‘யாழ் பல்கலைக்கழக மாணவிகள் தற்கொலை முயற்சி!’ யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் – அரச அதிபர் சுயாதீன விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். : த ஜெயபாலன்

Imelda_Sugumar_GA_JaffnaUoJ_Signboardயாழ் பல்கலைக்கழக மாணவிகள் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவது அதிகரித்துள்ளதாக யாழ் அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். ஒக்ரோபர் 11 (நேற்று) யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இமெல்டா சுகுமார் இதனைத் தெரிவித்துள்ளார். யாழ் குடாநாட்டில் குறிப்பாக பல்கலைக்கழகச் சூழலில் மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் காரணமாகவே என்றுமில்லாதவாறு இத்தற்கொலை முயற்சிகள் அதிகரித்து இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். யாழ் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நிகழ்ந்து ஒரு வாரத்திற்குள் இப்பாரிய குற்றச்சாட்டை அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் வெளியிட்டு உள்ளார்.யாழ் பல்கலைக்கழகம் தொடர்பான நீண்ட விவாதம் யூலை 01 2010 முதல் தேசம்நெற் இல் இடம்பெற்று வருகின்றது. இதில் யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் பாலியல் துஸ்பிரயோகம் உட்பட பல்வேறு சீரழிவுகள் பற்றிய கட்டுரைகள் வெளியாகி உள்ளமை தெரிந்ததே. அரச அதிபர் இமெல்டா சுகுமாரின் குற்றச்சாட்டுகள் தேசம்நெற் இல் அம்பலப்படுத்தப்பட்ட யாழ் பல்கலைக்கழக நிர்வாகச் சீரழிவையும் கல்வித் தகமையில் ஏற்பட்டுள்ள பாரிய வீழ்ச்சியையும் மேலும் உறுதிப்படுத்தி உள்ளது.யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் பாலியல் துஸ்பிரயோகம் உட்பட அங்குள்ள நிர்வாகச் சீர்கேடுகளுக்கு முடிவுகட்ட இவை தொடர்பான உடனடியான சுயாதீன விசாரணைக்கு அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் உத்தரவிட வேண்டும். இவ்வாறான ஒரு விசாரணைக்கு யாழ் மாவட்டத்தின் நிர்வாகத்தில் அதிகாரத்தைக் கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முழுமையான ஆதரவளிக்க வேண்டும். இவற்றின் மூலமாக மட்டுமே யாழ் பல்கலைக்கழகத்தில் இவ்வாறான சீரழிவுக்கு முடிவு கட்டுவதுடன் யாழ் பல்கலைக்கழகத்தை முன்னேற்றப் பாதையில் இட்டுச்செல்ல முடியும்.யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் விரிவுரையாளர்கள் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுகின்றனர் என சுவரொட்டிகளை ஒட்டியது தெரிந்ததே. இறுதி எச்சரிக்கை என்ற தலைப்பில் வெளியான சுவரொட்டி

”இறுதி எச்சரிக்கை

போரின் கோரப்பிடியில் சிக்கி தமது வாழ்வைத் தொலைத்த உறவுகள் மற்றும் சொத்துக்களை இழந்த வன்னி மக்கள் அலல்படும் வேளையில் தமது கலாச்சார விழுமியங்களை சீர்குலைக்கும் ஒரே நோக்கமாகவும் சமூக நிறுவனமான யாழ் பல்கலைக்கழகப் பெயரைக் குலைக்கும் நோக்கமாகவும் சில விரிவுரையாளர்களின் நடத்தை காணப்படுகிறது. குறிப்பாக மாணவிகளை வற்புறுத்தி தமது காம இச்சைகளை தீர்த்து வருகின்றனர். ஆலயம் போல் காணப்படும் இப்பல்கலைக்கழகத்தினதும் எமது சமூகத்தினதும் கலாச்சாரத்தினைச் சீரழிக்கும் இவ்வாறான செயல்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எனவே இவர்களது இந்த நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இல்லையேல் இன்னும் சில காலப்பகுதியினுள் உங்களுக்கான தண்டனைகள் நிறைவேற்றப்படும். இது உங்களுக்கு நாங்கள் விடுக்கும் இறுதி எச்சரிக்கை. இதனை நீங்கள் அலச்சியப்படுத்தினால் உங்கள் மனைவிகள் விதவையாவதை யாராலும் தடுக்க முடியாது.

எனவே கீழ் குறிப்பிடப்படும் விரிவுரையாளர்கள் உடனே இந்த நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும்.

இளங்குமரன்
விசாகரூபன்
நவரத்தினம்
அருந்தாகரன்

எச்சரிக்கைகளை அலச்சியப்படுத்தினால் தண்டனைகள் நிறைவேற்றப்படுவது தவிர்க்க முடியாதது.

மாணவர் சமூகம்
யாழ் பல்கலைக்கழகம்.”

இச்சுவரொட்டி ‘மனைவிகள் விதவையாக்கப்படுவார்கள்’ போன்ற கடுமையான தண்டனைகளைக் குறிப்பிட்டிருந்த போதும் இது மாணவர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கு இந்த எச்சரிக்கையை ஒருவழிமுறையாகவே பயன்படுத்தி உள்ளனர்.

