யாழ் பல்கலையின் உபவேந்தர் தெரிவுக்கு பேராசிரியர் ஹூலுக்கு ஆதரவாக மேற்கொண்ட கையொப்ப ஆவணம் அமைச்சர் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டது : த ஜெயபாலன்

Constantine_T_and_Minister_DDயாழ் பல்கலைக்கழக உபவேந்தராக பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் யைத் தெரிவு செய்வதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆதரவளிக்க வேண்டும் என்று கோரி இணைய வலையில் மேற்கொள்ளப்பட்ட கையெழுத்துப் போராட்டத்தின்  ( யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் யை ஆதரிப்போம்! : ரி கொன்ஸ்ரன்ரைன் ) பிரதிகளை ‘டயஸ்பொறா டயலக்’ அமைப்பின் சார்பில் ரி கொன்ஸ்ரன்ரைன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளித்தார். நேற்று (ஒக்ரோபர் 17 2010) கொழும்பில் உள்ள அமைச்சரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பிலேயே இவ்வாவணம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டது.

அதன் பின்னர் இடம்பெற்ற உரையாடலில் புலம்பெயர்ந்தும் தாயகத்திலும் வாழும் யாழ் பல்கலைக்கழக்தின் நலன்விரும்பிகளின் நிலைப்பாட்டை தான் அமைச்சருக்கு எடுத்துக் கூறியதாகவும் அவர்களுடைய எண்ணப்பாடுகளைக் கவனத்தில் கொள்வதாகவும் அமைச்சர் தெரிவித்ததாக ரி கொன்ஸ்ரன்ரைன் தெரிவித்தார்.

பேராசிரியர் ரட்னஜீவன் ஹூலை யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக தெரிவுசெய்யும்படி கோரும் போராட்டம் இத்துடன் முடிவடையவில்லை எனத் தெரிவித்த ரி கொன்ஸ்ரன்ரைன் நலன்விரும்பிகள் தொடர்ந்தும் கையெழுத்துக்களைப் பதிவு செய்யும்படி கேட்டுக்கொண்டார். http://digitechuk2.co.uk/petition/ProfessorHoole.htm இக்கையொப்பப் போராட்டத்தின் பிரதிகள் கல்வி அமைச்சர் எஸ் பி திஸ்ஸநாயக்காவிடம் ஒக்ரோபர் 21ல் கையளிக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

._._._._._.

யாழ் பல்கலையில் பொறியியல் பீடம் அமைப்பது பற்றி வடமாகாண கற்கைநிலைய பொறியியலாளர்கள் குழு அமைச்சருடன் சந்திப்பு:

இந்நிகழ்வுக்கு முன்னதாக வடமாகாண கற்கைநிலைய பொறியியலாளர்கள் (Institution of Engineers Sri Lanka – North)  குழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்தது. யாழ் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தை விருத்தி செய்வது தொடர்பாக இக்குழு இச்சந்திப்பை மேற்கொண்டது. இச்சந்திப்பின் போது அமைச்சரின் அழைப்பில் ரி கொன்ஸ்ரன்ரைன்,  மற்றும் பேராசிரியரும் ஒக்ரோபர் 6 பட்டமளிப்பு விழாவில் கௌரவ கலாநிதிப்பட்டம் பெற்றவருமான  பாலசுந்தரம்பிள்ளை ஆகிய இருவரும் கலந்துகொண்டனர். வடமாகாண கற்கைநிலைய பொறியியலாளர்கள் குழுவிற்கு இலங்கை மின்சாரத் திணைக்களத்தின் ஜிஎம் ஆர் முத்துராமநாதன் தலைமை தாங்கினார். இக்குழுவில் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல், டொக்டர் அற்புதராஜன், டொக்டர் பிரபாகரன், தர்மேந்திரா ஆகியோர் கலந்துகொண்டனர். பேராசிரியர் நவரட்ணராஜா கலந்துகொள்வதாக இருந்த போதும் அவரால் இச்சந்திப்பில் கலந்துகொள்ள முடியவில்லை.

Minister_DD_17Oct10_Colomboஇச்சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பாராம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் அபிவிருத்தி அமைச்சின் விசேட ஆலோசகர் திருமதி விஜயலக்ஸ்மி ஜெயராஜசிங்கம், சந்திரமோகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இச்சந்திப்பின் போது, 2006ல் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் யைத் பலத்த சிரமங்களுக்கு மத்தியில் உப வேந்தராக தெரிவு செய்ய தான் போராடியதாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆனால் அவர் அப்பதவியை ஏற்று செயற்பட முற்பட்ட போதும் கொலை அச்சுறுத்தல் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறியதை ஒரு குற்றச்சாட்டாகவே தெரிவித்தார். இக்குற்றச்சாட்டை அமைச்சர் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் அழுத்தமாகவே தெரிவித்தார்.

