லண்டனில் வன்னிப் போரில் மக்களை பணயம் வைத்த தமிழ் ஊடகங்களின் 2010 மாநாடு! – அருள் சகோதரர் எழிலனும் ஒரு பேச்சாளர்! : த ஜெயபாலன்

Gobi_RatnamSutha_NadarajahCheran‘உலகமயமாகி உள்ள உலகில் தமிழர் பிரச்சினையும் ஊடகங்களும்’ என்ற தலைப்பிலான மாநாடு லண்டனில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஒக்ரோபர் 23ல் வெஸ்ற்மினிஸ்ரர் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம்மாநாட்டை International Association of Tamil Journalists – சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் என்ற அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. இவ்வமைப்பின் முதலாவது மாநாடு 2008 ஏப்ரல் 26ல் இடம்பெற்றது.

இந்த ஊடக அமைப்பில் உள்ள பிரதான ஊடகங்கள் ஐபிசி, ஒரு பேப்பர், ஜிரிவி (2008ல் ரிரிஎன்), தமிழ் கார்டியன் போன்ற லண்டனைத் தளமாகக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு ஊடகங்களே. ஏனைய நாடுகளில் உள்ள புலிஆதரவு அமைப்புகளும் நிறுவனங்களும் தங்கள் ஆதரவை நல்கி வருகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் மீதும் அதன் தலைவர் வி பிரபாகரன் மீதும் மிகுந்த நம்பிக்கையும் மதிப்பும் கொண்ட ஆனந்தி சூரியப்பிரகாசத்தைத் தலைவியாகக் கொண்டு இவ்வமைப்பு செயற்பட்டு வருகின்றது. பிபிசி தமிழோசையில் நீண்டகாலம் பணியாற்றிய இவருடைய சர்வதேச ஊடகவியல் முகத்தின் பின்னால் இருந்து இவ்வமைப்பை இயக்குபவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு ஊடகங்களே.

2008ல் நடந்த மாநாட்டை குத்து விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தவர் ‘ஆணிவேர்’ படத்தின் தயாரிப்பாளரும் வர்த்தகப் பிரமுகருமான திலகராஜா தம்பதிகள். திலகராஜா தற்போது வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ஹொட்டல்களை உருவாக்கி வருகின்றார். அந்நிகழ்வின் வரவேற்புரையை வழங்கியவர் ஒரு பேப்பர் ஆசிரியர் கோபி ரட்ணம். தமிழ் கார்டியன் சுதா நடராஜா, விநோதினி கணபதிப்பிள்ளை ஆகிய இருவரும் 2008 மாநாட்டில், முக்கியமாக உரையாற்றியவர்கள், 2010 மாநாட்டிலும் முக்கிய பேச்சாளர்களாக உள்ளனர். அதே போன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கருத்தியல் சிற்பிகளில் ஒருவராகக் கருதப்படும் பேராசிரியர் சேரன் 2008 மாநாட்டிலும் முக்கிய பேச்சாளராகக் கலந்துகொண்டவர், 2010 இலும் முக்கிய பேச்சாளராக கலந்துகொள்கிறார். ரிரிஎன் தொலைக்காட்சிக்கு பிரதியீடாக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் அவுஸ்திரேலியாவில் இருந்து இயக்கப்படும் ஜீரிவி யும் இம்மாநாட்டில் முக்கிய பங்கெடுக்கின்றது. ஜிரிவி இன் நிகழ்ச்சி வழங்குநர் தினேஸ் மாநாட்டின் ஒரு அமர்வுக்கு தலைமை தாங்குகின்றார்.

 ஊடகங்களின் புலிமயமாக்கல்:

தமிழீழ விடுதலைப் புலிகள் தாயகத்திலும் புலத்திலும் தமிழ் மக்கள் மத்தியில் இருந்த பெரும்பாலான பொது அமைப்புகளை புலிமயமாக்கலுக்கு உட்படுத்தி வந்தன. தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள், ஊடகங்களும் இந்தப் புலிமயமாக்கலில் இருந்து தப்பவில்லை. இந்தப் புலிமயமாக்களில் புலி ஆதரவு ஊடகங்களின் பங்கு குறிப்பிடத்தக்கது.

இந்தப் புலிமயமாக்கலின் உச்சமாக 2007 பிற்பகுதியில் தமிழ் ஊடகங்களுக்கான ஒரு அமைப்பை உருவாக்க முயற்சிக்கப்பட்டது. வன்னியில் இருந்து வந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு வானொலியான ஐபிசி வானொலியின் நிர்வாகத்தைப் பொறுப்பேற்ற ரமணன் என்பவரே இதன் உருவாக்கத்தில் ஈடுபட்டவர்களில் முக்கியமானவர். தமிழ் சர்வதேச செய்தியாளர் ஒன்றியத்தை அமைப்பதற்கான முதலாவது சந்திப்பு ஐபிசி கலையகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பை குகன் என்பவர் ஏற்பாடு செய்திருந்தார். இச்சந்திப்பிற்கான அழைப்பு தெரிவு செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான ஊடகவியலாளர்கள் சிலருக்கே கொடுக்கப்பட்டது.

அவ்வழைப்பை ஏற்று இந்நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற அப்போது தீபம் தொலைக்காட்சியின் ஊடகவியலாளராக இருந்த கண்ணன் இச்சந்திப்பில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை. இது புலிமயமாக்கலின் உச்சமான நிகழ்வு. இந்த ஊடக அமைப்பில் புலிகள் மீது மென்போக்குக் கொண்ட அல்லது புலிகளை விமர்சிக்கவோ அல்லது புலிகளுக்கு எதிரான செய்திகளை வெளியிடுவதை தவிர்த்து வந்த தீபம் தொலைக்காட்சி, சன்றைஸ் வானொலி போன்ற ஊடகங்களும் அதன் ஊடகவியலாளர்களுமே சேர்த்துக் கொள்ளப்படவில்லை. ஆகவே இது முற்று முழுதான புலி ஊடக அமைப்பு என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இவ்வமைப்பின் தலைவி ஆனந்தி சூரியப்பிரகாசம் மட்டுமே இந்த அமைப்பிற்கு ஒரு ஊடகவியல் சாயத்தை வழங்கிக் கொண்டு உள்ளார்.

 ஊடகவியலின் அடிப்படை:

ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் மக்களின் காவலர்களாக செயற்பட வேண்டும். ஊடகத்தின் முதலும் முக்கியமானதுமான கடமை உண்மையை வெளிக்கொணர்தல். நல்லாட்சியை உறுதிப்படுத்துவதற்கு ஊடகவியலின் பங்கு மகத்தானது. இவ்வாறான ஊடகவியலின் அடிப்படை அம்சங்கள் எதனையுமே இந்த மாநாட்டை ஏற்பாடு செய்யும் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் கொண்டிருக்கவில்லை.

இந்த ஊடகங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளையும் அதன் தலைமையையும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களாக்கியது. தமிழீழ விடுதலைப் புலிகள் மீதும் அதன் தலைமை மீதும் விம்பங்களைக் கட்டி அவர்களை யதார்த்தத்தில் இருந்து அந்நியப்படுத்தியது. தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விமர்சனங்கள் வைக்கப்படும் போதெல்லாம் அவ்வாறான விமர்சனங்களை வைப்போர் மீது தனிமனித தாக்குதலை நடாத்தியது. ஆகவே International Association of Tamil Journalists என்பதிலும் பார்க்க International Association of Tiger Journalists என்பதே இவ்வமைப்பிற்கு பொருத்தமான பெயராக இருக்க முடியும்.

”இடிப்பாரை இல்லாத எமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங்கெடும்”
                        (குறள் 448)

‘தவறுகளை இடித்து உரைக்கின்றவர்கள் இல்லாது இருந்தால், எப்படிப்பட்ட சிறப்பான மன்னனாக இருந்தாலும் அம்மன்னனுக்கு கேடு செய்பவர்களே இல்லாவிட்டாலும் அம்மன்னன் கெட்டு அழிந்து போவான்’ என்கிறது இக்குறள்.

இதற்கு மிகச்சிறந்த உதாரணமாகி உள்ளது தமிழ்த் தேசிய மன்னன் வே பிரபாகரனும் International Association of Tiger Journalists ம். மே 18 வரை இந்த ஊடகங்கள் எழுதிய எவ்வித ஆதாரமோ அடிப்படையோ அற்ற செய்திகளும் ஆய்வுகளும் புகழ் மாலைகளும் வே பிரபாகரனினது தலைமையினதோ தமிழீழ விடுதலைப் புலிகளினதோ எவ்வித தவறான அணுகுமுறையையும் சுட்டிக்காட்டவில்லை. மாறாக தமிழீழ விடுதலைப் புலிகளையும் அதன் தலைவர் வே பிரபாகரனையும் சுற்றி விம்பங்களைக் கட்டமைத்தன. விளைவு…..
‘இடிப்பாரை இல்லாத ‘வே’யன்னா மன்னன்
கெடுப்பாருங் செய் கெட்டான்’

உண்மைகளை இருட்டடிப்புச் செய்தனர்:

International Association of Tiger Journalists அமைப்பில் உள்ள ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் பேராசிரியர் சேரன் போன்ற மதியுரைஞர்களும் வன்னி மக்களைப் பணயம் வைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களைக் காப்பாற்ற முற்பட்டபோது எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. வன்னி மக்கள் ஆயிரம் ஆயிரமாகச் செத்து மடிந்த போதும் இந்த ஊடகங்கள் மக்களை விடுவிக்குமாறு தமிழீழ விடுதலைப் புலிகளைக் கோரவில்லை. மாறாக அந்த மண் வன்னி மக்களின் பூர்வீக மண் என்று கதையளந்து அம்மக்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் பணயக் கைதிகளாக இருக்க நிர்ப்பந்தித்தன. இந்த ஊடகங்களின் சில ஊடகவியலாளர்கள் ஒருபடி மேலே சென்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து உயிருக்குப் பயந்து தப்பியோடிய மக்களை எவ்வித கூச்சமும் இன்றி துரோகம் இழைப்பதாக விபரித்தனர்.

மாநாட்டில் பங்குபற்றுவோர்:

இச்சந்திப்பிற்கு முன்னர் குறிப்பிட்டவர்களுடன் ஐவன் பீதுருப்பிள்ளை போன்றவர்களும் இணைக்கப்படுவார்கள். மேலும் நோர்வேயில் இருந்து சேந்தன் என்ற இளைய தலைமுறை இளைஞரும், டென்மார்க்கில் இருந்து மற்றுமொரு இளைஞரும் கலந்து கொள்ள உள்ளனர்.

இலங்கையில் இருந்து வீரகேசரி ஆசிரியர் தேவராஜா கலந்துகொள்கிறார்.