யாழ் பல்கலைக்கழக மாணவிகளின் தற்கொலை முயற்சிகள் பற்றிக் குறிப்பிட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் மௌனமாக தமக்குள் அழுகின்ற பல நூற்றுக் கணக்காண மாணவிகளின் வாழ்நிலையை எதிரொலித்து உள்ளார். முன்னர் தற்கொலை செய்துகொண்ட மாணவிகளின் பின்னணியில் இவ்வாறான பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளமை கண்டறியப்பட்டு இருப்பதையும் அரச அதிபர் உறுதிப்படுத்தி உள்ளார். பெயர் குறிப்பிடாத வைத்திய அதிகாரி ஒருவர் இதனைத் தனக்கு உறுதிப்படுத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். ஏற்கனவே இடம்பெற்ற பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் மற்றும் தற்போது இடம்பெறுகின்ற பாலியல் துன்புறுத்தல்களின் பின்னணியில் பல்கலைக்கழக விரிவுரையாளர்களே உள்ளதாகவும் அரச அதிபர் குற்றம்சாட்டி உள்ளார்.
 
அண்மையில் யாழ் மாவட்ட சிறார்கள் மீதான துஸ்பிரயோகங்கள் தொடர்பாக இடம்பெற்ற கூட்டம் ஒன்றின் போதே சுகாதார திணைக்களப் பெண் வைத்திய அதிகாரி இந்தத் தகவல்களை வெளியிட்டதாகவும் அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார். அண்மைக் காலங்களில் மட்டும் 77க்கும் அதிகமான சிறுவர் துஸ்பிரயோகங்கள் இடம்பெற்று இருக்கின்றமை தொடர்பான பதிவுகள் வந்திருப்பதாகவும் அரச அதிபர் தெரிவித்தார். கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் சிறுவர் துஸ்பிரயோகங்களை கட்டுப்படுத்தும் அமைப்புக்கள் அண்மைக் காலங்களில் வேகமாக அதிகரித்து இருக்கின்றமை அதிர்ச்சியை தருவதாயும் அரச அதிபர் சுட்டிக்காட்டி உள்ளார்.

அரச அதிபருடைய இக்குற்றச்சாட்டு யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் நியமனத்திற்கான காலகட்டத்தில் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. அரச அதிபர் குற்றம்சாட்டிய விரிவுரையாளர்கள் பேராசிரியர்கள் போன்றோரே மீண்டும் யாழ் பல்கலைக்கழகத்தை நிர்வகிக்கின்ற உபவேந்தருக்கான பதவிகளிலும் போட்டியிடுகின்றனர். பாலியல் துஸ்பிரயோகம் அதிக அளவில் இடம்பெறுவதாகக் குற்றம்சாட்டப்படும் கலைப்பிரிவுத் தலைவர் பேராசிரியர் என் ஞானகுமாரன், வரலாற்றுத்துறைப் பேராசிரியர் சத்தியசீலன், தற்போதைய உபவேந்தர் என் சண்முகலிங்கம் ஆகியோர் யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் நியமனத்திற்கு போட்டியிடுபவர்களில் முக்கியமானவர்கள். இவர்கள் யாழ் பல்கலைக்கழகத்தின் பாலியல் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள் ஸ்தாபனமயப்படுத்த காரணமாக இருந்ததுடன் இவர்களே இவ்வாறான பாலியல் மற்றும் நிர்வாகத் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்படுகின்றது.

சுயாதீன விசாரணைக் குழு ஒன்றின் மூலம் யாழ் பல்கலைக்கழக பாலியல் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு யாழ் பல்கலைக்கழகத்தை உயர்நிலைக்கு இட்டுச்செல்வதற்கு இதுவே சிறந்த தருணமாக உள்ளது.

யாழ் அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமாரின் குற்றச்சாட்டுகள் பற்றி தேசம்நெற்க்கு கருத்து வெளியிட்ட யாழ் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த கபொத உயர்தர மாணவிகள், ‘நாங்கள் பல்கலைக்கழகம் செல்வதற்கே படிக்கின்றோம். ஆனால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கதைகளை மூத்த சகோதரிகள் சொல்வதை கேட்டால் பயமாக இருந்தது. அங்கு செல்வதற்கு பயந்தே இருந்தோம். அரசாங்க அதிபரின் கவனத்திற்கு இது வந்தது ஆறுதலாக உள்ளது’ எனத் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பான முன்னைய பதிவுகளைப் பார்க்க:

முருகையன் (1935-2009) – நகலும் நாடகமும் : நட்சத்திரன் செவ்விந்தியன்

சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்

‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஃகூல் உடனான நேர்காணல்

பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்

இன்று Aug 29 -வடக்கு – கிழக்கு – மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் – பேராசிரியர் ரட்ண ஜீவன் ஃகூல் உடன் சந்திப்பும் கலந்துரையாடலும்

