24 ஆணிகள் அறையப்பட்ட பெண்ணுக்கு சத்திரசிகிச்சை

kamburu-01.jpgசவூதி அரேபியாவில் சித்திரவதைக்குள்ளாகி உடம்பில் 24 ஆணிகள் ஏற்றப்பட்ட நிலையில் நாடு திரும்பிய பெண்ணுக்கு நேற்று மாத்தறை கம்புறுபிட்டிய ஆஸ்பத்திரியில் வெற்றிகரமாக சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சுமார் மூன்று மணித்தியாலங்கள் நீடித்த இந்த சத்திர சிகிச்சையின் மூலம் அவரது உடம்பிலிருந்து 16 ஆணிகள் அகற்றப்பட்டன. ஏனையவை உயிர் ஆபத்தை ஏற்படுத்தாதவை என வைத்தியர்கள் அறிவித்துள்ளனர். அவரது உடலிலிருந்து 2 அங்குல ஆணிகள் 12 மற்றும் 2 1/2 அங்குல ஆணி ஒன்றும், மூன்று குண்டூசிகளும் அகற்றப் பட்டன. உடலில் மீதமுள்ள ஆணிகளை அகற்றுவதற்காக மீண்டும் ஒரு சத்திரசிகிச்சை நடைபெறவுள்ளதாக கம்புறுபிட்டிய ஆஸ்பத்திரி டொக்டர் பிரபாத் கஜதீர தெரிவித்தார்.

kamburu.jpgகம்புறுபிட்டிய ஆஸ்பத்திரி டொக்டர் பிரபாத் கஜதீரவின் ஆலோசனைக்கமைய வைத்திய நிபுணர் கமல் வீரதுங்க திலங்க த சில்வா, எச்.கே.கே. சதரசிங்க, மயக்க மருந்தேற்றும் வைத்திய நிபுணர் வசந்தி குணசேக்கர உள்ளிட்ட டொக்டர்கள் குழுவினர் சுமார் 3மணிநேரம் சத்திர சிகிச்சையில் ஈடுபட்டனர்.இரண்டு குழந்தைகளின் தாயான எல்.பி. ஆரியவதி (வயது 49)யின் மன நிலை பாதிக்கப் படும் என்ற காரணத்தினாலும், சத்திரசிகிச்சையைத் தொடர்ந்தும் நடத்துவதால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படும் என்ற அச்சத்தின் காரணமாகவும் நேற்றைய சத்திரசிகிச்சை 13 ஆணிகள், 3 குண்டூசிகள் நீக்கப்படுவதுடன் நிறுத்தப்பட்டது. அவரது உடலில் துருப்பிடித்த நிலையிலேயே இந்த ஆணிகள் இருந்தன.

இன்னும் சில தினங்களின் பின்னர் சத்திரசிகிச்சையை மேற்கொள்வது என டொக்டர்கள் தீர்மானித்ததுடன், மன நல மருத்துவரின் ஆலோசனையை பெறுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. சத்திர சிகிச்சையின் பின்னர் குறிப்பிட்ட பெண் சாதாரண வார்ட் ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் தேறி வருவதாகவும் டொக்டர்கள் தெரிவித்தனர்.

தனக்கு வேலை வழங்கிய சவுதிஅரேபிய நாட்டவர் உடலில் ஆணிகளை அடித்ததாக அப்பெண் கூறியிருந்தார். 24 ஆணிகளும் ஊசியும் உடலில் இருப்பதை எக்ஸ்ரே மூலம் தெரியவந்திருக்கிறது. நெற்றியிலும் ஆணி உள்ளது என்று மருத்துவமனைப் பணிப்பாளர் பிரபாத் கஜதீர கூறியுள்ளார்.

maid.jpgஇந்த ஆணிகள் 2 அங்குல நீளமுடையவையாகும். ஆரியவதியின் கைகள், கால்கள், அடிப்பாதங்களிலேயே அதிகளவுக்கு ஆணிகள் அறையப்பட்டுள்ளன. ஆனால் ஆரியவதியின் உட்புற உடல்உறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகத் தோன்றவில்லை என்று டாக்டர் கஜதீர கூறினார்.கடந்த மார்ச்சில் சவூதி அரேபியாவுக்குச் சென்றிருந்த இப்பெண் அதிகளவு உளப்பாதிப்புக்கு உட்பட்டவராகவே உள்ளார். தனது அவையவம் தொடர்பாக அதிகளவுக்கு விபரங்களை அவரால் கூற முடியவில்லை.

10 இலட்சத்து 80 ஆயிரம் இலங்கையர் வெளிநாடுகளில் வேலை செய்கின்றனர். இவர்களில் 70 சதவீதத்தினர் பெண்களாவர்.

வீட்டுவேலையாட்களாக பணிபுரியும் இலங்கையர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் மத்திய கிழக்கு நாடுகளிலும் சிறு தொகையினர் சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் போன்ற நாடுகளிலும் தொழில் புரிகின்றனர்.

எஜமானுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

சவூதி அரேபியாவில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட இலங்கை பணிப்பெண்ணின் எஜமானர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக இலங்கை வெளி நாட்டு வேலைவாய்ப்பு பணியகம் சட்டமா அதிபரிடம் சட்ட ஆலோசனையை கோரியுள்ளது. பணியகத்தின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸிலி ரணவக்க மேற்படி பெண் தொடர்பான ஆவணங்களை சட்டமா அதிபரிடம் நேற்று கையளித்தார்.

இதேவேளை சவூதியிலுள்ள எஜமானர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை இலங்கை தூதரகம் நேரடியாக மேற்கொள்ள முடியாத நிலை உள்ளதால் சவூதி அரசின் ஊடாக இதனை எவ்வாறு கையாளலாம் என்பது பற்றியும் பணியகம் ஆராய்ந்து வருகிறது. இலங்கைப் பெண்ணுக்கு மிக மோசமான முறையில் சித்திரவதை நடந்துள்ளமை பற்றி சவூதியிலுள்ள இலங்கை தூதுவர் தனது அதிருப்தியையும் சவூதி அரசுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை வெளிநாட்டமைச்சு கம்புறுபிட்டிய ஆஸ்பத்திரியில் மேற்படி பெண்ணின் மருத்துவ அறிக்கையையும் கோரியுள்ளது. சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டார் என்பதற்கான மருத்துவ அறிக்கைகள், எக்ஸ்ரே மற்றும் உடலிலிருந்து எடுக்கப்பட்ட ஆணிகளின் விபரங்கள் போன்றவற்றை சேகரிப்பதற்கு பணியகத்தின் மாத்தறை கிளை அதிகாரிகள் நேற்று கம்புறுபிட்டிய ஆஸ்பத்திரிக்கு சென்றிருந்தனர்.

சவூதியில் இவ்வாறு வீடுகளில் துன்புறுத்தப்படுதல், சித்திரவதைக்குள்ளாக் கப்படுதல் போன்ற சம்பவங்கள் இன்னமும் நடைபெற்றுக் கொண்டிருக் குமானால் உடனடியாக இலங்கை தூத ரகத்துக்கு அறிவிக்குமாறு சவூதியிலுள்ள உள்ளூர் பத்திரிகைகள் மூலம் இலங்கையர்களுக்கு இலங்கை தூதரகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது. ஆணிகளால் குத்தி சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட பெண்ணும் பலமுறை தனது உறவினர்களோடு பேசியுள்ள போதும் பல முறை இலங்கை தூதரகத்துடன் தொடர்பு கொண்ட போதும் தனக்கு இவ்வாறான சித்திரவதை நடைபெற்றது என்பதை தெரிவிக்கவில்லை.

அச்சம் காரணமாகவே இவர் இவ்வாறு தெரிவிக்காமல் இருந்திருக்கலாம் என்றும் எவரும் அச்சமின்றி இலங்கை தூதரகத்துக்கு அறிவிக்க வேண்டும் என இலங்கை தூதரகம் அறிவித்தல் விடுத்துள்ளது. சவூதி எஜமானர்களிடமிருந்து நஷ்டஈட்டை பெற்றுக் கொடுக்க பணியகம் தொடர்ந்தும் செயற்படவுள்ளதாக பணியகத்தின் தலைவர் கிங்ஸிலி ரணவக்க தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

67 Comments

  • nantha
    nantha

    முகமது நிஸ்தார் இதற்கு என்ன சொல்லப் போகிறார்? இதுவும் நடக்காத ஒன்று என்று “கை கழுவி” விடுவார் என்றே எதிர்பார்க்கிறேன்!

    Reply
  • chandran.raja
    chandran.raja

    இலங்கையில் பிறந்த நான் ஒருஆண் தொழிலாளி. ஆரியவதி பெண் தொழிலாளி. தொழிலாளர்களுக்கு என்னென்ன துன்பங்கள் நேர்கிறது என்பதற்கு ஒரு ஆரியவதி உதாரணமே போதுமானவை. மலையகத்தில் இருந்து நகர்புறத்திற்கு வேலைதேடி வந்த இருஇளம்பெண்கள் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்திலேயே கொலைசெய்யப்பட்டு சாக்கடையில் வீசியெறிந்த போது சட்டம் நீதிமன்றங்கள் அரசுகள் என்ன செய்ததோ தெரியவில்லை. இன்றைய பி.பி.சீ செய்தியின் படி அரேபிய தூதராலயத்திற்கு அறிவிக்காமல் ஆரியவதி வந்து விட்டார் என்ற குற்றசாட்டு உள்ளது. நாளை ஆரியவதி வேலைபார்த்த இடத்தில் பெறுமதிமிக்க இருபத்திநான்கு ஆணிகளை கடத்தி வந்துவிட்டார் என்று தீர்ப்பு சொல்லாவிட்டால் போதுமானவை என்றே திருப்தி பட்டுக்கொள்ள வேண்டியது தான். இந்த சமுதாயம் அப்படிப்பட்டதே! நீதி?.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    என்ன நந்தா! சவுதி அரேபியாவில் நடந்த தொழிலாளி- வதைக்கு நிஸ்தார் ஏன்? பதில் சொல்ல வேண்டும். அப்படியானால் தமிழ்மக்களின் கொலைகள் வதைகளுக்கு நீங்கள் சொல்லத் தயாரா? இது ஒரு அசட்டுதனமான கேள்வியாக உங்களுக்கு படவில்லையா?.

    Reply
  • padamman
    padamman

    கொடுமை கொடுமையிலும் கொடுமை அரேபியரின் அரக்ககுணம் இது

    Reply
  • accu
    accu

    //முகமது நிஸ்தார் இதற்கு என்ன சொல்லப் போகிறார்? இதுவும் நடக்காத ஒன்று என்று “கை கழுவி” விடுவார் என்றே எதிர்பார்க்கிறேன்!//

    நந்தா உங்கள் எழுத்தில் சிலவற்றை ஆழ்ந்து வாசிப்பவன் நான் ஆனால் மேலே உள்ளதை எழுதியதன் மூலம் உஙகளை “கை கழுவி” விடுகிறேன்.

    Reply
  • nantha
    nantha

    சந்திரன் ராஜா:
    சவூதி அரேபியாதான் முஸ்லிம்களின் புனித நாடு என்பதும் சவூதி ஆட்சியாளர்கள்தான் இஸ்லாத்தின் காவலர்கள் என்ற உண்மையும் உங்களுக்குத் தெரியாமல் போனது எப்படி?

    தொழிலாளர்கள் என்ற பதத்தினுள் சகலதையும் அடக்க முடியாது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொழில் சங்கப் பிரமுகர் அலவி மௌலானாவின் சத்தத்தையே காணவில்லை! சிந்திக்கவும்!

    Reply
  • thurai
    thurai

    சிங்களவர் தமிழர் பிரச்சினைக்கு பெளத்த மதத்தையும், இந்துமதத்தையும் துணைக்கு அழைப்பது போல்தான், இதில் முஸ்லிம் மதத்தை சேர்ப்பது.

    முஸ்லிம்கள் யாவரும் தவறானவர்கென்றால் வடக்கிலிருந்து புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றியதும் சரியென ஏற்றது போலாகும்.