அதற்குப் பதிலளித்த பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல், ”என்னுடைய மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் தொடர்ந்து மிரட்டல்களை விட்டனர். எனது மகளுக்கு அவளுடைய தம்பியை துண்டு துண்டாக வெட்டப் போவதாக மிரட்டினர். மனைவியை வெள்ளைச் சேலை அணிய வேண்டி வரும் என மிரட்டினர். உங்களைப் போன்ற தைரியம் எனக்கில்லை. அதனால் நான் நாட்டைவிட்டு வெளியேறி விட்டேன். ஆனால் இப்போது திரும்பி வந்திருக்கிறேன்” என்றார்.

இச்சந்திப்பில் தற்போதைய யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் பற்றிய அதிருப்தி அமைச்சரவைக் குழுவில் வெளிப்பட்டது. அண்மையில் யாழ் அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் யாழ் பல்கலைக்கழகத்தில் பெண்களின் தற்கொலை முயற்சிகள் அதிகரித்து இருப்பதாகவும் அதற்கு அங்கு கடமையாற்றுகின்ற பேராசிரியர்களே காரணம் என்றும் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. அதன் பின்னணியிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அதிருப்தியும் வெளிப்பட்டது.

வடமாகாண கற்கைநிலைய பொறியியலாளர்கள் குழு யாழ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடம் அமைக்கப்படுவதற்கான அவசியத்தை வலியுறுத்தியதுடன் அதற்கு அமைச்சரின் ஒத்துழைப்பையும் கோரினர். யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் பொறியியல் பீடத்தை அமைக்க வேண்டும் என்று சில அறிக்கைகளை வெளியிட்டதற்கு அப்பால் எவ்விதமான காத்திரமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. யாழ் பல்கலைக்கழகப் பொறியியல் பீடத்தை அமைக்கும் முயற்சி நீண்டகாலமாக கிடப்பிலேயே உள்ளது. அதனால் வடமாகாண கற்கைநிலைய பொறியியலாளர்கள் குழு தங்கள் ஆர்வமேலீட்டால் பொறியியல் பீடம் அமைக்கப்படுவதற்கான அழுத்தத்தை மேற்கொண்டனர்.

”பொறியியல் பீடத்தை விருத்தி செய்வது என்பது சாதாரண விடயமல்ல” என்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதற்கான திட்ட ஆவணங்களையும் திட்ட வரைபுகளையும் தயாரித்து தன்னிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொண்டார். பொறியியல் பீடத்திற்கான திட்ட ஆவணங்களும் திட்ட வரைபுகளும் யாழ் பல்கலைக்கழக நிர்வாகத்தினாலேயே மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால் யாழ் பல்கலைக்கழகம் அது பற்றி கவனம் கொள்ளாததால் அமைச்சர் தன்னைச் சந்தித்த பொறியியலாளர் குழுவிடம் அவற்றை சமர்ப்பிக்குமாறு கேட்டுள்ளார்.

யாழ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்திற்கான நிதி ஒதுக்கீடு பற்றி கருத்து வெளியிட்ட விஜயலக்ஸ்மி ஜெயராஜசிங்கம், ”முறையான திட்ட ஆவணங்கதை தயாரித்து வந்தால் 2011 – 2012 நிதி ஆண்டிலேயே அந்த நிதிக் கோரிக்கையை வைக்கமுடியும்” என்பதைச் சுட்டிக்காட்டினார். அவர் மேலும் குறிப்பிடுகையில், ”உலகம் முழுவதுமே அரசாங்கங்கள் பொதுத்துறைக்கான நிதியை குறைக்கின்ற நிலையில் யாழ் பல்கலைக்கழகத்தின் கோரிக்கை அதனை ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் அமைய வேண்டும்” என்பதை வலியுறுத்தினார்.

இலங்கை அரசாங்கத்தின் நிதிநிலமை மோசமாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சரவைக் குழு இந்தியாவினதும் சர்வதேச அணுசரனையுடனும் மட்டுமே யாழ் பல்கலைக்கழகத்திற்கான உதவியைப் பெற முடியும் என்பதையும் சுட்டிக்காட்டினர்.

”ஊடகங்களில் யாழ் பல்கலைக்கழகத்திற்கு உதவிகள் வழங்கப்படுவதாக செய்திகள் வந்த போதும் அவ்வாறான உதவிகள் வருவதில்லை” என பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை குறிப்பிட்டார். ”இந்தியா உதவி அளிப்பதாக செய்திகள் வந்ததைச் சுட்டிக்காட்டிய பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை தான் அங்குள்ள கல்வியியலாளர்களுடன் பேசும்போது அவர்கள் அவ்வாறான எவ்வித உதவியும் வழங்கப்படுவது பற்றி அறிந்திருக்கவில்லை” எனச் சுட்டிக்காட்டினார்.

Minister_DD_17Oct10_Colomboஇது பற்றிக் கருத்து வெளியிட்ட அமைச்சரவைக் குழு உறுப்பினர் சந்திரமோகன், ”அரசாங்கம் யாழ் பல்கலைக்கழகத்திற்கு உதவ வேண்டும் என்ற அரசியல் ரீதியான கோரிக்கைகள் பலனளிக்காது” எனத் தெரிவித்தார். ”இலங்கையில் இவ்வளவு மோசமான அழிவுக்கு வித்திட்டதில் யாழ் பல்கலைக்கழகத்திற்கு முக்கிய பொறுப்பு உள்ளது” எனவும் அவர் குற்றம் சாட்டினார். ”பல்கலைக்கழகத்தினுள்ளேயே பொங்குதமிழ் கொண்டாடி விட்டு, இப்போது பல்கலைக்கழகத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்று இடித்துக் கேட்க முடியாது” எனவும் சந்திரமோகன் குறிப்பிட்டார்.