மாற்றத்திற்கான நம்பிக்கையுடன் பேராசிரியர் ஹூல் யாழ் செல்கின்றார்! : த ஜெயபாலன்

‘Tamillain-Barre’ Syndrome’ மும் தமிழ் சமூகத்திற்கான புதிய அரசியல் கலாச்சாரத்தின் அவசியமும் : த ஜெயபாலன்

யாழ் பல்கலைக்கழகம் – முப்பத்தாறு வருடங்கள் – முழுமையான சீரழிவு : நட்சத்திரன் செவ்விந்தியன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் ரட்ன ஜீவன் ஃகூல் யை ஆதரிப்போம்! : ரி கொன்ஸ்ரன்ரைன்

தவித்துக் கொண்டிருக்கும் நமது சமூகத்திற்காய் உழைப்போம்: யாழ் பல்கலை. மாணவர் ஒன்றியம்

பேராசிரியர் கைலாசபதி: ஒரு பெரு விருட்சமும் சில சிறு செடிகளும் : கரவை ஜெயம்

‘யாழ் பல்கலைக்கழக மாணவிகள் தற்கொலை முயற்சி!’ யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் – அரச அதிபர் சுயாதீன விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். : த ஜெயபாலன்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 Comments

 • அப்பாவி
  அப்பாவி

  இப்போது எம்மால் என்ன செய்ய முடியும். விரைந்து ஏதவது செய்து ஆக வேண்டும். இது முள்ளிவாய்க்காலுக்கு ஒப்பான நிலைமை.

  Reply
 • aras
  aras

  துப்பாக்கிகளின் பிடியில் நீண்ட காலம் அகப்பட்டிருந்த மக்கள் மெளனம் கலைய நாட்கள் எடுக்கும். இப்போதும் எதையாவது பேசினால் யாராவது சுட்டு விடுவார்களோ என்றுதான் யாழ் மக்களின் பிழைப்பு போகின்றது.

  Reply
 • தாமிரா மீனாஷி
  தாமிரா மீனாஷி

  அரசாங்க அதிபர் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு (மாணவிகள் மற்றும் பல்கலைக்கழக பெண் ஊழியர்களுக்கு) நியாயம் கிடைக்க வழி செய்ய வேண்டும்.. முடிந்தால் தனி நபர் விசாரணைக் குழு ஒன்றை ஒரு பெண்மணியின் தலைமையில் அமைத்து இரகசியமான முறையில் (in-camera)விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். குற்றவாளிகளாகக் காணப்படுவோர் – அவர்கள் எத்தகைய உயர் பதவி வகித்தாலும் கூட- நீதிமன்றில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.. இந்தச் சீரழிவுக் கலாசாரம் இனிமேலும் தொடராமல் எமது சமூகம் பாதுகாக்கப்பட அரச அதிபர் உதவ வேண்டும்.

  Reply
 • Ajith
  Ajith

  There is no doubt criminals using the power as means of expoliting power for their personal interest should be punished whether in University or anywhere in a society. Not only Jaffna University but also School children also face similar fate particularly after end of war. Abductions, ransom, murders, drug use etc have become norm in Jaffna. Today we have a situation where every 10 people is surrounded by military and police force and people afraid to move, talk and exercise their rights. Even today two school girls were abducted in Vadamardachi.

  I don’t know what powers GA have to appoint a commission or an investigation. How genuine is going to be an investigation under current political system. A good example is the fate two judges who were investigating the murder of Chavakacheri and Vavuniya murders. What we need in Jaffna is real freedom of choice of people and power to those people. as long as institutions have political influence and there is no gurantee for victims to express their views without fear, these attorcites will continue.

  Reply
 • தேவராசா
  தேவராசா

  //அரசாங்க அதிபர் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு (மாணவிகள் மற்றும் பல்கலைக்கழக பெண் ஊழியர்களுக்கு) நியாயம் கிடைக்க வழி செய்ய வேண்டும்…//தாமிரா மீனாஷி on October 12, 2010 5:58 pm

  இந்தச் செயற்பாட்டுப் படிமுறையில் முதலங்கமாக – சண்முகலிங்கனை பணிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்தல் நல்லது.

  மேலும், நாளை (13/10/2010) வவுனியா வளாகத்தின் பிரயோக பீடத்தில் (சண்முகலிங்கன்) கட்டளையை சிரமேற்கொண்டு, எஸ். குகனேசன் விசேட கூட்டம் (special faculty board meeting) ஒன்றினை காலை 10.30 மணியளவில் கூட்டவுள்ளார். இந்த விசேட கூட்டம் ஏதோ காரணத்தை கருதிக் கூட்டப்படுவது – சண்முகலிங்கத்துக்கு எதிர்வரும் துணைவேந்தர் தெரிவில் ஆதரவைச் சேர்ப்பதற்கான ஒரு யுக்தியாகவே! It is a common strategy of the corrupted administrators at the U of Jaffna to summon ‘special meetings’ without proper notice to get illegal approval for their shady activities. Most of the time these special meetings are called without summoning all the members – so that the board’s decision can easily be diverted as per pervasive interests.

