கிளி நொச்சியில் மீள்குடியமர்த்தப்பட்டு தரப்பாள் கூடாரத்தில் உறங்கிய சிறுவன் ஒருவன் பாம்பு தீண்டியதால் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அண்மையில் கிளிநொச்சி உருத்திரபுரத்தில் மீள்குடியேற்றப்பட்ட இச்சிறுவனின் குடும்பத்தினர் தங்களுக்கு வழங்கப்பட்ட தரப்பாள் கூடாரத்தில் வசித்து வந்தனர். கடந்த 26ம் திகதி இரவு ஆழ்ந்த உறக்கத்திலிருந்த வேளையில், கூடாரத்திற்குள் நுழைந்த பாம்பு இச்சிறுவனைத் தீண்டியுள்ளது. உருத்திரபுரம் வடக்கைச்சேர்ந்த ஞானசீலன் நிலக்சன் என்ற 10 வயது சிறுவனே இவ்வாறு பாம்பினால் கடியுண்டு உயிரிழந்துள்ளான்.
பாம்பினால் கடியுண்ட சிறுவன் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டு பின்னர். யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு வைத்து மரணமானான்.
Related News:
பாம்பு கடிக்குள்ளாகி படைவீரர் உயிரிழப்பு!
வன்னியில் மீள்குடியேறும் மக்கள் பாம்புகளின் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
பாவம் பார்த்த பாலகியையும் விட்டு வைக்காத பாம்பு – ஆனமடுவயில் நேர்ந்த பரிதாபம்
தமிழ்வாதம்
ஆரியவதிக்கு வர்க்கம் இருக்கும்-அந்த
ஆணியடித்த அராபியனுக்கு வர்க்கம் இருக்கும்.
பாம்பு எந்த வர்க்கம்-இந்தப்
பாலகன் எந்த வர்க்கம்?
கழுத்திலிருந்ததை கழட்டி விட்ட அந்த மத வெறியன் யார்?
வர்க்கங்களை விடு,
வரம் தரும் இறையோனை விடு,
கனம் பண்ணு!
‘புலிப்பொடி ஒண்டு போச்சுது’எண்டபடி,
‘தறப்பாள் தந்த தலைவனைக்’ கனம் பண்ணு.
எல்லாம் நடக்கும்,நீங்கள் விரும்பியபடியே.
palli
//கனம் பண்ணு!//
,,,,?????