இலங்கை இந்திய நட்புறவுச் சங்கத்தினால் யாழ். மாநகரசபைக்கு வழங்கபபட்டுள்ள பஸ்களை நேற்று திங்கள்கிழமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மாநகர சபையின் சாரதிகளிடம் கையளித்தார்.
இந்த பஸ்கள் ஒவ்வொன்றும் 17 இலட்சரூபா பெறுமதியானவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வழங்கப்பட்டுள்ள ஐந்து பஸ்கள் இலங்கைப் போக்குரத்துச் சபையின் பஸ்கள் சேவையிலீடுபடாத யாழ். நகரத்தை அண்டிய பகுதிகளில் சேவையில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக யாழ். நாவலர் வீதி, அரியாலை, கோவில் வீதி. போன்ற வேறு பஸ்கள் போக்குவரத்தில் ஈடுபடாத சிறு பாதைகள் ஊடாக இந்த பஸ்கள் பாடசாலை மாணவர்கள் பொது மக்களின் நன்மை கருதி சேவையிலீடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kumar
பஸ். வந்தாச்சு. இனி டீசலுக்கு யார் காசு குடுப்பினம் என்று மாநகரசபை வாய்பிளந்து பாத்திருக்கும். உருப்படியாக இந்த பஸ்களை சேவையில் ஈடுபடுத்தப்பட்ட செய்தியையும் தேசம் அறியத்தந்தால் சந்தோஷம்.
மாயா
தேசத்தில் , ஒரு அன்பர் யாழில் தகரங்கள் ஓடுகின்றன, பஸ்கள் இல்லையென்று குறைபட்டு எழுதியிருந்தார். . பரவாயில்லை , முதல்கட்டமாக 5 பஸ்கள் வந்திருக்கிறது. மகிழ்வோம். தொடர்ந்தும் வந்து குவியட்டும். இனி இயற்கை மாசுபடுகிறது என எழுதாமல் இருந்தால் இன்னும் மகிழ்ச்சி.