  குகனேசன், புவனேஸ்வரி லோகனாதன் என்னும் இருவரும் சமீப காலங்களில் சண்முகலிங்கத்தின் கொள்கை பரப்பு செயலாளர்களாகவே தொழிற்படுகின்றார்கள். இப்படியான அடியாள் கூட்டத்தின் ஆதரவு இருப்பதுட்கான் சண்முகலிங்கம் போன்ற முதலைகள் பயமின்றி உலாவருவதற்குக் காரணம்.

  சண்முகலிங்கத்துக்கு முதுகெலும்பாகவும் தத்துவம் உபதேசிப்பவராகவும் இன்னமும் இருப்பவர் பாலசுந்தரம்பிள்ளை, இவருக்கு கடைசியாக நடந்து முடிந்த பட்டமளிப்பு விழாவில் சண்முகலிங்கம் கொடுத்த இலஞ்சம் – டி.லிட் என்னும் கெளரவ கலாநிதிப் பட்டம்…

  சண்முகலிங்கத்தின் வழியில் தானும் முன்னேறவென வவுனியாவளாகத்தின் முதல்வர் (இவர் இன்னமும் ஒரு என்.ஜி.ஓவிலும் முழுநேர சம்பளம் பெறும் தொழிலாளி)இ. நந்தகுமாரன் அவர்கள், பாலசுந்தரம்பிள்ளையை வவுனியாவளாக ஆராய்ச்சி மாநாட்டுக்கு சிறப்பு அதிதியாக தலைமை தாங்கவென அழைத்தும் இருக்கின்றார். ஆக மொத்தத்தில் “முன்னாள்” புல்லுருவிகளின் தயவும் இன்னாள் புல்லுருவிகளுக்கு தம் தலைகளை காப்பாற்றிக் கொண்டு களவாணிச் செயல்களில் தொடர்ந்தும் ஈடுபட உதவி வருகின்றது.

  பாலசுந்தரம்பிள்ளையை விசாரணை செய்து தண்டித்தால் – சண்முகலிங்கன் முதல் புவனேஸ்வரி வரையிலானவர்கள் உண்ணி கழன்றால் போல் கழன்று அழிந்து விடுவார்கள்…

  இவ்வளவும் இருக்க “உந்த ஃகூல் கலர்ஸ் காட்டுவதற்காக யாழ் வந்து கொஞ்சக்காலம் துணைவேந்தராக பம்மாத்து காட்டி விட்டு – திரும்பவும் வெளிநாடு போய் விடுவார்… உவங்கள் என்னதான் செய்வினம்… நாங்கள் தான் உங்க நிலையான ஆக்கள்” என்று எஸ். குகனேசன் யாழ் பல்கலைக்கழக மூலைகள் எங்கும் கதை பரப்பித் திரிவதாகவும் தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.

  பேராசிரியர் ஃகூல் என்னும் ஆய்வாளன், ஆசிரியன், கொள்கைவாதி, தத்துவவியலாளன்… வேலை மினக்கெட்டு யாழ் வந்திருப்பது சண்முகலிங்கத்துக்கு பம்மாத்துக் காட்டத்தான் என்று நினைக்கும் குகனேசனின் அறிவுக்கு அடுத்த பட்டமளிப்பு விழாவில் ஆகக்குறைந்தது இரு டி.லிட் பட்டங்களாவது வழங்கி மகிழ்வார் சண்முகலிங்கன்!

  குகனேசனுக்கு எக்கச்சக்கம் அறிவு இருக்கத்தான் செய்கிறது – அதனைக் கொண்டுதான் ஒருவித தகமையும் இல்லாமலேயே, ஒருவித வேலையுமே செய்யாமல் 10-15 வருடங்களாக குப்பை கொட்டிக் கொண்டிருக்கின்றார். அவருக்கு அது கைவந்த கலை – எவரிடம் பதவி இருக்கிறதோ அவருக்கு “ஆமாம்” போட்டால் போதும், அதுதான் வெற்றிக்கு வழி (!) என்று உபதேசம் செய்வார் குகனேசன்.

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  //…அவர்கள் எத்தகைய உயர் பதவி வகித்தாலும் கூட- நீதிமன்றில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.. …//

  இதெல்லாம் ஸ்ரீலங்காவில் நடக்கிற காரியமா? தினகரன் டெய்லி நியூஸ் வாசிச்ச மாதிரி இருக்கிறது உங்கள் கதை. கனவு காண்பதற்கும் ஒரு அளவு கணக்கு இருக்கிறது. ஆனால் அது உங்களின் உரிமை தடுக்க நான் யார்? நன்றாக காணுங்கள்!

  Reply
 • நந்தா
  நந்தா

  தமிழர்களின் உயர் கல்விக் கேந்திரத்தில்நடைபெறும் இந்த அநாகரிக செயல்பாடுகளை பகிரங்கப்படுத்தும் அரச அதிபர் இமெல்டா சுகுமாருக்கு பாராட்டுக்கள்.

