நாளை மறுதினம் 8ஆம் திகதி அரசாங்கம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ள 18வது அரசமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிப்பதா ஆதரவளிக்காமல் விடுவதா என்பது குறித்து தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் இன்று கொழும்பில் கூடி ஆராய்ந்து வருகின்றனர். இவ்விடயம் தொடர்பாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று கூடி ஆராய்ந்து முடிவொன்றை எடுக்கவுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் நேற்றைய தினம் தெரிவித்திருந்தார்.
இதே வேளை, அரசாங்கம் 8ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ள 18வது அரசமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கும், ஜே.வி.பி இற்கும் அரசாங்கம் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது. பிரதமர் டி.எம். ஜயரட்ன இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
அரசமைப்புத் திருத்தச்சட்டத்தை நாடாளுமன்றில் சமர்பிக்கவுள்ள 8ஆம் திகதியை கறுப்பு தினமாக பிரகடனப்படுத்தி கொழும்பில் அதற்கெதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளதாக ஐக்கியதேசியக் கட்சியின் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளமயும் இங்கு குறிப்பிடத்தக்கது.