இச்சந்திப்பில் சர்வதேச மன்னிப்புச்சபையின் சார்பில் ரமேஸ் கலந்துகொள்கின்றார். தமிழகத்தில் பத்திரிகையாளராகக் கடமையாற்றிய இவர் தமிழீழ விடுதலைப் போராட்டத்துடன் நீண்டகாலத் தொடர்புடையவர். தனது கருத்துக்களை அனேகமாக வெளிப்படையாகவே தெரிவிக்கக்கூடியவர். பக்கம்சாராது கருத்துக்களை வெளிப்படுத்தக் கூடியவர். இவருடைய உரை அங்குள்ள பலருக்கு அசௌகரியத்தையும் ஏற்படுத்தலாம். இவருடன் சர்வதேச ஊடக அமைப்பைச் சேர்ந்த சிலரும் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்தியாவில் இருந்து 2008ல் டெக்கன் ஹரல்ட் சார்பில் பகவான் சிங் கும் சுந்தரராஜன் முராய் உம் கலந்துகொண்டனர். 2010 மாநாட்டுக்கு ரைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிகையின் இலங்கைப் பிரிவில் இருந்து அம்ரித் லால் என்ற வட இந்தியர் கலந்துகொள்கிறார். இச்சந்திப்பில் கலந்து கொள்ளும் மற்றவர்…..

புலிஆதரவு ஊடகங்களின் மாநாட்டில் அருள் சகோதரர் அருள்எழிலன்

தமிழகத்தைச் சேர்ந்த ஊடகவியலாளரும் இனியொரு இணையத்தின் முக்கிய ஊடகவியலாளருமான அருள்எழிலன் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு ஊடக மாநாட்டில் கலந்துகொள்கிறார். இவர் இலங்கையில் இயங்கும் டான் தொலைக்காட்சி நிறுவனர் குகநாதன் செப்ரம்பர் 3ல் தமிழகத்தில் வைத்து கடத்தல் – கைது விவகாரத்தில் தொடர்புபட்டவர். (டான் ரிவி உரிமையாளர் குகநாதன் – அருள்சகோதரர்கள்: கடத்தல் – கைது விவகாரம்: ‘இது ஒரு சட்டபூர்வமான கடத்தல்’ எஸ் எஸ் குகநாதன்)

இந்த மாநாட்டுக்கு இந்திய ஊடகவியலாளர் அம்ரித் லால் உடன் தமிழகத்தைச் சேர்ந்த, ‘தேசியத் தலைவர் இன்னமும் உயிருடன் உள்ளார்’ என்பதை ஏற்றுக்கொள்ளும் ஊடகவியலாளரைத் தேடினர். ஜுனியர் விகடன் ஊடகவியலாளர் ஒருவரையே அழைக்க ஆரம்பத்தில் முயற்சிக்கப்பட்டது. தொடர்ந்து காற்றுக்கென்ன வேலி படத்தின் இயக்குநரையும் அழைக்க முயற்சிக்கப்பட்டது. இருவருக்கும் வருவதற்கான சாத்தியம் இருக்கவில்லை என்பதால், இறுதியாக ரிரிஎன் தொலைக்காட்சியில் பணியாற்றிய, மதியுரைஞர் காலம்சென்ற அன்ரன் பாலசிங்கத்திடம் பேட்டி காண லண்டன் வந்த அருள் சகோதரர்களின் குடும்பத்தில் ஒருவரை அழைக்க முடிவாகியது. அருள் எழிலன் இந்த மாநாட்டுக்கு அழைக்கப்பட்டார்.

புலிகளின் சம்பளப் பட்டியலில் சில தமிழக ஊடகவியலாளர்கள்:

இன்று தமிழகத்தில் உள்ள சில ஊடகங்களும் ஊடகவியலாளரும் புலம்பெயர் புலி முகவர்களின் சம்பளப் பட்டியலில் உள்ளனர். அல்லது அதனூடாக லாபம் அடைகின்றனர். ஈழத் தமிழரின் அவலம் பற்றி எழுதுவதும் தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றி எழுதுவதும் தமிழக வியாபார ஊடகங்களின் எழுத்தாளர்களின் ஒரு வியாபாரத் தந்திரமாக மாறியுள்ளது.

நக்கீரன், நக்கீரன் கோபால் போன்ற இந்த வியாபார ஊடகங்களினதும் ஊடகவியலாளர்களதும் வாடகை உணர்வுகள் ஈழத் தமிழ் மக்களின் அழிவுக்கே வித்திட்டு உள்ளது.

Pirbaharan_Still_Alive_NotPirabaharan_Still_Aliveமே 18ல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் கொல்லப்பட்ட செய்தி உலக ஊடகங்களில் எல்லாம் வெளிவந்த போது நக்கீரன் சஞ்சிகை தலைவர் உயிருடன் இருப்பதாக படம் காட்டியது. (உண்மையான படமும் நக்கீரன் கிராபிக்ஸ் செய்த படமும் அருகில் இணைக்கப்பட்டு உள்ளது.) இன்னுமொரு சஞ்சிகை அவர் எப்படித் தப்பிச் சென்றார் என்று தொடர் எழுதியது.

இவ்வாறான ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் பணம் லண்டனில் இருந்தே அனுப்பி வைக்கப்பட்டதாக அனுப்பியவருடன் கூட இருந்த முன்னாள் புலி ஆதரவாளர் ஒருவர் தேசம்நெற் க்குத் தெரிவித்தார். இந்தக் குற்றச்சாட்டை கெ பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் கைது செய்யப்படுவதற்கு முன்னதாகவே (யூன் 14 2009ல்) தேசம்நெற்க்கு தெரிவித்து இருந்தார்.

 பணத்திற்காக செய்திகளை உருவாக்கும் சில தமிழக ஊடகங்கள்:

டான் தொலைக்காட்சி நிறுவனர் குகநாதனைத் தவிரவும் அண்மைக் காலத்தில் தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களை குறிவைத்து கடத்தல்கள், கப்பம் வாங்கல் போன்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தமிழகப் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக ஈஎன்டிஎல்டிப் அமைப்பு நக்கீரன் பத்திரிகை எவ்வாறு ஒரு கடத்தல் நாடகத்தை பின்னுகிறது என எழுதியுள்ளது.

‘‘பிடிபட்ட ரஜனி’ என்று ஓர் படத்தினை போட்டுள்ளீர்கள். யார் பிடித்தது? போலீஸ்சார் பிடித்தனரா? வலுக்கட்டாயமாக அவரது கடையிலிருந்தவரை வடபழனியிலிருக்கும் மயூரியா ஹோட்டலுக்கு இழுத்துச் சென்று புகைப் படம் எடுத்து அனுப்பிவிட்டு, ‘பிடிபட்ட ரஜனிகாந்த்’ என்று மக்களை ஏமாற்றியுள்ளீர்கள். பிடிபட்டவர் என்றால் போலீசில் பிடிபட்டவர் என்ற அர்த்தம் தோன்றும் வகையில் கதை பின்னியுள்ளீர்கள். அகதிகளாகவும் அடிமைகளாகவும் வாழும் வாழ்க்கையின் வலி என்னவென்பதே தெரியாத நீங்கள் வியாபாரத்துக்காகவும் லாபத்திற்காகவும் ஈழப்பிரச்சினையில் மூக்கை நுழைத்து, கெடுதல் செய்து பணம் பண்ணுகிறீர்கள்” என ஈஎன்டிஎல்எப் அறிக்கை குற்றம்சாட்டி உள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பாக தமிழக எழுத்தாளரும் இடதுசாரிச் சிந்தனையாளருமான ஆதவன் தீட்சண்யா செப்ரம்பர் 20ல் வருமாறு தேசம்நெற் இல் பதிவிட்டுள்ளார். ”மாற்றுக்கருத்து கொண்டிருப்பவர்களை விலைபோனவர்கள் என்று அவதூறு பேசித்திரிந்த இவர்கள் (அருள் சகோதரர்கள்) எப்படி கூலிக்கு மாறடித்துக் கொண்டிருந்தனர், என்னென்ன ஆதாயங்களை அடைந்தார்கள் என்பது இப்போது அம்பலமாகியுள்ளது. ஆனால் கருணாநிதி குடும்பத்துடனான தமது தொடர்புகளின் செல்வாக்கில் இப்படி எத்தனை பேரை பிடித்து வைத்து கறந்திருக்கிறார்கள் என்பது இனிதான் வெளியாக வேண்டும்” என்கிறார்.

 குகநாதன் கைது கடத்தல் வீடியோ பதிவு எங்கே:

குகநாதனை தாங்கள் கடத்தவில்லை என்றும் பொலிசாரே கைது செய்தனர் என்றும் கூறும் அருள் சகோதரர்கள் குகநாதன் தங்களுக்கு தர இருந்த சம்பளப் பாக்கியையே நீதிமன்றத்திற்கு வெளியே ஆனால் சட்டப்படி வாங்கிக் கொண்டு குகநாதனை விடுவித்ததாகக் கூறுகிறார்கள். இது தொடர்பாக தமிழ் அரங்கம் இணையத்தில் செப்ரம்பர் 03ல் டி அருள் செழியன், ”குகநாதன் கைது செய்யப்பட்ட விதம் காவல் நிலையத்தில் அவரது கெஞ்சல், இராயகரன் குறிப்பிடும் ஆட்களுடன் அவரது பேச்சுகள் ஆகியவை என்னால் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை பார்த்தால் நடந்தது கட்டபஞ்சாயாதா அல்லது குகநாதனுக்கு காட்டப்பட்டது கருணையா என்பது தெரியவரும். இரயாகரன் விரும்பினால் அந்த ரகசிய வீடியோவின் 8 மணி நேரப்பதிவின் ஒரு பிரதியை அனுப்பித் தரத்தயாரா இருக்கிறேன்” எனக் குறிப்பிட்டு இருந்தார்.

தன்னைச் சட்டப்படி கடத்தியதாக தேசம்நெற்க்கு தெரிவித்த குகநாதன் அருள்செழியன் மேலே குறிப்பிட்ட வீடியோவை எவ்வித எடிற்றிங்கும் செய்யாமல் வெளியே விடும்படி சவால் விட்டார். (குகநாதன் கைது – கடத்தலில் அருள் சகோதரர்களுடன் கைகோர்த்த தமிழ்தேசியம் – டான் ரிவி உரிமையாளர் குகநாதன் கடத்தல் – கைது விவகாரம் : த ஜெயபாலன்) ஆனால் ”அந்த ரகசிய வீடியோவின் 8 மணி நேரப்பதிவின் ஒரு பிரதியை அனுப்பித் தரத்தயாரா இருக்கிறேன்” என்ற அருள் சகோதர் இதுவரை அதனை வெளியிடவில்லை.

(மாறாக அருள் சகோதரர்களின் கடத்தல் – கைது விவகாரத்தை சட்டப்படியானது என்று வாதிடும் இனியொரு இணையத்தள ஆசிரியர் சபாநாவலன் குகநாதனின் மனைவியை இரவு நித்திரையால் எழுப்பி பதிவு செய்த ஒலிப்பதிவை இனியொருவில் பதிவிட்டார். இதுதொடர்பான கட்டுரை தேசம்நெற் இல் வெளியானதும், அதற்கு எவ்வித மனவருத்தத்தையும் வெளியிடாத இனியொரு இணையத்தளம் திருமதி குகநாதனின் ஒலிப்பதிவை சத்தமின்றி நீக்கியது. தமது தவறை வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளாத போதும் அதனை திருத்திக் கொண்டது வரவேற்கத்தக்கதே.)