  நம்ம “படித்த” சட்ட வல்லுனர்களிடமிருந்தும் நீதி கேட்டுப் போராட்டம் நடத்தும் பிரக்கிராசிகளிடமிருந்தும் இந்த விஷயம் தொடர்பாக கருத்துக்கள் எதனையும் காணவில்லை!நல்ல “பீஸ்” கறக்கலாம் என்ற நப்பாசையோ தெரியவில்லை!

  Reply
 • thurai
  thurai

  மாணவர்கள் மிரட்டுவதற்கும், தண்டனை கொடுப்பதற்கும் முயல்வது பயங்கரவாத்தினை மீண்டும் வளர்க்கும் செயல். சட்டரீதியான நடவடிக்கைகள் எடுத்து குற்ரவாளிகளை தண்டிப்பதே அமைதிக்கு வழிவகுக்கும்.– துரை

  Reply
 • தாமிரா மீனாஷி
  தாமிரா மீனாஷி

  எதிர்கால சந்ததிக்கு நாம் விட்டுச் செல்லும் சமூக மதிப்பீடுகள் தற்போதுள்ளவற்றை விட சிறப்பானதாக அமைய வேண்டும் எனக் கனவு காண்பதில் தவறேதும் இருப்பதாக எனக்குப் படவில்லை. இக்கனவை நான் மட்டுமன்றி சமூகத்தின் பால் அக்கறையுள்ள அனைவரும் காண வேண்டும் என்பது எனது பெரு விருப்பம். இலங்கைத்தீவின் அரச கருமத்தில் ஒரு அரசாங்க அதிபர் விசாரணைக்குழு எதனையும் அமைக்கும் அதிகாரம் கொண்டுள்ளாரா எனத் தெரியவில்லை..ஆனால், இந்த சீரழிவு நிலை குறித்து அவர் வெளிப்படையாகப் பேசியது மக்களின் பொது நன்மை குறித்த ஒரு அரசு அதிகாரியின் அக்கறையை விட மேலான ஒரு விஷயம். அரசாங்க அதிபரே வெளிப்படையாகப் பேசிய பின்னரும் கூட வடக்கிலுள்ள பெண்கள் அமைப்புக்கள் இது பற்றி வாயே திறக்காமல் மெளனம் காப்பதன் மர்மம் என்ன?

  எல்லாவற்றையும் விட முக்கியமானது, அமைச்சர் டக்ளஸ் இது குறித்து என்ன செய்யப் போகிறார் என்பது. வடக்கின் மக்களுக்கு சேவை செய்வதிலேயே தன் வாழ்வை அர்ப்பணித்து செயல்படும் அவர், வடக்கின் இளம் சந்ததியைப் பெரும் பீதிக்குள்ளாக்கும் ஒரு சிலரின் நடவடிக்கையை கண்டும் காணாததும் போல் இருக்கப் போகிறாரா? தேசம்நெற்றில் இந்த விஷயம் வெளிவந்ததற்காக அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் கோரவில்லை..இன்று சமூகத்தில் பரவலாகப் பேசப்படும் அபாயம் குறித்து அவர் தனது நிலைப்பாட்டை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். அத்துடன் நின்றுவிடாது தமது அதிகாரங்களுக்குட்பட்டு அவர் என்ன நடவடிக்கைகளை இதுகுறித்து மேற்கொள்கிறார் என்பதையும் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

  இலங்கைத் தமிழரிடையே உள்ள கற்றறிந்த சமூகத்தினர் இக்கொடுமை பற்றி தமது அபிப்பிராயங்களைப் பகிரங்கமாகத் தெரிவிக்க வேண்டும். அவர்கள் உலகின் எந்த மூலையில் வாழ்பவர்களாக இருந்தாலும் சரி, வாய் மூடி மெளனிகளாக இருக்காமல் எமது சமூகத்தின் நலனில் அக்கறை கொண்டு இந்தக் கொடுமைக்கு எதிராகத் தமது குரலை உயர்த்த வேண்டும்..

  சமூகத்திற்கு தீங்கிழைப்பவர்களை சட்டத்தின் கையில் ஒப்படைக்கும் நோக்குடன் குடிமக்கள் கைது செய்யும் ஒரு முறைமை வளர்ந்த நாடுகளில் உள்ளது (citizens arrest).. இந்த முறைமை இலங்கையில் உள்ளதா என சட்ட வல்லுனர்கள் ஆலோசனை தெரிவிக்க வேண்டும். அத்தகைய கைது ஒன்றை செய்வதற்கு என்ன ஆதாரங்கள் தேவை என்பதையும் அவர்கள் பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

  Reply
 • அப்பாவி
  அப்பாவி

  //சண்முகலிங்கத்துக்கு முதுகெலும்பாகவும் தத்துவம் உபதேசிப்பவராகவும் இன்னமும் இருப்பவர் பாலசுந்தரம்பிள்ளை, இவருக்கு கடைசியாக நடந்து முடிந்த பட்டமளிப்பு விழாவில் சண்முகலிங்கம் கொடுத்த இலஞ்சம் – டி.லிட் என்னும் கெளரவ கலாநிதிப் பட்டம்//

  இப் பட்டத்திற்க்கு பாலசுந்தரம்பிள்ளை தகுதியனவரா என்று பல்கலையின் senate சிபார்சு செய்ததா என்று கேட்டு சொல்லுங்கோ “தேவராசா”. அப்படியாயின் அது எத்தனையாவது senate.

