வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் 89 ஆயிரம் பெண்கள் தங்கள் கணவரை இழந்து விதவைகளாகியுள்ளதாக சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். அண்மையில் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கிழக்கில் 49 ஆயிரம் பெண்களும், வடக்கில் 40 ஆயிரம் பெண்களும் கணவரை இழந்துள்ளனர் என அவர் குறிப்பட்டுள்ளார்.
இதில் 25ஆயிரம் பெண்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இவ்வாறு கணவரை இழந்த பெண்களில் 12ஆயிரம் பேர் 40 வயதிற்கும் குறைந்தவர்கள், 8ஆயிரம் பேர் குறைந்த பட்சம் மூன்று குழந்தைகளுடன் உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.