தமிழகச் சிறப்பு முகாமில் அடைபட்டிருக்கும் மக்கள் பற்றிய பாராமுகம்:

இலங்கையில் வன்னி முகாம்களில் தமிழ் மக்கள் கடந்த ஆண்டு முதல் பட்டுவரும் இன்னல்கள் சொல்லில் அடங்காதவை அவற்றை விபரிக்க இங்கு வார்த்தைகள் இல்லை. இதனிலும் மோசமான வாழ்வை ஈழத்தமிழர்கள் இந்தியச் சிறப்பு முகாம்களில் வாழ்கிறார்கள். இவர்களின் துயர் மிகு வாழ்வு தொடர்பாக அங்கு பல ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டு இருந்த எஸ் பாலச்சந்திரன் தேசம் சஞ்சிகையில் ஆக்கங்களை எழுதியதுடன் அவர்களை விடுவிக்கும் படியும் குரல்கொடுத்து வருகின்றார். இதே கருத்தை தேசம்நெற் வாசகர் ஒருவரும் வெளிப்படுத்தி இருப்பதை அருகில் உள்ள இணைப்பில் காணலாம். (‘அருள்’ சகோதரர்களுக்கு ஒரு சிறப்புமுகாம் அகதியின் கடிதம்.)

ஆனால் ஈழத் தமிழர்கள் பற்றி குரல் எழுப்பும் தமிழக ஊடகங்களும் அருள் சகோதரர்கள் போன்ற ஊடகவியலாளர்களும் தங்கள் ஆளுமை எல்லைக்கு உட்பட்ட விடயங்கள் தொடர்பாக மௌனமாகவே உள்ளனர். ”இவர்களைப் பொறுத்தவரை, ஈழத்திலிருந்து இந்தியாவுக்குள் தஞ்சம் புகுந்தவர்கள் எல்லாம் களத்திலே நின்று போராடாமல் புறமுதுகிட்டு ஓடிவந்தவர்கள் (ஒன்றுமில்லாமல் வந்து இங்கு அல்லாடுகிற இவர்களை ஆதரித்து என்ன பயன்?). ஆனால் ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் போனவர்கள் புலத்திலே இல்லாவிட்டாலும் களத்திலே இருப்பவர்கள் ( இப்படி சொன்னால் தான் டாலரும் பவுண்ட்சும் வரும்.) இந்தியாவிலுள்ள 85,000 ஏதிலிகளைப் பற்றி பேசினால் இங்குள்ள ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராட வேண்டியிருக்கும். அட்டைக் கத்தியை ஆகாயத்தில் சுழற்றி வீரனென்று பேரெடுக்க ஆயிரம் வழிகள் இருக்க எதற்கு வம்பு?” என்று இவர்கள் அந்த சிறப்பு முகாம் அகதிகள் பற்றி கணக்கெடுப்பதே இல்லை என்கிறார் ஆதவன் தீட்சண்யா.

அருள் எழிலனுக்கு புரட்சிகரச் சாயம்:

தமிழக வியாபார ஊடகங்களினதும் ஊடகவியலாளர்களினதும் நிலை இவ்வாறிருக்க, ”அருள் எழிலனைப் பொருத்தவரை எம்மைப் போன்ற புரட்சிகர அமைப்புகள் மற்றும் ஜனநாயக இயக்கங்களின் மீது மதிப்பு கொண்ட வெகு சில தமிழ்ப் பத்திரிகையாளர்களில் அவரும் ஒருவர். புலிகள் இயக்கத்தின் மீது மதிப்பு கொண்டிருந்தவர். அது விமரிசனமற்ற வழிபாடு அல்ல. சமீப காலமாக தனது கருத்துகளை மீளாய்வு செய்து மாற்றிக் கொண்டு வருபவர். புலிகள் பற்றிய அவரது அபிப்ராயத்துக்கும் அவரது நேர்மைக்கும் முடிச்சு போடும் விமரிசனங்கள் அவதூறானவை.” என மக்கள் கலை இலக்கியக் கழகம் – மகஇக என்ற தமிழகத்தைச் சேர்ந்த இடதுசாரி அமைப்பு அருள் எழிலனுக்கு புரட்சிகர பத்திரிகையாளர் என்று ஒக்ரோபர் 02ல் ‘ஐஎஸ்ஏ சான்றிதழ்’ வழங்கி உள்ளது.

அதுமட்டுமல்லாமல் நீண்ட காலமாக புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடையே மகஇக வின் அரசியலை முன்னெடுத்து வந்த இரயாகரனை ‘அவதூறு பரப்பும் இராயகரனிடமிருந்து விலகிக் கொள்கிறோம்!!’ என்று ஒக்ரோபர் 05ல் மகஇக அறிக்கை விட்டுள்ளது. மார்க்சிய லெனினிய (எம் எல்) கருத்துக்களை முன்னெடுத்து வருகின்ற தமிழரங்கம், இனியொரு, மகஇக என்பனவற்றின் இணைப்பு இரசாயனம் மாறிவிட்டது. தற்போது எம் எல் (ரயா அணி), எம் எல் (நாவலன் அணி), எம் எல் (மகஇக அணி) இடையே அருள் சகோதரர்கள் என்ற ஊக்கியால் எம் எல் நாவலன் அணியும் எம் எல் மகஇக அணியும் புதிய இணைப்பை உருவாக்கி உள்ளன. இப்பிணைப்பில் ‘மே 18’ காரணி முக்கியமானது என்கிறது தமிழரங்கம்.

அருள் எழிலனுக்கு ‘புரட்சிகர பத்திரிகையாளர்’ என்ற சான்றிதழுக்கு எழுதிய கட்டுரை தொடர்பாக ஒக்ரோபர் 4ல் சீலன் என்பவர் ”புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் போன்ற காத்திரமான சஞ்சிகைகளை வெளியிடும் உங்களின் (மகஇக வின்) ஆய்வுமுறை இந்த விடையத்தில் மாத்திரம் ஏன் மழுங்கடிக்கப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை” எனக் கேள்வி எழுப்பி உள்ளார். இதற்கு அதே தளத்தில் வெளியான கட்டுரையில் வருமாறு பதில் அளிக்கப்பட்டு உள்ளது. ”மகஇக வுக்கு புலிகளின் சாவின் முன் ராஜஹரனின் அரசியல் போக்கு சரியாக இருந்தது. அத்துடன் சில தேவைகளுக்கு அவர் தேவைப்பட்டார். ஆனால் இன்று மகஇக வின் இலங்கை சார்ந்த அரசியல் பார்வை மாறியுள்ளது. அதன் அடிப்படையில் ராஜாவின் நிலைப்பாட்டுடன் மகஇக வின் அரசியல் நிலைப்பாடு முரண்படுகின்றது. அதேவேளை புலியின் அழிவின் பின் அரசியலில் ஸ்டார் அந்தஸ்துடன் இலங்கை அரசியல்மேடைக்கு வந்துள்ள நாவலனின் அரசியல் நிலைப்பாடும் அவரின் “சேவையும்” மகஇக வின் அரசியல் மற்றும் பிரச்சார தேவையை பூர்த்தி செய்வதாகவுள்ளது. இந் நிலையில் அரசியல் விவாதங்கள் இல்லாமல் ராஜஹரனுடன், அவர் சார்ந்த அமைப்பு, மற்றும் தோழர்களுடன், உறவை முறித்துக் கொள்ள ஒரு நல்ல சந்தர்ப்பமாக இந்தக் கடத்தல் கூத்தை பாவித்துள்ளது மகஇக.”

மே 18 வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பு ஊடகங்களின் (ரிரிஎன்) சம்பளப் பட்டியலில் இருக்கும் வரை விமர்சனமற்ற வழிபாட்டை மேற்கொண்டு வந்துவிட்டு இப்போது மார்க்சிய புலிகளின் சம்பளப் பட்டியலுக்கு மாறியதால் சமீப காலமாக தனது கருத்துகளை மீளாய்வு செய்து மாற்றிக் கொண்டு வருகிறார் என மகஇக கதை புனைகிறது. புலி ஆதரவு ஊடகங்களின் மாநாட்டில் அருள் எழிலன் தன்னுடைய என்ன கருத்துக்களை மீளாய்வு செய்து மாற்றிக் கொண்டார் என்பது ஓரளவுக்காவது தெரியவரும்.

ஆ மார்க்ஸ் புலிஆதரவு ரிரிஎன் தொலைக்காட்சிக்கு நேர்காணல் வழங்கியதே ஒரு சமயத்தில் சர்ச்சைக்குரியதாக இருந்தது. அ மார்க்ஸ் களங்கப்பட்டு விட்டார் என்று சொல்லப்பட்டது. புலிகளின் ஊடகவியல் மாநாட்டுக்கு அழைக்கப்பட்ட மார்க்சிய சாயம் பூசப்பட்ட தனது கருத்துக்களை மீளாய்வு செய்து மாற்றிக் கொண்டு வரும் அருள் எழிலன் மீண்டும் முருங்கை மரம் ஏறுகிறார் என்ற எண்ணம் தேன்நிலவில் உள்ள இந்த புதிய அணிசேர்க்கைக்கு ஏற்பட வாய்ப்பில்லை.

மார்க்சிய புலிகளினதும் (எம் எல் புலிகள்) புலி மார்க்ஸிட்டுகளினதும் (புலி எம் எல்) களினதும் இரசாயணனச் சேர்கையின் விளைவு வெகுவிரைவில் தெரியவரும். இந்த இணைவை புலி அதரவு சக்திகள் பயன்படுத்திக் கொள்ள எண்ணிணால் அதன் விளைவுகள் தமிழ் மக்களுக்கு ஆபத்தானதாக அமையும். புலி ஆதரவு சக்திகளின் ஈடுபாடு இல்லாதவரை கீபோட் மார்க்ஸிட்டுக்களால் குறிப்பிடத்தக்க ஆபத்துக்கள் இல்லை.

2010 மாநாடு பற்றி இறுதியாக…..

இந்த புலி ஆதரவு ஊடகவியலாளர் மாநாடு மீண்டும் தவறான வழியிலேயே பயணத்தை தொடர முற்படுவதையே காட்டுகின்றது. ரிரிஎன் தொலைக்காட்சி புலி ஆதரவு ஊடகக் குழுமத்தால் ஆரம்பிக்கப்படவில்லை. எஸ் எஸ் குகநாதனால் உருவாக்கப்பட்ட ரிஆர்ரி தொலைக்காட்சி புலிகளின் கைக்கு மாற்றப்பட்டு ரிரிஎன் எனப் பெயர் சூட்டப்பட்டது. அவை வரலாறாகிய பழங்கதை. ஆனால் தற்போது டான் தமிழ் ஒளியை நடாத்திவரும் எஸ் எஸ் குகநாதனைக் கடத்தி – கைது செய்து 15 லட்சம் இந்திய ரூபாய்களைப் பெற்று பின் விடுவித்த அருள் சகோதரர்களில் ஒருவரை இம்மாநாட்டின் பேச்சாளராக அழைத்ததன் மூலம் இம்மாநாடு எதனைச் சொல்ல வருகின்றது?

இம்மாநாடு புலி ஊடகங்கள் தங்கள் இருப்பை அறிவிக்கவும் தாம் இன்றும் பலமாக உள்ளோம் என்பதையும் நிறுவுவதற்காக எடுக்கும் முயற்சியே.

