யாழ் குடா நாட்டில் கடலுணவு வகைகளின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால் குடாநாட்டு மக்கள் கடலுணவுகளை நுகர்வதில் பல சிரமங்களை எதி;ர்கொண்’டு வருகின்றனர். சாதாரணமாக ஒரு கிலோ 400 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட மீனின் விலை தற்போது 600 ரூபாவிற்கு மேல் விற்பனை செய்யப்படுகின்றன.
தென்னிலங்கையிலிருந்து அதிகளவு சுற்றுலாப்பயணிகள் குடாநாட்டிற்கு வருகை தருவதாலேயே கடலுணவகளின் விலை அதிகரித்து வருதாக தெரிவிக்கப்படுகின்றது.. தெற்கிலிருந்து வரும் மக்கள் அதிகளவு யாழ்ப்பாண கடலுணவுகளை விரும்பி உண்கின்றனர். அத்துடன் அவர்கள் திரும்பிச்செல்லும் போது அதிகளவான கடலுணுவுப் பொருட்களை கொள்வனவு செய்தும் கொண்டு செல்கின்றனர்.
யாழ்ப்பாண மீனவர்கள் தற்போதும் கரையோர மீன்பிடி நடவடிக்கைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். ஆழ்கடல் மீன்பிடிக்கு அனுமதி வழங்கப்படுமானால் கடலுணவுப் பொருட்களின் தொகை அதிகரிப்பதோடு அவற்றின் விலைகளும் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. (வடக்கு கிழக்கில் ஆழ்கடல் மீன்பிடிக்க விரைவில் அனுமதி. )