போரினால் அழிவுற்று இருக்கும் “புனித பூமி’யை நேர்டோ பொறுப்பு எடுத்து அன்பு இல்லமாக கட்டி எழுப்பும் பணியை ஒக்ரோபர் 23 2010ல் ஆரம்பித்துள்ளது. இந்த நிகழ்வில் கடந்த கால செயற்குழு உறுப்பினர், ஊர்மக்கள், மாணவர்கள், கல்விமான்கள், கிராம மக்கள், புலம் பெயர் உறவுகள், கலந்து கொண்டனர். ரீ ஆர் ஓவினால் 1992இல் ஆரம்பிக்கப்பட்ட புனித பூமி என்ற அனாதை குழந்தைகள் காப்பகம் 1998 டிசம்பர்வரை இங்கு நடைபெற்றது. இந்த இல்லம் 1998இல் நடைபெற்ற யுத்தத்தினால் கைவிடப்பட்டு மீளவும் அதே இடத்தில் மார்ச் 2002 இல் புனித ப+மி தனது செயற்பாடுகளை தொடர்ந்தது. வன்னி யுத்தம் மீள ஆரம்பித்தததை அடுத்து இந்த கட்டடம் கைவிடப்பட்டதுடன் இங்கு தங்கியிருந்த பல குழந்தைகள் பல்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
கட்டட வேலைகள் ஆரம்பமானதன் அடையாளமாக மரம் நாட்டு விழாவும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்குபற்றியவர்கள் போரினால் அநாதரவாக இருக்கும் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவச் சிறார்களுக்கு எதிர்காலத்தை வழங்குதலும் இவர்களுடைய கல்வி, ஊட்டச்சத்து, உணவு பற்றாக்குறை இதனை எப்படி நிவர்த்தி செய்வது என்பது பற்றியும் கலந்துரையாடினர்.
இந்தரீதியில் கல்வித்துறை அதிகாரிகள் குறிப்பாக வன்னிப்பகுதி மாணவர்களுக்கு ஆங்கிலக் கல்வியையும், விஞ்ஞானக் கல்வியையும் எப்படி புகட்டுவது என்பது பற்றியும் தமது கருத்தை கூறினர். நேர்டோவின் பங்களிப்பு இதற்கு அவசியம் என்பதை வலியுறுத்தியதை அடுத்து இது சம்பந்தமான விடயங்களில் தம்மால் ஆன அனைத்து உதவிகளையும் செய்ய முடியம் என்று நேர்டோ அமைப்பினர் உறுதியளித்தனர்.
சமூகப் பிரச்சினை பற்றி இந்நிகழ்வில் கலந்து கொண்ட கிராம மக்கள் தமது கருத்தைக் கூறினர். குறிப்பாக இந்த பிரதேசத்தில் உள்ள மக்கள் குறைபாடு பெண்களுக்கு கல்வி புகட்டுவதன் ஊடாக பிள்ளைகளின் கல்வியை சீர்செய்ய முடியும் என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டது. முல்லைத்தீவில் மீன்பிடியை தொழிலாகக் கொண்ட குடும்பங்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் பற்றியும் ஆராயப்பட்டது.