தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினர் வி தர்மலிங்கம் அவர்களின் 25வது நினைவு தின நிகழ்வுகள் யாழ். கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அவரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 நடைபெற்றது.
தர்மலிங்கமும் சக பாராளுமன்ற உறுப்பினருமான ஆலாலசுந்தரமும் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) வினால் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களது படுகொலைகளுக்கு முன்னரும் பின்னரும் தமிழ் விடுதலை அமைப்புகள் அரசியல் படுகொலைகளை ஒரு அரசியலாகவே முன்னெடுத்தனர்.
தமிழரசுக் கட்சி (தமிழர் விடுதலைக் கூட்டணி) அல்பிரட் துரையப்பாவுடன் பிள்ளையார் சுழியிட்டு ஆரம்பித்து வைத்த அரசியல் படுகொலைக் கலாச்சாரம் அவர்களையே பலியெடுக்க முற்பட்டபோது அவர்களுக்குப் பிறந்த ஞானம் காலம் கடந்ததாகி விட்டது. இக்கலாச்சாரத்திற்கு வித்திட்ட இன்றைய அரசியல் தலைவர்களான இரா சம்பந்தன் மாவை சேனாதிராஜா ஆகியோர் இதுவரை தமது அரசியல் தவறுகளை ஏற்றுக் கொள்ளவும் இல்லை. அதற்காக வருந்தவும் இல்லை.
பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் ஆலாலசுந்தரம் ஆகியோரை படுகொலை செய்த தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவராக இருக்கின்ற செல்வம் அடைக்கலநாதன் இது தொடர்பாக மெளனமாகவே உள்ளார். இவர்களது படுகொலைகள் மட்டுமல்ல தமிழீழ விடுதலை இயக்கத்தினுள் இடம்பெற்ற உட்படுகொலைகள் அவர்களால் படுகொலை செய்யப்பட்ட ஏனைய இயக்கப் போராளிகள் பொது மக்கள் என இக்கொலைப் பட்டியலும் நீளமானது. இவை தொடர்பாக அவ்வமைப்பிற்கு தலைமை தாங்கும் ஜனநாயக வழிக்குத் திரும்பிய செல்வம் அடைக்கலநாதனுக்கும் தனது கடந்த காலம் பற்றிய பொறுப்புணர்வு உண்டு.
அல்பிரட் துரையப்பாவுடன் ஆரம்பமான இவ்வாறான அரசியல் பழிவாங்கல்கள் அதனை முன்னின்று நடாத்திய வே பிரபாகரனின் படுகொலையில் முடிவடைந்துள்ளது. வே பிரபாகரனின் படுகொலைக்குப் பின்னான 15 மாதங்களில் குறிப்பிடத்தக்கதான அரசியல் படுகொலைகள் நிகழவில்லை. இருப்பினும் இப்படுகொலை அரசியல் ஏற்படுத்திய அச்சம் இன்னமும் மக்கள் மனங்களில் இன்னமும் ஆறாத வடுவாக உள்ளது.
அமரர் வி தர்மலிங்கத்தின் நினைவு நிகழ்வு கௌரிகாந்தன் தலைமையில் மெளன அஞ்சலியுடன் ஆரம்பமானது. மலராஞ்சலி நிகழ்வும் நடைபெற்றது. புளொட் தலைவரும் அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் புதல்வருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழரசு கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் குலநாயகம், முன்னாள் தபாலதிபர் கணேசவேல், முன்னாள் கோட்டக்கல்வி அதிகாரி தற்பரானந்தன், முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வை பாலச்சந்திரன், வவுனியா நகரசபை எதிர்க்கட்சித் தலைவர் ஜி ரி லிங்கநாதன், வவுனியா நகரசபை உறுப்பினர்கள் சுரேந்திரன், குமாரசாமி மற்றும் பல முக்கியஸ்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இலங்கையின் இனவாதக் கட்சிகளாகக் கொள்ளப்படும் ஜேவிபி மற்றும் ஜாதி ஹெல உறுமய ஆகிய கட்சிகள் பெயருக்காகவேனும் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக மன்னிப்புக் கோரியுள்ளன. ஆனால் தமிழரசுக் கட்சியோ தமிழர் விடுதலை இயக்கமோ இதுவரை தங்கள் அரசியல் தவறுகளுக்காக தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்கவில்லை. தந்தையைப் பலிகொடுத்த தனயனின் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) இதுவரை தங்கள் அமைப்பு மேற்கொண்ட அரசியல் படுகொலைகளுக்கு மன்னிப்புக் கோரவில்லை.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி ஆனந்தசங்கரி தேசம் சஞ்சிகைக்கு வழங்கிய நேர்காணலில் அல்பிரட் துரையப்பாவின் படுகொலையைத் தூண்டியதற்காகவும் அவரது இறுதிக் கிரியைகளில் தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளாததும் தவறான முன்னுதாரணமாக அமைந்துவிட்டது என்று தனது மனவருத்தத்தை வெளிப்படுத்தி இருந்தார். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் (ஈபிஆர்எல்எப்) தங்கள் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் படுகொலைக்களுக்காக பகிரங்கமாகவே மக்களிடம் மன்னிப்புக் கோரியிருந்தனர்.