ஏப்ரல் 26 2008 மாநாட்டில் ஊடகவியல் பற்றியும் அதன் அடிப்படைகள் பற்றியும் பலரும் கருத்துக்களை வெளியிட்டனர். ஆனால் புலி ஆதரவு ஊடகங்களின் போக்கில் எவ்வித முன்னேற்றமும் இருக்கவில்லை. அந்த மாநாட்டின் பின்னரேயே மிகப்பெரும் அழிவை நோக்கி வன்னி மக்களை இப்புலி ஊடகங்கள் அழைத்துச் சென்றன.

ஆகவே வன்னிப் போரில் மக்களைப் பணயம் வைத்த ஊடகங்களின் 2010 மாநாடு ‘உலகமயமாகி உள்ள உலகில் தமிழர் பிரச்சினையும் ஊடகங்களும்’ (“Media and the Tamil question in a globalizing world”) என்ற தலைப்பிலும் பார்க்க ‘புலிமயமாகியுள்ள ஊடகங்களும் தமிழர் பிரச்சினையும்’ என்ற தலைப்பில் கடந்த காலத்தில் தங்களது ஊடகவியல் போக்குப் பற்றியும் அது பேரழிவுக்குத் துணை போனது பற்றியும் ஆராய்ந்து, எதிர்காலத்தில் இவ்வாறான ஒரு நிலை ஏற்படாமல் தடுக்க ஊடகங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது பற்றி இம்மாநாடு ஆராய்வதே பொருத்தமானதாக இருக்கும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

27 Comments

  • அப்பாவி
    அப்பாவி

    இது இவ்வாறு இருக்க சில புலி தலைவர்கள் புதுமாத்தளனில் தமது பிழையை ஒப்புகொண்டனர். அஃது, நாம் பிழைக்கு மேல் பிழை விட்டுவிட்டோம் இனி எங்களால் ஒன்றும் செய்யமுடியாது என்று சொன்னார்கள்.

    Reply
  • Maruthu
    Maruthu

    அளவெட்டியைச் சேர்ந்த கவிஞர் மகாகவி மகன் சேரன் புலியெதிர்ப்பு வாதியாகவே இருந்தார் கடைசிகாலங்களில் புலிகளுக்கு அமைப்புக்கட்டியவர். ஏதோ புலி அடித்து நாட்டைப் பிடிக்கப்போகிறது தமக்குப் பதவி கிட்டப்போகிறது என்று நினைத்தார்களோ என்னவோ? இவரும் கனடாவில் இருப்பதாலும் மகாசனக்கல்லூரியில் படித்ததாலும் சிலவேளை நந்தாவுக்கு சேரனின் கூத்துக்கள் அதிகம் தெரிந்திருக்கலாம்.

    Reply
  • Deva
    Deva

    ஜெயபாலன் தகவலுக்கு நன்றி ,
    இன்று நாவலன் போன்ற “மார்சிசவாதிகள்”, புலிகளுடன் அழிந்துபோன தமிழ் தேசியத்தை, முலாம்பூசி முற்போக்கு தேசியமாக காட்ட முயல்கின்றனர். அதனாலேயே மகஇக வுக்கு இவர் தேவைப்படுகிறார். அதேவேளை நாவலன், மகஇக போன்ற அமைப்புகள் புலியில் இருந்த, இருக்கும் சக்திகளை அணி திரட்ட முனைகின்றனர். இதை தவறென்றும் கூற முடியாது. மகஇக விற்கு தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் தமிழ் நாட்டு இளஞர்களை அணிதிரட்டுவதானால் இலங்கை சேர்ந்த தமிழ்தேசியவாதிகளின் ஆதரவு தமக்கு உண்டு என அங்கு காட்ட வேண்டும். ஆகவே நாவலன் அவர்களுக்கு நல்லதோர் உதவியாளர்.
    சில வேளைகளில் மகஇக கூட இன்று புலத்தில் உள்ள சில புலிபிரமுகர்களை நல்லசக்திகளாக அறிவிக்கலாம். உதாரணமாக சேரனை கூறலாம். அருள் சகோதரர்கள் இன்று தமிழ்நாட்டு அரசியலுக்கும், இலங்கை அரசியலுக்கும் பாலமாக இயங்குகின்றார்கள்.

    இன்று புலிகள் மீது கறாரான விமர்சனம் வைப்பதுடன், சிங்களவர்கள், மற்றும் தோட்டதொழிலாளர்களுடன் சேர்ந்து இலங்கையில் அரசியல் செய்யும் ரஜாவுடன், (அதாவது அக்கிய இலங்கைகுள்ளன புரட்சி) சேர்ந்து இயங்குவது மகஇக போன்ற அமைப்புகளுக்கு லாபம் வரக்கூடிய செயல் அல்ல. இன்று மகஇக விற்கு இலங்கை அரசியலில் பலருடன் உறவு வைக்கும் நிலை உள்ளதனால் ரஜாவை விட்டு விலகியுள்ளனர்.

    ஜெயபாலன் நீங்கள் சொல்வது போன்று, இன்றுள்ள நிலையில் புலிகள் மற்றும் மார்சிசம் கதைக்கும் நாவலன், மகஇக போன்ற அமைப்புகளின் கூட்டு உருவாகுமானால் அது மக்களுக்கு நல்லதல்ல.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    /ஜாதி அமைப்பை புரியாமல், காலனித்துவ ஆதிக்கம், கிருஸ்தவ மிஷ்னரி அழுத்தங்களால், ”சமூக நீதி” தேவைப்பட்டது. ராஜாராம் மோகன் ராய், சுப்பிரமணிய பாரதியார், இந்து பத்திரிக்கை ஆரம்பகால நிறுவனர்(மாமா ராம் அல்ல), போன்றோர்களால் அது முயற்சி செய்யப்பட்டது. ஆனால் தொழிற் புரட்சியால், காலனித்துவ ஆதிக்கத்தின் சுரண்டலின் கீழ் இதை நியாயப்படுத்த முடியவில்லை. தொழிற் புரட்சியின் “அமைப்பு ரீதியான கூலிகளாக” தலித்துக்களை கல்வியூட்டி?, அதற்கு “வெள்ளை தோல்” பிராமணர்களை(ஆரியர்?), வெள்ளாளர்களை” கங்காணிகளாக ஆக்குவதே வெற்றியளித்தது. இதுவே மாயாவதி, எஸ்.வி.சேகர் போன்றோரின் பிராமண – தலித் கூட்டு(கார்ப்பரேட் நிறுவன கொள்கை?).சிம்ஸன்,டி.வி.எஸ்.,எல் &டி. போன்றவை உதாரணங்கள், இதில் கருப்புத் தோல் பிராமணர்கள் இல்லை.
    இவர்களைப் போலவே ஆனால் சிறிது நிறம் குறைவாக இருந்த ஜமிந்தார்களின் ஆதங்கமே திராவிட இயக்கம். இவர்களிடையே உள்ள முரண்பாடுகளை தொழிற் புரட்சிக்கு சாதகமாக ஆக்க, சமூக நீதி தேடியவர்களை கம்யூனிஸ்டுகள் பக்க போகாமல் திசை திருப்ப, ”ராஜ கோபால சாரியார்” கலைஞர் கருணாநிதியை வளர்த்து விட்டார்!./–

    தமிழகத்தில் தொழில்புரட்சி பெரும் வெற்றியளித்தது திரைப்பட துறையில் மட்டுமே!.
    அதற்கு ஆதரவாகத்தான் “தமிழ் வாழ்க என்ற காலிடப்பாவில் கல்”,இலங்கையில் “தமிழ் தேசியம்” என்ற வெற்று வேட்டுகள் உருவாகின. சமுக நீதி என்பது அடிப்ப்டையில் கத்தோலிக்க வார்த்தை. அதை “சுப்பிரமணிய பாரதியாரின் ஆதங்கம்” என்று பெயர் வைக்கலாம்!. ஆகையால் சமூகநீதி போராட்ட வாதிகளை அப்போதைய இடதுசாரிகள் பக்கம் போகாமல் தடுக்க தி.மு.க., தற்போதாவது உருப்படுவதை தடுப்பதற்கு ம.க.இ.க.!. இரண்டுமே உளுத்துப் போன தமிழ்தேசியத்துடன் கூட்டு!. ஆகையால்..

    /மார்க்சிய புலிகளினதும் (எம் எல் புலிகள்) புலி மார்க்ஸிட்டுகளினதும் (புலி எம் எல்) களினதும் இரசாயணனச் சேர்கையின் விளைவு வெகுவிரைவில் தெரியவரும். இந்த இணைவை புலி அதரவு சக்திகள் பயன்படுத்திக் கொள்ள எண்ணிணால் அதன் விளைவுகள் தமிழ் மக்களுக்கு ஆபத்தானதாக அமையும். புலி ஆதரவு சக்திகளின் ஈடுபாடு இல்லாதவரை கீபோட் மார்க்ஸிட்டுக்களால் குறிப்பிடத்தக்க ஆபத்துக்கள் இல்லை.
    /– இதுவே சரி!.

    Reply
  • karuna
    karuna

    இதில் புனைபெயர் ஊடகவியலாளர்களை விட்டது ஏன்? அருஸ் மற்றும் இதயச்சந்திரன் என்றழைக்கப்படும் நவநீதன் போன்றவர்களும் பல ஊடகங்களில் விளாசித் தள்ளியவர்கள். மக்களை புலிகள் மிகவும் கேவலமான முறையில் மனித கேடயங்களாக பாவிக்கையில் அதை போர்தந்திரம் என்று கூறி மிக மோசமான மனித படுகொலைக்கு மறைமுக காரணிகளாக விளங்கிய ஆய்வாளர் திலகங்கள்!

    Reply
  • aathav
    aathav

    “தமிழக வியாபார ஊடகங்களினதும் ஊடகவியலாளர்களினதும் நிலை இவ்வாறிருக்க ”அருள் எழிலனைப் பொருத்தவரை எம்மைப் போன்ற புரட்சிகர அமைப்புகள் மற்றும் ஜனநாயக இயக்கங்களின் மீது மதிப்பு கொண்ட வெகு சில தமிழ்ப் பத்திரிகையாளர்களில் அவரும் ஒருவர். புலிகள் இயக்கத்தின் மீது மதிப்பு கொண்டிருந்தவர். அது விமரிசனமற்ற வழிபாடு அல்ல. சமீப காலமாக தனது கருத்துகளை மீளாய்வு செய்து மாற்றிக் கொண்டு வருபவர். புலிகள் பற்றிய அவரது அபிப்ராயத்துக்கும் அவரது நேர்மைக்கும் முடிச்சு போடும் விமரிசனங்கள் அவதூறானவை.” என மக்கள் கலை இலக்கியக் கழகம் – மகஇக என்ற தமிழகத்தைச் சேர்ந்த இடதுசாரி அமைப்பு அருள் எழிலனுக்கு புரட்சிகர பத்திரிகையாளர் என்று ஒக்ரோபர் 02ல் ‘ஐஎஸ்ஏ சான்றிதழ்’ வழங்கி உள்ளது”.
    மஞ்சல் காமாளைக்காரனுக்கு பார்த்ததெல்லாம் மஞ்சலாக தெரியும் இப்போ ம.க.இ.க.விற்கும் நாவலனுக்கும் புலிகள் எல்லாம் புரட்சிவாதிகளாக தெரியுது! அதனால்தான் அருள் எழிலன் என்ற புலி “இனியொரு”வின் ஆசிரியராகவும் உள்ளார்!