யாழ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடம் அமைக்கப்படுவதற்கு தான் முழு முயற்சி எடுப்பேன் என உறுதியளித்த அமைச்சர் வேண்டிய அவணங்கள் தயாரிக்கப்பட்டதும் அமைச்சரவையில் முன்வைத்து வேண்டிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக உறுதி அளித்தார்.

(தகவல் ரி கொன்ஸ்ரன்ரைன்)

._._._._._.

லண்டன் குரல் (ஒக்ரோபர் 07 2010) இதழ் 36ல் வெளியான செய்தி:

தமிழ் கல்விச் சமூகத்தை யாழ் பல்கலைக்கழகத்தை மீட்டெடுக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வர வேண்டும்!

யாழ் பல்கலையின் நலன்விரும்பிகள் இணைய வலையில் கையொப்பப் போராட்டம்!!!

University_of_Jaffna”யாழ் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் வெற்றிடங்களை நிரப்புகின்ற போது முறைகேடான நியமனங்கள் இடம்பெற்றுள்ளது. பல ஆண்டுகளாக இதைச் சுட்டிக்காட்டிய போதும் இதனைச் சீர்செய்வதற்கு எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.”
எஸ் சுவர்னஜோதி, ஓடிறர் ஜென்ரல், ஓடிற் 2009 

இது மலையெனக் குவிந்துள்ள யாழ் பல்கலைக்கழகத்தின் சீரழிவின் ஒரு சிறு பகுதியே.

யுத்த சூழலில் இருந்து மீண்டுள்ள தமிழ்க் கல்விச் சமூகம் தமது கல்விக் கட்டமைப்புகளில் உள்ள சமூகவிரோத சக்திகளின் செயற்பாடுகளினால் அதிர்ந்து போயுள்ளனர். தமிழ் சமூகத்தினை வேரறுக்கும் அளவிற்கு கல்விக் கட்டமைப்புகளில் குறிப்பாக யாழ் பல்கலைக்கழகத்தில் நிர்வாகச் சீர்கேடு, ஊழல், மோசடி, பாலியல் பலாத்காரம் என்பன மலிந்து போயுள்ளன. யாழ் பல்கலைக்கழகம் வழங்கும் பட்டங்கள் அர்த்தமற்றவையாகிக் கொண்டுள்ளது.

யாழ் பல்கலைக் கழகத்தைச் இச்சீரழிவில் இருந்து மீள்விக்க அமைச்சர் தேவானந்தாவும் பல்கலைக்கழக கவுன்சில் உறுப்பினர்களும் முன்வரவேண்டும் என்று நலன்விரும்பிகள் இணையப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

நவம்பரில் நடைபெறவுள்ள யாழ் பல்கலையின் உபவேந்தர் பதவிக்கான போட்டியில் இப்பல்கலைக்கழகத்தை ஆசியாவின் சிறந்ததொரு பல்கலைக் கழகமாக்க கனவு கண்ட பேராசிரியர் கைலாசபதியின் கனவை நனவாக்கக் கூடிய ஒருவரையே அமைச்சர் தேவானந்தாவும் கவுன்சில் உறுப்பினர்களும் தெரிவு செய்ய வேண்டும் என்கிறார் இப்போராட்டத்தை முன்னெடுக்கும் ரரின் கொன்ஸ்ரன்ரைன்.

இப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பதவிக்காக யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து தற்போதைய உப வேந்தர் பேராசிரியர் என் சண்முகலிங்கம், கலைப்பீடத்தின் தலைவர் பேராசிரியர் என் ஞானகுமரன், வரலாற்றுத்துறையின் தலைவர் பேராசிரியர் சத்தியசீலன் ஆகியோர் முக்கியமாகப் போட்டியிடுகின்றனர். யாழ் பல்கலைக்கழகம் சீரழிந்து கீழ்நிலைக்குச் சென்றதற்கு மிகமுக்கிய பொறுப்புக்களில் இருந்த இவர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. மேலும் பல நிர்வாகச் சீர்கேடுகளுக்கு இவர்களே காரணமாகவும் இருந்தள்ளனர்.

அதனால் யாழ் பல்கலைக்கழகத்தை மீள்விக்க சிரழிவுக்கு வெளியே இருந்து கல்வித் தகமையும், நிர்வாகத் திறனும் உடைய ஒருவரைக் கொண்டுவருவதே பொருத்தமானது என போராட்டத்தில் இணைந்து கையொப்பம் இட்டுள்ள பலரும் கருத்து வெளியிட்டு உள்ளனர். அந்த வகையில் உபவேந்தர் பதவிக்கு போட்டியிடுகின்ற சர்வதேச பல்கலைக்கழக அனுபவமும் தகமையும் நிர்வாகத் திறனும் உடைய பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் அவர்களே இப்பதவிக்கு பொருத்தமானவர் எனக் கருதப்படுகிறார்.