தங்கள் தவறுகளுக்காக மன்னிப்புக் கேட்பதன் மூலம் ஏற்கனவே விடப்பட்ட தவறுகளை திருத்தவோ மாற்றி அமைக்கவோ அல்லது இழக்கப்பட்ட உயிர்களை மீளளிக்கவோ முடியாது. ஆனால் எதிர்காலத்தில் அவ்வாறான தவறுகள் விடப்படமாட்டாது என்ற நம்பிக்கையைப் பெறமுடியும். பாதிக்கப்பட்டவர்களுடன் மீளுறவை ஏற்படுத்தவும் வழியேற்படும்.
ஆனால் தங்கள் தவறுகளை ஏற்றுக்கொள்ளாமல் தொடர்ந்தும் தங்கள் அரசியலை நியாயப்படுத்துவதன் மூலம் எதிர்காலத்திலும் இவ்வாறான தவறுகளுக்கு இவர்கள் இடமளிப்பார்கள் என்பதும் அதனையும் அவர்கள் நியாயப்படுத்துவார்கள் என்றே கொள்ளவேண்டி உள்ளது.
தமிழ் அரசியல் தலைமைகள் முதலில் தங்கள் அரசியல் தவறுகளை தமிழ் மக்கள் முன் ஒப்புக்கொள்ளவும் அவ்வாறான தவறுகள் இனி இடம்பெறமாட்டாது என்ற உறுதிமொழியை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டும். அவ்வாறான அரசியல் பொறுப்புணர்வை தமிழ் அரசியல் தலைமைகள் உருவாக்கினால் மட்டுமே தமிழ் மக்கள் இலங்கை அரசை அதன் தவறுகளுக்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதை வலியுறுத்த முடியும். இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் தமிழ் மக்களின் எதிரியாகவே கருதப்பட்டு வரும் எதிரியாகவே உள்ள இலங்கை அரசிடம் தமிழ் மக்கள் நியாயம் கேட்பதற்கு உள்ள உரிமையைக் கூட தமிழ் தலைமைகள் தமிழ் மக்களுக்கு வழங்கவில்லை. அதனை வழங்கவும் தயாரில்லை.
ஆகவே தமிழ் தலைமைகள் தமிழ் மக்களிடையே உண்மையையும் மீளுறவையும் ஏற்படுத்தும் சுயமுயற்சியில் உடனடியாக இறங்க வேண்டும். கடந்த 30 ஆண்டுகால போராட்டத்தில் விடுதலை அமைப்புகளாலும் இலங்கை அரசபடைகளாலும் கொல்லப்பட்ட மற்றும் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் பெயர் விபரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். ஆண்டுதோறும் இவர்களை நினைவுகூருவதற்கான நினைவுநாள் ஒன்று அறிவிக்கப்பட வேண்டும். கடந்த காலம் பற்றிய உண்மைகளை குழிதோண்டிப் புதைப்பதனால் தமிழ் மக்கள் மத்தியில் மீளுறவை ஏற்படுத்த முடியாது. உண்மைகளை வெளிக்கொணர்ந்து தவறுகளை ஏற்றுக்கொண்டு மட்டுமே மீளுறவை ஏற்படுத்த முடியும்.
proffessor
1. ஆலாலசுந்தரம் தர்மலிங்கமும் கொலைக்கு மன்னிப்புக்கோர வேண்டியவர் இப்போதய காலத்தில் செல்வம் என்பது உண்மை. அதேபோல் சிறிடெலோவும் மன்னிப்புக்கோரலாம். சிறியண்ணாவுக்கு வருடம் தோறும் விழா எடுப்பவர்களும் மன்னிப்புக்கோரலாம்.