    Reply
  • Nila
    Nila

    இலங்கைத் தழிழனான ஊடகவியலாளான குகநாதனை தமிழ்நாட்டில் வைத்து கடத்தி கப்பம் வசூலித்த அருள் எழிலன் சகோதரர்கள் ஈழத்தமிழர் நடத்தும் ஊடகவியலாளர் மாநாட்டில் பங்கு பெற அழைக்கப்பட்டிருப்பது எந்த வகையில் நியாயம் என்பதை இந்த ஊடகவியலாளர் மாநாட்டை ஏற்பாடு செய்தவர்களுக்குத் தெரியவில்லையா? அல்லது இந்த அமைப்பினரின் ஊடக தர்மம் இது தான் என்பதை இவர்கள் வெளிப்படுத்தி நிற்கின்றார்களா? கடத்தல் சம்பவத்தில் தொடர்புபட்டவர்களின் கடத்தல் கப்பம் கோருதலை இவர்கள் நியாயப்படுத்துவது தான் இவர்களது ஊடகதர்மம் போலுள்ளது.
    மொத்தத்தில் இந்த ஊடகவியலாளர் மாநாடு புலிகளின் எடுபிடிகளுக்குள் ஏற்படுத்தப்பட்டவை என்பதை உணருக்கூடியதாகவுள்ளது.
    புலம்பெயர் தேசங்களில் வாழும் மற்றைய ஊடகவியலாளர்கள் இந்த மாநாட்டிற்கு அழைக்கப்படாதமையும் புலிகளின் தமிழக கடத்தல்காரர்கள் அழைக்கப்பட்டுள்ளமையும் புலிப்பாணி தர்மத்தைச் சுட்டிநிற்பதில் பெருமை கொள்கிறார்கள் போலுள்ளது.
    ஊடக தர்மத்தை அவமதிக்கும் ஊடகவியலாளர்கள் மட்டும் தான் இதில் கலக்கிறார்கள்

    Reply
  • நந்தா
    நந்தா

    சேரன் பேராசிரியராக எந்தப் பல்கலைக் கழகத்தில் வேலை செய்கிறார் என்று கனடா வாழ் தமிழர்களுக்குத் தெரியாது. யோர்க் பல்கலைக் கழத்துக்கு இலங்கை அரசின் பணத்தில் படிக்க வந்துவிட்டு பின்னர் “அகதி”யாகியவர்.

    டொரொன்டொ புலிகளுக்கு ஆஸ்தான வித்துவானாக இருந்தவர். மகாஜனக் கல்லூரி கீதம் இந்திய தேசிய கீதத்தின் ராகத்தில் இருக்கிறது என்று படித்த பாடசாலையை கீறி குதறியவர். சிங்களத் தீவினுக்கோர் பாலமைப்போம் என்ற வரிகளை பாரதி எழுதியதால் பாரதியை “பிற்போக்கு வாதி” என்று கண்டு பிடித்தவர்.

    கே.பீ தன்னுடைய பாடசாலை நண்பன் என்றும் கடல் கடந்த ஈழத்துக்குத் தலைமை தாங்கப் போவதாகவும் கூறியவர்.

    யாழ்ப்பாணத்தில் சற்றர்டே ரிவியூ வில் வேலை பார்க்கும் பொழுது பெரிதாக எதையுமே சாதிக்காத சேரன் இப்போது புலிக் கும்பல்களோடு சேர்ந்து எப்படியான வாழ்வு வாழுகிறார் என்பது பலருக்கும் தெரியும்!

    Reply
  • மாயா
    மாயா

    // Nila – இலங்கைத் தழிழனான ஊடகவியலாளான குகநாதனை தமிழ்நாட்டில் வைத்து கடத்தி கப்பம் வசூலித்த அருள் எழிலன் சகோதரர்கள் ஈழத்தமிழர் நடத்தும் ஊடகவியலாளர் மாநாட்டில் பங்கு பெற அழைக்கப்பட்டிருப்பது எந்த வகையில் நியாயம் என்பதை இந்த ஊடகவியலாளர் மாநாட்டை ஏற்பாடு செய்தவர்களுக்குத் தெரியவில்லையா? அல்லது இந்த அமைப்பினரின் ஊடக தர்மம் இது தான் என்பதை இவர்கள் வெளிப்படுத்தி நிற்கின்றார்களா?//

    ஏன் நிலா அநியாயமாக பழி போடுகிறீர்கள்? புலிகள் , தமிழர் என்றால் புலிகள் , புலிகள் என்றால் தமிழர் என்பார்கள். ஆனால் அவர்களைத் தவிர வேறு எவரையும் வாழவும் விடவில்லை. எதையாவது செய்யவும் விடவில்லை. இன்னும் அதே நிலை புலத்தில் தொடர்கிறது. இவர்களை ஓரம் கட்டி விட்டு ஏனையவர் இணைந்து பலம் பெறுவதற்கு வழி செய்ய வேண்டும். அதை புலத்தில் உள்ள ஏனையவர்கள் கருத்தில் எடுத்தல் வேண்டும். அதுவே இன்றைய தேவையாக இருக்கிறது.

    Reply
  • palli
    palli

    இந்த மகா நாட்டில் நாமும் கலந்து கொள்(ல்)லலாமா?? இதுக்கு எப்படியான ஊடக அனுபவம் வேண்டும்; கடத்தல் கொள்ளை எமக்கு தெரியாது, புலிபுராணம் தெரியாது; மார்க்ச்சியம் தெரியாது; முதுகில் குத்த தெரியாது, இப்படி பல தெரியாதுகள் இருப்பினும் தமிழ்மக்கள் நிகழ்காலநிலை தெரியும் என்னும் ஒரே தகுதி மட்டுமே இருப்பதால் நாமும் கலந்து கொள்ளலாமா?? இதில் தேசம் சார்பாய் கலந்து கொள்ள யாரும் இருந்தால்(நிர்வாகம்) அவர்கள் மகாநாட்டுக்கு முன்பு அதன் விபரம் பற்றியும் அங்கு எதை பேசபோறியள் எனவும் ஒரு கட்டுரை எழுதினால் அதில் வரும் பின்னோட்ட கருத்துக்களையும் கொண்டு செல்லலாம் என்பதும் பல்லியின் கருத்தே,

    Reply
  • ashroffali
    ashroffali

    ஜெயபாலன் அண்ணாவை நான் என்றும் மதிப்பவன்…

    ஆனால் ஒரு ஊடகவியலளார் ஏதோ காரணத்தால் தனக்கென சுயமாக கருத்தொன்றைக் கொண்டிருக்கக் கூடியவர் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும். அந்த வகையில் அருள்எழிலனும் அந்த சுதந்திரத்தைக் கொண்டிருப்பவர்தான்.

    மறைந்து போன புலிகள் அமைப்பின் பேரால் இனியும் மற்றவர்களை குற்றம் சாட்டுவதை இத்துடன் நாம் நிறுத்தி விடுவது நல்லது.அதற்குப் பதிலாக எமக்குள்ளான ஆரோக்கியமான கருத்துப் பரிமாறல்களே சிறந்தது.

    அருள்எழிலன் லண்டன் வரவிருக்கும் நிலையில் அதை விமர்சித்து அதன் மூலமாக அவருக்கு ஆபத்தை ஏற்படுத்த முற்படுவது அழகல்ல. நாம் அனைவரும் தமிழர்கள் என்று சொல்லிக் கொள்வதற்கு அருகதையற்ற விடயம் அது.

    எந்தக் கருத்தையும் கருத்துக்களால் எதிர்கொள்வோம். அருள்எழிலன் விடயத்திலும் அதனைக் கடைப்பிடிப்போம். அத்துடன் அதனை விட்டு விடவேண்டும். தனிப்பட்ட பகைமையாக அது மாறக்கூடாது.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    /Jegath Gaspar Raj is a Chennai based Catholic priest. He is the founder of the Tamil Maiyam organisation and co creator of the Chennai Sangamam festival. During 1995-2001 he served as the director of the Tamil service for Radio Veritas. He is also the organiser of the Idea-GiveLife Chennai International Marathon. He is also the founder of the Naller publications, a book publishing company. In 2009, during the final stages of Eelam War IV, he functioned as a back channel intermediary between the Liberation Tigers of Tamil Eelam and the Government of Tamil Nadu./
    /இச்சந்திப்பிற்கு முன்னர் குறிப்பிட்டவர்களுடன் ஐவன் பீதுருப்பிள்ளை போன்றவர்களும் இணைக்கப்படுவார்கள்./- இந்த பேருதுப் பிள்ளைதான் கஸ்பார் அடிகள்? வெரித்தாஸ் வானொலியில் வேலை செய்தபோது, லண்டன் வந்தபோது, தனது காரில் ஏற்றிக் கொண்டு, “மாங்கொத்தியும் மரம் கொத்தியும்,கூடு திரும்ப தடையில்லை” என்ற தேனிசை செல்லப்பா பாட்டை போட்டுக்காட்டி ஏமாற்றியவர். புலிகள் கூடுகட்டி வைத்தால் உல்லாசமாக பென்ஷன் காலத்தை கழிக்கலாம் என்று, இவர், கந்தையா மனோகரன் போன்ற பலபேர் தங்கள் வட்டத்தில் பணத்தை உருட்டி பிரட்டி கொடுத்ததை சுருட்டிக் கொண்டு ஓடியவர்தான் கஸ்பார். இவரின் சிஷியர்களான அருள் சகோதரர்கள் இதைதான் செயப் போகிறார்கள். இவர்களை நம்பி ஏமாந்தது புலியும் ,பிரபாகரனும்.தற்போது ஏமாறுவது ம.க.இ.க.!. உருட்டி பிரட்டியதை உருவி, உருவி எடுப்பவர்கள்தான், புலி ஊடக, புலி வியாபாரிகள். இவர்கள் உருவுகிற வேகத்தில் பல தமிழர்களின்? டவுசரும் உருவப்பட்டு கோமணத்துடன் நிற்கப் போகிறார்கள்!.

    Reply
  • நந்தா
    நந்தா

    இந்த கஸ்பார் கனடாவில் அகதிக் குழந்தைகளை தத்தெடுங்கள் என்று சில படங்களோடு வந்து ஆளுக்கு 500 டாலர் வீதம் வசூல் செய்துகொண்டு ஓட்டம் பிடித்தவர். அந்த குழந்தைகள் வன்னியில் அகதியானவர்கள் என்று கனடா புலிகளும் ஒத்தூதினார்கள். தற்போது அந்தக் குழந்தைகள் பற்றி யாருக்கும் தகவல்கள் தெரியவில்லையாம்!

    Reply
  • aathav
    aathav

    பல்லி!
    இம்மாநாட்டிற்கு செல்வதற்கு தகுதிகள்-அனுபவங்கள் எதுவும் தேவையில்லை. கட்டப்பஞ்சாயத்துப் பற்றி கொஞசம் தெரிந்தால் போதும்! இதற்கு வினவு தளத்தில் கடந்தமாதத்தில் வந்த மணியின் பின்னூட்டங்களை வாசித்தால் போதும்!

