தாயக மக்களின் அபிவிருத்திக்கு உதவ முன்னாள் ரெலோ உறுப்பினர்கள் கிழக்கு லண்டனில் ஒன்றுகூடினர்! : ரி சோதிலிங்கம்

நேற்று 10/ 10/2010 லண்டன் லேயிட்டனில் ரெலோவின் பல முன்னாள் உறுப்பினர்களின் ஒன்று கூடல் நடைபெற்றது. முன்னாள் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜனா மற்றும் ரெலோவின் அப்போதைய படைத்துறைத் தளபதி இளங்கோ ஆகியோர் அண்மையில் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு சென்று பல முன்னாள் ரெலோ உறுப்பினர்களையும், இன்றைய ரெலோ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிறீரெலோ உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிகாந்தா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் போன்றோர்களை சந்தித்து உரையாடி வந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து லண்டன், லேய்டனில் ரெலொ சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ரெலோவின் ஆரம்பகால உறுப்பினர்கள், புலிகளுடனான சகோதரப் படுகொலைகளில் பாதிப்புற்றோர் என பலரும் கலந்து கொண்டனர்.

இலங்கையில் பல முன்னாள் ரெலோ உறுப்பினர்கள் அமைப்பு ரீதியாக இயங்காமலும், நாட்டில் உள்ள ரெலோ அமைப்புடன் இணைந்து வேலை செய்யாமலும் வாழ்கின்றார்கள். இவர்கள் தாம் வாழும் பிரதேசங்களில் தமது மக்களுக்கான பணிகள், மக்களுக்கு சிரமதான உதவிகள், மக்களின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவிகள் புரிய வேண்டும் என வலியுறுத்தியும், தாம் மக்களின் அபிவிருத்தி நலனில் அக்கறையுடன் செயற்பட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர். அதற்கான ஆதரவினையும், உதவிகளையும் புலம்பெயர் நாட்டிலுள்ள முன்னாள் ரெலோ உறுப்பினர்களிடம் கேட்டுள்ளனர்.

இந்த கோரிக்கைகள் புலம்பெயர் நாட்டிலுள்ள முன்னாள் ரெலோ உறுப்பினரிடையே ஒரு ஒன்று கூடலை வற்புறுத்தியும் உள்ளது.

மேலும் புலம்பெயர்நாட்டில் உள்ள முன்னாள் ரெலோ உறுப்பினர்கள் பலர் தாம் தனிப்படவும், பல்வேறுபட்ட பொது அமைப்புகள் ஊடாகவும் தமிழ் மக்களுக்கான உதவிகள் மேற்கொள்வதையும், இந்த உதவிகள் மேலும் வலுப்படுத்தப்பட்டு, ரெலோ உறுப்பினர்கள் ஸ்தாபன மயப்படுத்தப்பட்டு உதவிகள் புரிய விரும்புவதாகவும் தெரிவித்தமையையும் தொடர்ந்து இந்த ஆரம்பக் கூட்டம் கூட்டப்பட்டது.

இலங்கையில் வடக்கு கிழக்கு மக்களுக்கு எந்த வழிகளிலும் உதவி செய்தலையே அடிப்டையாக கொண்டு இயங்குவது என்றும் புலம்பெயர் நாடுகளில் உள்ள ஆயிரக்கணக்கான ரெலோ உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து தமது முன்னாள் உறுப்பினரிடையே நிநி சேகரிப்புக்களை நடாத்தி, வடகிழக்கில் கஸ்ட நிலையில் உள்ள மக்களுக்கு சிறுகைத்தொழில் மற்றும் குடும்பத்திற்கு தேவையான உதவிகள் மேற்கொள்வது என்றும் இது பற்றிய மேலதிக முடிவுகளை பரந்த ரெலோ உறுப்பினர்களின் ஒன்றுகூடலில் முடிவு செய்வது என்றும் முடிவானது. இதன் தொடர்ச்சியாக அடுத்த ஒன்றுகூடலை நவம்பரில் ஏற்பாடு செய்ய முடிவெடுக்கப்பட்டது.