    துரை

    Reply
  • nantha
    nantha

    accu:
    நான் கண்டிப்பாக நிஸ்தாரின் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். ஏனெறால் அவர் தன்னை முஸ்லிம் என்றுதான் அறிமுகப்படுத்துகிறார். அதிலும் “மற்றவர்களுக்கு” இஸ்லாம் என்பதைப் பற்றி எதுவும் தெரியாது என்றும் கருத்துப்பட எழுதுகிறார். இஸ்லாத்தின் “புனித” பூமியில்த்தான் ஆரியவதி என்ற பெண்ணுக்கு இந்த ஆணியடிப்பு நடந்திருக்கிறது. அது மாத்திரமின்றி அந்த பெண்ணை ‘இஸ்லாத்தின்” காவலர்களான சவூதி அரபிகள் விமான நிலையத்தில் உள்ள “metal detectors” என்பனவற்றின் கண்ணில் படாமலேயே பார்சல் பண்ணி இலங்கைக்கு அனுப்பியிருக்கிறார்கள்.

    இந்த செயல்கள் மூலம் முஸ்லிம்கள் “மற்றைய” மனிதர்களை மதிக்கத் தேவையில்லை என்ற இஸ்லாமியக் கோட்பாட்டை மெய்ப்பிப்பதாகவே நான் கருதுகிறேன்!

    Reply
  • chandran.raja
    chandran.raja

    நந்தா! நான் எழுதிய பின்னோட்டத்தை திரும்ப ஒருமுறை வாசித்துவிட்டு அடுத்த பின்னோட்டத்திற்கு தயாராகுங்கள். ஏதாவது ஒரு மதத்தையாவது “புனிதம்”மாக உங்களால் காட்டமுடியுமா?. தொழிலாள வர்க்கத்தை ஒருதொழிலாளியை எப்படி புரிந்து வைத்திருக்கிறீர்கள் என்பதை கோடிக்கணகான கிறீஸ்தவர்களை அவமதிப்பதன் மூலம் கோடிக்கணக்கான இஸ்லாமியரை அவமதிப்பதின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.

    Reply
  • thurai
    thurai

    //இந்த செயல்கள் மூலம் முஸ்லிம்கள் “மற்றைய” மனிதர்களை மதிக்கத் தேவையில்லை என்ற இஸ்லாமியக் கோட்பாட்டை மெய்ப்பிப்பதாகவே நான் கருதுகிறேன்!//நந்தா
    உலகம் முழுவதும் வாழும் சில தமிழ் கிறிஸ்தவ, இந்து மதத்தவர்கள் தமிழர்களாகப் பிறந்தவர்களையே மனிதனாக மதிக்கும் பழக்கத்துடனா இருக்கின்றார்கள். யாழ் வட பகுதியில் தாழ்த்தப்பட்டவர்களை மனிதர்களாக முஸ்லிம்களே மதித்துள்ளார்கள்.

    துரை

    Reply
  • nantha
    nantha

    புலிகள் முஸ்லிம்களைத் துரத்தியதற்கும் வேலைக்குப் போன பெண்ணுக்கு நடந்த சித்திரவதைக்கும் என்ன தொடர்பு என்று தெரியாது. அனால் புலிகளும் இந்த ஆணியடிப்புக்குக் குறையாத பல சித்திரவதைகளைத் தமிழர்களுக்குச் செய்து கொன்றிருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை!

    சந்திரன்:
    மத சார்பானவர்கள் அரசியல் பேச வந்தால் இந்தக் கேள்விகளுக்குப் பதில் தர வேண்டும் அல்லது தங்களின் நிலைப்பாட்டைத் தெளிவு படுத்த வேண்டும். இதில் அவமானப்பட வேண்டியவர்கள் அந்த மதங்களைப் பின்பற்றுபவர்களா அல்லது அது பற்றிக் கேள்வி கேட்பவர்களா?

    சவூதி அரேபியா ஒன்றும் தொழிலாளர்களின் சொர்க்க புரி அல்ல. சர்வதேச தொழில் சம்மேளனங்களின் விதிமுறைகளை பின்பற்றும் நாடும் அல்ல. அது ஒரு முஸ்லிம் சாம்ராஜ்யம். எனவே இஸ்லாத்தில் “தொழில்” பார்க்க வந்தவர்கள், அதுவும் முஸ்லிம் அல்லாதவர்கள் எப்படி மதிக்கப்படுகிறார்கள் என்பது பற்றி சிறிதும் சிந்தியாது “அவமதிப்பு” என்று முத்திரை குத்துவது “தொழிலாள வர்க்க சிநேகிதத்துடன் எதுவித சம்பந்தமும் இல்லாத வாதமாகும்!

    Reply
  • Waakir Hussain
    Waakir Hussain

    நந்தா ஓரு மதத்தின் தனிப்பட்ட ஒருநபரின் கருத்தாயோ அல்லது நடவடிக்கயோ வைத்து மதங்கலுக்கு எதிரானா உங்களின் கருத்து சிரு பிள்ளை தனமாகவே உள்ளது. சில நேரம்களில் உங்களின் குறிப்பாக இஸ்லாம் சார்ந்த அறியாமை என்னை கவலை கொள்ள வைக்கின்ரது..

    Reply
  • chandran.raja
    chandran.raja

    யேசுநாதர் எத்தனை ஆணிகளை தம் உடம்பில் தாங்கிக் கொண்டாரே தெரியாது ஆரியவதி தாங்கிக்கொண்ட ஆணிகளின் எண்ணிகைள் பதிவாகியிருக்கின்றன. முதாலித்துவத்தால் உலகத்து தொழிலாளிவர்கத்திற்கும் பாட்டாளிவர்கத்திற்கும் எதிராக கட்டிவைக்கபட்ட கோட்டைகள் விம்பங்கள் ஆரியவதியின் ஒவ்வொரு ஆணிகளும் தகர்கப்போவதை பார்க்கும் பொழுது….இதுவல்லவா? புரட்சி..உலகப்புரட்ச்சி. மாமேதை கால் மாக்ஸ்சும் ரொக்ஸியும் கண்முன்னே தரிசனம் தந்த உணர்வல்லவா ஏற்படுகிறது.

    Reply
  • Arasaratnam
    Arasaratnam

    இந்து சமயத்தவர் எல்லோரும் உடன்கட்டை ஏற நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள் அல்ல. இந்தியாவில் ஓர் மாநிலத்தில் இது நடந்தது. இது காலப்போக்கில் அருகிக்கொண்டு வந்துள்ளது தற்போது நடைபெறுவதாக தெரியவில்லை. மதம் சம்பந்தமான பிரச்சினை வந்ததும் நிஸ்தார் தனது மதத்தை நியாயப்படுத்த இதுபோன்ற இந்து சமயத்தவர்களின் பிழைகளை சுட்டிக்காட்ட வெளிக்கிட்டார். நக்கல் நளினமாக மற்றைய மதங்களை கதைப்பதன் மூலம் முஸ்லிம் மதத்தை சரியாக்க முயன்றார். குலன் கட்டுரையில் தொடர்ந்த சமய அடிபிடியை மையமாக வைத்தே நந்தா இந்த செய்திக்குள் நிஸ்தாரை கூப்பிட்டிருந்தார். தனிச் சம்பவங்கள் அடிப்படையில் இவர்கள் கருத்தெழுதிக் கொண்டிருந்தவர்கள் என்பதன அடிப்படையில் இந்தத் தொடர் அடிபிடியில் நந்தா கேட்டதில் தப்பில்லை. ஆனால் எல்லார் கதையுமே ஒரு பிரயோசனமும் இல்லாதது.

    என்னைப் பொறுத்தவரையில் நந்தாவின் நல்ல கருத்துக்கள் நந்தாவின் ஒரு சில பாதிரிகளின் நடத்தைகளை எல்லா விடயத்திற்குள்ளும் கொண்டுவருவதால் அடிபட்டுப் போகின்றது. துரையின் நல்ல கருத்துக்கள் எல்லாவிடயத்திற்குள்ளும் தாழ்த்தப்பட்டவர்களின் பிரச்சினைகளைக் கொண்டுவருவதால் அடிபட்டுப் போகின்றது. நிஸ்தார் சொல்லவரும் சமூக விடயங்கள் குர்ஆன் வசனங்னளைச் சொல்லி பதிலளிக்க அல்லது கருத்துக்களுக்கு மறுதலிப்பதாலும் அடிபட்டுப் போகின்றது. மொத்தத்தில் தயவுசெய்து உங்கள் முக்கோணச் சண்டையை நிறுத்தங்கள். ஒருத்தருக்கும் ஒரு பிரயோசனமும் இல்லை. உங்களுக்கு பிடித்தமான மதத்தை நீங்கள் பின்பற்றுங்கள். ஒரு மதத்தை வைத்து இன்னொரு மதத்தை நிறுத்துப் பார்த்துக்கொண்டு யாரும் ஜனநாயகம் பற்றிக் கதைக்காதீர்கள்.

    மேலும் எந்த கட்டுரையோ செய்தியோ நந்தாவின் கருத்துக்கு எதிராகவே கருத்தெழுத வேண்டும் என்பது போல் பல்லி நிற்பது நிறுத்தப்படல் வேண்டும். நந்தா பல்லி தொடர்வாதம் நிறுத்தப்படல் வேண்டும்.
    பார்ப்பவர்களுக்குத் துல்லியமாக தெரியும் விடயங்களை சுட்டிக் காட்டினேன். தப்பாக இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்.

    Reply
  • BC
    BC

    அரசரட்னம் தொடர்ந்து எழுந்துங்கள்.நன்றி.

    Reply
  • palli
    palli

    //மேலும் எந்த கட்டுரையோ செய்தியோ நந்தாவின் கருத்துக்கு எதிராகவே கருத்தெழுத வேண்டும் என்பது போல் பல்லி நிற்பது நிறுத்தப்படல் வேண்டும். நந்தா பல்லி தொடர்வாதம் நிறுத்தப்படல் வேண்டும்.//
    உங்கள் அறிவுரைக்கு நன்றி; ஆனால் இங்கே தாங்கள் பல்லியை எதிர்வாத நோயாளியாக காட்டியது சிறிது வருத்தம் தான்; பல்லி நந்தாவுடன் மதவிடயத்தில் மட்டுமே வாதம் செய்தேன்; அதுவும் மதத்தை மதமாக பேச வேண்டாம் என்பதால்; சில இடங்களில் இந்தவாதம் நந்தாவால் நிறுத்த முடியாது என கண்டதும் நானே ஒதுங்கியும் இருக்கிறேன்;

    நந்தாவுடன் எதிர்வாதம் செய்யவேண்டிய நிலை பல்லிக்கு இல்லை, இதே தேசத்தில் மிகவும் நான் முரன்பட்டது(கருத்து) சந்திரராஜாவுடந்தான் பின்பு பலருடன் ஏன் தேசத்துடனும்தான் அப்போதெல்லாம் பல்லியை குறை சொல்லாத நீங்கள் இப்போது நந்தாவை பல்லி வம்புக்கு இழுப்பது போல் சொல்லுவது நந்தாவின் மதவாத போக்கை ஆதரிப்பதாகவே கருத வேண்டி உள்ளது,

    கம்பேக்கர் விடயத்தில் பலருக்கு எதிராக எனது வாதம் அமைந்தது; சிலர் கேலி கூட செய்தார்கள். ஆனாலும் என் கருத்தை நான் சொன்னேன், அதே போல்தான் பிரபாகரன் தாய் வருத்தபட்ட போது அனைவரும் வருத்தம் தெரிவித்தோம், வேலுபிள்ளையரின் இறப்புக்கு அனைவரும் வருத்தம் தெரிவித்தோம்; ஆனால் சிறியரின் தாயின் இறப்புக்காய் வந்த கட்டுரையில் நந்தா எப்படி ஆரம்பிக்கிறார் என்பதை தயவுசெய்து கவனிக்கவும்; அதேபோல் மற்றய மதத்தவரை எப்படி சித்தரிக்கிறார்,