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    வணக்கம் அஸ்ரப் அலி ஓராண்டுக்கும் மேலான காலத்தின் பின் தேசம்நெற் தளத்திற்கு நீங்கள் மீண்டும் வந்தது மகிழ்ச்சி. உங்கள் முகம் தெரியாவிட்டாலும் உங்களைப் பற்றி பலரிடமும் விசாரித்துக் கொண்டேன். ஆனாலும் சரியான தகவல் எதனையும் பெறமுடியவில்லை. நேற்றும் உங்களைப் பற்றி விசாரித்த 24 மணிநேரத்திற்குள் உங்கள் பின்னூட்டம் வந்தது ஆச்சரியமானதாய் இருந்தது. மகிழ்ச்சியாகவும் இருந்தது. விடயத்திற்கு வருகிறேன்.

    //ஆனால் ஒரு ஊடகவியலளார் ஏதோ காரணத்தால் தனக்கென சுயமாக கருத்தொன்றைக் கொண்டிருக்கக் கூடியவர் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும்.// அஸ்ரப் அலி
    ஊடகவியலாளன் மட்டுமல்ல ஒவ்வொரு மனிதனும் தனக்கென சுயமான கருத்தினைக் கொண்டிருக்கவும் அதனை சுதந்திரமாக வெளிப்படுத்தவும் உரிமையுடையவன். அதுவே மனித உரிமைப்பிரகடனத்தின் 18 வது சரத்து.

    //அருள்எழிலன் லண்டன் வரவிருக்கும் நிலையில் அதை விமர்சித்து அதன் மூலமாக அவருக்கு ஆபத்தை ஏற்படுத்த முற்படுவது அழகல்ல.// அஸ்ரப் அலி
    இது அருள் எழிலனுக்கு ஆபத்து ஏற்பட்டால் முதலில் அதற்குக் குரல் கொடுப்பது தேசம்நெற் ஆகவே இருக்கும். என்னுடைய வாதம் குகநாதன் என்ற தொலைக்காட்சி நிறுவனரை கைது செய்து கடத்தி பணம் வாங்கியதுடன் தொடர்புபட்ட ஒருவர் எவ்வாறு ஊடகம் பற்றிப் பேச முடியும் என்பதே.

    மேலும் மார்க்ஸிய ஆர்வலராகவும் இருந்து விடுதலைப் புலியாகவும் இருந்து ஊடக நியாயத்தை ஒருவர் பேசுவது என்பது போன்ற ‘சாம்பார்’ அரசியல் நீண்டகாலம் நிலைக்காது. வீலாங்கு மீன் போல் வாலையும் தலையையும் மாறி மாறிக் காட்டி மக்கள் அரசியல் செய்ய முடியாது.

    அஸ்ரப் அலி உங்கள் அனுபவங்களையும் கருத்துக்களையும் தொடருங்கள்.

    த ஜெயபாலன்.

    Reply
  • Ragu
    Ragu

    இம்மாநாட்டிற்கு செல்வதற்கு தகுதிகள்-அனுபவங்கள் எதுவும் தேவையில்லை. கட்டப்பஞ்சாயத்துப் பற்றி கொஞசம் தெரிந்தால் போதும்! இதற்கு வினவு தளத்தில் கடந்தமாதத்தில் வந்த மணியின் பின்னூட்டங்களை வாசித்தால் போதும்::::

    aathav
    உங்கள் கருத்தோடு உடன்படுகின்றேன். அப்படியானால் அருள்எழிலன் லண்டனுக்கு வரும் ஊடகமாநாட்டில் பலரிடம் கட்டப்பஞ்சாயத்து கூட்டாக நடைபெறப்போகின்றதோ என்ற ஐயம் எழுகின்றது.

    //அருள்எழிலன் லண்டன் வரவிருக்கும் நிலையில் அதை விமர்சித்து அதன் மூலமாக அவருக்கு ஆபத்தை ஏற்படுத்த முற்படுவது அழகல்ல. நாம் அனைவரும் தமிழர்கள் என்று சொல்லிக் கொள்வதற்கு அருகதையற்ற விடயம் அது.

    எந்தக் கருத்தையும் கருத்துக்களால் எதிர்கொள்வோம். அருள்எழிலன் விடயத்திலும் அதனைக் கடைப்பிடிப்போம். அத்துடன் அதனை விட்டு விடவேண்டும். தனிப்பட்ட பகைமையாக அது மாறக்கூடாது………………./

    அஷ்ரப் அலிக்கு
    அருள் எழிலன் செய்த கட்டப்பஞ்சாயத்து விவகாரம் உமக்குத் தெரியவில்லையா அல்லது அது தான் அருள்எழிலன் சகோதரர்களின் ஊடக தர்மம் என்று நினைக்கின்றாரா. அருள் எழிலன் நேர்மையானவராக இருந்தால் கட்டப்பஞ்சாயத்தின் (தம்மிடம் இருப்பதாகக் கூறப்பட்ட ) ஒளிப்பதிவை சமர்ப்பித்திருக்கலாமல்லவா. ஓரு ஊடகவியலாளனை பொலிஸ் நிலையத்தில் வைத்து கட்டப்பஞ்சாயத்து நடத்தி பணம் பறித்தது சரி என்று எப்படி வக்காலத்து வாங்குகின்றீர்கள் என்பது தெரியவில்லை. இவர்களெல்லாம் ஊடக மாநாட்டில் கலந்து கொள்வதற்கான தகுதியே கட்டப்பஞ்சாயத்து நடத்தும் வித்துவம் தான்

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    முஸ்லீம்கள் மாநில, பிரேதேச, மொழி(தமிழ்,உருது), எல்லைகளைக் கடந்து, எப்படி ஒற்றுமையாகிக் கொண்டு வருகிறார்கள் என்று, ஒருவருக்கு ஒருவர் கடித்துக் குதறிக்கொள்ளும்(கேனிபாலிச)தமிழர்கள், உணர்ந்து திருந்த வேண்டும்.

    “வீலாங்கு மீன் போல் வாலையும் தலையையும் மாறி மாறிக் காட்டி மக்கள் அரசியல் செய்ய முடியாது.”- இது சரியான அறிவுரை.

    -http://knrtimes.blogspot.com/2009_02_01_archive.html

    -http://labbaikudikadu.com/pages/currentnews.aspx?sid=c1d5wv55zlfbuvafp3q5ncz4&id=tn

    Reply
  • BC
    BC

    //அருள்எழிலன் லண்டன் வரவிருக்கும் நிலையில் அதை விமர்சித்து அதன் மூலமாக அவருக்கு ஆபத்தை ஏற்படுத்த முற்படுவது அழகல்ல. //
    அருள் எழிலன் என்கின்ற ஆபத்தான புலி லண்டனுக்கு வருவதனால் அங்கே வாழும் தமிழர்களுக்கு தான் ஆபத்தான நிலமை ஏற்பட்டுள்ளது. முன்பு புலிக் கொடி பிடித்த பலர் இப்போ அதை எல்லாம் கைவிட்ட நிலையில் இந்த ஆபத்தான புலியின் லண்டன் வருகையையிட்டு அவதானமாக இருக்க வேண்டும்.

    Reply
  • மாயா
    மாயா

    வீசா எடுக்க 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் என நம்பிக்கையின் அடிப்படையில் கடிதம் கொடுத்த குகநாதனையே கடத்தி காசு பறித்த அருள் எழிலன் ; இனி லண்டன் வந்து யாரையாவது சிநேகிதம் பிடித்து , மறுபடி இன்னொரு கடத்தல் செய்து யாரிடம் காசு பறிப்பாரோ தெரியாது? லண்டன் தமிழர்களே கவனம்.

    Reply
  • Deva
    Deva

    ஜெயபாலன் உங்கள் எதிர்வு கூறல், நிஜத்திலேயே நடத்துள்ளது. நீங்கள் எழுதினீர்கள்
    ” மார்க்சிய புலிகளினதும் (எம் எல் புலிகள்) புலி மார்க்ஸிட்டுகளினதும் (புலி எம் எல்) களினதும் இரசாயணனச் சேர்கையின் விளைவு வெகுவிரைவில் தெரியவரும். இந்த இணைவை புலி அதரவு சக்திகள் பயன்படுத்திக் கொள்ள எண்ணிணால் அதன் விளைவுகள் தமிழ் மக்களுக்கு ஆபத்தானதாக அமையும். புலி ஆதரவு சக்திகளின் ஈடுபாடு இல்லாதவரை கீபோட் மார்க்ஸிட்டுக்களால் குறிப்பிடத்தக்க ஆபத்துக்கள் இல்லை.”
    இந்த செய்தி நாவலனின் இனிஒரு வில் வெளிவந்துள்ளது ” …..”இன்று (19.10.2010) லண்டனில் அருண்டல் ஹவுஸ் இன் முன்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிசின் வருகைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. …. ஆர்ப்பாட்டத்தில் 1500 புலம்பெயர் தமிழர்கள் கலந்துகொண்டனர். …..பிரித்தானிய தமிழ் போரமும்(BTF), புதிய திசைகள் அமைப்பும் இலங்கை அரசிற்கும் போர்க்குற்றவாளிகளின் சர்வதேசப் பிரசன்னத்திற்கும் எதிரான இப் போராட்டத்திற்கு அழைப்புவிடுத்திருந்தன. அமைப்புக்கள் சார்புநிலையின்றி தன்னிச்சையாக மக்கள் கலந்துகொண்டதை அறியக்கூடியதாக இருந்தது.”

    புதிய திசைகள் நாவலனை தலைமையாக கொண்டு இயங்கும், நான்கு உறுப்பினர்களை கொண்ட அமைப்பு. நாவலன் தான் புலம்பெயர் தேசத்தில் அசியல் பிரமுகர் என மகஇக போன்ற இந்தியர் களுக்கு படம் காட்டுவதர்காக BTF உடன் சேர்ந்து கொண்டுள்ளார். இந்த கூட்டுக்கும், எழிலன் லண்டன் வருவதர்ற்கும் தொடர்புண்டா என விசாரித்து யாராவது எழுதுங்கள் :…

    Reply
  • Kusumpu
    Kusumpu

    // மகாஜனக் கல்லூரி கீதம் இந்திய தேசிய கீதத்தின் ராகத்தில் இருக்கிறது என்று படித்த பாடசாலையை கீறி குதறியவர். சிங்களத் தீவினுக்கோர் பாலமைப்போம் என்ற வரிகளை பாரதி எழுதியதால் பாரதியை “பிற்போக்கு வாதி” என்று கண்டு பிடித்தவர்//
    நந்தா இவரிச் தந்தையின் பாடல்கள் பல கொப்பியடிப்பாடல்களாக இருப்பதை மறந்துவிட்டாரோ? இலங்கை இன்றும் சிங்களத்தீவுதானே. 75சதவீத சிங்களவர்களைக் கொண்ட நாட்டை முஸ்லீம் நாடு என்றா சொல்லமுடியும். சேரன் தன்னை மனிதவாதிகயாகக் காட்டிக்கொள்ள சோனகருக்கு வக்காளத்து வாங்கியவர்கள். மாற்றுக்கருத்தாளர்களுடன் நெருங்கி தொடர்புகளை வெளிநாடிட்டில் வைத்திருந்தது எதற்காக என்பது இப்போதுதான் புரிகிறது. பாரதியைப் பிற்போக்குவாதி என்று கூற இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? அன்று பாரதி சொன்னது தானே இன்றும் உண்மையாக இருக்கிறது

