எதிர்வரும் டிசெம்பர் மாதம் 26ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள தேசிய பாதுகாப்புதின நிகழ்வில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்து கொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்புதின நிகழ்வு முதன்முறையாக யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த 2004ம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தை நினைவு கூர்ந்து தேசிய பாதுகாப்பு தினம் அரசாங்கத்தினால் பிரகடனம் செய்யப்பட்டது. இது இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்றது.
இந்நிகழ்வகளை ஒழுங்குபடுத்தும் ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காக கடந்த வாரம் அனர்த்தமுகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.