லண்டனில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பணமோசடி செய்தவர் பிணையில் விடுதலை.

வெளிநாட்டில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாக மாணவர்களிடம் பணம் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படும் கணனி நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

லண்டனுக்க அனுப்பி தொழில் வாய்ப்பினைப் பெற்றுத்தருவதாகக் கூறி குறித்த நபர் மூன்று மாணவர்களிடம் ஐந்து இலட்ச ரூபா வீதம் பெற்றுள்ளார். அம்மாணவர்களிடம் போலிச் சான்றிதழ்களையும் அவர் வழங்கியுள்ளார். இந்த ஏமாற்று நடவடிக்கை தொடர்பாக இம்மூன்று மாணவர்களும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இம்முறைப்பாட்டையடுத்தே இவர் கைது செய்யப்பட்டார்.

இம்மோசடி குறித்த வழக்கினை விசாரணை செய்த யாழ். நீதவான் ஏ. ஏ. ஆனந்தராஜா  இது குறித்து விசாரணை செய்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டதுடன் குறித்த நபரை 75 ரூபா பெறுமதிக்கு மூன்று பேரின் சரீரப் பிணையில் செல்ல அனுமதித்து வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • Kumar
    Kumar

    யாழ்ப்பாணத்தில் லண்டன் ஆலயத்தின் நிதி உதவியுடன் இயங்கும் கணனிப்பயிற்சி நிலையத்தின் நிர்வாகி ஒருவரும் இத்தகைய செயலில் ஈடுபட்டு வந்ததாக யாழ்ப்பாணத்திலிருந்து எனது உறவினர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். அரைகுறைச் செய்தியில் விஸ்வா குறிப்பிட்டுள்ள கணனி நிறுவனம் அதுதானா என்று பார்க்கவும். தொடர்பு உர்ஜிதமானால் ஆலயம் இந்த ஏமாற்றுப் பெர்வழியையொட்டியும் தாம் வழங்கும் நிதி தொடர்பாகவும் கவனம் எடுக்க வேண்டியது சமூகக்கடமையாகும்.

    Reply