2.அண்ணர் சித்தார்த்தன் தமது புளொட் அமைப்பின் கொலைகளுக்கு மன்னிப்பு கோரவேண்டியும் உள்ளது. இதில் தலைவர் முகுந்தனுக்கும்; பின்னர் மாணிக்கதாசன் கொலைக்கும் சித்தார்த்தன் பொறுப்பு கூறி மன்னிப்புகோர வேண்டும். இறுதியாக தமது முன்னாள் தோழர் சிவராம் கொலைக்கும் சேர்த்து மன்னிப்புக்கோராமல் மேடையில் ஏறி முழங்குகிறார் சித்தார்த்தன்.
மாயா
//அண்ணர் சித்தார்த்தன் தமது புளொட் அமைப்பின் கொலைகளுக்கு மன்னிப்பு கோரவேண்டியும் உள்ளது. இதில் தலைவர் முகுந்தனுக்கும்; பின்னர் மாணிக்கதாசன் கொலைக்கும் சித்தார்த்தன் பொறுப்பு கூறி மன்னிப்புகோர வேண்டும். இறுதியாக தமது முன்னாள் தோழர் சிவராம் கொலைக்கும் சேர்த்து மன்னிப்புக்கோராமல் மேடையில் ஏறி முழங்குகிறார் சித்தார்த்தன்.//
அண்ணர் சித்தார்த்தன் மறந்துட்டார். நினைவுக்கு கொண்டு வந்ததற்கு நன்றி proffessor.
Ajith
Mr Jeyapalan purposely avoided Douglas Devanada’s EPDP’s murders in association with Rajpakse brothers SLFP. He never mentioned about Rajpakse’s murders of number of Sinhala and Tamil politicians, journalists and civilians. Can he explain why they should not stop or apologise to the public.
Abdul
//இறுதியாக தமது முன்னாள் தோழர் சிவராம் கொலைக்கும் சேர்த்து மன்னிப்புக்கோராமல் மேடையில் ஏறி முழங்குகிறார் சித்தார்த்தன்.// புரொபஸர்
யார் தராக்கி சிவராமைப் பற்றியா சொல்கிறீர்கள்? அதற்கு ஏன் சித்தார்த்தன் மன்னிப்பு கேட்க வேண்டும்?? (என்னடா ஒரு முஸ்லீமிற்கு இது பற்றி என்ன அக்கறை என்று தயவு செய்து எண்ண வேண்டாம்) இக்கொலை தொடர்பாக எனக்குள்ள சந்தேகமெல்லாம் வேறாக உள்ளது. அதற்குக் காரணம் நான் சிவராமுடன் பெற்றுக் கொண்ட ஒரு அனுபவம். நேரம் வரும்போது தேசத்தினூடாக பகிர்ந்து கொள்வேன்.
பல்லி
அப்துல் இதில் சந்தேகம் எதற்கு?? சிவராமை கொன்றது புளொட் அமைப்பினரே என்பதில் யாருக்கும் சந்தேகம் தேவையில்லை; அதேபோல் மாணிக்கம்தாசனை கொன்றதும் புளொட் அமைப்பினரே;
இதில் யாருக்காவது சந்தேகம் இருப்பின் இன்றய புளொட்டின் ராணுவ பொறுப்பாளர் (சண்டியன்) ஆர் ஆர் என்பவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்;
// நான் சிவராமுடன் பெற்றுக் கொண்ட ஒரு அனுபவம்.//
இது நிறையவே எமக்கும் இருக்கு…..
சித்தார்த்தனுக்கும் தர்மலிங்கத்தார்க்கும் கூட ஒரு ரகசியம் இருந்ததாம் அதை இன்றுவரை தலைவர் காப்பாற்றுகிறாராம்; சித்தார்த்தர் புளொட்டில் இனைந்த பின் தர்மலிங்கத்தார் பற்றிய பேச்சே இல்லையே;
தகவல்
”தமிழ் மக்கள் இன்றுவரை தாங்கி வந்துள்ள துயரங்களுக்கும், அவலங்களுக்குமான பொறுப்பை வேலுப்பிள்ளை பிரபாகரன் மீது மட்டும் சுமத்தி விட்டு சம்பந்தப்பட்ட ஏனைய தமிழ் தலைமைகள் அதற்கான பொறுப்பில் இருந்து விலகிவிட முடியாது.
