இம்மாதம் 12ஆம் திகதி இடம்பெறும் உலக விஞ்ஞான தினத்தை முன்னிட்டு புதுடில்லி இந்திராகாந்தி தேசிய திறந்த பல்கலைக்கழகம் யுனெஸ்கோவுடன் இணைந்து சார்க் நாடுகளிடையே நடத்திய விஞ்ஞானப் போட்டியில் யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரி மாணவன் சி.செல்வநித்திலன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சார்க் நாடுகளிடையே நடைபெற்ற இப்போட்டியில் நான்காயிரம் மாணவர்கள் கலந்து கொண்டனர். இரண்டாம் கட்டப்போடடிக்கு இவர்களில் 41பேர் மட்டுமே தெரிவாகியுள்ளனர். இவர்களில் இலங்கையைச் சேர்ந்த மாணவர்கள் மூவராகும். எதிர்வரும் 13ஆம் திகதியன்று புதடில்லியில் நடைபெறும் இரண்டாம் கட்டப்போட்டியின் பின்னர் முதலாம் கட்டத்தில் தெரிவான 41 பேருக்கும் விருதுகள் வழங்கப்படவுள்ளன. இதில் யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரியின் மாணவன் செல்வநித்திலனும் ஒருவர்.
இம்மாணவன் இலங்கைப் பௌதிகவியற் கழகம் நடாளாவிய ரீதியில் நடத்திய ‘இலங்கை பௌதிகவியல் ஒலிம்பியாட் போட்டி’யிலும் அதி கூடிய புள்ளிகளைப் பெற்று தேசிய விஞ்ஞான மன்றத்தின் உலக விஞ்ஞான தின விழாவில் தங்கப்பதக்கம் பெறவுள்ளார். இவ்விழா நவம்பர் 12ஆம் திகதி கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இத் தங்கப்பதக்கத்தை தொழில்நுட்பம் மற்றும் ஆய்வுகளுக்கான அமைச்சர் பேராசியரியர் திஸ்ஸவிதாரண வழங்கவுள்ளார்.
சாந்தன்
வாழ்த்துக்கள் செல்வநித்திலன். இச்சாதனை உங்களுக்கும் பெற்ரோருக்கும் உரியது. அத்துடன் யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரிச்சமூகமும் உவகை கொள்ளும் வகையில் அமைந்துள்ளது
thomas
நாங்கள் கனவுகள் எழுதி வைத்த பள்ளீக கூடம்.புதிய,புதிய ரோஜா க்கள இந்தப் பூமிக்கு தந்து கொண்டே இருக்கிறது.அந்த ரோஜாவில் ஒரு ராஜா செல்வ நித்திலனுக்கு என் வாழ்த்துக்கள்.
மாயா
அனைத்து செல்வங்களுக்கும் பாராட்டு மற்றும் வாழ்த்துகள் .