    பல்லி இதுவரை எழுதிய பின்னோட்டம் 100 தாண்டி இருக்கும் அதில் நந்தாவுடன் வாதம் செய்த பின்னோட்டம் மிக குறைவே, ஆகவே எந்த கட்டுரையென்றாலும் பல்லி நந்தாவுடன் எதிராய் பேசும் என்பது என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை; இருப்பினும் உங்கள் அறிவுரைக்கு மீண்டும் நன்றி,

    Reply
  • P.V.Sri Rangan
    P.V.Sri Rangan

    நந்தா கருத்தைத் திரிப்பது கூடாது. அவர் கூறுவதில் நிறைய நியாயம் இருக்கிறது. உலகில் மெக்காவுடைய நாடு சவுதி. முஸ்லீம்களின் குறியீடு சவுதி! நந்தா கூறுவது மிகவும் தர்க்கமானது. அவர் முழு முஸ்லீம்களையும் கழுமரத்தில் ஏற்றவில்லை! அரேபியர்களது பெண்ணடிமை-பாலியல் சார்ந்த அணுகுமுறைகளைச் சொல்கிறார். இதுள் எந்த மதத்தவர்களும் மேலானவர்-கீழானவர் என நந்தா குறிப்பிடவில்லை! நான் அரேபிய நாடுகளுக்கு விடுமுறையெனச் செல்பவன். எனக்குத் தெரியும் அவர்களது நடாத்தை. என் அனுபவத்தில் 5 தடவைகள் அல்லாவை வணங்குவன் என்னை ஏமாற்றியதையும் அறிவேன். அதற்காக முழு முஸ்லீமையும் குற்றக் கூண்டில் ஏற்றவில்லை! ஏனெனில் யாழ்ப்பாண வியாபாரி அவர்களைவிட ஏமாற்றுபவன் என்பது எனது அனுபவம். நான் படித்த குறான்படி சரியான முஸ்லீம் என்பவர்கள் மகத்தானவர்களாக இருக்க வேண்டும். ஆனால் அதிகார வர்க்கம் எங்கே இஸ்லாம் முறைப்படி நடக்கிறது. அவ்வண்ணமோதாம் உதிரிப் பாட்டாளிகளும். நந்தாவைப் புரிவதில் சந்திரன் ராசாவுக்கு என்ன கடினம்? மார்க்சியத்தில் தேர்ச்சியிருப்பதாகச் சொல்லும் சந்திரன் ராசா நந்தாவைப் புரிவதில் தவறிழைக்கிறார்.

    Reply
  • nantha
    nantha

    Waakir Hussain :
    கொக்கறல்ல, குருநாகலில் மசூதியில் வைத்து பதினேழு வயது இளம் தாய்க்கு தென்னம் மட்டையால் முஸ்லிம் ஆண்கள் விளாசியதை “தனிப்பட்ட” பிரச்சனை என்று சொல்லுகிறீர்களா? ஆரியவதிக்கு ஆணியடித்து கப்பலேற்றிவிட்டதையும் தனிப்பட்ட விடயம் என்று எப்படி நம்புவது?

    இஸ்லாம் பற்றி படித்தபடியால்த்தான் இந்தக் கருத்துக்களை சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம். நீங்கள் முஸ்லிம் என்ற அடையாளத்தில் “சவூதி” பாணியில் இலங்கையில் நடக்க முற்படுவது நாகரீகமாகப்படவில்லை!

    Reply
  • BC
    BC

    எங்கள் தேசம்நெற் சந்திரன் ராசா மட்டுமல்ல மார்க்சியவாதிகள் பலர் யதார்த்தத்தை புரிந்து கொள்ளவில்லை.

    Reply
  • nantha
    nantha

    அரசரத்தினத்தின் கருத்துக்களுக்கு நன்றி. மத அனுஷ்டானங்களை “வீட்டோடு” வைத்துக் கொள்வது நல்லது என்றே நான் கருதுகிறேன். பொது வாழ்வில் மதம் புகுந்து விளையாடுவது சகிக்க முடியாதது. மதங்கள் பற்றி மதவாதிகள் “புளுகுவதை” தற்போதைய பொருளாதார, சமூக சூழ் நிலையில் ஏற்றுக்கொள்வது கடினமானது. இப்படி மத போதனைகளில் அதீத நம்பிக்கை உள்ளவர்கள் “பல்லின” சமூகங்கள் உள்ள இலங்கை போன்ற நாடுகளில் பதவிகளுக்கு வந்தால் “தங்களுடைய: ஆட்களுக்கே சலுகையும் வசதிகளும் செய்வார்கள் என்று நம்பிக்கை வளர்வதைத் தடுத்து நிறுத்த முடியுமா?

    மதவாதிகள் தங்களின் மத விருத்திக்குப் பொது நிதியங்களைப் பயன்படுத்த மாட்டார்கள் என்று நம்ப முடியுமா? அது மோசடி என்றே நான் கருதுகிறேன்.

    மதம் பரப்புதல் என்பது மற்றைய மதக்காரனை “கீழ்த்தரமானவன்” என்ற அடிப்படையிலேயே அல்லது பொய்களை அவிழ்த்துவிட்டே நடைபெறுகிறது. அரசு அதிகாரத்தில் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் இருந்த பொழுது எங்கள் நாடுகளில் நடைபெற்ற நிகழ்வுகளே அதற்குச் சாட்சி.

    இந்துக்களிடம் குறைபாடுகள் இல்லை என்று நான் சொல்லவில்லை. அனால் இந்துக்களை விட மோசமான குறைபாடுகளைக் கொண்ட மற்றைய சமயத்தவர்கள் இந்துக்களை அவமதிப்பதை நான் மறுதலிக்காமல் இருக்க முடியாது. தமிழ் என்ற வேஷத்தில் வத்திக்கானின் கட்டளைகளை நிறைவேற்றும் பாதிரிகளை எப்படி நம்ப முடியும்? பாதிரிகள் சாதாரண ஜோசெப்புக்கள் அல்ல. அவர்களின் தலைவர் சொல்லுவதை சரியென நம்பி பொது வாழ்வில் புகுந்து “தலைவரின்” ஆணைகளை நிறைவேற்றுபவர்கள்.

    அதே போல முஸ்லிம்களும் எங்காவது ஒரு அயோத்தல்லா “மரண தண்டனை” விதித்தால் அதனை சரி என்று வாதித்து அதனை நிறைவேற்ற வேண்டும் என்று அலைவதை எப்படி நியாயம் என்று கருத முடியும்? சல்மான் ரஷ்டி ஒரு உதாரணம். இலங்கை தண்டனைக் கோவையில் (Sri Lankan Penal Code) இல்லாத தண்டனையை கொக்கறல்ல மசூதியில் வைத்து அந்த இளம் தாயை நாராக கிழித்துள்ள நடைமுறையை இலங்கைப் பிரசை என்கிற வகையில் எப்படி சகிக்க முடியும்? அந்தக் கொடுமையை செய்தவர்கள் இலங்கைச் சட்ட அடிப்படையில் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகள். இஸ்லாம் அதனை அனுமதிக்கிறது என்ற கூற்றுக்கள் எழலாம். அதனை ஏற்க வேண்டும் என்று இலங்கையர்களை கட்டாயப்படுத்த இலங்கை ஒன்றும் பாகிஸ்தானின் குடியேற்ற நாடல்ல. இப்படியான சிந்தனைகளை ஆதரிப்பவர்களை பொதுமக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரச சேவைகளில் அனுமதிக்கலாமா? சிந்தியுங்கள்.

    மதம் இல்லை. மதம் வேண்டாம், என்கிற உணர்வு வரும் வரையில் இந்த “தகராறுகள்” தொடரவே செய்யும். அரச சேவைகளில் மத அடிப்படை நம்பிக்கை உள்ளவர்கள் தவிர்க்கப்பட வேண்டும்!

    கனடாவின் தலை நகரைத் தகர்க்க திட்டமிட்ட முஸ்லிம் தீவிரவாதிகளை கனேடிய அரசு கைது செய்துள்ளது. அவர்களில் இருவர் கனடாவில் படித்து கனடிய ஆஸ்பத்திரிகளில் வேலை செய்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் எதற்குக் கனடாவுக்கு வந்தார்கள் என்று கனேடியர்கள் கேட்பது தவறாக முடியுமா?

    Reply
  • ஜெயராஜா
    ஜெயராஜா

    பாதிக்கப்பட்ட பெண்ணின் எஜமானனுக்கு எதிராக இலங்கை அரசு வழக்கு தொடர்ந்து தண்டனை வழங்கப்படல் வேண்டும். இது மேலும் பல பெண்கள் பாதிக்கப் படாதிருக்க உதவும்.

    மூக்கறுப்பது, கல்லால் அடித்துக் கொலை செய்வது இவைகளுக்கெதிராக பல நாடுகளும் மனித உரிமை அமைப்புக்களும் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.

    லண்டனில் பூனையைத்தூக்கி குப்பைத் தொட்டிக்குள் போட்ட பெண்மணிக்கே தண்டனை. அந்த வகையில் இந்த எஜமானனுக்குத் தண்டனை வழங்க இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    Reply
  • தமிழ்வாதம்
    தமிழ்வாதம்

    பொதுமைப்படுத்தலை தங்களது எண்ணப்பாடுகளுக்கு ஏற்றபடி வரையறுப்பது பொதுவான நியதியாகப் போய்க்கொண்டிருக்கிறது.

    மதங்களைத் தூக்கியெறி, மனிதனாக வாழு என்றால் குரோதம் எனும் குருதியைப் பறிகொடுத்தாற் போல் குதிக்கிறார்கள்.

    மனிதத்துவத்திற்கெதிரான மகிந்தவெறியைப் பற்றி தம்மண்டையை மண்ணுக்குள் புதைத்தவர்கள், மாக்சிச-மதகோஷங்களுடன் ஆரியவதிக்காகவேனும் ஆறுதல் தேடுவது, மனிதம் இன்னும் மறைந்து விடவில்லை என்பதையே காட்டுகிறது. நன்றி.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    சிறீரங்கன் பி.சீ போன்றவர்கள் மாக்ஸியவாதிகளுக்கு சான்றிதழ் கொடுக்கிற வேலையை தயவுசெய்து நிறுத்திக் கொள்ளுங்கள். சிறீரங்கன் அவர்களே! நான் எங்கேயாவது? அல்லது இத்தளத்தில் ஆவது என்னை “நான்மாக்ஸியவாதி” என்றுகூறியது கிடையாது. அப்படியிருக்கும் போது நந்தாவின் கருத்துக்களுக்கு ஒத்துப்போகவில்லை என்றால் நான் சொன்ன கருத்துக்கள் அத்தனையும் பொய்யாகிவிடுமா?

    பி.சீ அவர்களே! “சந்திரன்.ராஜா மட்டுமல்ல மாக்ஸியவாதிகள் பலர் யதார்தத்தை புரிந்து கொள்ளவில்லை”. இது எதை அர்த்தப்படுத்துகிறது?. சென்ற நுhற்றாண்டில் உலகத்தை உலுக்கி எடுத்த தத்துவம் இந்த நுhற்றாண்டையும் உலுக்கி எடுக்கப் போகிறது என்று பயப்படுகிறீர்களா? அல்லது யாராவது யதார்தத்தை புரிந்து கொண்ட வித்தகர்களை கண்டுகொண்டீர்ரா? இல்லையேல் அது! தாங்களா? தெளிவு படுத்துங்கள்.
    இந்த உலகத்தில் நந்தாவுக்கு தெரிந்த மக்கள் விரோதிகளும் எதிரிகளும் பாதிரிகளும் வத்திக்கானுமே! இன்று மெக்காவும் முஸ்லீமாக மாறியிருக்கிறது. என்பார்வைக்கு இதுவெல்லாம் மனித விரோதக் கருத்துக்களே!! நந்தா எந்ததளத்தில் ஆவது முதாலிளித்துவ உறவுமுறைகள் சுரண்டல் உலகமயமாகிப்போதலின் விளைவுகளால் உள்ளநாடுகளில் ஏற்படுத்தபடும் யுத்தம் மூலதனத்தின் அதிகாரம்-இந்தஅதிகாரத்தின் மூலம் ஏற்படப்போகும் ஆபத்துக்களைப் பற்றி கதைத்தது கிடையாது.

