இறுதிக்கட்ட யுத்தத்தின் போது 110 கிலோ தங்கம் புலிகளிடமிருந்து மீட்பு

den.jpgஇறுதிக் கட்ட யுத்தத்தின் போது புலிகளிடமிருந்து 110 கிலோ கிராம் தங்கத்தை இராணுவத்தினர் மீட்டெடுத்ததாக ஆளும் கட்சி பிரதம கொறடாவும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றம், சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று பிற்பகல் 1.00 மணிக்குக் கூடியது. சபை அமர்வின் தொடக்க நிகழ்வின் போது குருநாகல் மாவட்ட ஐ.தே.க. எம்.பி தயாசிறி ஜயசேகர கேட்டிருந்த வாய் மூல விடைக்கான வினா வுக்கு பதிலளிக்கும் வகையி லேயே அமைச்சர் மேற் கண்டவாறு குறிப்பிட்டார். பிரதமர் சார்பில் ஆளும்கட்சி பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன இக்கேள்விக்கு பதிலளித்தார்.

அமைச்சர் தொடர்ந்தும் பதிலளிக்கையில், இறுதிக் கட்ட யுத்தத்தின் போது புலிகளின் 110 கிலோ கிராம் தங்கத்தை இராணுவத்தின் 58வது படைப் பிரிவும் இராணுவ பொலிஸ் பிரிவும் இணைந்து மீட்டெடுத்தன. அத்தங்கத்தின் பெறுமதி 490 மில்லியன் ரூபாய் ஆகும். இத்தங்கம் தொடர்பாக நியமிக்கப் பட்டுள்ள சபையினர் சட்டப்படி அவற்றை இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைத்து வருகின்றனர் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • நந்தா
    நந்தா

    வன்னி மக்களின் கடும் உழைப்பு (குறைந்தது 10 வருட சேமிப்பு) உழைப்பேயில்லாத கூட்டத்தினரால் கொள்ளையடிக்கப்பட்டு அன்னிய முதலாளிகளுக்குத் தாரை வார்க்கப்பட இருந்துள்ளது.

    Reply