வடமராட்சிக் கிழக்கில் கடற்றொழிலாளர்கள் மீன்பிடிப்பதற்கு நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை அனுமதி வழங்கப்பட்டதையடுத்து நேற்று புதன்கிழமை காலை வடமராட்சிக்கிழக்கின் மாமுனை, செம்பியன்பற்று, உடுத்துறை, வத்திராயன், ஆகிய கடற்பகுதிகளில் சுமார் 200 கடற்றொழிலாளர்கள் தங்கள் தொழில்களை ஆரம்பித்தனர்.
கடற்றொழிலாளர்கள் மாமுனையிலிருந்து அழியவளை வரை எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி தொழிலில் ஈடுபடலாம என பாதுகாப்புத்தரப்பினர் தெரிவித்துள்ளனர். நேற்று கடற்றொழிலாளர்கள் தொழிலில் ஈடுபடும் நிகழ்வை 551வது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி பிரிகேடியர் சுகத் பெரேரா ஆரம்பித்து வைத்தார்.
வடமாராட்சிக் கிழக்குப்பகுதிகளில் மக்கள் மீளக்குடியமர்த்தப்படும் நடவடிக்கைகள் நடைபெற்று வரும் நிலையில், இது வரை 600 கடற்றொழிலாளர்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.