டார்கள் உங்கள் பதிலைக்காணோம் ஏன்?

    Reply
  • நந்தா
    நந்தா

    பாகிஸ்தான்காரனின் கள்ளநோட்டுக்கள் எப்படி யாழ் முஸ்லிமின் கையில் வந்துள்ளது என்பது பெரிய புதிரல்ல. அது இஸ்லாமிய சகோதர அடிப்படியில் வந்த மோசடி. சமீபத்தில் இந்திய அதிகாரிகள் முஸ்லிம் தீவிரவாதிகள் இலங்கையை தளமாக பயன் படுத்துகின்றனர் என்று இலங்கையை எச்சரித்தது சும்மாவல்ல.

    பாகிஸ்தான் தனது குண்டு வைக்கும் பயங்கரவாதிகளிடம் கள்ள நோட்டுக்களைக் கொடுத்து விடுவது இன்று நேற்றல்ல என்ற உண்மையை படிப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்!

    பல தசாப்தங்களாக இந்த கள்ளநோட்டு மோசடி ஒரு தொடர் கதை. ஆயினும் அதனை “கட்டுக்ககதை” என்று நம்ம முஸ்லிம்மார் மூடி ஒளிப்பதில் அக்கறை காட்டுவதன் நோக்கம் என்ன என்பதை சிந்திக்கவும்! அமெரிக்கா சிலிநாட்டில் கள்ளநோட்டுக்களை உலாவ விட்டு பொருளாதார சிக்கலை உண்டாக்கியதை படிப்பவர்கள் மனதில் கொள்ள வேண்டும்.

    இன்னமும் இந்த நிஸ்தார்/அலி போன்றவர்கள் கள்ளநோட்டுக்கள் பற்றி கண்டிப்பதை விட பாகிஸ்தானுக்கு அழுது மண்டாடுகிறார்கள். முஸ்லிம்கள் பணத்தை முதலீடு செய்வதை விட மோசடி, திருட்டு என்பதை முதலாக்குகிறர்கள் என்பது ஆதார பூர்வமான உண்மை!

    Reply
  • நந்தா
    நந்தா

    மாயா:
    தனிப்பாடசாலைகள் என்பதற்கு உங்கள் விளக்கம் படு மோசம்! முஸ்லிம் பாடசாலைகளில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி அறிந்துவிட்டு கருத்து எழுதினால் நல்லது!

    Reply