* எந்த ஒரு நபரும் இரண்டு தடவைகள் மட்டுமே பதவி ஜனாதிபதியாக பதவி வகிக்கலாம் என்பதை நீக்குதல்
* ஜனாதிபதி மூன்று மாதத்துக்கு ஒரு முறை பாராளுமன்றத்துக்கு வரும் வகையில் வழி செய்தல்
* அரசியலமைப்புச் சபைக்குப் பதிலாக “பாராளுமன்ற சபை” ஒன்றை உருவாக்குதலும் அதன் செயற்பாடுகளை இலகுவாக்குவதும்
* அமைச்சரவை மற்றும் அரச சேவைகள் ஆணைக்குழு என்பவற்றின் அதிகாரங்கள் செயற்பாடுகள், பொறுப்புக்கள் மீளமைக்கப்பட்டு அதிலுள்ள நடைமுறைச் சிக்கல்கள் களையப்படும்.
* பொலிஸ் ஆணைக்குழுவுக்கு பதிலாக பொலிஸ் மா அதிபர் உட்பட பொலிஸார் ‘அரச சேவைகள்’ என்ற கட்டமைப்புக்குள் கொண்டு வரப்படுவர்.
* தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரங்கள் மற்றும் செயற்பாடுகள் மீளமைக்கப்படும்.
பல்லி
//* எந்த ஒரு நபரும் இரண்டு தடவைகள் மட்டுமே பதவி ஜனாதிபதியாக பதவி வகிக்கலாம் என்பதை நீக்குதல்//
இதுக்காகதான் இந்த வாக்கெடுப்போ; இது வாக்கெடுப்பல்ல பதவி எடுப்பு என சொல்வதுவே சரி;
தமிழ்வாதம்
மியான்மாரில் இராணுவ ஆட்சியின் மூலம் சீனாவின் உட்புகுதல், வெற்றி கொள்ளல் என்பன இலங்கையிலும் சர்வாதிகார ஆட்சி மூலமே சீனா, தான் சாதிக்கலாம் என்ற கொள்கையை நடைமுறைப்படுத்துகிறது.
இந்தியாவின் இயலாமையும், இளிச்சவாய்த்தனமும், மீண்டும் ஒரு இரத்தக்களரியை ஏற்படுத்தப் போகிறது. அது அடுத்த முனையில் நடைபெறுவது தவிர்க்க முடியாதது.
அழிவுக்கு முன்னான வடக்கில் தோன்றிய அறிகுறிகள், தெற்கில் தென்படுகின்றன.
அமெரிக்காவை நம்பி ஏமாந்த இழப்பை விட, சீனாவை நம்பிய இழப்பு தென்கடலில் பாரிய அமுக்கத்தை ஏற்படுத்தும்.
கருணா
சீனா இந்தியா அமரிக்கா இரத்தம் தென்கடல் வட கடல் இளிச்ச்சவாய் 18வது திருத்தச்சட்டமூலம்! அட அட அட..புல்லரிக்குது
pandithar
இனி யாரும் மகிந்த ஆட்சியை குடும்ப ஆட்சி என்று சொல்லவும் முடியுமோ?…. அப்படி யாரும் சொன்னால் அவர்களோடு தத்துவ சண்டைக்கு தயார்…..
pandithar
பல்லி….
பதவிக்கு யார்தான் ஆசைப்பட மாட்டார்கள்?….