பொதுவாக இறுதி ஆட்டங்களின் போது இந்திய அணியினர் எங்களை விட சிறப்பாக செயல்பட்டு கோப்பை வென்று விடுவர். இது பலமுறை நடந்துள்ளது. இம்முறை சற்று கூடுதல் முயற்சி எடுத்து ஐந்தாவது முறையாக கோப்பை வெல்வதை தடுப்போம். சேவக் சிறந்த வீரர் என்பதில் சந்தேகமில்லை. இவரை விரைவில் அவுட்டாக்கினால் எங்களுக்கு நல்லது என இலங்கை அணித்தலைவர் தெரிவித்தார்.
தோனி தலைமையில் இந்திய அணி, இலங்கையில் தொடர்ந்து நான்கு ஒருநாள் தொடர்களில் கோப்பை வென்றுள்ளது. கடந்த 2008 (3-2), 2009 (4-1) ல் நடந்த ஒருநாள் தொடர்கள் 2009 முத்தரப்பு தொடர், சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை என மொத்தம் நான்கு முறை சாதித்துள்ளது. இன்றும் வெல்லும் பட்சத்தில் ஐந்தாவது முறையாக கோப்பை வென்று சாதிக்லாம்.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து துடுப்பெடுத்தாடி வருகிறது. இறுதிப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசையில் எதுவித மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.