ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து விலகி அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட 6 பாராளுமன்ற உறுப்பினர்களையும் கட்சியில் இருந்து இடைநிறுத்த கட்சி தீர்மானித்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுதவிர அரசியலமைப்பு சீர்திருத்ததிற்கு ஆதரவாக வாக்களிப்பவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சியின் செயற்குழு கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உபேக்சா சுவர்ணமாலி, நிமல் விஜேசிங்க, லக்ஷ்மன் செனவிரட்ன, அப்துல் காதர், மனுஷ நாணயக்கார ஏர்ல் குணசேகர ஆகிய அறுவரையுமே இடைநிறுத்த ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.