    //“வீலாங்கு மீன் போல் வாலையும் தலையையும் மாறி மாறிக் காட்டி மக்கள் அரசியல் செய்ய முடியாது.”- இது சரியான அறிவுரை/ டெமோகிரசி- புலம்பெயர்தமிழர்கள் ஒரு புதுக்கொள்கையை வரிந்துள்ளார்கள் என்பதை நீங்கள் அறியவில்லையா. ஒருவன் தனது தகுதிகளை வளர்ப்பதனூடாக வளர்ச்சியடைவது என்பது நீதியானதும் தர்மானதுமான வளர்ச்சி. புலத்தத்தமிழர்கள் தம்மைத்தாம் வளர்த்துக் கொள்ளாது மற்றவர்களை இழுத்து விழுத்துவதையோ கொள்கை என்று பிரகடனப்படுத்தியுள்ளார்கள். அதனால் வளர்ச்சி என்பது தறுக்கணித்துப் போயுள்ளது. இதுதானே நாட்டிலும் புலிகளும் புலிகளுக்கும் நடந்தது. இனியாவது புதிய புலிவளர்த்த தமிழ்மக்களே புரிந்து கொள்ளுங்கள். அல்லது படியுங்கள் எப்படி நம்மவரை இழுத்துப் பாதாளத்தில் தள்ளுவது என்று. டெமோகிரசி- இந்த டெமோக்கிரசிதான் எமது தமிழர்களை இன்னிலைக்குக் கொண்டு வந்தது. மெமோகிரசி என்பது மனிதர்களுக்கு மட்டுமே பொருந்தும். தமிழர்களுக்கு அல்ல

    Reply
  • ashroffali
    ashroffali

    நேசத்துடன் ஜெயபால் அண்ணாவுக்கு…
    என் மேலான அபிமானத்துக்கு நன்றிகள் அண்ணா. இனி வரும் காலங்களில் என்னாலான மட்டில் என் உயிருக்கு ஏதும் நடக்காதவரை நான் தொடர்வேன். இனி என்றைக்காவது சடுதியான மெளனம் ஏற்பட்டால் பெரும்பாலும் அன்றைக்கு நான் உங்கள் அனைவரிடம் இருந்தும் சொல்லாமலே விடைபெற்றிருப்பேன். மற்றபடி அது வரை நான் ஒரு ஊடகவியலாளனாக மீண்டும் வாழ ஆசைப்படுகின்றேன்.

    Reply
  • ப்பிரசன்னா
    ப்பிரசன்னா

    (ashroffali on October 22, 2010 11:53 am)
    ”நேசத்துடன் ஜெயபால் அண்ணாவுக்கு…
    என் மேலான அபிமானத்துக்கு நன்றிகள் அண்ணா. இனி வரும் காலங்களில் என்னாலான மட்டில் என் உயிருக்கு ஏதும் நடக்காதவரை நான் தொடர்வேன். இனி என்றைக்காவது சடுதியான மெளனம் ஏற்பட்டால் பெரும்பாலும் அன்றைக்கு நான் உங்கள் அனைவரிடம் இருந்தும் சொல்லாமலே விடைபெற்றிருப்பேன். மற்றபடி அது வரை நான் ஒரு ஊடகவியலாளனாக மீண்டும் வாழ ஆசைப்படுகின்றேன்.”//

    வெளிநாடுகளில் சில ஊடகவியவாளர்கள் (இந்நாடுகளின்)மீது கைவைத்தால், இந்நாடுகளே தலைகீழாகக்கூடிய நிலைமைகள் உருவாகவும் வாய்ப்புண்டு. இவ்வளவுக்கு ஊடகவியலாளர்களை இந்நாட்டு மக்கள் நேசிக்கிறார்கள். ஆனால் எங்கள் நாட்டில் (இலங்கை) அல்லது, இந்தியாவில் ஊடகவியலாளர்களைக் கண்டால் மக்கள் வாய்திறக்கவே பயப்படுகிறார்கள். இந்த ஊடகவியலாளர்களே இந்நாடுகளில் (மக்களை) சுடுகாடுகளை ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் யோசித்துப் பாருங்கள். புலிகள் காலத்தில் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட ஏதாவது ஒரு மனிதத்தை, இவர்கள் யார் செய்தது என்று எழுதியதுண்டா? ”இனம் தெரியாத நபர்களால் சுடப்பட்டார்” என எழுதினார்கள். இதற்குப் பெயர் ‘ ஊடகவியல்’! என்னசெய்வது….

    ஊடகவியலாளன் என்பவன் மக்களின் தோழன். அவன் எழுதவில்லையானால் ஏன் எழுதவில்லை? என்ன நடந்தது என ஆராயும் மக்கள் கூட்டத்தைச் சேர்ந்தவன். இப்படியல்ல எமது நாடுகளும், அண்டையநாட்டு நிலைமைகளும். எதைக் காசாக்கலாம் என்பதே ஊடகச் செய்தி!!

    ஏனெனில் எமது நாடுகளிள் ஊடகம் என்பதும் ஒரு வியாபாரம்தான்!!

    ப்பிரசன்னா
    22.10.10

    Reply
  • லோகநாதன்
    லோகநாதன்

    நட்புகளே, தோழர்களே, விமர்சகர்களே, வெறுவாய் மெல்லுவோரே வணக்கம்.

    இந்தியத் தேசிய மேலாதிக்கத்தினை ஈழத்தமிழர்மீது தொடர்ந்து திணித்து..!
    எங்கள் கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை அறுப்பதாக –
    தங்களை வெளிப்படுத்துகிறது மகஇக..!!

    இந்திய உச்சகட்ட ஜனநாயக காவலரால் சட்டபூர்வமாக கடத்தப்பட்ட ஊடகவியலாளர் குகநாதன், தனது ஊடகத்துறை மூலமாக செய்துவரும் சுத்துமாத்து, பித்தலாட்ட ஏய்ப்புகளுடன் இணைந்து செலாற்றிய ஊடகத் துறையாளர் அருள் செழியன் இவரது சகோதரன் அருள் எழிலனுடன் இச்செய்தியை சிலாகித்துக் கொண்டிருக்கிற தேசம்நெற் – தமிழரங்கம் – இனியொரு சபா நாவலன், …?, ஆகியோர் மீது, அழையா விருந்தாளியாய் மேலாதிக்கம் செலுத்தும் மகஇகவினருக்கு:

    1. ரீ.ஆர்.ரீ குகநாதன் (டான் ஊடகக் குழுமம்): இவர் முன்னைநாள் புலிப்பினாமி. ஈழத்தில் பாதிக்கப்பட்ட மக்களைக் காரணம் காட்டி, வெரித்தாஸ் வானொலிக் கஸ்ப்பருடன் சேர்ந்து, புலம்பெயர் தமிழரிடம் கொள்ளையடித்த சமூக விரோதி. இன்று சிறிலங்கா அரச அடிவருடி, இப்படி இவருக்கு எத்தனையோ பக்கங்கள் உண்டு.

    2. சபா நாவலன்: இவர் ரெலோ இயக்கப் போராளிகளில் ஒருவர். சமூகப் பார்வை உள்ளவராக இருப்பார் என பலர் எதிர்பார்த்தாலும், புளொட் இயக்கத்திலிருந்து தீப்பொறியாகப் பிரிந்தோரை ஆயுதமூலம் அழிக்க அலைந்த இனியொருவில் கூட்டுச் சேர்ந்து, தங்களின் கடந்தகால சமூகப் பித்தலாட்டங்களை மூடி மறைப்பதில் ஈடுபடுபவர். மனிதன் பிறக்கும்போது வாயுடன் மட்டுமல்ல, கைகளுடனும் பிறக்கின்றான் என்பதைப் புரியாதவர். இப்படி இவருக்கு இன்னும் பல பக்கங்கள் உண்டு.

    3. றயாகரன்: இவர் என்.எல்.எவ்.ரீ – பீ.எல்.எவ்.ரீ இயக்கப் போராளிகளில் ஒருவர். சமூகப் பார்வை உள்ளவராக, சிறு முரண்பாட்டையும் பெரிதாக விமர்சிப்பதுடன், இடதுக்கு ஊடகவே அனைத்து விடிவும் கிடைக்கும் என கங்கணம் கட்டி நிற்பவர். தனது கருத்துகளை நேரடியாக உடனுக்குடன் மக்களுக்கு முன்வைப்பவர். மக்கள்முன் தன்னை சுயவிமர்சனம் செய்தவர்.

    4. ம.க-இ.க: இவர்களுக்கென்று ஓர் நீண்டகால வரலாறு இருக்கிறது. ஈழத் தமிழரின் விடுதலை மட்டுமல்ல, உலக அரங்கில் சிறப்பான இடதுப் பார்வையை எப்போதும் கொண்டவர்கள். பாதிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, மேன்மை பெறவேண்டிய மக்கள் பக்கம் செங்கொடி பிடித்து நிற்பவர்கள்.

    5. அடுத்தவர்கள் இப் பிரச்சினைகளோடு நேரடியாகவும், எதிர்மறையாகவும் சம்பந்தப்பட்டவர்கள்.

    இதற்குள் எமக்கு வெளிப்படுகின்ற முரண்பாடும் – தெளிவும் யாதெனில்:

    காலத்துக்குக் காலம் தனது சக ஊழியர்களை – மக்களை பித்தலாட்டம் செய்துவரும் குகநாதனை, அருள் எழிலன் குழுமமும் காவலற்துறையும் இணைந்து விரித்த வலையில் குகநாதன் மாட்டியபோது (மாட்டாது விட்டாலும்) இந்த சமூகக் கொள்ளையனின் விடையத்தில், சமூக அக்கறை உள்ளவரான முன்னை நாள் ஈழ விடுதலைப் போராளியான, சமூக மாற்றம் வேண்டும் என்ற கருத்தை போர்த்திருக்கும் இனியொரு குழுமத்தில் ஒருவரான சபா நாவலனுக்கு, கொள்ளைக்கார குகநாதனை காப்பாற்றும் சிந்தனை, ஏன்? எப்படி வந்தது?

    சரி, மனிதாபிமான ரீதியாக ஓர் உயிர் மீதான வக்கிர-சித்திரவதைப் போக்கிலிருந்து காப்பாற்றும் சிந்தனை ஏற்பட்டிருந்தாலும்? ம.க-இ.க நேரடியாகப் போராட்டம் நடாத்துகின்ற தமிழ்நாட்டில், பணம் கொடுத்து சாதிக்கலாம் என்ற நிலை ஏன்? என்பதை காவல் அதிகாரிகளாக தற்போது வெளிப்பட்டிருக்கும் மதிப்புக்குரிய ம.க-இ.கவினர் கண்டு பிடித்து மக்களுக்கு வெளியிடுவார்களா?

    அடுத்தது யார்யார், எப்படியான கருத்துள்ளோர் இதில் ஈடுபட்டுள்ளார்கள் எனபதனைப் பார்க்கவேண்டும். எடுத்ததற்கெல்லாம் பாதிப்புக்கு உள்ளாகின்ற குப்பனும், சுப்பனும் இதில் ஈடுபடவில்லையே. மாறாக இப்படியான விடயங்களில் தலையிட்டோர்மீது நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என அநீதிகளை, புரட்டுகளை, ஒடுக்குமுறைகளை, தகிடுதத்தங்களை, தவறான போராட்ட வடிவங்களை, இன்னும் இவைபோன்ற அத்தனைகளையும் மக்களுடன் கருத்தாடுவதில் என்ன தப்பிருக்கிறது?