சம்பந்தப்பட்ட அனைத்து தமிழ்த் தலைமைகளும் அதற்றான தார்மீகப்பொறுப்பை ஏற்கவேண்டும். ஆயுதப்போராட்டத்தை ஆரம்பங்களில் வழி நடத்திச் சென்றவர்களில் நானும் ஒருவன் என்ற வகையில் தமிழ் மக்கள் சுமந்து வந்த அவலங்களுக்கான தார்மீகப்பொறுப்பை நானும் பகிரங்கமாகவே ஏற்றுக்கொள்கின்றேன்.”
கற்றுக்கொண்ட அனுபவங்கள் புதிய வரலாற்றை பெற்றுத்தரும்! : அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
Varathan
சிவராமை கொன்றது புளொட் அமைப்பினரே என்பதில் யாருக்கும் சந்தேகம் தேவையில்லை. பல்லி on September 6, 2010 9:42 pm
I don’t have first hand knowledge about this murder. But I think Taraki was killed by Millitary Intelligence. Several ex-millitants work with MI. So it is hard to exclude the involvement of govt. in this incident. Other fact is nobody can operate white van in Colombo without the support of Mahinda regime. Indeed these ex-millitants were used by govt to execute thier mission.
padamman
இப்படி பாத்தால் பல்லியும் மன்னிப்பு கேட்கவேண்டும் இவரும் அந்த அமைப்பில் இருந்தவர் தான் எல்லோரும் எல்லோரிடமும் மன்னிப்பு கேட்கவேண்டும் இப்படியே மன்னிப்பு கேட்டுகொன்றிருந்தால் பிரச்சனைகள் எல்லாம் முடிந்துவிடும் ஜெயபாலனும் மன்னிப்பு கேட்கவேண்டும் நானும் மன்னிப்பு கேட்டுகொள்கின்றேன்.
proffessor
தமது தலைவர் முகுந்தனை மாணிக்கதாசன் ஆட்களை வைத்து கொலை செய்தபோது மௌனமாக இருந்தவர் சித்தார்த்தன். பின்னர் புலிகளை பாவித்து புளொட் உறுப்பினர்களை வைத்து மாணிக்கதாசனை கொன்று புளொட் இயக்கத்தின் தலைமையை எடுத்துக்கொண்டு மௌனமாகிக் கொண்டவர் சித்தார்த்தன். மாணிக்கதாசனை கொலை செய்ய தான் பாவித்த புளொட் உறுப்பினர்களை கைவிட்டவர் சித்தார்த்தன். அதில் ஒருவர் மாணிக்கதாசனின் ஆதரவாளர்களால் கொலை செய்யப்பட்டார். ஒருவர் அமெரிக்காவுக்கும் இன்னொருவர் கனடாவுக்கும் தப்பியோடினர். ஒருவர் மட்டும் புலிகளுடன் இணைந்துகொண்டார்.
இன்று புலிகளுடன் இணைந்துகொண்டவர் புலிகளின் அழிவுடன் சிறிலங்கா அரசிடம் பிடிபட்டுள்ளார்.
அடுத்தது சிவராம் கொலையை செய்த பவானும் இன்று சிறிலங்காவின் பிடியில் உள்ளார்.
இந்த இரண்டு பிடிகளையும் வைத்து சிறிலங்கா அரசு சித்தார்த்தரை சிப்பிலியாட்டுக்கிறது. புளொட் உறுப்பினர்களுக்கு வருடக்கணக்கான காலம் கொடுத்து வந்த மாதாந்த நிதியை நிறுத்திவிட்டது. இதனால் வாழ்கைபாட்டுக்கு கொள்ளையடிக்கிறார்கள். இதை காரணமாக வைத்துதான் அண்மைக்காலத்தில் சித்தார்த்தன் இப்படி சொன்னார். ‘புலிகள் இயக்கத்தில் இருந்தவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் உதவி கொடுப்பது போன்று ஏனைய இயக்கத்தவர்களில் இருந்த ஜனநாயக வழிக்கு திரும்பியவர்களுக்கும் அரசு உதவவேண்டும்’ என நாசூக்காக சொன்னதை நினைவில் நிறுத்தி பார்க்கவும்.
