சம்பூர், நீர்கொழும்பில் வெடிபொருட்கள்

சம்பூர் மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் களில் பல வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

சம்பூர் கைமுந்தகுளத்திற்கு அருகில் புலிகள் இயக்கத்தின் பங்கர் ஒன்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த அதிசக்தி வாய்ந்த வெடிபொருட்கள் அடங்கிய 7 சிறிய பக்கெட்டுகள், 10 மிதிவெடிகள், ஒரு சயனைட் குப்பி என்பன மீட்கப்பட்டன. நீர்கொழும்பு கொப்பரா சந்தியில் வைத்து மன்னாரில் இருந்து மீன் எடுத்து வந்த லொறியில் இருந்து ஆயிரம் டெடனேட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • மாயா
    மாயா

    அப்ப இந்த செய்தி உண்மையாக இருக்குமோ? > இது மலேசியாவிலிருந்து வரும் இணைய தளத்தில் வந்துள்ள செய்தி…..

    மே 18 பிற்பாடு புரியாத புதிர்களாக காட்சியளிக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைத்துத்தில் தற்போது தீடீர் மாற்றம். அதாவது புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறுதியுத்தத்தில் கொல்லப்பட்டுவிட்டார் என இலங்கை அரசாங்கம் கூறியது ஆனால் தலைவர் கொல்லப்படவில்லை அவர் 2 ஆயிரம் புலிகளுடன் அவர் தப்பித்துவிட்டர் தற்போது ரகசியமான இடத்தில் உயிருடன் உள்ளார் எனவும் அவர் தற்போது 12 ஆயிரம் புலிகளுக்கு பயிற்சி அளித்துக்கொண்டிருப்பதாகவும் நோர்வே நாட்டில் உள்ள புலிகளின் சர்வதேச பொறுப்பாளர்களில் ஒருவரான நெடியவன் என்பவர் தலைமையிலான குழுவினர் பிரச்சாரம் செய்துள்ளார். மேலும்…

    சிங்களம் தமிழ் மக்களை குழப்ப பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றது. இதனை மக்கள் நம்பாது எமக்கு கரம் கொடுங்கள். தற்போது இழந்த மண்ணை நாம் மீட்டெடுக்க சிங்கள படைகளுடன் போராட நவீன ஆயுதங்கள் தேவை அவற்றை வாங்க தமிழ் மக்கள் அளிக்கும் நிதி உதவியோடு தான் இவற்றை சாதிக்க முடியும் என கூறி இவர்கள் நிதி சேகரிப்பில் மும்முரமாக ஈடு பட்டுள்ளதாக ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன. குறிப்பாக மலேசிய நாளேடுகளின் தலைப்புச் செய்தியும் இதுதான், எனினும் இச் செய்திகள் யாவும் உறுதிபடுத்தபடாதவையாகவே உள்ளன.

    – செய்தி

    Reply