    தேசம்நெற் வாசகர்களுக்காக ஒன்றை தெளிவுபடுத்து விரும்புகிறேன். இந்த உலக பொருளாதார பொறிவு-சமூகம் ஏதோ ஒருவிதத்தில் மந்தமடைந்து போன உணர்வுகள் உலகத்தின் எல்லா நாடுகளையும் பற்றிக் கொள்ளும். பாட்டாளிமக்களின் விரக்திகள் எழுச்சிகள் போர்குணங்கள் முதலில் இனமுரண்பாடாகவும் மதவெறியாகவுமே தோற்றம் கொள்ளும். மனிதநேயத்தை நேசிப்பவர்கள் மாக்ஸியவாதிகள் இதற்கெதிராக சளையாத போராட்டம் நடத்த வேண்டும். இதைத்தான் நான் வரலாற்றில்லிருந்து கற்றுக்கொண்டேன். நான் உலகத்தின் வரலாற்றுப் போக்கை விளங்கிக்கொண்டேன். நந்தா விளங்கிக் கொண்டது மதரீதியல் சிண்டுமுடிந்து தொழிலாளி- பாட்டாளிவர்க்கத்தை மோதவிட்டு இந்த முதாலித்துவ அமைப்பு முறையை பாதுகாப்பது. இது குட்டி முதாலித்துவ சிந்தனை அல்லாமல் வேறு எதுவாக இருக்கமுடியும். வர்க்க உணர்வுள்ளவன் தனது எதிரியாக முதாலிளித்துவ உறவையும் ஏகாதிபத்தியத்தையுமே எதிரியாக காண்பான். வத்திக்கானையும் மெக்காவையும் அல்ல.

    Reply
  • பல்லி
    பல்லி

    இந்த பெண்மீது சித்திரைவதை செய்த முதலாளியை இனம் காட்டுங்கள். அந்த இன தொழிலாளருக்கும் அதை நாம் தெரியபடுத்த வேண்டும், அதில் இங்கு யாருக்கும் வேறுகருத்தே கிடையாது, ஆனால் ஒருசில முதலாளிகள் செய்யும் தவறுகளை ஒரு இனம்மீதோ அல்லது அந்த நாடு மீதோ நாம் பதிவு செய்யும்போது குற்றவாளி தப்பவே வாய்ப்புகள் அதிகம், காரனம் ஒருவர் பிரச்சனை சமூக பிரச்சனையாக உருவெடுக்கும், சந்திரா சொன்னது போல் உலக பொருளாதார வீழ்ச்சி கண்டிப்பாக ஏழை தொழிலாளர் வர்க்கத்தையே போர்குணம் ஊட்டி முதலாளி வர்க்கம் வேடிக்கை பார்க்கும்;

    பல ஆண்டுகளுக்கு முன்பு வெட்டு புள்ளி சமாசாரத்தில் ஆரம்பித்த நமது போராட்டம் இன்றுவரை பாதித்தது ஏழைகளே; ஆனால் ஆரம்பித்த பலர் இன்று புலம்பெயர் தேசத்தில் பல ஆய்வாளர்களாக இருப்பது தெரியும், அவர்களே இன்று பல பிரிவினவாதம் பற்றி மறு ஒலிபரப்புக்கு தயாராகுகிறார்கள்? வெட்டு புள்ளியில் ஆரம்பித்த போராட்டம் ஒரு தலைமுறையை ஜந்தாம் வகுப்புவரை கூட படிக்க விடாமல் மாவீரர் ஆக்கிய வரலாற்றை படித்தவர்கள் அல்ல நாம், அனுபவித்தவர்கள். அதனால்தான் பிரிவினைவாதம் வேண்டாம் எண்கிறோம், அயோத்தியில் பிரிவினை வாதம் அணாநகரில் உயிர்சேதத்தை உருவாக்கியது நாம் கண்முன் கண்ட காட்சிகள்? இந்த 30 வருட சீரழிவு போதாதா எமக்கு, சந்திரராஜா எதை தன் உலக அரசியல் அறிவில் சொல்லுகிறாரோ அதையே நானும் என் கிராம வாழ்வின் அனுபவத்தில் சொல்லுகிறேன், ஆக கிராமமாக இருந்தாலும் உலகமாக இருந்தாலும் பிரச்சனையை உருவாக்குவது ஒரு சிலரே, உதாரனத்துக்கு இந்த பெண்ணின் பிரச்சனையில் சவுதிஅரேபியா மீது குற்றத்தை சுமத்துவதால் அந்த நாடே குற்றவாளியை காப்பாற்ற முற்படும் என்பது என்கருத்து, அதேவேளை குற்றவாளியை நாம் தனிமனிதனாக அடையாள படுத்தும் போது அந்த நாடே அவர் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புக்கள் அதிகம்; தவறு விடுவது தவறல்ல; தவறை நியாயபடுத்துவதே தவறு,

    Reply
  • nantha
    nantha

    P.V.Sri Rangan,
    உங்கள் கருத்துக்கு நன்றி. உங்கள் அனுபவம் உங்களைப் பேச வைத்துள்ளது. ஆனால் சிலருக்கு “சித்தாந்தம்” படிக்க முடிகிறது. உலகத்தில் என்னநடக்கிறது என்பதைப் படிக்கக்கூட முடியவில்லை. அதன் வெளிப்பாடுகளைத் “தேசம்”நெற்றில் காண முடிகிறது!

    ———
    //இந்த உலகத்தில் நந்தாவுக்கு தெரிந்த மக்கள் விரோதிகளும் எதிரிகளும் பாதிரிகளும் வத்திக்கானுமே! இன்று மெக்காவும் முஸ்லீமாக மாறியிருக்கிறது. என்பார்வைக்கு இதுவெல்லாம் மனித விரோதக் கருத்துக்களே!! நந்தா எந்ததளத்தில் ஆவது முதாலிளித்துவ உறவுமுறைகள் சுரண்டல் உலகமயமாகிப்போதலின் விளைவுகளால் உள்ளநாடுகளில் ஏற்படுத்தபடும் யுத்தம் மூலதனத்தின் அதிகாரம்-இந்தாதிகாரத்தின் மூலம் ஏற்படப்போகும் ஆபத்துக்களைப் பற்றி கதைத்தது கிடையாது.// chandran-raja

    முதலாளித்துவ உறவு முறைகள், சுரண்டல் என்று கூறும் சந்திரன் அந்த முதலாளித்துவத்தின் தூண்களான வத்திக்கானும் மெக்காவும் பற்றி அறியாமல் உள்ளது உண்மையா அல்லது வெறும்நடிப்பா?

    இந்துக்கள் அனைவரும் கிரிஸ்தவர்களாகிய பின்னர் அல்லது முஸ்லிமாகிய பின்னர்தான் “புரட்சி” வரும் என்று சொல்லுகிறாரா?

    எங்களுடைய பிராந்தியங்களில் “இந்துக்களும்” பெளத்தர்களுமே மார்க்சிஸிஸ்டுகளாக மாறிய வரலாறு உண்டு. தப்பித்தவறிக் கூட ஒரு கத்தோலிக்கனோ, கிறிஸ்தவனோ, முஸ்லிமோ மார்க்சிஸிஸ்ட் ஆகிய கதைகளைக் காணவில்லை.

    மார்க்ஸிய புரட்சி நடந்த நாடுகளில் முதலில் கிரிஸ்த கோவில்களுக்குத்தான் சீல் வைத்தார்கள். சந்திரன் பாஷையில் மா சே துங், பிடல் காஸ்ட்ரோ போன்றவர்கள் சமூக விரோதிகள்தான்!

    வர்க்க உணர்வு பற்றியும், முதலாளித்துவ உறவுகள் பற்றியும் கூறும் சந்திரனுக்கு அந்த “உறவுகளின்” அட்டகாசங்களை எழுதுவது பிடிக்காததன் நோக்கம் என்ன?

    பாதிரிகளும் புலிகளும் முதலில் வேட்டையாடி நரபலி கொண்டது “தமிழ்” இடதுசாரிகளையும், மார்க்சிஸ்டுக்களையும் என்ற சமீபத்து வரலாறு கூட சந்திரனுக்கு தெரியாமல் வத்திக்கானுக்கும், மெக்காவுக்கும் வக்காலத்து வாங்கி “தொழிலாளர்” புரட்சி கொண்டு வர சந்திரன் நினைப்பது தொழிலாள வர்க்கத்தையே கேவலப்படுத்தும் செயலாகும்!

    மார்க்சியத்தினை “ஜென்ம” விரொதிகளாகப் பார்க்கும் கிறிஸ்தவ/கத்தொலிக்க, இஸ்லாம் மதங்ளை ஆதரித்துக் கொண்டு சந்திரன் எந்த “மார்க்ஸியம்” பற்றி இங்கு கதைக்கிறார்?

    Reply
  • nantha
    nantha

    புலிகளைக் கொன்றது சரியா பிழையா என்று ஆராயும் “உலக” மனித உரிமைக்காரர்கள் எவரும் இந்த “ஆரியவதி” விஷயத்தில் “சத்தமே” காட்டாமல் இருப்பது ஏன்? அமெரிக்காவும், சவுதி அரபியாவும் “நண்பர்கள்” என்ற காரணமா?

    Reply
  • chandran.raja
    chandran.raja

    மதங்களை அரசியல்லிருந்து அப்புறப்படுத்துங்கள். இதை பலமுறை இத்தளத்தில் சொல்லிவிட்டேன். இதை தேசம்நெற் சீனியர் வாசகர்ரான பல்லிகூடா ஆமோதித்திருக்கிறார். இங்கு நாம் எந்த மதத்திற்கும் ஆதரவு வழங்கவில்லை. ஆனால் அதை நம்பியிருக்கும் கோடானகோடி பாட்டாளிகளுக்கு புதைகுளிகளை காட்டிவிடாதீர்கள் என்பதே எமது ஆதங்கம்.

    நந்தா! தயவு செய்து இரண்டு கேள்விகளுக்கு விடை அளியுங்கள். முதாலித்துவத்தின் தூணகள் வத்திக்கானும் மெக்காவும் என்பதில் எனக்கு எள்ளவும் சந்தேகம் இல்லை. உங்கள் வாதம் தூண்னை உடைக்கப் போகிறீர்களா? இல்லை இந்த அத்திவாராத்தையே பெயர்கப்போகிறீர்களா என்பதே!.
    இரண்டாவது இலங்கை நாகரீகத்திற்கு இந்த உலகம் பின்தொடர வேண்டுமா? இல்லை உலக நாகரீகத்திற்கு இலங்கை பின்தொடர வேண்டுமா? 1905-ம் ஆண்டு ஜார்மன்னனின் யதேச்சதிரிகாரத்கெதிராக அங்குள்ள தொழிலாளரை அணி திரட்டி சென்பீர்ரஸ் பேக்கில் உள்ள பாதிரியாரே தலைமைதாங்கி சென்றார் என்பதை உங்ககளுக்கு நினைவூட்டுகிறேன். இந்த பாதிரியாருக்கு பிறகே ருஸ்யதொழிலாளி வர்க்கம் ரொஸ்கியையும் லெனினயையும் கண்டுகொண்டார்கள்.
    வத்திக்கானுக்கும் மெக்காவுக்கும் எதிராக யாரை அணிதிரட்டப் போகிறீர்கள்?. கற்பனையாக அப்படிமுடிந்தாலும் முதாலிளித்துவம் வாழ்ந்து கொண்டேயிருக்கும்.இந்த உலகில் முதாலித்துவம் அழியும் போது வத்திக்கானும் மெக்காவும் இருந்த இடம் இல்லாது போகும். இதுவே! நந்தாவுக்கும் சந்திரன்.ராஜாவுக்கும் உள்ள தத்துவார்த்த பிரச்சனை.