மாயா
Vijaya குமாரதுங்கவின் கொலைக்கும் புளொட்டுக்கும் தொடர்புண்டு. Vijaவின் பாதுகாப்பில் இருந்தவர்கள் புளொட் இயக்கத்தினர். Vijaவின் ஒரு குழுவுக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்தது போல, புளொட் JVPயினருக்கும் பயிற்சி கொடுத்துள்ளனர். JVPயினர் இந்தியாவிலே புளொட்டிடம் பயிற்சி பெற வந்தனர். JVPயினர் Vijaya குமாரதுங்கவின் கட்சி இரண்டாவது இடத்துக்கு வருவதை தாங்காமல் படுகொலை செய்தனர். அதற்கு உடந்தையாக புளொட் இருந்துள்ளது. உமாவை பல இடங்களில் காப்பாற்றியது Vija என்பதை அண்மையில் அறிந்தேன். அதே நன்றிக்காக Vijayaவைக் கொல்ல புளொட் தரப்பினரால் கொடுக்கப்பட்ட பாதுகாப்பு தளர்த்தப்பட்டது? இந்த பாதுகாப்பு தளர்த்தல் Vijayaவின் உயிருக்கு உலை வைத்தது. எந்த ஆயுதக் குழுவையும் பொது மக்கள் நம்பலாகாது. இவர்கள் என்னதான் நடித்தாலும், உள்ளே இருப்பது மிருகம்தான். அது எல்லா இயக்கங்களுக்கும் பொதுவானது. இதை இன்னும் உணராதவன் அறிவில்லாதவன்.
santhanam
புலிகளின் பணத்தால் தான் மாணிக்கதாசன் முதல் தராகி வரை, டக்ளஸ்சின் 400 தோழர்கள் கொள்ளப்பட்டனர். இவர்கள் அனவரையும் இராணுவகட்டுப்பாட்டு பிரதேசங்களில் புலிகளால் தங்கள் நலன்சார்ந்து பாவித்துவிட்டு தீர்த்துகட்டப்பட்டவர்கள். பல்லி அவர்கள்மீது பழி போடுகிறார்.
தமிழ்வாதம்
கொலை செய்ததெல்லாம் புலிகளும், அவர்களின் பணமும்; கொலை செய்யப்பட்டவர்கள் எல்லாம் அப்பாவிகள், மற்றும் தலைவர்கள்.
அதுசரி எந்த நாட்டிலாவது ‘அரசியல் தவறுகள், படுகொலை அரசியலு’க்கு மன்னிப்பு கேட்பதன் மூலம் மற்ற விடயங்களைச் சரிக்கட்டலாமா?
பிறகு வந்து வேறு யார்யாரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தனிப்பட்ட பட்டியல் எதாவது இருக்கிறதா? அட இதுதான் ‘கொம்சம்'(பாவ மன்னிப்பு) பண்ணுகிற முறையோ?
palli
//இப்படி பாத்தால் பல்லியும் மன்னிப்பு கேட்கவேண்டும் இவரும் அந்த அமைப்பில் இருந்தவர் தான்// paddamnan
அப்படி ஒரு நிலையில் பல்லி இருந்தால் பட்டம்மான் சொல்லும் வரை மன்னிப்புகேக்க காத்திருந்திருக்க மாட்டேன், உங்கள் ஊகம் தவறு;
பல்லி கழகத்தை பற்றி எழுதுவதால் இப்படி ஒரு எண்ணம் சிலருக்கு வந்திருக்கலாம்; இல்லை நான் புலி பற்றிகூட பலதகவல் சொல்லியுள்ளேன், ஆகவே மன்னிப்பு பலதடவை தனிமனிதனாய் பல்லி விட்டிருப்பின்(பின்னோட்டத்தில்) கேட்டுள்ளேன்;
//எல்லோரிடமும் மன்னிப்பு கேட்கவேண்டும் //
இது தவறு; பாதிக்கபட்டவர்களிடம் பாதகம் செய்தவர்கள் செய்ய தூண்டியவர்கள் கேட்டாலே போதும் பல உன்மைகள் வரும்; அதுவே இனிவரும் காலங்களில் சதிராட முயல்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும்:
//தமது தலைவர் முகுந்தனை மாணிக்கதாசன் ஆட்களை வைத்து கொலை செய்தபோது மௌனமாக இருந்தவர் சித்தார்த்தன்.// proffessor
இது ஒரு சரியான தகவல் அல்ல, முகுந்தனை கொல்லும் அளவுக்கு புத்திசாலியல்ல மாணிக்கதாசன்; அதையும் விட முகுந்தனை கொன்றவரில்
ஒருவரை கொன்றதாலேயே தாசன் என்பவர் கொலைக்கு உள்படுத்தபட்டார் எனவும் ஒருசெய்தி உண்டு;
//இந்த இரண்டு பிடிகளையும் வைத்து சிறிலங்கா அரசு சித்தார்த்தரை சிப்பிலியாட்டுக்கிறது. //proffessor
சுவிஸ் புளொட் பொறுப்பாளரே சித்தார்த்தரை இருத்தி எழுப்பும் போது அரசு செய்வது ஒரு தகவலா??
