முப்பது பேர் அடங்கிய அமெரிக்க வர்த்தகத் தூதுக்குழு நேற்று இலங்கை வந்தடைந்தது. அமெரிக்க அரச மற்றும் தனியார் வர்த்தகப் பிரதிநிதிகளைக் கொண்ட இந்த தூதுக்குழு இன்று (12) வட மாகாணத்திற்கு, விஜயம் செய்யவுள்ளது. யாழ்ப்பாணத்தை இன்று காலை சென்றடையும் மத்திய மற்றும் தெற்காசியாவுக்கான அமெரிக்க வர்த்தக அமைப்பின் (Unitetd State Trade Representative- USTR) பிரதிநிதி மைக்கல் மெலன் தலை மையிலான உயர்மட்ட அமெரிக்க வர்த்தக தூதுக்குழுவினருக்கும் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறிக்கும் இடையிலான விஷேட சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாண பொது நூலகத்தில் வட மாகாண ஆளுநர் தலைமையில் நடைபெறவுள்ள இந்த சந்திப்பின் போது வட மாகாணத்திலுள்ள முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்தும், வட பகுதியில் முதலீடு செய்வது குறித்தும் விரிவாக ஆராயப்படவுள்ளன.