    Reply
  • தாசன்
    தாசன்

    //..அதற்காக முழு முஸ்லீமையும் குற்றக் கூண்டில் ஏற்றவில்லை! ஏனெனில் யாழ்ப்பாண வியாபாரி அவர்களைவிட ஏமாற்றுபவன் என்பது எனது அனுபவம்…// P.V.Srirangan
    முழு முஸ்லிமை குற்றக்கூண்டில் ஏற்றமாட்டாராம். ஆனால் ஒட்டுமொத்த யாழ்ப்பாண வியாபாரரியை ஏற்றுவாராம். வாழ்க! யாழ்ப்பாணத்தான் அப்ப்படி இப்படி என ஏதாவது எழுதினால் மட்டுமே உங்களை மாற்றுக்கருத்து மாக்கிசம் என கீபோட்டில் விளையாடும் கோஷ்டி மதிக்கும் இல்லையா? வாழ்க!

    //…மதங்களை அரசியல்லிருந்து அப்புறப்படுத்துங்கள். இதை பலமுறை இத்தளத்தில் சொல்லிவிட்டேன்…..//
    அதனை ஸ்ரீலங்காவின் (சோசலிச சமதர்ம ஸ்ரீலங்கா) அரசியல் அமைப்புச் சட்டத்தில் இருந்து ஆரம்பிக்கலாமே சந்திரன் ராசா?

    Reply
  • palli
    palli

    எனக்கு மார்க்ஸ்சிசம் தெரியாது ஆனால் மார்க்ஸ்சிசம் தெரிந்தவர்களின் கருத்துபடி என்றும் மார்க்ஸ்சிசம் மக்கள் வாழ்வையே கருத்தில்
    கொண்டுள்ளது என்பது என் கருத்து; ஆனால் நந்தாவின் எதிரிகளான அமெரிக்காவும்; வாத்திகானும்; மெக்காவும்: என்றுமே மக்கள் நலன்பற்றி சிந்திக்கவில்லை என்பதில் எனக்கும் கருத்து வேறுபாடில்லை, ஆனால் இந்த மக்கள் என்பதில் வத்திக்கான் அமெரிக்க மெக்கா மக்களும் அடங்குவார் என்பதே என் கருத்து, அந்த மக்களுக்காகவே எம் கருத்து போராட்டம், நன்றி சந்திரா எனக்கு பல பட்டங்களை கொடுத்த நீங்களே என்னை தேசத்தின் சீனியர் வாசகர் என்னும் தகுதியையும் கொடுத்ததுக்கு; உன்மையிலேயே மக்கள் பற்றி சிந்திக்கும் எவராயினும் யார் மீதும் கோபம் கொள்ள முடியாது என்பதுக்கு பல்லியும் சந்திரராஜாவும் ஒரு எடுத்து காட்டு, அரசியலில் நிரந்தர எதிரியோ அல்லது நண்பர்களோ இல்லை என்பது வாக்கு, அதுவே தொளிலாளர் நலன்பற்றி சிந்திப்பவர்களிடமும் கருத்து முரன்படுமே தவிர வன்முறை சிந்தனை இருக்காது, நந்தாவுடன் கூடி பயணிக்க என்னால் முடியவில்லை காரணம் அவருடன் உள்ள தனிப்பட்ட பகை அல்ல, அவரது கருத்து முரண்பாடே; ஆனால் அவர் நாளை ஒரு இந்த சமூகத்துக்கு ஒரு சரியான வழி காட்டுவாரேயானால் அவருக்கு முதல்கரம் பல்லியின் உதவிகரமாகவே இருக்கும்; தயவுசெய்து நந்தா மட்டுமல்ல யாரேனும் பிரிவினை வாதம் செய்யாதீர், அதை தாங்க எம் சமூகத்தால் முடியாது முடியாது, நாம் வீழ்ந்தவர்கள் மேலே வர யாராவது உதவி கை வேண்டும்; ஆகையால் யாரையும் பகமை கொள்வது சரியல்ல என்பதே பல்லியின் அனைத்து பின்னோட்டமும்;

    Reply
  • theva
    theva

    ஒரு திறந்த பொருளாதாரத்தின் சீரழிவு எத்தகைய வடிவம் கொண்டு மனித வாழ்வை கொடுமைப்படுத்துக்கின்றது என்பதற்கு ஆரியவதிக்குமேல் நடாத்தப்பட்ட வன்முறைகளே சிறந்த உதாரணங்கள்.இந்த 21வது நுற்றாண்டிலும் தொழில்புரிவோர் அடிமைகளாக நடாத்தப்படுவதை நிறுத்த முடியவில்லையே. இலங்கைஅரசு அவ்வாறு அனுப்பும் தொழிலாளர்பற்றி எந்தளவு கரிசனை எடுக்கிறது? தொழில் பாதுகாப்பை இவர்களுக்கு ஏற்படுத்திகொடுப்பது அரசின் கடமை.
    உடல்உழைப்பை கேவலமாக எடைபோடல் எல்லா பண-சாதி திமிர்பிடித்த மனிதர்களிடமும் வாழுகிறது. இந்த குரூரத்தை அழிக்க சட்டங்கள் மூலம் முடியும். அதுவும் சட்டத்தை அமுலாக்கும் அரசாலுமே முடியும். பண-சாதி திமிர் பயங்கரவாதத்தை ஒழிக்க இந்த உலகம்-மனிதம் என்ன செய்யபோகிறது?
    தேவா

    Reply
  • nantha
    nantha

    வத்திக்கானும், மெக்காவும் முதலாளித்துவத்தின் தூண்கள் என்று ஏற்றுக் கொள்ளும் சந்திரன், அங்கிருந்து விடப்படும் ஆணைகளை செயல்படுத்தும் இலங்கையர்களை என்ன செய்ய உத்தெசிதுள்ளீர்கள்? தமிழீளம் என்று பாதிரிகள் அடித்த கூத்துக்களை எப்படிநியாயப் படுத்தப் போகிறீர்கள்?

    ரஷ்ய பாதிரிகள் வத்திக்கனுக்கு வக்காலத்து அல்ல என்பதும் அவர்கள் ஓர்தொடக்ஸ் கிறிஸ்த பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதும் இலங்கையில் அந்த கிறிஸ்த பிரிவினர் இல்லை என்பதும் தெரியாதா?

    ஜோசப் ஸ்டாலினே பாதிரியாக இருந்தவர் என்பதை அறிந்து கொள்வது நல்லது. ஆனால் அவர் பாதிரி உடையில் வந்து மார்க்ஸிசம் பேசவில்லை.

    நீங்கள் சொல்லும் “ரஷ்ய” பாதிரியாரின் பெயரை விளம்பினால் உபயோகமாக இருக்கும்!

    இலங்கையில் இந்து மதநம்பிக்கையுள்ள தமிழர்கள் அதிகம். அவர்களை “புதை குழிக்குள்” தள்ளலாம் என்பது உங்கள் வாதம்!

    முதலாளித்துவம் அழியும் என்று சொல்லும் நீங்கள் அது எப்படிநடக்கும் என்பதை சொன்னால் நல்லது. கடவுள் கிருபையால் நடக்கும் என்று நீங்கள் நம்புவதாகவே எனக்குத் தெரிகிறது.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    தாசன். இப்படியான எண்ணங்களே! எம்மில் பலரிடம் இருந்து வெளிப்படுபவை. முதலில் “சிறீலங்காசமதர்ம அரசு” என்ற அபிப்பிராயத்திலிருந்து விடுபட முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு தற்போதைக்கு அதுவே முக்கியமானது.

    தேவா..ஒப்பந்த அடிப்படையில் மத்தியகிழக்கு நாடுகளுக்கு போகிறவர்கள் பல கொடுமைகளை சந்திக்கிறார்கள். ஆரியவதி ஆணிகளோடு ஆவது திரும்பிவந்தா. சிலர் பிணமாகவும் திரும்பிவருகிறார்கள். இதில் விசித்திரமான விஷயம் என்னவென்றால் ஒருசிலருக்கு உடம்பில் உள்ளுறுப்புகள் இருப்பதில்லை.இதை களவாடுவதற்காகவே கொலைசெய்யப் பட்டார்களோ! என்று சந்தேகப்படுவதிலும் நியாயம் இருக்கிறது.
    ஆரியவதியின் விஷயத்தில் வேலைவாங்குவதற்காக கொடுமைப் படுத்தினார்கள் என்று எண்ணத்தோன்ற வில்லை. “கொடுமைப்படுத்தி இன்பம் அனுபவத்தில்” என்ற பொழுதுபோக்கிற்காகவே ஒப்பந்தயடிபடையில் வேலைக்கு அமர்த்தியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். இந்த சித்திரைவதையில் முழுக் குடும்பமும் ஈடுபட்டிருந்திருக்கிறது.எப்படியிருந்தாலும் இந்த வழக்கை இருபகுதியும் சேர்ந்து மூடிமறைத்துவிடுவார்கள். உறங்கவிடலாகாது.

    பல்லி..மாக்ஸியத்தை பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளாதீர்கள். மனிதநேயம் தான் மாக்ஸியம். மாக்ஸ் இதற்கு தத்துவார்த வழிமுறைகளை வரைந்து அதுபோல வாழ்ந்ததும் தான் அவர் மனிதகுலத்தின் மாமேதையாக ஆகியிருக்கிறார். இவ்வளவு காலமும் சொல்லமுடியாத ஒன்றை உங்களுக்கு சொல்லுகிறேன். மாக்ஸியம் இல்லாத மாக்ஸியவாதி என்றும் உங்களை நினைப்பதுண்டு. இது புகழ்ச்சிக்காக இல்லை.

    Reply
  • BC
    BC

    சந்திரன் ,உங்கள் பின்னோட்டங்களை நான் விரும்பி படிப்பவன். ஆனால் தொழிளாளி, மதம் என்கிற விடயங்கள் வரும்போது வர்க்கம் என்று எல்லாம் போட்டு குழப்புவீர்கள். ஆரியவதி என்ற தொழிலாளிக்கு மதத்தில் புனிதமான சவூதி அரேபியாவில் தான் உடலில் ஆணிகள் அடிக்கப்பட்டன. ஆனால் கனடா, ஐரோப்பா போன்ற ஐனநாயக நாடுகளில் உள்ள தொழிலாளிகள் இந்த செய்தியை இப்படியும் ஒருகொடுமை நடக்குமா என்று வியக்கும் நிலையில் உள்ளனர். இது தான் உண்மையான நிலமை.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    பாதிரிகள் அடித்த கூத்துகளைவிட புலம்பெயர் பத்துலட்சம் தமிழர்கள் அடித்த கூத்துக்களும் அவர்கள் அளித்த பொருளாதர பலமுமே ஒருவிடுதலைப் போராட்டம் பயங்கரவாத நடவடிக்கைக்கு இட்டு சென்றது என்பதை உளரீதியாக தாங்கள் உணருவதால் மட்டுமே உண்மைகளை கண்டறியவும் மதவிரோதப் போக்கிலிருந்தும் உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளவும்முடியும்.நந்தா!. தூண்களை எப்படி?
    உடைக்கப் போகிறீர்கள்? என்று நான் கேட்டகேள்வியை நீங்கள் மறந்துவிட்டு மறைத்துவிட்டு என்னை கேள்வி கேட்க தொடங்குகிறீர்கள். இது என்ன நாகரீகம்? இருந்தாலும் சொல்லுகிறேன். மூலதனத்தின் பகையாளரே கூலிஉழைப்பாளர் தான். உலகத்தில்லுள்ள ஒவ்வொருநாடும் தன்பகையாளரை கொண்டிருக்கிறது அல்லது அடிவயிற்றில் நெருப்பை கட்டிவைத்திருக்கிறது. சர்வதேச தொழிலாளர் ஐக்கியமே இந்த முதாலித்துவத்திற்கு சவக்குளி தோண்டிவைக்கும். இந்த கருத்தையும் திசைதிருப்பி வேறுதளத்திற்கு கொண்டு செல்லாமல் இருக்க கவனம் செலுத்துங்கள்.