Douglas_and_Studentதமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டு தமிழ் கல்விச் சமூகத்தை 21ம் நூற்றாண்டின் தேவைக்கு ஏற்ப கட்டியெழுப்ப விரும்பினால் அமைச்சர் தேவானந்தா பேராசிரியர் ரட்னஜீவன் ஹூலுக்கு தனது ஆதரவை வழங்க வேண்டும் என்று அமைச்சருக்கு நீண்டகாலம் தம் அரசியல் ஆதரவை வழங்கிவரும் வி சிவலிங்கம், எம் சூரியசேகரம், ராஜேஸ் பாலா உட்படப் பலர் தெரிவித்துள்ளனர். பேராசிரியர் ஹூல் இலங்கையிலேயே தகமைபெற்ற ஒருவர் என்றும் அவர் யாழ் பல்கலைக்கழகத்திற்குச் சென்று பணியாற்றுவதற்கு வாழத்துக்கள் என்றும் ஈபிடிபி கட்சியின் முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ் தவராஜா ரிபிசி வானொலியில் தெரிவித்து இருந்தார்.

தமிழ் மக்களின் அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெற்ற அமைச்சர், பரிசு பெறும் மாணவி தன் காலத்தில் யாழ் பல்கலையில் பாதுகாப்பாகவும் பெருமிதத்துடனும் கற்க வழிசெய்வார் என நம்புவோம்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பான முன்னைய பதிவுகளைப் பார்க்க:

முருகையன் (1935-2009) – நகலும் நாடகமும் : நட்சத்திரன் செவ்விந்தியன்

சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்

‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் உடனான நேர்காணல்

பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்

இன்று Aug 29 -வடக்கு – கிழக்கு – மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் – பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் உடன் சந்திப்பும் கலந்துரையாடலும்

மாற்றத்திற்கான நம்பிக்கையுடன் பேராசிரியர் ஹூல் யாழ் செல்கின்றார்! : த ஜெயபாலன்

‘Tamillain-Barre’ Syndrome’ மும் தமிழ் சமூகத்திற்கான புதிய அரசியல் கலாச்சாரத்தின் அவசியமும் : த ஜெயபாலன்

யாழ் பல்கலைக்கழகம் – முப்பத்தாறு வருடங்கள் – முழுமையான சீரழிவு : நட்சத்திரன் செவ்விந்தியன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் யை ஆதரிப்போம்! : ரி கொன்ஸ்ரன்ரைன்

தவித்துக் கொண்டிருக்கும் நமது சமூகத்திற்காய் உழைப்போம்: யாழ் பல்கலை. மாணவர் ஒன்றியம்

பேராசிரியர் கைலாசபதி: ஒரு பெரு விருட்சமும் சில சிறு செடிகளும் : கரவை ஜெயம்

‘யாழ் பல்கலைக்கழக மாணவிகள் தற்கொலை முயற்சி!’ யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் – அரச அதிபர் சுயாதீன விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். : த ஜெயபாலன்

யாழ் பல்கலையின் உபவேந்தர் தெரிவுக்கு பேராசிரியர் ஹூலுக்கு ஆதரவாக மேற்கொண்ட கையொப்ப ஆவணம் அமைச்சர் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டது : த ஜெயபாலன்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 Comments

 • bala
  bala

  டக்ளஸ் தேவானந்தாவுக்கு 24 மணிநேரமும் பாதுகாப்பு. புலிகளின் காலத்தில் கொழும்பில் தஞ்சம். புலி செத்தபிறகும் பாதுகாப்பிற்குக் குறைவில்லை. நிலைமை இப்படியிருக்க குடும்பத்துக்கே அச்சுறுத்தல் புலிகள் கொடுத்துக் கொண்டிருக்க ஹூல் பேராசிரியர் பதவியை விட்டுவிட்டு வெளிநாடு போனார் என்று டக்ளஸ் தேவானந்தா எப்படிக் குற்றங்காண முடியும்.– தோழர் பாலா

  Reply
 • Sri vaishnavi
  Sri vaishnavi

  ”ஊடகங்களில் யாழ் பல்கலைக்கழகத்திற்கு உதவிகள் வழங்கப்படுவதாக செய்திகள் வந்த போதும் அவ்வாறான உதவிகள் வருவதில்லை” என பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை குறிப்பிட்டார். ”