  Reply
 • தேவராசா
  தேவராசா

  நேற்று 13/10/2010 அன்று குகனேசன் தலைமையில் நடந்த விசேட கூட்டம் 12.30 வரை இழுபட்டது. தேசம்நெற் ஏற்கனவே குகனேசனின் உள்நோக்கம் பற்றி செய்தி வெளிவிட்டிருந்ததால் குகனேசன் தன் அண்ணன் சண்முகலிங்கனுக்காக ஒருவித பிரச்சாரமும் செய்யவில்லை.

  ஆனாலும், ஒருவிதமான ஆளணியோ, தளபாட வசதியுமோ இல்லாமல் புதிய கல்வியாண்டை தொடங்கவும், அனேக எண்ணிக்கையான மாணவர்களை உள்வாங்கி அவர்களுக்கு தரக்குறைவான கல்வி புகட்டிச் சீரழிக்கவும் புவனேஸ்வரி லோகநாதனும், குகனேசனும் தயார்நிலையில் உள்ளதாக அறியக்கிடைக்கிறது.

  குகனேசனுக்கு பிரயோக பீடத்தையும் பார்க்க வைரவபுளியங்குளம் (மன்னார் வீதி அருகில்) அவர் சட்டத்துக்கு புறம்பாக நடத்தும் ‘ஹையர் எடியுக்கேசன் சென்ரரில்’ பாடசாலை மாணவர்களை டியுசன் வகுப்புக்கு கவர்வதில்தான் ஆர்வம். அதேபோல, புவனேஸ்வரிக்கு தனது கொண்றாக்ட் கம்பனியான ‘பத்மனாதன் கொன்ஸ்ட்றக்சன்ஸ்ஸுக்கு’ ஆளணி சேற்ப்பதர்கு வவுனியா வளாக பட்டதாரிகளை பிடிப்பதில்தான் முழு நோக்கமும்.

  இங்கு புவனேஸ்வரி தனது பல்கலைக்கழக பதவியின் அந்தஸ்த்தினைப் பாவித்து தனது கட்டுமான கம்பனிக்கு புறொஜெக்டுகளை மடக்குவதற்காக எஸ். கணேஸ் போன்ற ஊழல்கார நிர்வாகிகளை அணுகிவருகின்றார். பல கோடி பணம் புரளும் தொழில் – அதனை இலகுவில் விட்டு விட முடியுமா?

  வவுனியா அரசாங்க ஆதார வைத்தியசாலைக்கு சொந்தமான காணியைக் கூட பறிமுதல் செய்து வைத்திருக்கும் புவனேஸ்வரியுடன் எவர்தான் மோதி வெல்ல முடியும்?

  இங்கு //இப் பட்டத்திற்க்கு பாலசுந்தரம்பிள்ளை தகுதியனவரா என்று பல்கலையின் senate சிபார்சு செய்ததா என்று கேட்டு சொல்லுங்கோ “தேவராசா”. அப்படியாயின் அது எத்தனையாவது senate?// என்கின்ற ‘அப்பாவி’ அவர்களின் கேள்விக்கு பதிலாக ஒரு கேள்வியைக் கேட்கலாம் என்று நினைக்கிறேன்.

  யாழ் பல்கலையின் செனட் சபை எப்போதாவது ஒரு காத்திரமான முடிவை எடுத்திருக்கிறதா அப்பாவி அவர்களே? செனட் சபை என்பது சண்முகலிங்கனின் கைப்பாவையே, இங்கு துர்க்கையம்மன் ஆசி பெற்ற பூசாரி சண்முகலிங்கன் சொல்லும் வேதவாக்குக்கள் தான் செனட் சபையின் முடிவு. உதாரணமாக, பாலசுந்தரம்பிள்ளைக்கு “ஒரு பென்சன் காணாது, நாம் இன்னொரு முழுப் பென்சனும் கொடுக்க வேண்டும். இது துர்க்காவின் கட்டளை!”, என்று சண்முகலிங்கன் சொன்னால் – உடனேயே செனட்சபை பக்தகோடிகள் “அரோகரா.. ஆமாம் சாமி” பாடி விடுவர்.

  Reply
 • அப்பாவி
  அப்பாவி

  தேவராசா அவர்களே, ஹையர் எடியுகேசன் டியூட்டரி வைத்து பணம் பண்ணி வருகின்ற திருவாளர் குகனேசன் ஒரு பெளதிகவியல் இரண்டாம் வகுப்பு கீழ்தரப் பட்டதாரி. இவர் உண்மையில் பல்கலைக்கழக விரிவுரையாளராக நியமனம் பெறுவதற்கு ஒருவித தகுதியும் இல்லாதவர் (As per UGC regulations it is not possible for someone with second lower class to obtain appointment as permanent lecturer). ஆனாலும், அந்தக்காலத்தில் எவரெவரினதோ கையைக் காலைப் பிடித்து உள் நுழைந்தவர். இவருக்கு அந்தக்காலத்தில் புவனேஸ்வரி லோகநாதன் பெரியதொரு பக்கபலமாக விளங்கி வந்தார்.