இன்று நாட்டில் இருக்கும் ரெலோவினரிடையே ஒரு ஒற்றுமையை வலியுறுத்தி தமிழ் மக்களின் அரசியலையும் வலுப்படுத்த வேண்டும் என்று ஒருசாரர் கருத்து வெளியிட்டனர். நாட்டிலுள்ள ரெலோவின் அரசியலில் புலம்பெயர் ரெலொ உறுப்பினர்கள் நேரடியாகத் தலையீடக்கூடாது என மறுசாரர் கருத்து வெளியிட்டனர். லண்டனில் ரெலோவிற்கு  உத்தியோகபூர்வ அலுவலகத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என முன்னையோரும், ரெலோ அலுவலகம் அல்ல தாயக மக்களின் உதவித் திட்டங்களை இணைப்பதற்கான அலுவலகம் ஒன்று அவசியம் என மறுசாராரும் கருத்துக்களைத் தெரிவித்தனர். உதவித் திட்டங்களை இணைப்பதற்கான அலுவலகம் வேண்டும் என்பவர்கள் ஒரு உதவி அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர். இந்த மாறுப்பட்ட கருத்துக்களில் எதை ஏற்றுக் கொள்வது என்பது விரைவில் கூட்டப்படவுள்ள ரெலோ உறுப்பினர்களின் பரந்த கூட்டத்திலேயே முடிவு செய்யப்படவுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 Comments

  • pandithar
    pandithar

    தங்கண்ணா முதல் சிறீ அண்ணா வரைக்கும் ரெலோவின் பாசறையை பாதுகாத்து வந்தனர். அந்த பாசறையை தொடர்ந்தும் பாதுகாக்க யார் முன்வந்தாலும் கை கொடுத்து வரவேற்கலாம். இன்று தளத்தில் சிறீ அண்ணாவின் கொள்கைகளை ஓரளவிற்கேனும் சுமந்து செல்லும் தோழர்கள் உள்ளார்கள். அவர்களை வழி நடத்தி செல்லும் தோழர் உதயராசா அவர்கள் இன்னமும் பல அனுபவங்களை பெற்று ஆற்றல் மிகு தலைமையை வழங்குவார் என்று நம்புவோம்.

    வாழ்த்துக்கள் ரெலோ தோழர்களே!….

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…இன்று தளத்தில் சிறீ அண்ணாவின் கொள்கைகளை ஓரளவிற்கேனும் சுமந்து செல்லும் தோழர்கள் உள்ளார்கள்….//

    நல்லது அந்த ‘ஓரளவுக்கேனும்’ என்பதில் எவை அடக்கம் எனச் சொல்லுங்கள் முன்னாளில் ரெலோவுடன் தொடர்புகள் வைத்திருந்தவன் என்கின்ற முறையில் அறிய ஆவலாயுள்ளேன்.
    நன்றி.

    Reply
  • BC
    BC

    இலங்கை மக்களுக்கு உதவி என்பது நல்ல விடயம். பாசறை என்று எல்லாம் பண்டிதர் பயப்படுத்துகிறார்.

    Reply
  • Aananth
    Aananth

    ரெலோவின் அடுத்த கூட்டத்தில் கலந்து கொள்ள விரும்பும் ரெலோ தோழர்கள், நண்பர்கள் மற்றும் உங்கள் கருத்துக்களை எதிர்வரும் பொதுக் கூட்டத்தில் முன்வைக்க விரும்புபவர்கள் எம்மிடம் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். LONDON Contacts: Sampanthan: 07956 518917, anjsaran@yahoo.co.uk– Pari: 07956 313181 – Ilanko: 07729 309250 – Jana: 07737 701543(Ex MP for Batticaloa)

    Reply
  • vanthiyadevan
    vanthiyadevan

    looks like selvam group back on track
    is the improvement for selvam group ? or affected people ?
    we can help but the help to whom?

    Reply
  • pandithar
    pandithar

    இன்று தளத்தில் சிலரால் கைவிடப்பட்டு நடுத்தெருவில் நின்றிருந்த ரெலோ தோழர்களை ஒரளவிற்கேனும் ஒன்று திரட்டி அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது சிறீ ரெலோ. இது தவிர பல விமர்சனங்களையும் தூற்றல்களையும் எதிர் கொண்டு சிறீ அண்ணாவின் ஞாபகத்தோடு அந்த அமைப்பை தொடர்ந்தும் பாதுகாத்து வருகின்றனர். இது தவிர பாராளுமன்ற உறுப்புரிமை பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பை விடவும் சிறீ ரெலோ மக்களின் பிரச்சஜனைகள் குறித்து முடிந்தளவு அக்கறை செலுத்தி வருகின்றது.