  உதவி செய்ய நினைகிரவர்களின், எல்லா உதவிகளும் தனக்கும்; vC சன்முகதாருக்கும் ஊடாகத்தான் செல்ல வேண்டும், அத்துடன் தமக்கு என்ன லாபம் என்ற இவரது “நல்ல” எண்ணத்தாலேயே யாழ் -பல்கலைகழகத்துக்கு உதவ முயன்றவர்கள் பலர் தமது எண்ணத்தையும்; செயலையும் நிறுத்தி கொண்டனர். ஹூல் VC யாக வந்தால் புலத்திலிருந்து பலர் அங்கு சென்று பணிசெய்யவும், பல உதவிகளை செய்யவும் தயாராக உள்ளனர்.
  பாலசுந்தரம்பிள்ளையின் குணம் பற்றி டக்லஸ் தேவாவுக்கு தெரியாமல் இருக்க முடியாது. அப்படியானால் ஏன் பாலசுந்தரம்பிழையை காவிக்கொண்டு திரிகிறார். டக்ளசுக்கு வேறு அலோசகர்கள் இல்லையோ??
  தேவாவின் ஹூல் மீதான விமர்சனத்தை பார்த்தல் அவர் தொடர்ந்தும் சன்முகலிங்கம் பதவியில் இருக்க வழிசெய்வார் போலிருகிறது.
  அப்படியானால் ஆண்டவனானாலும் பல்கலைகழகதை காப்பார்றமுடியாது.

  Reply
 • jeyarajah
  jeyarajah

  //தேவாவின் கூல் மீதான விமர்சனத்தைப் பார்த்தால் அவர் தொடர்ந்தும் சண்முகலிங்கம் பதவியில் இருக்க வழி செய்வார்போல இருக்கிறது//
  //ஏன் பாலசுந்தரம்பிள்ளையை காவிக்கொண்டு திரிகிறார் டக்களஸ்க்கு வேறு ஆலோசகர்கள் இல்லையோ //வைஸ்ணவி

  கூல் வெளிநாடுபோனதை அமைச்சர் அடிக்கடி கதைத்தது என்றும் வருகிறது தேவானந்தா கூலை ஆதரித்தும் அவருக்கு சொல்லாமலே கூல் வெளிநாடு சென்றதை நாகரிகம் கருதி அவர் தவிர்த்திருக்கலாம். இதனை கூல் மீது தேவானந்தா விமர்சனம் என்று பார்த்து நடுவே நிற்கும் குள்ள நரிகளுக்கு சந்தர்ப்பம் கொடுக்க கூடாது

  பாலசுந்தரம் பிள்ளை சந்தர்ப்பம் கிடைக்கும்போது சண்முகலிங்கத்திற்க்கே ஆப்பு வைக்கலாம் அதற்காக தேவாவின் ஆலோசகர் என்று சொல்லுவதற்கில்லை. கனிந்து வருகின்ற நல்ல விடயத்திற்க்கு யாவரும் உறுதுணையாக இருப்போம்.

  Reply
 • kajen
  kajen

  இச்சந்திப்பின் போது, 2006ல் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் யைத் பலத்த சிரமங்களுக்கு மத்தியில் உப வேந்தராக தெரிவு செய்ய தான் போராடியதாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆனால் அவர் அப்பதவியை ஏற்று செயற்பட முற்பட்ட போதும் கொலை அச்சுறுத்தல் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறியதை ஒரு குற்றச்சாட்டாகவே தெரிவித்தார். இக்குற்றச்சாட்டை அமைச்சர் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் அழுத்தமாகவே தெரிவித்தார்.

  Oh! We never knew that Douglas was a man behind his last VC post. With what face Prof. Hoole will ask Douglas again? Mr. Hoole better stay in North America.

  Reply
 • அப்பாவி
  அப்பாவி

  ”பல்கலைக்கழகத்தினுள்ளேயே பொங்குதமிழ் கொண்டாடி விட்டு, இப்போது பல்கலைக்கழகத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்று இடித்துக் கேட்க முடியாது”

  அப்போது இவர்கள் எல்லாம் என்ன தழிழ் கொண்டாடினார்கள்? டக்கிளஸ் அந்த காலத்தில் போகபோக்கிடம் இல்லாமல் பல்கலையில் படுத்து கிடந்ததை யாவரும் அறிவர்.

  ”இச்சந்திப்பில் தற்போதைய யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் பற்றிய அதிருப்தி அமைச்சரவைக் குழுவில் வெளிப்பட்டது. ”

  அப்போது ஏன் இன்னும் இந்தநிர்வாகத்தை வைத்திருகின்றனர், கலைத்து விடவேண்டியதுதனே?

  Reply
 • v visvan
  v visvan

  Ten years of impunity for Jaffna-based journalist’s murderers
  Published on 18 October 2010

  On the 10th anniversary of Tamil journalist Mayilvaganam Nimalarajan’s murder in the northern city of Jaffna, Reporters Without Borders reiterates its hope that the Sri Lankan government will finally relaunch the police investigation into his death.

  The Jaffna correspondent of the BBC’s Tamil and Sinhalese-language services and the Sri Lankan newspapers Virakesari and Ravaya, he was gunned down in his home on 19 October 2000. His killers also injured three other members of his family, including his parents.

  Reconciliation in Sri Lanka will require tough government initiatives to combat impunity in high-profile cases such as Nimalarajan’s murder, one of the most shocking killings of the past decade. Now that the war is over, the police and the judicial authorities need the resources and political support that is essential in order to be able to identify and arrest those responsible.