    ஈழப் போராளிகளில் நானும் ஒருவன். பிழையைப் பிழை என்றோம். விசாரணைக்கு வாரும் என்றார்கள். இப்படியான விசாரணைகளில் முன்பே மாட்டிய பலர் இன்றுவரை வெளியே வரவில்லை!? அந்த விசாரணைகளை முன்னின்று நடாத்திய நீதிமான்கள் தற்போது பரமசிவன் கழுத்தில் சுதந்திரமாக இருந்துகொண்டு எங்களைப் போன்றோரை மீண்டும் மீண்டும் விசாரணைக்கு அழைப்புவிடுகிறார்கள்!? இணையத் தளங்கள் மூலமாக ஜனநாயகம் படிப்பிக்கிறார்கள்!? இந்த வகையில் இவர்களெல்லாம் அதி உன்னதப் புரட்சியாளர்கள்தான். ஏனெனில் ஜனநாயக மறுப்பு, மக்களை ஏய்ப்பு, கட்டைப் பஞ்சாயத்து ஆகிய சொல்லியங்களுக்கு, இதன் மூலம் புரட்சி என கருத்து மாற்றுங்கள். இதனை ம.க-இ.க பொறுப்பெடுத்து செய்வார்களென நம்புகிறோம்.

    அடுத்ததாக, எங்களின் குகைக்கு வாருங்கள் கட்டைப் பஞ்சாயத்து நடாத்துவோம், தண்டனை கொடுப்போம் என மகஇகவினர் கருத்துரைக்கும் அளவுக்கு இந்தியப் பேருந் தேசியம் தலைவிரித்தாடுகிறது. இவ்வளவு காலமும் இவர்களோடு சேர்ந்து உழைத்த தமிழ் அரங்கத்தினருக்கு இந்தச் சுத்துமாத்துகள் பற்றிய தெளிவு இல்லாது போய்விட்டதாகவே எமக்குத் தெரிகிறது.

    குகநாதன் – நாவலன் – அருள் எழிலன் குழுமத்தை காப்பாற்றிய மகஇக, நடுநிலை என்று ஏதோ ஒருபக்கம் பாயும் மதின்மேற் பூனையான வகையிலும், எந்தவித அதிகாரங்களுமற்ற பேக்கிளத்தி மக்களாகிய எமை நம்பவைத்து கால்வாரிய வகையிலும், நாம் தொடர்ந்து அவர்களை நம்பிக் கெடமாட்டோம்.

    புலியூருக்குப் பயந்து நரியூருக்கு வந்தால்..! இப்போது நரியூரிலும் இந்தக் குட்டிப் புலிகளின் அட்டகாசம் தாங்க முடியுதில்லை. அத்துடன் இவர்களுக்காக மகஇகவினர் அநியாயத்துக்கு துணைபோகிறார்கள் எனும்போது தாங்கவே… முடியுதில்லை.

    யார் யாரோவெல்லாம் மக்களை பேக்காட்டி, பித்தலாட்டம் செய்து, கட்டைப் பஞ்சாயத்து நடாத்தி பொருள்முதலீட்ட!? அதனை புட்டுக்காட்டி செய்தித்திரட்டு வெளியிட்ட றயாகரன், இதற்காகவும் நேரகாலமெடுத்து, செலவுசெய்து மகஇகவினர் மதில்மேலிருந்து விசாரிக்கும் பஞ்சாயத்துக்கு வரவேண்டும்!?

    வேலை வெட்டி இல்லாத, எந்தப் பொறுப்பும் அற்ற, இதுவரை காலமும் சோம்பேறியாய் வாழ்ந்த, உழைத்து வாழத் தெரியாத, சமூகப் பொறுப்பற்ற, மனிதநேயமே இல்லாத, சனநாயகமே தெரியாத, சக தோழரை – மக்களை கலைத்துக் கலைத்துச் சுட்டுத்திரிந்தோர், நல்ல மனிதராக நடித்து நிற்க..!?

    மேலாளர்கள் – மேதாவிகள் ஆகிய மகஇகவினர் அழைத்தவுடன், றயாகரன் தனது கோவணத்தை இறுக்கிக் கட்டிக்கொண்டு வரவேண்டும். அட வந்தாலென்ன வராவிட்டாலென்ன பாபர்மசூதி வழக்கைப் போல் மகஇகவினரின் நீதி எப்படியாக இருக்கும் என இப்போது எமக்குத் தெரிகிறதுதானே.

    ஈழத் தமிழர் போராட்டத்தில் இந்திரா அம்மையார் கையாண்ட மேலாதிக்க சதித்தனத்தையே அவருக்கு அடுத்தவர்களும் செய்தார்கள் – செய்கிறார்கள் – செய்வார்கள். அத் திட்டத்தினை உளவுப் பிரிவினர் சிறப்பாக செயற்படுத்துகிறார்கள். இந்த வகையில் மேற்படி பிரச்சினையில் விசாரணை நடாத்தி தீர்ப்பு வழங்கித் தண்டனை வழங்குவதற்கு (மகஇக) நீங்கள் யார்?

    இந்திய மேலாதிக்கத்துடன் ஈழத் தமிழர் பிரச்சினையில் மூக்கு நுழைக்கும் தங்களுக்கும், உளவுப் பிரிவுக்கும் தொடுப்பு இருப்பதுபோல் எமக்கு சாடைமாடையாகத் தெரிகிறது. ஏனெனில் இப்படித்தான் யகோவாவின் சாட்சிகள் என்றும், யேசு ஜீவிக்கிறார் எனவும் இன்னும் பலவான சமூகக் குழுமங்களை வழிநடாத்தும் சீ.ஐ.ஏ போன்று, தங்களின் அமைப்பின் ஊடாக றோ (சுயுறு) செயற்படுவதாக நாம் எண்ணவேண்டியுள்ளது.

    இதுவரை காலமும் நீங்கள் நடாத்திவரும் போராட்டங்களால் தமிழ்நாட்டில் என்னத்தை சாதித்தீர்கள்? தற்போது இந்திய மேலாதிக்க சக்தியின் வடிவமாகி ஈழத் தமிழர் பிரச்சினையில் மூக்கு நுழைத்தவாறு இனியொருவின் பக்கம் சார்ந்து நிற்கும் நீங்கள், கடந்த ஈழ ஆயுதப் போராட்டத்தில் எத்தனை சக போராளிகளை கொன்றார்கள், அப்படிக் கொலைகளுக்குப் பொறுப்பானார்கள் என்பது பற்றி இதுவரை இவர்கள் சுயவிமர்சனம் செய்திருக்கிறார்களா?

    புலியின் மொக்குப் போராட்டம் தோர்த்துவிட்டது என்பதனால்.., ஈழத் தமிழன் இனி எலி. அதுகும் சுண்டெலி என ஆகிவிட்டான் என்றா நினைக்கிறீர்கள்..!?

    மற்றும் இது அடுத்த பிரச்சினை:

    ஷோபாசக்தியின் விடையத்திலும் மகஇகவாகிய நீங்கள் எதற்காக மூக்கை நுழைத்தீர்கள்? இந்திய மகனுக்கு நடந்த தீங்கு? இவன் யார் ஈழத்தான், இந்தியாவுக்கு வந்து எங்களின் இந்திய உறவுக்கு அடித்துவிட்டான் என்ற இந்தியத் தூய தேசியப் பார்வைதானே உங்களுக்கு. சரி பிழை, என்ன நடந்தது. ஷோபாசக்தி இதற்கு முன்பு கீழ்ப்பாக்கம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவரா?

    – மா.செ.லோகநாதன்
    – பிரதிகள் : வினவு – தேசம்நெற் – இனியொரு – தமிழரங்கம்.

    Reply
  • velummayilum
    velummayilum

    ஜெயபாலன் சேரன் ஒரு பேராசிரியர் இல்லை. அவர் இன்னமும் ஒரு அசிஸ்டன்ட் புரபொசர் தான்.இதை நன்கு விளக்கி நட்சத்திரன் செவ்விந்தியன் எழுதிய கட்டுரை இன்னமும் தேசம்நெற்றில் உண்டு. ராஜினி திராணகமவின் மகள் இப்ப அமெரிக்காவில நியு ஸ்கூல் என்கிற பல்கலைக்கழகத்தில அசிஸ்டன்ட் புரபொசர் ஆக இருக்கிறா. அதுக்ககாக அவவும் சேரனைப்போல தன்னை ஒரு பேராசிரியர் என்று எழுதி மோசடிசெய்யவில்லை.

    சேரனின் மோசடிகள் வருமாறு
    1. சேரனின் கலாநிதிப்பட்டம் 2001 ம் ஆண்டுதான் வழங்கப்பட்டது. ஆனால் சேரன் 2000 ம் ஆண்டு தமிழினி மாநாட்டடில் இந்தியாலில் தான் ஒரு கலாநிதி என்று அடித்த விசிட்டிங்காட்டை விநியோகித்தவர்

    2.சரியாக ஆங்கிலம் எழுதத்தெரியாத 1984-1987 காலத்தில் தான் சற்றடே றிவ்வியுவில் இணைஆசிரியராக இருந்ததாக புழுகுவது.

    3.உரும்பிராய் சிவகுமாரனோடு நெருங்கிப்பழகியதாக பொய்சொல்லி நாராயன் சுவாமி எழுதிய ரைகர்ஸ் ஒப் லங்காவில் போலி சான்றிதழை மோசடியாக வழங்கியமை.

    4.புலிகளுக்கான தரகு பத்திரிகையாளராகவும் லாபியிஸ்டாகவும் இருக்கின்றமை.

    5. தன்னுடைய தனிப்பட்ட நலன்களுக்காக ஒரு தகவல் புரட்டு இயக்கத்தையே (மிஸ் இன்பமேஷன் கம்பயின்) தன்னுடைய சீடர்கள் தொண்டரடிப்பொடிகள் முலம் குளோபல் தமிழ்நியுஸ்நெற் காலச்சுவடு கனடா தேடகம் முதலியனமூலம் நடாத்துவது.

    -வேலும் மயிலும்.

    Reply
  • நந்தா
    நந்தா

    லோகனாதன்:
    உங்களின் தகவல்கள் பலருக்குக் கண்களைத் திறக்கும். ஆயினும் இந்திய மேலாதிக்கம் என்பதினூடாக இலங்கயில் விதைக்கப்படும் இந்திய எதிர்ப்பு எந்த விதத்தில் தமிழ் மக்களுக்கு நன்மை விளைவிக்கும்?

    Reply
  • chandran .raja
    chandran .raja

    இந்தியா என்பது இந்தியதேசிய முதாலித்துவத்தின் செயல்பாடுகளே என்பதை உணராதவரை இப்படியான போதகர்கள் தமிழ்மக்களுக்களுக்கு மட்டுமல்ல இந்திய-இலங்கை மக்களுக்கும் குறிப்பாக உழைப்பாளி மக்களுக்கும் துன்பம் தீவினைகளை அறுபடை செய்பவர்களாகவே கருதப்படுவார்கள்.

    Reply