    Reply
  • gotapaya
    gotapaya

    ஆமா, இந்த சந்திப்பில் ரெலோ தாஸ் குறூப்பும் பங்கு பற்றியதா??? அவர்கள் சகோதர படுகொலைகளில் பாதிக்கப்படவில்லையா??? மற்றும் ரெலோவினுள் ஆரம்ப காலத்தில்நடந்த களையெடுப்பில் படுகொலை செய்யப்பட்ட ரமேஸ்/(சுதன்) குறுப் பங்கு பற்றவில்லையா??

    Reply
  • Sothilingam T
    Sothilingam T

    gotapaya நீங்கள் கேட்ட மூன்று கேள்விகளுக்கும் ‘ஆம்’ என்பதே பதில். எல்லோரும் பங்குபற்றினர்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    1)தளத்தில் – அப்படி ஒன்று இருக்கிறதா?
    2)சிலரால் – யார் அவர்கள்?
    3)நடுத்தெருவில் – எவ்வகையாக?
    4)ஒரளவிற்கேனும் – இதற்குத்தான் முதலில் விளக்கம் கேட்டேன்
    5)சிறீ ரெலொ – ஏன் சிறி ரெலொ (ஒற்றுமை கோருவோர் தமது இயக்கத்திலேயே புதிய குழுவுடன்)
    6)பல – பல என்றால் எவை எவை
    7)விமர்சனங்களையும் – விமர்சனங்கள் என்றால் என்ன? அவற்றுக்கு உங்கள் பதில் என்ன?
    8)தூற்றல்களையும் -??
    9)எதிர் கொண்டு – எவ்வாறு? பதில் அழிக்காமல் விட்டு, அல்லது இணையத்தில் Vague ஆக பதில் சொல்லி சிறீ அண்ணாவின் ஞாபகத்தோடு -??
    10)அந்த அமைப்பை – ஏன் அவ் அமைப்பு ? எந்த அமைப்பை?
    11)தொடர்ந்தும் – ஆஹா!
    12)பாதுகாத்து – யாரிடம் இருந்து?
    13)முடிந்தளவு – மீண்டும் vague
    14)அக்கறை – ??

    நீங்கள் எழுதிய பின்னூட்ட பதிலில் 85% சொற்களுக்கு பல அர்த்தங்கள் உண்டு இவற்றில் தெளிவாகச் சொல்லக்கூடிய சொற்களை வலிந்து தவிர்த்து பதில் எழுதி இருக்கிறீர்கள். இவ்வாறு Vauge ஆக பதில் சொல்லாமல் தெளிவாக எழுதினால் நல்லது!

    Reply
  • thurai
    thurai

    ஒன்று கூடல்கள் உலகமுழுவதும்தான் நடக்கின்றன. இதனால் சில சந்தேகங்கள் நீங்கவும், புதிய சிந்தனைகள் தமிழரிடையே தோன்றவும் வாய்ப்புகழுண்டு. கீரைகடைக்கும் எதிர்க்கடை வேண்டுமென்பார்கள். ஆனால் புலிகளின் கால்த்தில் புல்லுக்கடைக்குக் கூட எதிர்க்கடை
    வேண்டாமென்றார்கள்.

    அவர்களிற்கெல்லாம் இவ்வாறு தமிழர்கள் கூடுவதும் கலந்துரையாடுவதும் கசப்பான் விடயம்தான். ஏதோ துரோகிகளால் தங்களின் விடுதலைப் போராட்டம் தோல்வி அடைந்ததென்றே இன்றும் கூறுகின்றார்கள்.

    புலியின் குணம் தமிழரை அழிக்கும் குணமே காக்குக் குணமல்ல. அவர்களின் ஆதரவாளர்கழும் அதுபோலவே.– துரை

    Reply
  • sinthujan
    sinthujan

    உங்கள் முயற்சி வரவேற்கதக்கது, நியாயமானமுறையில் செய்யும் ஒவ்வொரு காரியத்துக்கும் என்னுடைய ஆதரவு இருக்கும். மாறாக சிலர் சுயலாபம் கருதி மீண்டும் பதவிமோகத்தில் மக்களை பகடைகாயாக முயற்சிப்பதை அனுபவிக்கமுடியாது. அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அறிகின்றோம். ஆகவே தயவு செய்து, செய்வன எதுவாயினும் சரிவர செய்வீர்கள் என்ற நம்பிக்கையில் நானும்.. ………….ரெலோவின் உறுப்பினன் sinthujan

    Reply
  • குஞ்சன்
    குஞ்சன்

    டெலோஇயக்க உறுப்பினர்கள் பாசிசகோழைபிரபாகரன் கொல்லப் பட்டபின், தாங்கள் உதவிகள் செய்வதற்கு முன்னை நாள், பின்னை நாள் உறுப்பினர்கள் சிலருடன் ( சந்தர்பத்துக்கு ஏற்ப டெலோவென வாழ்ந்தவர்களுடன் ) ஒன்றுசேர்ந்து செயல்பட போவதாக அறிந்தேன் ! மகிழ்ச்சி !