// எந்த ஆயுதக் குழுவையும் பொது மக்கள் நம்பலாகாது. இவர்கள் என்னதான் நடித்தாலும், உள்ளே இருப்பது மிருகம்தான். //maya
சரியான தகவல் ஆனால் காலம் கடந்த தகவல்;
//புலிகளின் பணத்தால் தான் மாணிக்கதாசன் முதல் தராகி வரை, டக்ளஸ்சின் 400 தோழர்கள் கொள்ளப்பட்டனர்//santhanam
தாசனின் கொலைக்கு புலிகள் பணம் செலவானது என்பதில் சந்தேகம் இல்லை;: ஆனால் தராகி கொலை அப்படியல்ல அது வருடகணக்கான பகமையும் அத்துடன் புளொட்டின் பல தலமைகள் கருனாவால் கொல்ல பட்டதில் தராக்கியின் பங்கும் இருந்திருக்கிறது என்பதை அம்மான் கக்கியதாலும் புளொட் இந்த நிலைக்கு போனதுக்கு முக்கியமான நபர் தராக்கி என்பதாலும் கலப்படமில்லாமல் ஆர் ஆர் என்பவரால் தண்டனை நிறைவேற்ற பட்டதாம்; (தகவல் கழகம் நன்றி)
//பல்லி அவர்கள்மீது பழி போடுகிறார்.//santhanam
பல்லி போடுவது பழியல்ல ஒரு தகவல்தான்(புள்ளி) ஆனால் பின்னால் வருகிறது பாருங்கள் (கோலம் போல்) உன்மைகள். கவனிக்கவும் மாயாவின் பின்னோட்டத்தை,
// தமிழ் மக்கள் சுமந்து வந்த அவலங்களுக்கான தார்மீகப்பொறுப்பை நானும் பகிரங்கமாகவே ஏற்றுக்கொள்கின்றேன்.”//
இங்கேதான் டக்ளஸ் தோழராகிறார்;
சுகுணகுமார்
தயவு செய்து முடிந்தால் முழுவதையும் பார்க்கவும்! அரசியல் பேதங்களிற்கு அப்பால் ஒரு விதவையின் அனுபவமாக இதை பார்க்கையில் தற்போது இலங்கையில் உள்ள தமிழ் சிங்கள முஸ்லீம் விதவைகளின் வேதனைகள் நமக்கு புரியும்!
http://www.bbc.co.uk/worldservice/documentaries/2010/09/100901_world_stories_2.shtml?bw=bb&mp=wm&bbcws=1&news=1
nantha
புளட் இயக்கம் என்ன பண்ணுகிறதோ இல்லையோ, கொலைகள் பண்ணுவதில் பாண்டித்யம் பெற்றவர்கள். அவர்கள் பாஷையில் “உட்கட்சிப் போராட்டம்”.
சித்தார்த்தனின் வருகை இன்றும் மர்மமாகவே உள்ளது. இவர் எந்தக் காலத்திலும் தனது தந்தையை கொன்றவர்களைப் பற்றி கதைத்தது கிடையாது.
பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையின் செத்த வீட்டுக்கு அஞ்சலி செலுத்த சித்தார்த்தன் போனது எதற்காக என்று தெரியவில்லை. வேலுப்பிள்ளை புளட் உறுப்பினரோ அல்லது ஆதரவாளரோ அல்ல. ஆயினும் பிரபாகரனால் “நன்மை” அடைந்த சித்தார்த்தனுக்கு நன்றிகடன் செலுத்துவதைத் தவிர வேறு வழியில்லை!
புலிகள் குண்டு வைக்காத இரண்டு பேர் உண்டு.