  Today, Nimalarajan’s father told Reporters Without Borders: “This has been 10 years of suffering for our family. But my son’s memory is still alive. I would like people to remember him as a courageous journalist who served his community. The government could relaunch the investigation into my son’s murder if it wanted to. It is a question of political will. We want justice to be done.”

  Reporters Without Borders went to Jaffna in 2002 to investigate Nimalarajan’s murder. At that time, several suspects had been arrested but after a change of government, the police and certain judges deliberately sabotaged and then blocked the judicial proceedings, which were implicating members of the EPDP, a pro-government Tamil militia whose president is a minister in the current government.

  Reporters Without Borders concluded that Nimalarajan, one of the leading Jaffna-based journalists working for the international media, was killed because of his coverage of the political violence before and during the 2000 parliamentary elections.
  At least 25 journalists have been killed in Sri Lana since 2000, and three others have gone missing.

  -http://en.rsf.org/sri-lanka-nimalarajan-bbc-jaffna-killed-epdp-18-10-2010,38579.html

  செய்தி இது.

  இவ்வாறு படுகொலைகளுடன் தொடர்புடைய ஒரு அமைச்சர் மக்களுடைய நியாயமான விடயங்களில் எவ்வாறு கவனமெடுப்பார் என்று புரியவில்லை.

  இப்போது யாழ்.பல்கலைக்கழகத்தில் அதிகாரத்தில் இருப்பவர்களே டக்ளஸை விட அதிகாரம் கூடிய மகிந்த ஆட்சியாளருக்கு கூஜா தூக்கினால் அவர்களே நியமிக்கப்படுவார்கள் என்பதில் ஆச்சரியமில்லை.

  இப்போது யாழ் பல்கலைக்கழகத்தில் அதிகாரத்தில் இருக்கிற பாலசுந்தரம்பிள்ளை டக்ளஸ{க்கு வேண்டியவராக இருக்கிறார். அமைச்சரின் அழைப்பின் பேரில் தான் அவர் இக்கூட்டத்திற்கே வந்திருக்கிறார். மறுபுறத்தில் அவரே பல்கலைக்கழகத்தின் பெருமளவான சீர்கேடுகளுக்குக் காரணமாகவுமிருக்கிறார் என்பது வெளிப்படை.
  இது எந்த அடிப்படையிலான உறவு?

  கூல் திறமையானவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், கொலைக்குற்றச்சாட்டுக்கள் உட்பட பலவித குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ஒரு கட்சியின் தலைவரைச் சந்தித்து அவரது ஆசீர்வாதத்துடன் துணைவேந்தராகும் கூல் ஊழல்களும் மோசடிகளும் நிறைந்த பல்கலைக்கழகத்தை எவ்வாறு சீரமைக்க முடியும் என்பது வெறும் தர்க்க ரீதியான கேள்வி மட்டுமல்ல. கடப்பாடும் பொறுப்புணர்வும் சார்ந்ததுமான கேள்வியாகும்.

  இது நரி அப்பம் பங்கிட்ட கதையாகத் தான் இருக்கும். அதிலாவது குரங்குகள் நரியைப்பற்றித் தெரியாமல் தான் போயின. இங்கோ? …

  Reply
 • அப்பாவி
  அப்பாவி

  The Vavuniya Campus’s research sessions will be held tomorrow. If possible, publish this as a new sub-article. Then a lot of comments can be integrated so as to explain how ‘they misuse’ research and science for their benefits and ingnorance.

  //இது நரி அப்பம் பங்கிட்ட கதையாகத் தான் இருக்கும். அதிலாவது குரங்குகள் நரியைப்பற்றித் தெரியாமல் தான் போயின. இங்கோ? …//v visvan on October 20, 2010 7:15 am

  நரிகள் கூடி அப்பத்தை தங்களுக்குள்ளேயே பங்கிடும் கதை பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா விஸ்வன்? அது நாளைக் காலையிலிருந்து மாலை வரை யாழ் பல்கலையின் வவுனியா வளாகத்தில் நடைபெறவிருக்கின்றது.

  நாளை (27 ஒக்டோபர் 2010) வவுனியா வளாகத்தின் வருடாந்த ஆராய்ச்சி மாநாடு நடைபெறப் போகின்றது (http://www.vau.jfn.ac.lk/VCARS/VCARSIndex.php). இந்த கண்துடைப்பு விழாவுக்கு தலைமை தாங்க இருப்பவர் கெளரவக் கலாநிதி பட்டத்தை இந்த வருடம் தனக்கென்று பறித்தெடுத்துக்கொண்ட பாலசுந்தரம்பிள்ளை.

  ஆராய்ச்சி மன்றத்தின் வணிகப் பகுதிக்கு தலைமை தாங்கவிருப்பவர், தன் வாழ்வில் ஆராய்ச்சி ஏதுமே செய்யாத ஊழலில் திளைத்துக் கொழுத்த இ. நந்தகுமாரன் (தற்போதைய வவுனியா வளாக முதல்வர்).