    (மக்களின்,போராளிகளின்)வாழ்வுக்காக ஒன்று சேர்ந்தானைத்து டெலோதோழர்களே உங்களிடம் புலிகளாலும்,இராணுவத்தாலும் கொல்லப்பட்ட அனைத்து டெலோ போராளிகளின் விபரம் உள்ளதா ? யாரையும் தவறவிடாமல், வெளியிடவும் !

    கூட்டு சேர்ந்தவர்களில், டெலோவைஅழிக்க புலிகளுடன் துணை நின்றவர்களும், இன்று டெலோ என கூறி,அரசாங்க ராணுவத் துடன் சேர்ந்து புலிகளின் முக்கிய தலைவர்களை, நபர்களை முள்ளுவேலிக்குள்ளிருந்து பல இலட்ச ரூபாய்களை பெற்று நாட்டைவிட்டு வெளியேற்றிய தலைவரும், ஏழை தமிழர்களை வெளிநாடு அனுப்புவதாககூறி, பலநாட்டுக்கு அனுப்பி ஏமாற்றி , எங்கும் செல்லமுடியாமல் தவிக்க விட்ட வரும், ( அதில் சிலர் அண்மையில் தாய்வானில் கைது செய்யப்பட்டவர்களும் , கனடாவுக்குள் நுழைந்த கப்பலில் சென்றவர்களும் அடங்குவர் )

    மேலும், பல தரமான டெலோவில் அக்கறைகொண்டு, அனைத்தையும் ஜீரணித்து வாழும் ஆதிகால கௌரவமான போராளிகள் பலர் உள்ளனர் ! அவர்களை / அவர்களிடம் ஒருவார்த்தை கூட உங்களது செயல்பாடுகள் சம்பந்தமாக கேட்கவில்லை என்பது வேதனை !

    மேலும், இங்குள்ள அனைவரும் தங்கள் பாட்டன் சொத்தில் வெளிநாடுகளில் யாரும் வாழவில்லை! அனைவரும் வசதியான தற்கு காரணமே எதோ ஒரு வகையில் மக்களை ஏமாற்றியே வாழ்கிறார்கள்/ வாழ்ந்தார்கள் என்பது, நிதர்சனமான உண்மை ! ( சாதாரண தொழில் செய்து சிறு இரு சக்கர வண்டியும் வாங்க முடியாது ) இப்படியான எண்ணங்கொண்ட உங்களால், உண்மையான மனசுத்தியுடன் மக்களுக்கு சேவை செய்யமுடியுமா ? திருடியகை திருடாதா ?அன்று டெலோஅழிவில் தவிக்கும்போது, மக்கள் காப்பாற்ற முன்வரவில்லை ! ( இப்படியான கொலை, கொள்ளை கோஷ்டிகளால், பாவம் கிழக்கு போராளிகள்தான் அழிந்தார்கள் ) அதே மக்களிடம் இன்றும் டெலோ, என்பவர்கள் யாரும்மதிப்புடன் செயல்படவில்லை! அதனால்,சென்ற தேர்தல் அனைவரையும் அறிவுடன் நேர்மை சுத்தியுடன் வாழவேண்டும் என்பதை உணர வைத்துள்ளது ! அதனையே அனைவரோடு, நானும் எதிர்பார்ப்பேன் ! மக்கள் வாழ வாழணுமே தவிர, மக்களால் நாம் வாழ கூடாது ! புலிகளின் பாணியில்
    ” சாவிலும் வாழ்வோம் ” இந்த நினைப்பே பேரழிவுக்கு அடிப் படையாகும் ! தவறுகள், தவறானவர்கள் வெளியேற்றப்பட்டு, மக்களின் சேவைநலன் தொடர்ந்திட வாழ்த்துவோம் !

    குஞ்சன் கனடா .

    Reply