    Reply
  • rajan
    rajan

    இலங்கைப் பணிப்பெண்ணான ஆரியவதியை உடலில் ஆணியறைந்து துன்புறுத்திய தம்பதியர், சவுதி அரேபிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
    இலங்கைப் பணிப்பெண் மீது 24 ஆணிகளை அடித்துக் கொடூரமாகத் துன்புறுத்தியதாக கூறப்பட்டு, மேற்படி தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இவர் பணிபுரிந்த வீட்டுச் சொந்தக்காரரான 35 வயது ஆணையும் 29 வயதான அவரது மனைவியையுமே இவ்வாறு சவுதி அரேபியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

    கைது செய்யப்பட்ட தம்பதியினர் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    கடந்த 28 ஆம் திகதி பாதிப்புக்குள்ளாகிய பெண்மணிக்கு நியாயம் பெற்றுத் தருமாறு இலங்கைத் தரப்பு, சவுதி அரேபியாவிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

    குறித்த பெண் வாக்குமூலம் அளிப்பதற்காக சவுதி அரேபியா செல்வார் எனவும் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் இலங்கை வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

    Reply
  • rajan
    rajan

    look here this link what are they doing.
    மலேசியா தமிழ் இளைஞர்கள் சிலர் கார் தரிப்பிடத்தில் பட்ட பகலில் பாடசாலை மாணவிகளிடம் அநாகரிமாக நடந்து கொண்டுளனர் http://www.youtube.com/watch?v=p3Vyibqz61I&feature=player_embedded

    Reply
  • Kusumpu
    Kusumpu

    சந்திரன் ராஜா! நந்தா ஏன் நிஸ்தாரை இழுக்கிறார் என்று கேட்டீர்கள் காரணம் இருக்கிறது சவுதி தான் முஸ்லீம்களின் புண்ணிய பூமி. பின்லாடனின் தேசம். இஸ்லாத்தின் அஜாரகங்களை புனிதப்படுத்த முயலும் நிஸ்தாரைக் கேட்காது இந்துக்களை அல்லது கிறீஸ்தவர்களையா கேட்க முடியும். இதை ஒரு தனிமனிதனுடைய பெண்வதை என்று எழுத்துக் கொண்டாலும் அந்த நாட்டை நம்பிவந்த பெண்ணுக்கு அந்த இஸ்லாமிய நாடு என்ன பாதுகப்புக் கொடுத்தது. சரி சத்திரசிகிட்சையாவது செய்ததா? ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறுதான் பதம்.
    சந்திரன்: தமிழ்மக்கள் கொலைவதைகள் போரில் நடந்தவை சகஜமானவை என்று நாம்விடவில்லை அதைக் கண்டிக்காதவர் யார் உள்ளார்கள்?
    பல்லி: நீங்கள் சொல்வதுபோல் ஒரு தனிமனிதப்பிரச்னையை ஒரு சமூகத்தின் மேல் போடுவது நியாயம் இல்லை என்பதை நான் மறுக்கவில்லை. இது ஒருசவூதிப் பெண்ணுக்கு நடந்தாலோ அதே செயல் ஈராக்கில் முக்கியமாக ஈரானில் நடந்தால் அந்த அரசை மொட்டையடிக்க ஐரோப்பிய அமெரிக்க அரசுகள் பக்கம் பக்கமாக எழுதிக் கிளிப்பார்கள். இந்த ஆரியவதி என்பவர் தமிழர் இல்லாவிட்டாலும் எம்தேசத்தைச் சேர்ந்தவர். இன்னொரு நாட்டுப் பெண்ணுக்கு நடந்த குற்றவியல் சம்பவத்துக்கு சவுதி பதில் சொல்லியே ஆகவேண்டும். இதுதான் சர்வதேசச்சட்டம். இதை ஒரு தனிமனிதப் பிரச்சனையாகப் பார்க்க முடியாது.

    Reply
  • nantha
    nantha

    தூண்களை உடைக்க பாதிரிகளைப் பாதுகாக்க வேண்டும் என்பது உங்கள் கருத்து. தூண்கள் உடைகின்றனவோ இல்லையோ மக்களின் சாதாரண வாழ்வு முறை அமைதியாக இருக்க வேண்டும்! இந்துக்கள் “புரட்சி” வேண்டும் என்றால் அவர்கள் முதலில் அமைதியாக சிந்திக்க வேண்டும். தமிழீழம் தருகிறேன் என்று பாதிரிகள் சொல்லி யாருக்குச் சேவகம் செய்தனர் என்பதை மறக்க முயலும் சந்திரன் தொழிலாளர் ஐக்கியம் என்ற கோஷத்தை யாருக்கு வைக்கிறீர்கள்?

    மத விரோதத்தை வளர்க்கும் பாதிரிகளைப் பற்றி மவுனம் காத்து அல்லது பாதுகாத்து “தூண்களை” உடைக்க முடியாது. எங்கள் சமூகத்திலிருக்கும் எகாதிபத்திய எஜன்டுகளான பாதிரிகளைப் பாதுகாத்து “தொழிலாளி” ஐக்கியம் எப்படிக் கொண்டு வர முயலூகிறீர்கள் என்பதைத் தெளிவு படுத்திவிட்டு “தூண்” உடைக்கும் பிரச்சனைகளுக்குப் போகலாம்!

    வெளினாட்டுததமிழர்கள் என்பதில் உலகத் தமில் பேரவைநடத்தும் இம்மானுவல் பாதிரியை என்ன செய்யப் போகிறீர்கள்?

    தொழிலாள வர்க்கத்துக்கு எதிரான வத்திக்கானின் அடியாட்களாக செயல்படும் பாதிரிகளை பாதுகாத்து அல்லது அவர்களுக்கு வக்காலத்து வாங்கி “தொழிலாள” ஐக்கியம் காக்க சந்திரன் முயலுகிறார். அது எப்படி என்று விளக்கினால் நல்லது.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    பி.சீ அவர்களே! தனிப்பட்ட முறையில் தாங்கள் எனக்கு விளக்கம் தந்ததிற்கு நன்றி. பார்ப்பதும் படிப்பதும் கேட்பதும் கருத்துச் சொல்வதும் “வர்க்கரீதி”யாக ஆய்வு செய்கிற பழக்கம் இல்லையேல் உங்கள் பார்வையில் பழக்க தோஷமாகவும் எனவும் எடுத்துக் கொள்ளலாம். இதுவே எனது வாழ்வின் பெருமை என்றும் கருதுகிறேன். இதில் இருந்து இம்மியளவும் நான் இறங்கப் போவதில்லை. முதலில் உங்களுக்கு “வர்க்கஉணர்வு” என்ன என்பதைப்பற்றி தெரியுமா? தனக்கு நேர்ந்தது மற்றவர்களுக்கு நேரக்கூடாது சிலர் சொல்வதை கேள்விப் பட்டிருப்பீர்கள். அதேதான். இந்த எண்ணம் மனிதருள் அடக்கியொடுக்கப் பட்டமக்களிடம் இருந்தே வருவது. இவர்கள் இனத்தாலோ மதத்தாலோ மொழியாலே நிந்திக்கப்படுவதில்லை. மனிதரில் மேலடுக்கில் உள்ள மனிதனாலேயே நிந்திக்க படுகிறர்கள். மனிதன் பணத்தாலேயும் இனத்தாலேயும் மதத்தாலேயும் சாதியாலேயும் பிரித்து வைப்பதை எதிர்த்து அவர்களும் மனிதருக்குள் மனிதனாக உள்ளுளீத்துக் கொள்வதற்கான போராட்டமே! வர்க்கப்போராட்டம். முதலில் இந்த பிரிவினைவாதிகள் இனம் காட்டப்படல் வேண்டும். இத்தளத்தில் இன்று முண்ணனியில் நிற்பவர் திரு.நந்தா அவர்கள். குசும்பு! உங்கள் நிலையறிகிறேன். நானாக இருந்தால் வேறுமுறையில் அனுகியிருப்பேன்.நன்றி.

    Reply
  • palli
    palli

    //சவுதி தான் முஸ்லீம்களின் புண்ணிய பூமி. பின்லாடனின் தேசம்//
    இதென்ன புதிய தகவல்; ஓ புலிகள் தான் தமிழர் தமிழர்தான் புலிகள் என்பது போல் பின்லாடந்தான் முஸ்லீம் முஸ்லீம்தான் பின்லாடன் என சொல்ல வருமாபோல் உள்ளது, நேற்று கஸ்ரோவின் அறிக்கையில் பின்லாடனும் புஸ் மிக நெருங்கிய நண்பர்கள் என்பதை ஊடக சாட்சியுடன் சொல்லியுள்ளார்;

    // ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறுதான் பதம்.//
    இதை எமது நாட்டில் ஒரு கல்வியாளர் மலயகசிறுமியை வருடகணக்கில் வைத்து ஏதோ செய்ததாக ஒரு செய்தி வந்ததே நினைவு இருக்கிறதா?? அப்படியாயின் அந்த தனிமனிதர் செயலுக்காக குசும்பு என்ன செய்தார் என நான் கேக்கமாட்டேன், ஆனாலும் அன்றும் அவரை பல்லி பதம் பார்த்தேன்,

    // பல்லி: நீங்கள் சொல்வதுபோல் ஒரு தனிமனிதப்பிரச்னையை ஒரு சமூகத்தின் மேல் போடுவது நியாயம் இல்லை என்பதை நான் மறுக்கவில்லை. இது ஒருசவூதிப் பெண்ணுக்கு நடந்தாலோ அதே செயல் ஈராக்கில் முக்கியமாக ஈரானில் நடந்தால் அந்த அரசை மொட்டையடிக்க ஐரோப்பிய அமெரிக்க அரசுகள் பக்கம் பக்கமாக எழுதிக் கிளிப்பார்கள். இந்த ஆரியவதி என்பவர் தமிழர் இல்லாவிட்டாலும் எம்தேசத்தைச் சேர்ந்தவர். இன்னொரு நாட்டுப் பெண்ணுக்கு நடந்த குற்றவியல் சம்பவத்துக்கு சவுதி பதில் சொல்லியே ஆகவேண்டும். இதுதான் சர்வதேசச்சட்டம். இதை ஒரு தனிமனிதப் பிரச்சனையாகப் பார்க்க முடியாது.//
    உங்களை விட நான் துடிக்கிறேன், இதுக்காக எழுதபட்ட கட்டுரையில் அந்த பெண் வலி மறைந்து மதம் என்னும் அழகு முன் நிற்பது உங்களுக்கு புரியவில்லையா என்பதே சந்திரராசாவின் வலியோ அல்லது வாதம் என்பதே பல்லியின் நிலைபாடு, குசும்பு , ராசனின் பின்னோட்டத்தை கவனிக்கவும்,

    //இதை ஒரு தனிமனிதப் பிரச்சனையாகப் பார்க்க முடியாது.// இதில் கருத்து முரன்பாட்டுக்கே இடம் இல்லை, ஆனால் அதை மதவாதிகள் மதபிரச்சனையாக மாற்றவும் கூடாது அதுக்கு நீங்கள் துணைபோகவும் கூடாது

    // சந்திரன் தொழிலாளர் ஐக்கியம் என்ற கோஷத்தை யாருக்கு வைக்கிறீர்கள்?// கண்டிப்பாக புலம்பெயர் தமிழருக்காய் இருக்காது; காரணம்
    பல்லி இருந்து நந்தாவரை குட்டி முதலாளிகளே; ஆகவே அவரது கோரிக்கை எம் உறவுக்களுக்காய்தான் இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை;

    //மத விரோதத்தை வளர்க்கும் பாதிரிகளைப் பற்றி மவுனம் காத்து அல்லது பாதுகாத்து “தூண்களை” உடைக்க முடியாது.// இருக்கட்டும் ஆனால் வத்திக்கான் பாட்டுபாடி வன்னி அவலத்தை நீக்க முடியாது என்பது தெரியுமோ??

