கண்டி பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குச் சென்ற உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி திசாநாயக்கவை முற்றுகையிட்டு தடுத்துவைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட நான்கு மாணவர்களை இரு வாரகாலம் விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி நீதிமன்ற நீதவான் நேற்று வியாழக் கிழமை உத்தரவிட்டுள்ளார்.
இரு மாதங்களுக்கு முன்பு அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு சென்ற பொது. அவரை இம்மாணவர்கள் முற்றுகையிட்டு சில நிமிடங்கள் தடுத்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாணவர்கள் நேற்று கண்டி நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது. இவர்களை இரு வாரங்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். புகிடிவதைச் சட்டத்தின் கீழ் இம்மாணவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.