  விஞ்ஞான ஆய்வு மன்றத்துக்கு தலைமை வகிப்பவர் , “ஆராய்ச்சி என்றால் என்ன?” என்று கேட்கக் கூடியவருமான ஓய்வு பெற்ற ஊழல் துணைப் பேராசிரியன் எஸ். ராசதுரை. இவர் வவுனியா வளாகத்தின் முதல்வராக இருந்த காலத்தில், தன் வீட்டுத் தேவைக்கென கோடாலித் தைலக் குப்பிகளையும், Iodex ஆயின்மென்றுகளையும் வளாகத்தின் மெடிக்கல் ஒஃபீசிலிருந்தே சுருட்டிச் சென்றவர்.

  இந்தப் பழம் பெரும் புல்லுருவிகளின் நிழலில் எஸ். குகனேசன் முதலாய இளம் புல்லுருவிகள் கூடிக் கும்மாளமிடும் நாளை. நடைபெறப் போவது – ஆராய்ச்சி மாநாடல்ல… அது, இந்தப் புல்லுருவிகள் ஆராய்ச்சி என்ற பெயரில் கண்துடைப்புக்க்காக கூட்டும் ஒரு பணச்சடங்கு மட்டுமேயேதான்.

  Science and Management towards development in the post-conflict Sri Lanka என்ற தலைப்புடன் நடத்தப்படுகின்ற ஆய்வு மாநாட்டின் நோக்கம் இதுதானாம்:

  “To provide scientist, academics and researchers from the fields of science and management, and enable them to integrate their knowledge and experience with the cutting edge technology for sustainable development at regional, national and global levels”

  Climatic change influence, climate change mitigation, knowledge engineering, artificial intelligence, economic globalization and diversification (at macro and micro levels), green energy, social networking, biomechanics, bioengineering… என்று உலகம் மாறிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் 90ம் ஆண்டுகளில் அலசப்பட்ட விடயங்களை குறித்து நடத்தப்படும் இந்த மாநாடு, பரமார்த்தகுருக்களுக்கு ஒரு get-together தான் போங்கள்.

  //To provide scientist, academics and researchers from the fields of science and management// என்று குறிப்பிடும் இவர்கள், SCIENTIST என்பதனை மட்டும் ஏன் ஒருமையில் விட்டார்கள்? ஒருவேளை பாலசுந்தரம்பிள்ளை மட்டும்தான் இன்று இலங்கையில் வாழுகின்ற ஒரே ஒரு scientist தானோ?

  Scientist, researcher என்கின்ற இரு பதங்களுமே ACADEMIC என்பதனுள் உள்ளடங்கும் என்பதனை இந்த அறிவுஜீவிகள் என்று சொல்லிக்கொள்கின்ற பரமார்த்தகுருக்களும் அவர்களின் சீடப்பரிவாரங்களும் அறியவில்லையா?

  அக்கடமிக் என்று சொல்லிக்கொள்கின்ற பல்கலைக்கழக புல்லுருவிகளுக்கு மட்டும்தானா விஞ்ஞானமும் ஆராய்ச்சியும்? தெருவில் திரிகின்ற குப்பனுக்கும் சுப்பனுக்கும் விஞ்ஞானத்தைப் பற்றியும் நிர்வாகத்தை பற்றியும் அறிந்து கொள்ள உரிமை இல்லையா?

  தேசம்நெற்றின் காரசாரமான கண்டனங்கள்தான் காரணமோ தெரியவில்லை. நாளை புவனேஸ்வரி லோகனாதன் லீவு எடுத்திருக்கின்றாராம். அப்பாடா இந்த வருடமாவது கத்தரிச்செடிகள் பற்றிய ஆராய்ச்சி பற்றிக் கேட்டு வருந்தத் தேவையில்லை என்று அனைவரும் சந்தோசமாகவும் இருக்கின்றார்களாம்.

  Reply
 • அப்பாவி
  அப்பாவி

  Mr. Jeyapalan,

  You have to publish the following information on Thesamnet. It is a must. After all it has been reported on thesam regarding the Vav Campus of the UoJ, they have banned/blocked http://www.thesamnet.co.uk on the Vavuniya Campus’s webserver. This is a very unethical act, and is breaching the fundamental rights of journalism.

  தேசம்நெற்றில் வவுனியா வளாகத்தின் ஊழல் முதலைகளான இ. நந்தகுமாரன், புவனேஸ்வரி லோகனாதன், எஸ். குகனேசன் ஆகியவர்களைப் பற்றியும், 27ம் திகதி இடம்பெற்ற ஆய்வு மாநாடு பற்றியும் வந்த செய்திகளின் பாதிப்பினால் வவுனியாவளாகத்தின் ஊழல் பேர்வழிகள் குழப்பமுற்றிருப்பதாக அறியக் கிடைக்கின்றது.

  இதன் விளைவாக வவுனியா வளாக கணினி வலையமிப்பின் பங்கீட்டியில் (web-server) தேசம்நெற்றினை தடை செய்துள்ளார்கள். தற்போது வவுனியா வளாகத்திலிருந்து தேசம்நெற்றினை அணுக முடியாது. தேசம்நெற் வவுனியா வளாகத்தை பொறுத்தவரையில் ஒரு தடை செய்யப்பட்ட இணையத்தளமாக மாறிவிட்டது.