    //தொழிலாளி” ஐக்கியம் எப்படிக் கொண்டு வர முயலூகிறீர்கள் //
    நந்தாவும் குசும்புவும் போல்;
    பல்லியும் சந்திராவும் போல்;
    தேசமும் பின்னோட்டமும் போல்:
    ஏன் ஓபாமாவும் அமெரிக்காவும் போல் எனகூட சொல்லலாம் என்பது பல்லியின் கருத்து;

    //வெளினாட்டுததமிழர்கள் என்பதில் உலகத் தமில் பேரவைநடத்தும் இம்மானுவல் பாதிரியை என்ன செய்யப் போகிறீர்கள்? //
    நந்தா வெங்காயத்தை உரித்தால் உரித்துக்கொண்டே இருக்கலாம்; அதை எமது மனகணக்கில் நிறுத்த வேண்டும்; என்பதுபோல் சில விடயங்களை அளவுடன் நிறுத்த வேண்டும், அப்படிதான் இமானுவலும்;

    //தொழிலாள வர்க்கத்துக்கு எதிரான வத்திக்கானின் அடியாட்களாக செயல்படும் பாதிரிகளை பாதுகாத்து அல்லது அவர்களுக்கு வக்காலத்து வாங்கி “தொழிலாள” ஐக்கியம் காக்க சந்திரன் முயலுகிறார். அது எப்படி என்று விளக்கினால் நல்லது.//
    வாத்திக்கானே தெரியாத தொளிலாளர் உள்ளனர் என்பதை நந்தா புரியும்வரை தொளிளாளர் பிரச்சனை இப்படிதான் உதவிமெய்யெழுத்தாக தடம் புரளும்;

    //இதில் இருந்து இம்மியளவும் நான் இறங்கப் போவதில்லை//.
    சரியோ தவறோ தன் கருத்தில் நம்பிக்கை வேண்டும்; அது சந்திராவிடம் தாராளமாகவே உள்ளது என்பதை பலதடவை நான் கண்டிருக்கிறேன்; இது மனிதனாய் பிறக்கும் அனைவருக்கும் வேண்டும்;

    //பிரிவினைவாதிகள் இனம் காட்டப்படல் வேண்டும். இத்தளத்தில் இன்று முண்ணனியில் நிற்பவர் திரு.நந்தா அவர்கள்//
    இதில் பல்லி முழுமையாக உடன்படுகிறேன், தேவையேற்படின் ஆதாரங்களை அடுக்கவும் பல்லி தயார்,

    ஒரு சிறுகுறிப்பு தவறாயின் மன்னிக்கவும்; ஒரு மனிதன் அவன் மனைவி தரும் சாப்பாட்டை நம்பிக்கையுடன் உண்பதுபோல் சக மதத்துடனும்
    நாம் இருக்க வேண்டும், மற்றவர்கள் அப்படி இருக்கவில்லை என சந்தேகபடுவதை விட நாம் அப்படிதான் இருக்க வேண்டும் என உறுதியுடன் இருந்தால் நாட்டையோ அல்லது ஊரையோ திருத்த முடியாவிட்டாலும் எமது சுற்றுபுற சூழலை உருவாக்க முடியும் என்பது எனது அனுபவம்,
    நட்புடன் பல்லி;

    Reply
  • nantha
    nantha

    மனிதம் பற்றி பேசியவர்கள் “ஆரியவதியின்” ஆணியடிப்பு பிரச்சனையில் இப்போது “பாதிரிகளைக்” காப்பாற்றி “உத்தம புத்திரர்களாக” முற்பட்டிருப்பது எதிர்பார்த்த விஷயம்தான்.

    சவுதி அரபிய முஸ்லிம் கலாச்சாரத்தில் பெண்களுக்குரிய ஸ்தானம் என்ன என்பது பற்றியோ, முஸ்லிம் மதத்தில் மற்றைய மதத்தைச் சேர்ந்தவர்கள் எப்படி மதிக்கப்படுகிறார்கள் என்பது பற்றியோ சிறிதும் அறியாத அல்லது அறிய விரும்பாத இந்த “மனிதநேயக்காரர்கள்” தாங்கள் தமிழர்களின் ஏக பிரதினிதிகள் போல கதைக்க முற்பட்டிருக்கிறார்கள்.

    தொழிலாளி வர்க்க ஐக்கியம் பேசும் சந்திரன் திடீரென்று ஒரு “பல்டி” அடித்து அந்த தொழிலாள வர்க்கத்தின் எதிரிகளை பாதுகாக்க வந்து குரல் கொடுக்கிறார். பல்லியோ வழக்கம் போல “நந்தா” எதிர்ப்பு. இலங்கையில் பிரிவினை கோரிய பல்லி இப்போது நந்தா பிரிவினை என்பது வேடிக்கையான விஷயம். பிரிவினைக்குத் துணை போன பாதிரிகளின் “வக்காலத்தான” பல்லி “பிரிவினை” என்று நந்தா பக்கம் கை காட்டி வழக்கம் போல தமாஷ்!

    வத்திக்கானுக்கும் தொழிலாளருக்கும் என்ன சம்பந்தம் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் பாதிரிகள் வத்திக்கானின் ஏவல் படைகள் என்பது உலகம் முழுவதும் தெரிந்த விஷயம். அது மாத்திரமல்ல “தொழிலாள சக்திகளினதும்” பரம எதிரி என்பதும் உலகம் முழுவதும் தெரிந்த விஷயம்.

    நிகராகுவா சன்டினிஸ்டா தொழிலாளர் புரட்சியை எதிர்த்த அல்லது கியூபாவின் தொளிலாளர் வர்க்கப் புரட்சியை இன்றும் எதிர்க்கும் வத்திக்கானின் பிரச்சனைகள் தெரியாத சந்திரனும் பல்லியும் தொழிலாளர் ” ஐக்கியம் மனிதநேயம், மார்க்ஸிசம்” என்று யாருக்குக் காது குத்த முற்பட்டிருக்கிறீர்கள்?

    யாழ்ப்பாணத்தில் புலிகள் முதலில் வேட்டையாடியது “தொழிலாள” ஐக்கியம் பேசியவர்களை என்பது எப்படி இவர்களின் கண்களில் இன்றும் படாமல் உள்ளது?

    ஐரோப்பா போனதும் “நன்றிக்காக” அவர்களின் பிரச்சாரம் பரப்புபவர்களாக மாறியவர்களுக்கு பாதிரிகளுக்காகக் கதைப்பதைத் தவிர வேறு மார்க்கம் இல்லை!

    Reply
  • chandran.raja
    chandran.raja

    ரஷியபாதிரியாரின் பெயரைக் கேட்கிறார்? நந்தா. அவருடன் தொலைபேசி தொடர்பே இமெயிலோ தொடர்பு கொள்ளமுடியாது என்று நந்தாவுக்கு வடிவாகத்தெரியும். முடிந்தால் அவர் கல்லறைக்கு பூச்செண்டு வைத்து வணக்கம் தெரிவிக்கலாம். அல்லது ஜேர்மனியில் இடைக்கிடை நவ-நாசிகள் செய்வது போல் யூதர்களின் கல்லறைகளை அலங்கோலப்படுத்தி சிதைத்துவிடலாம் அதுவும் இல்லையேல் விபரம் தந்தவர்க்கு எதிராக சேறடிப்பு வேலைகளில் ஈடுபடலாம் இதில் எதை தெரிவு செய்யப் போகிறார் நந்தா என்பதை இருந்து பார்ப்போம்.

    நெடுங்காலமாக அரசியல் நித்திரையில் ஆழ்ந்திருந்த ரஷ்சியமக்கள் 1905 ஆண்டில் விழித்தெழுந்து ஜார் கொடுங்கோன்மையை எதிர்த்து செயலில் இறங்கினார்கள். அதேஆண்டு ஜனவரியில் தலைநகர் பெட்ரோகிராட்டில் பாட்டாளிமக்களின் ஒரு மாபெரும் பேரணி ஜனநாயக உரிமைகோரி ஜாரின் அரண்மனை நோக்கி சென்றது காபென் என்னும் பாதிரியார் பேரணிக்கு தலைமை தாங்கினார். ஜாரின் கட்டளைக்கேற்ப பேரணியில் திரண்ட மக்கள்மீது துப்பாக்கி பிரயோகம் செய்தது.அப்பொழுது டிராக்ஸி எழுதினார்…காபென் பாதிரியாருடன் பேரணியில் அணிவகுத்து சென்றவர்கள் லிபரல் முதலாளிகள் அல்ல-புரட்சிகரத் தொழிலாளர்களே!.இதுவொரு புரட்சிகரமான எழுச்சியாகும்.ரஷ்யாவில் புரட்சி தொடங்கப்போகிறது. அது நமது அரசியல் சிறுபிள்ளைத்தனத்திற்கு முடிவு கட்டும்

    மூலம்.டிராட்ஷ்கியின் வரலாறு ஆசியர் கதிர். ராமசாமி முதல்பதிப்பு:1989.
    கொசுறு:1905-ம் வருடப்புரட்சி நாட்டிற்கும் கட்சிக்கும் டிராஸ்க்கிம் புரட்சிப்பணியில் புதிய அனுபவத்தையும் முதிர்வையும் பெற்றுக்கொடுத்ததில் ஐயமில்லை. 1905-ம் வருடப்புரட்சி 1917-ம் ஆண்டுப் புரட்சிக்கான ஒத்திக்கையே.இந்த புரட்சி தான் 12 ஆண்டுகளுப்பிறகு பொங்கிய புரட்சிக்கு வித்திட்டது.சுருங்கக் கூறின் 1905-ம் வருடப்புரட்சியின் தொடர்சியே 1917-வருடப்புரட்சி அனைத்து அதிகாரங்களையும் கைப்பற்றிய 1917-வருட சோவியத் அமைப்பு உருவாக பாதை செப்பனிட்டதும் 1905-ம் வருடச் சோவியத்துதான்.

    Reply
  • BC
    BC

    //பல்லி-சரியோ தவறோ தன் கருத்தில் நம்பிக்கை வேண்டும்;………….இது மனிதனாய் பிறக்கும் அனைவருக்கும் வேண்டும்;// chandran-raja
    என்ன கொடுமை இது?
    புலியை முன்பு ஆதரித்ததிற்காக சரியோ தவறோ தொடர்ந்து ஆதரித்து அழிவுக்கு வழி செய்ய வேண்டும்.
    மத வெறி சரியோ தவறோ, மதம் சரியோ தவறோ தொடர்ந்து நம்பிக்கை வேண்டும்.
    சாதி பாகுபாடு என்ற நம்பிக்கை சரியோ தவறோ தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

    //ஒரு மனிதன் அவன் மனைவி தரும் சாப்பாட்டை நம்பிக்கையுடன் உண்பதுபோல் சக மதத்துடனும் நாம் இருக்க வேண்டும்.// palli
    இப்போ எல்லாம் சக மதம் கொடுத்த சாப்பாட்டை நம்பிக்கையுடன் உண்கிறார்கள் எங்கள் ஆட்கள். மனைவி தரும் சாப்பாடு குப்பை தொட்டியில். ஆனால் ஒரு போதும் சக மதத்தவர்கள் நம்மவர்கள் உணவை ஒருபோதும் தீண்டமாட்டார்கள். அவ்வளவு மத வெறி கடவுள் சுத்தம் ஆண்டவன் நம்பிக்கை என்று இப்படி இருப்பவர்கள் எப்படி சுற்றுபுற சூழலை உருவாக்க முடியும்?

    Reply
  • பல்லி
    பல்லி

    //ரஷியபாதிரியாரின் பெயரைக் கேட்கிறார்?// இதில் மட்டுமல்ல அவர் சொல்லும் கேக்கும் ஆதாரம் கூடியவை இல்லாமல் போனவர்களுடையதே,

    //இந்த “மனிதநேயக்காரர்கள்” தாங்கள் தமிழர்களின் ஏக பிரதினிதிகள் போல கதைக்க முற்பட்டிருக்கிறார்கள்.// அப்படியெல்லாம் பேராசை எமக்கு இல்லை; ஆனால் நாமும் தமிழர் என்பதால் எம் சக உறவுகளுக்காய் எழுதுகிறோம்;

    //இலங்கையில் பிரிவினை கோரிய பல்லி // இது எப்போ?? சொல்லவே இல்லை பல்லிக்கு;

    //யாழ்ப்பாணத்தில் புலிகள் முதலில் வேட்டையாடியது // பல்லியின் வேட்டை(கருத்து) முதலில் புலிக்கெதிராயே ஆரம்பித்தது,

    //ஐக்கியம் மனிதநேயம், மார்க்ஸிசம்” என்று யாருக்குக் காது குத்த முற்பட்டிருக்கிறீர்கள்?// அப்படி எண்ணம் எமக்கில்லை ஆனால் காதுகுத்த சிலர் புறப்பட்டிருப்பது தெரிவதால் அதை தடுப்பதே எம்கடமை; தொடருவோம்

    Reply
  • Kusumpu
    Kusumpu

    நந்தா! இமானுவேல் பாதிரி நேற்று புகழிடப்புலிகளின் ஜி ரி வில் சொல்கிறார். எது இருந்தாலும் ஆத்மபலம் இல்லாவிட்டால் போராடமுடியாது போராட்டத்திலும் வெற்றி கிடைக்காது என்கிறார். சமயகுருவாக இருக்கும் இவர் என்ன சொல்ல வருகிறார்? கிறிஸ்தவர்களாக மாறினால்தான் போராடலாம் என்கிறாரா? அப்போ பிரபாகரன் செல்லப்பிள்ளையாக இருந்த இவர்கள் ஏன் பிரபாகரனுக்கு ஆத்மபலத்தைக் கொடுக்கவில்லை அல்லது காட்டவில்லை? இவர்களின் மதம்மாற்று யுக்தி இன்னும் போகவில்லை.

