நீண்டகாலமாக தென்னிலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகளை பிணையிலாவது விடுதலை செய்யுமாறு அவர்களின் பெற்றோர் உறவினர்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த கால யுத்த சூழ்நிலைகளின் போது பல்வேறு சந்தாப்பங்களில் நாட்டின் பல பாகங்களிலும் வைத்து பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் இளைஞர். யுவதிகளின் விடுதலை குறித்து பல தடவைகள் அரசாங்கத்துடன் தொடர்பு கொண்ட போதும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பது இக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ளவர்களில் பலர் குடும்பத் தலைவர்களாகவிருப்பதால் சம்பத்தப்பட்ட குடும்பங்கள் மிகவும் வறுமை நிலையில வாடுகின்றமையும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பிணையிலாவது இவர்களை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் கைதிகளின் பெற்றோர். உறவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.