  புவனேஸ்வரி லோகனாதன் தான் எப்படியாவது வவுனியாவுக்கு வந்தால் தான் தனது குடும்ப வாழ்க்கைக்கு வசதி என்று வந்து சேர்ந்தவர். இதற்கு அவருக்கு உதவியவர் – திரு. இ. நந்தகுமாரன். இன்னுமொரு சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால், ஒரு காலத்தில் புவனேஸ்வரி தனது நியமனத்துக்காக பாலசுந்தரம்பிள்ளையின் வீட்டுக்கு ‘அரிசிமூட்டை’ இலஞ்சமாகக் கொண்டு சென்றதாகவும் தகவல்கள் உள்ளன.

  குகனேசன் தனது எம்.ஃபில் ஆய்வுக்காக பேராதெனிய சென்றார். பயிற்று நிலை விரிவுரையாளராக நியமனம் பெற்று 8 வருடம் சென்றும், இவரால் ஆய்வை முடிக்க முடியவில்லை. இறுதியில் அவரது ஆய்வுக்கட்டுரை எம்.ஃபில் ஆய்வுக்கான தரமற்றது, அதன் முடிவுகள் பிழை என்கின்ற காரணங்கள் காட்டி பேராதெனியவில் பரீட்சகர்களால் நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில், எவர் எவர் கையை காலையோ பிடித்து ஒருமாதிரி சமாளித்து தனது எம்ஃபில்லை ஒப்பேற்றினார் குகனேசன். இன்று பீடாதிபதியாக இருக்கும் இவர் ஒரு நாளும் ஒருவிதமான ஆக்கபூர்வமான பங்களிப்பையும் கல்வித்துறைக்கு வழங்காதவர். டியூசன் சென்ரரை விருத்தியாக்கி, தனது வியாபாரத்தை பெருக்குவதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் இவர் 6ம் 7ம் ஆண்டு மாணவர்களுக்கு சமயம், சமூகக் கல்வி போன்றவற்றில் கூட டியூசன் வழங்கி வருவதாகவும் கேள்வி.

  ஒருகாலத்தில் வளாக முதல்வராக இருந்த திருமதி (பேராசிரியர்) மகேஸ்வரன் “இங்கு குடும்பம் நடத்த வந்தீரா? அல்லது வேலை செய்ய வந்தீரா நீர்?” என்று புவனேஸ்வரியிடம் கேள்விகேட்டு எச்சரிக்கையும் விடுத்தார். ஆனாலும், புவனேஸ்வரி ஒன்றுக்கும் அஞ்சாத பேர்வழி. இன்று வவுனியாவிலும், வடக்கிலும் பரந்திருக்கின்ற மாபெரும் கட்டுமானத் துறை கம்பனியொன்றுக்கு உரிமையாளர். இது பற்றி ஏன் வருமான வரித்துறை, யு.ஜி.சி என்பன கண்டும் காணாமல் இருக்கின்றன?

  வவுனியா வளாகத்தின் பம்பை மடு கட்டுமானப்பணிகள் அனைத்தையும் ஒப்பந்த கொந்துறாத்து எடுத்திருப்பவர் புவனேஸ்வரிதான். பல்கலைக்கழக ஊழியர் ஒருவர் இவாறு செய்ய சட்டம் இடம் கொடுக்குமா தேவராசா?

  குகனேசன் பதவியிலுள்ள பெரியமனிதர்களுக்கு “ஆமாம் போடும் கலையில்” கைவந்தவர். 2006 – 2009 காலப்பகுதியில் வவுனியா வளாக முதல்வராக இருந்த எஸ். ராஜதுரை என்னும் இம்சையரக்கன் புலிகேசிக்கு இவர் கொழும்பு டொமெஸ்டிக் எயார்போர்ட்டில் அழுக்கு உடுப்பு மூட்டை கூட தூக்கி உதவினாராம். இப்போது ஒவ்வொரு நாளும் காலை 11 மணியளவில் இ.நந்தகுமாரனின் அலுவலகத்தில் ஆஜராகிவிடுவார். சூரியன் உதிக்க மறந்தாலும் தினசரி காலை 11 மணிக்கு குகனேசன் நந்தகுமாரனின் அலுவலகத்துக்கு சென்று சலாம் போட தவற மாட்டார்.

  திறந்த பல்கலையின் ஆய்வு மாணவர்கள் இருவர் வவுனியா வளாகத்துக்கு வந்தனர் தமது ஆய்வுகளை செய்வதற்காக 2005/6 காலப்பகுதியில். ஒரு கட்டத்தில் புவனேஸ்வரியின் அட்டூழியங்கள் தாங்க முடியாமல் இவர்கள் தமது ஆய்வுகளை விட்டு விட்டே சென்று விட்டனர். அவர்கள் வந்தது, நீர் மாசடைதல் பற்றிய தரப்படுத்தல் ஆய்வுக்காக. அவர்களைத் துரத்தியடித்து விட்டு இன்று புவனேஸ்வரி அதே விடயத்தை செய்வதாக படம் காட்டி வருகின்றார்.