1. சித்தார்த்தன்
2. ரனில் விக்ரமசிங்க.
தமிழ்வாதம்
தலைமைகளின் கொலைகளுக்கும், அவர்தம் விதவைகளின் கண்ணீருக்கும் கவலைப்படுவதை விடுத்து, இவர்களை நம்பி, மோசம் போனவர்களின் கண்ணீருக்கும், இரத்தத்திற்கும் நியாயம் தேடுவோம்.
மாயா
//தமது தலைவர் முகுந்தனை மாணிக்கதாசன் ஆட்களை வைத்து கொலை செய்தபோது மௌனமாக இருந்தவர் சித்தார்த்தன்.// proffessor
இது ஒரு சரியான தகவல் அல்ல, முகுந்தனை கொல்லும் அளவுக்கு புத்திசாலியல்ல மாணிக்கதாசன்; அதையும் விட முகுந்தனை கொன்றவரில்
ஒருவரை கொன்றதாலேயே தாசன் என்பவர் கொலைக்கு உள்படுத்தபட்டார் எனவும் ஒருசெய்தி உண்டு;- பல்லி//
முகுந்தன் எனும் உமாவின் கொலையில் இவர்கள் இருவருக்கும் தொடர்புண்டு. இதற்கு இந்திய ரோவின் பங்கும் உண்டு.
மாலைத்தீவுத் தாக்குதல் , சங்கிலி மற்றும் மாணிக்கதாசனின் முரண்பாடுகள். சித்தார்த்தனுக்கும் மாணிக்கதாசனுக்குமான தலைமை போராட்டங்கள், இவை சிலதை நேரடியாகவும், சிலதை உள்ளே வரவிட்டும் செய்த தகடு தகடு சமாச்சாரங்கள். பெரியவர் என காதுகுத்தி கழுத்தில் முகுந்தன் படம் தொங்கப் போட்டவர்களை நம்பாதீர்கள் என சொன்ன போது, கடவுளை நம்பாத முகுந்தன் கடவுளாக சிரித்தார். கடைசியில் கடவுளாக்கி விட்டார்கள். முகுந்தன் போன்ற விவேகம் உடையவர் நம்பிக்கையின் காரணமாக கொல்லப்பட்டார். லெபனான் வீரன் எனக் கருதிய மாணிக்கதாசனோ நயவஞ்சகத்தால் கொல்லப்பட்டார். வாக்கு கிடைக்கும் என்று வேலுப்பிள்ளையின் மரண வீட்டுக்கு போனதால் தமது கழக அரசியலையும் குழி தோண்டிப் புதைத்து விட்டார் சித்தார்த்தன். புலிகளின் வாக்குகள் கிடைக்கும் என நினைத்ததால், புளொட் வாக்குகளும் இல்லாமல் போனதுதான் மிச்சம். புளொட் புதைந்து போய் விட்டது. பலமில்லாத தலமை. மக்களை தொடர்ந்து ஏமாற்ற முடியாது. நல்லா படித்துவிட்டார்கள். யார் எது சொன்னாலும் தலையாட்டுவார்கள். ஆனால் உள்ளே தமது நிலைப்பாட்டை செய்வார்கள். அதுதான் இன்றைய தமிழ் மக்கள்.
Kanthan
For the murder of Tharmalingam RAW has to apologize first. Since, it was instructed by the RAW to TELO, owing to the political situation prevailed in this country during that time. Then JR soul has to apologize since at that time both Tharmalingam and Alalasunthram were on the verge to collaborate with JR, i.e., JR invited for such collaboration. Finally both of their soul has to apologize for their murder. This is the inside story.
Naadoode
//தமிழ் தலைமைகள் தங்கள் அரசியல் தவறுகளுக்காக படுகொலை அரசியலுக்காக தமிழ் மக்கள் முன் மன்னிப்புக் கோர வேண்டும்! : த ஜெயபாலன்//
நியாயந்தான். வலதுசாரிகள் இழைத்த தவறுக்கு அவர்கள் மன்னிப்புக் கேட்டேயாக வேண்டும். ஆனாலும் அதையும் விட அவசியமானது இடதுசாரிகளும் ஜனநாயகவாதிகளும் தலித் செயற்பாட்டாளர்களும் இழைத்த தவறுக்கு அவர்களல்லாவா மன்னிப்புக் கோரி தவறைத் திருத்துவதற்கான வழியைத் திறந்துவிட வேண்டும்.