  “மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்று இலச்சினையில் பொறித்திருக்கின்ற யாழ்ப்பாண பல்கலையின் வவுனியா வளாகம் இன்று உண்மையை மறைக்கின்ற ஊழல் பேர்வழிகளின் தனிக்காட்டுராச்சியமாக மாறிவிட்டது. இது பத்திரிகையாள சுதந்திரத்துக்கும், ஊடக தர்மத்துக்கும் எதிரான அராஜகம் – தேசம்நெற் பின்னுட்டாளர்கள் இதற்காக குரல் கொடுப்பார்கள் என நம்புகின்றோம்.

  இத்தால் வவுனியா வளாகத்தின் serverன் மூலம் தேசம்நெற்றினை அணுக முயன்ற போது பெறப்பட்ட அறிவுறுத்தலும் உங்கள் பார்வைக்கு முன்வைக்கப்படுகின்றது.

  ERROR (message received at 12.55 SL time on the 29th Oct 2010)

  The requested URL could not be retrieved

  ———————————————————–

  While trying to retrieve the URL: http://thesamnet.co.uk/

  The following error was encountered:

  •Access Denied.
  Access control configuration prevents your request from being allowed at this time. Please contact your service provider if you feel this is incorrect.

  Your cache administrator is systemengineer@mail.vau.jfn.ac.lk.

  யாழ் பல்லைக்கழக கவுன்சிலினதும், செனற்றினதும் அனுமதி பெறாமல் இப்படியானதொரு ஊடக இணையத்தளத்தை தனிப்பட்ட மனிதர்களின் சுயலாபத்துக்கும், பிழைகளை மூடிமறைக்கவுமென தடை செய்தல் மாபெரும் அதிகாரத் துஸ்பிரயோகக் குற்றமாகும்…

  இதற்கு புவனேஸ்வரி லோகனாதனினந்தும் அவரின் தம்பி, நெற்வேக் அனலிஸ்டாக பதவியை எடுத்துக்கொண்ட நித்தியானந்தத்தினதும் பங்கும் S. குகனேசனின் சிபாரிசும் காரணமாக இருக்கும் என நம்பப்படுகின்றது.

  Reply
 • தேவராசா
  தேவராசா

  //இதன் விளைவாக வவுனியா வளாக கணினி வலையமைப்பின் பங்கீட்டியில் (web-server) தேசம்நெற்றினை தடை செய்துள்ளார்கள். தற்போது வவுனியா வளாகத்திலிருந்து தேசம்நெற்றினை அணுக முடியாது. தேசம்நெற் வவுனியா வளாகத்தை பொறுத்தவரையில் ஒரு தடை செய்யப்பட்ட இணையத்தளமாக மாறிவிட்டது.//அப்பாவி on October 30, 2010 3:21 am

  ஆக மொத்தத்தில் இனிவரும் காலங்களில் வவுனியா வளாகத்தைப் பற்றியே முழுக் கவனத்துடன் செயற்பட வேண்டும் என்று நான் நினைக்கின்றேன். தாங்களே பிழைகளை செய்துவிட்டு மூடி மறைத்தலும், உண்மையைத் திரித்தலும் இனிமேலும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

  உள்ளக செய்திமூலங்கள் “புவனேஸ்வரி லோகனாதனின் தம்பி செ. நித்தியானந்தனது நியமனம் தொடர்பான குழறுபடிகள் வெளியிடப்பட்டதனால் ஏற்பட்ட குழப்பநிலையும் கோபமும் காரணமாக நித்தியானந்தன் தனது சகபாடியும் தன்னைப் போலவே ஒருவித தகமையும் இல்லாமல் பதவியை எடுத்துக் கொண்ட ஒருவரின் உதவியுடன், குகனேசன் மற்றும் புவனேஸ்வரியின் ஆலோசனையின் பெயரில் மேற்படி thesamnet.co.uk இணையத்தளத்தை block பண்ணி இருக்கின்றார்” என தெரிவிக்கின்றன.

  பூனை கண்ணை மூடிக் கொண்டால் பூலோகம் இருண்டு விடுமா?

  Reply
 • danu
  danu

  பல்கலைக்கழகத்தினுள்ளேயே பொங்குதமிழ் கொண்டாடி விட்டு இப்போது பல்கலைக்கழகத்தில் தேசம்நெற்றை வாசிக்கதடைசெய்தால் இது தாங்களாகவே தங்கட பிரச்சினைகளை தாங்கள் தான் செய்துள்ளோம் என்று நிரூபிக்கிறார்கள் போலுள்ளது.. அடுத்தவலைக்குள் இவர்களது என்ன பிரச்சினைகள் வெளிவரப்போகிறதோ?

  இலங்கை அரசாங்கம் பிரச்சினைகள் என்று தமிழர்கள் சொன்னதும் பயங்கரவாதிகள் என்றது போல் இருக்கிறது யாழ் பல்கலைக்கழக வவுனியா கம்பஸ் வேலை வவுனியாவில் தேசம் விஸ்தரிக்கப்பட வேண்டிய தேவையுள்ளதையே இது எடுத்துக்காட்டுகிறது

  Reply