  ஒரு கூட்டம் கத்தரிச் செடிகளை வைத்து, அவற்றுக்கு சேதன உரம் இட்டு வளர்த்தாலா அல்லது உரமிடாமல் வளர்த்தால நல்ல விளைச்சல் வரும் போன்ற உலகமகா ரகசியத்துக்கு விடைதேடும் வகையில் ஆய்வு செய்தார் புவனேஸ்வரி. உரமிட்டால் பயிர் நன்றாக வளரும் என்பது புவனேஸ்வரி சொல்லித்தானா தெரிய வேண்டும்?

  2006/7ல் கண்டியில் இருந்து வவுனியா வளாகத்துக்கு கல்வி பெற வந்த சகோதர இன மாணவன் ஒருவனை – “இவன் ஆமியின்ர ஊடுருவல்காறன்” என்று பட்டம் சூட்டிக் கலைத்த பயங்கரவாதியும் புவனேஸ்வரிதான். கைலாசபதியின் கனவான யாழ் பல்கலைக்கழகத்துக்கு இது மாபெரும் சேவைதான் போங்கள்!

  இப்படியான கோமாளிகள், கீழ்தரமான அடியாட்கள் போன்றவர்களின் ஆதரவுடன் தான் இன்று சண்முகலிங்கன் தனது தர்பாரை நடத்துறார். இதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள் தேவராசா?

  இப்ப சொல்லுங்கோ தேவராசா, யாழ் பல்கலைக்கழகம் என்றாவது உருப்படுமா?

  Reply
 • தேவராசா
  தேவராசா

  அண்மையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் வவுனியா வளாகத்தில் எஸ். குகனேசனும், புவனேஸ்வரி லோகனாதனும் – தேசம்நெற்றில் தமது களவுகள் வெளியிடப்பட்டதன் காரணமாக பீதியடைந்து குழம்பிப் போயுள்ளார்கள் என்றும், அதன் விளைவாக தமது குழுவிற்குள்ளேயே ஆளையாள் குறை சொல்லியும் குற்றம் சாட்டியும் குடுமிப்பிடிச் சண்டை பிடிப்பதாகவும் அறியக் கிடைக்கிறது.

  இ. நந்தகுமாரனின் அசமந்தப் போக்கை எஸ். குகனேசன் வெளிப்படையாக விமர்சித்துத் திரிவதாகவும் தகவல். ஆக மொத்தத்தில் பேராசிரியர் ஃகூல் வந்து சேர்ந்தால் எஸ். குகனேசனுக்கும், புவனேஸ்வரிக்கும் “முள்ளி வாய்க்கால்” நிலை தான் ஏற்படப் போகின்றது.

  இது மாணவ்ர்களுக்கு நல்லதையே விளைவிக்கும்.

  Reply
 • Enthiran
  Enthiran

  தமிழனுக்கு எப்போதும் இன்னொரு தமிழன் தான் எதிராளி! இதுவரை இப்படி இருந்தது போதும், இனிமேலும் இப்படி இருக்க அனுமதிக்க கூடாது! இப்படியான களைகளை, முளையிலேயே கிள்ளி/நசுக்கி சமுதாயத்திலிருந்து அகற்ற வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு உண்மையான இலங்கை பிரஜையுடைய கடமையாகும்!!

  Reply
 • students
  students

  நாங்களும் பல்கலைக்கழகத்தில் தான் படிக்கின்றோம்.தற்கொலை நடந்ததற்காக கூறப்பட்ட காரணங்கள் முற்றிலும் தவறானது.

  Reply
 • தேவராசா
  தேவராசா

  //ஏற்கனவே யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குறித்த உயரதிகாரியின் தொடர்புகள் தொடர்பாக சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இந்த நிலையிலேயே வங்கிக் கொள்ளை முயற்சி தொடர்பாக அவரது மகனும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.// Veluppillai on October 23, 2010 7:18 am

  தந்தை எட்டடி பாய்ந்தால் மகன் எண்பது அடி பாய்கின்றார். இதில் என்ன சந்தேகம்?

  களவும் ஊழலும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் நிர்வாகிகளின் பரம்பரை அலகுகளில் ஊறிய விடயங்கள். களவாணித்தனம் என்பதனை ஒரு குடும்பவியாபாரமாக யாழ் பல்கலையில் அவர்கள் நடத்தி வருகின்றார்கள்.

  வங்கிக் களவில் களவாடப்பட்ட பணத்தை விடவும் பன்மடங்கு கோடிகளை, ஓசைப்படாமல் கொந்துறாத்து (building contract) மூலம் யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து புவனேஸ்வரி லோகனாதன் சுருட்டி வருவதை எவர்தான் கண்டு கொள்ளுவார்கள்?

  Reply