    Reply
  • பல்லி
    பல்லி

    பி சி இடம் இருந்து இப்படியான ஒரு பின்னோட்டத்தை பல்லி எதிர்பார்க்கவில்லை; அதனால் பதில் பின்னோட்டமாக இல்லாமல் என் நிலையை ஒரேவரியில் தருகிறேன், இதுவே உங்கள் அனைத்து கேள்விக்குமான பதிலாகும்;

    //:புலியை முன்பு ஆதரித்ததிற்காக சரியோ தவறோ தொடர்ந்து ஆதரித்து அழிவுக்கு வழி செய்ய வேண்டும்.//
    பி சி நான் சொன்னது கருத்து, அது புலியிடம் இருந்திருந்தால் நமக்கேன் இந்தபாடு,

    //இப்போ எல்லாம் சக மதம் கொடுத்த சாப்பாட்டை நம்பிக்கையுடன் உண்கிறார்கள் எங்கள் ஆட்கள். மனைவி தரும் சாப்பாடு குப்பை தொட்டியில். //
    முன்னது நம்பிக்கை:
    பின்னது அவ நம்பிக்கை;
    நான் சொல்லியதோ தன்நம்பிக்கை;

    பி சி உங்களுக்காய் ஒரு கவி;

    மதம் கொண்ட மனிதன்
    மதம் பற்றி ஏசுவதால்
    மனங்கள் மரணித்து
    மதம் மட்டும் வாழ்கிறது;

    எழுதுவதோ ஏழைக்காய்
    எண்ணங்கள் மறுபக்கம்
    எல்லோரும் மனிதர்தான்
    என்பதைதான் மறப்பதேன்;

    வல்லரசில் வேலையில்லை
    வன்னியிலே வாழ்வேஇல்லை
    வாழ்க்கை இங்கு தடுமாற்றம்
    வரும் காலம் திசை மாறும்;

    ஏலாமை அறியாமை
    என்பதனால் ஏலாமை
    ஏலாமை தூங்க வேண்டும்
    ஏழ்மை விழிப்பதற்க்கு;

    மதத்தின் தத்துவங்கள்
    மனிதர் வாழ்வுக்காய்
    மனிதர் நாம் மதங்களை
    மல்லுக்காய் வளர்த்துள்ளோம்;

    முயற்சிக்கு வழிவிட்டு
    இகழ்ச்சியை பின் தள்ளி
    மகிழ்ச்சியாய் வாழ்வதற்க்கு
    மதம் எதற்கு மனிதற்கு;

    நட்புடன் பல்லி;

    Reply
  • nantha
    nantha

    சந்திரனுக்கு “நாலாம் அகிலம்” என்று அறியப்படும் இயக்கத்தின் வாசனை உள்ளதாக முன்னர் குறிப்பிட்டிருந்தேன். அது உண்மை என்பதை அவர் இப்போது நிரூபிக்கிறார்

    இந்தநாலாம் அகிலக்காரர்கள் ட்ரொஸ்கியய் முன்னிறுத்தி மார்க்ஸ் எங்கெல்ஸ் லெனின் போனறவர்களுக்கு சேறடிப்பதில் முன்னிற்கிறார்கள். அவர்களால் வெளியிடப்படும் “தொழிலாளர் பாதை” படித்த தோஷம் சந்திரனுக்கு உள்ளதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

    அமெரிக்க பணத்தில் இயங்கும் இந்த நாலாம் அகிலம் தொழிலாளர்கள் இயக்கங்களில் ஊடுருவி அவற்றினைநாசம் செய்ய எத்தனிக்கின்றன என்பது எப்போதோ கண்டறியப்பட்ட உண்மை.

    பாதிரிகளுக்கு வக்காலத்து வாங்கி மார்க்சிஸம் படிப்பிக்க சந்திரன் முயல்வதும், வத்திக்கான் போன்ற சுத்தமான தொழிலாள வர்க்க எதிரிகளை பாதுகாக்க அலைவதும் “முதலாளித்துவத்தைப்” பாதுகாக்க அமெரிக்க முதலாளிகள் எடுத்துள்ள புதிய உத்திகளை சந்திரன் பகர்வதும் முதலாளித்துவத்தை பாதுகாக்கவே ஒழிய, தொழிலாள வர்க்கத்தின் நன்மைகளை உத்தேசித்தல்ல என்பது உறுதியாகிறது.

    இலங்கயில் “ட்ரொஸ்கி”யின் கருத்துக்கள் எடுபடாமல் காலாவதியாகி நீண்டநாட்களாகி விட்டது. ஐரோப்பாவில் நிலை கொன்டிருக்கும் இந்த அமெரிக்க ஏஜன்டுகளான நாலாம் அகிலக் கோஷ்டிகள் இலங்கையில் என்ன செய்யப் போகிறார்கள்?

    வத்திக்கானூடாக “தொழிலாளர்” புரட்சி செய்ய உத்தேசித்துள்ளார்களா என்பதை சந்திரன் சொன்னால் நல்லது! ஏனென்றால் “நாலாம் அகிலம்” தொடக்கம் “தமிழீழம்” வரை பணம் பட்டுவாடா செய்தவர்கள்/ செய்து கொண்டிருப்பவர்கள் வத்திக்கான் பாதிரிகளே என்பது சந்திரனுக்குத் தெரியாமல் போனதா அல்லது தெரிந்து கொண்டே “மார்க்ஸிச” கரடியை விட்டுக் கொண்ருக்கிறாரா?

    Reply
  • nantha
    nantha

    குசும்பு, BC
    உங்களின் கருத்துக்கள் சில “மார்க்க” உபதேசிகளாக உருவம் பெற்றிருக்கும் “மனிதனேயம்” பற்றி வாணம் விடுபவர்களுக்கு கடுப்பாகத்தான் இருக்கும்.

    வத்திக்கான் ஆயுத உற்பத்திக் கம்பனிகளில் முதலீடு செய்துள்ள விடயம் அவர்களுக்கு, அதாவது பாதிரிகளுக்கு “ஆத்மபலம்” எப்பொளுதோ ஒடி விட்டது என்பதை காண்பிக்கிறது.

    போப் “இந்தியாவில்” அறுவடை என்பதன் அர்த்தம் புரிய தமிழர்களுக்கு அதிக காலம் எடுக்கும். அதாவது “கடவுளைக்” காட்ட இருக்கும் சோற்றையும் தட்டிப் பறிப்பது என்பது வத்திக்கானின் புதிய கண்டு பிடிப்பு!

    புலிகள் காலத்தில் வன்னி மக்கள் அன்னியநாட்டு கோதுமைக்கு அலைந்தது ஒரு உதாரணம்.

    “ஆத்மபலம்” என்பது பண முதலீடு செய்திருக்கும் ஆயுத தொழிற்சாலைகளில் கிடைக்குமா என்பது தெரியவில்லை. ஆனால் பல ஆத்மாக்களுக்கு கொள்ளி வைக்கும் என்பது மாத்திரம் உண்மை!

    தமிழீழம் என்பது பிரிவினை அல்ல என்று பல்லிக்கு யாராவது உபதெசம் பண்ணி விட்டார்களோ தெரியவில்லை!

    Reply
  • பல்லி
    பல்லி

    //தமிழீழம் என்பது பிரிவினை அல்ல என்று பல்லிக்கு யாராவது உபதெசம் பண்ணி விட்டார்களோ தெரியவில்லை!// வாழ்க
    உங்கள் கற்பனை கடல்;

    //புலிகள் காலத்தில் வன்னி மக்கள் அன்னியநாட்டு கோதுமைக்கு அலைந்தது ஒரு உதாரணம்.//
    சிறிமா காலத்தில் ஒரு மரவெள்ளி கிழங்குக்கே படாதபாடு பட்டோம்; ஆனால் அந்த காலத்தில்தான் இலங்கையில் விவசாயிகள் பணத்தை கண்டோம்;

    //கடுப்பாகத்தான் இருக்கும்.// நாம் என்ன செய்வது உங்கள் எழுத்து அப்படி;
    தொடரும் பல்லி;

    Reply
  • Naadoode
    Naadoode

    //மதங்களை அரசியலிலிருந்து அப்புறப்படுத்துங்கள்.//
    அப்படி இருக்க எவ்வாறு அப்புறப்படுத்தி விட முடியும்?

    மதத்திற்கும் அரசியலுக்கும் உள்ள உறவை மார்க்சியர்களை விட வேறு யாரும் தெளிவாக வெளிப்படுத்தியது கிடையாது.

    //யாழ்ப்பாண வியாபாரி அவர்களைவிட ஏமாற்றுபவன்// முஸ்லிம்களைப் பொதுமைப்படுத்திக் குற்றம் சொல்ல விரும்பாத சிறிரங்கன் யாழ்ப்பாண வியாபாரிகளை மட்டும் பொதுமைப்படுத்துவது தான் எவ்வாறு?

    நான் மேலே குறிப்பிட்ட கேள்விகளை விட இந்த விடயத்தில் முக்கியமானது இவ்வாறு பெண்கள் கூலிகளாக மத்திய கிழக்கிற்குச் செல்ல வேண்டிய சூழல் ஏன் எழுந்தது?

    அவர்களது கிராமத்தில் அவர்களை தன்னிறைவுடன் வாழ விடாமல் தடுப்பது எது?

    அவர்களுடைய விவசாயக் காணிகளுக்கு என்ன நடந்தது?

    மகிந்த சிந்தனையும் சரி அதற்கு முந்தைய ஆட்சியாளர்களுடைய சிந்தனையும் சரி இந்த மக்களது இயல்பு வாழ்க்கைக்கு எட்டாத் தொலைவில் நின்றது ஏன்?

    Reply
  • பல்லி
    பல்லி

    //நான் மேலே குறிப்பிட்ட கேள்விகளை விட இந்த விடயத்தில் முக்கியமானது இவ்வாறு பெண்கள் கூலிகளாக மத்திய கிழக்கிற்குச் செல்ல வேண்டிய சூழல் ஏன் எழுந்தது?
    அவர்களது கிராமத்தில் அவர்களை தன்னிறைவுடன் வாழ விடாமல் தடுப்பது எது?
    அவர்களுடைய விவசாயக் காணிகளுக்கு என்ன நடந்தது?
    மகிந்த சிந்தனையும் சரி அதற்கு முந்தைய ஆட்சியாளர்களுடைய சிந்தனையும் சரி இந்த மக்களது இயல்பு வாழ்க்கைக்கு எட்டாத் தொலைவில் நின்றது ஏன்?//
    நந்தா இதுக்கான விடையுடன் வாருங்கள்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    ஒரு நிஸ்தாரை வைத்து உலகில்வாழும் முஸ்லீம் வழங்கியாயிற்று. வத்திக்கானை உலகில் உள்ள கிறஸ்தவர்களுக்கும் தீர்ப்பு வழங்கியாயிற்று. புதைத்த இடம் சமாதி தெரியாமல் மறைந்து போன காபென் பாதிரியாரை வைத்து நான்காம் அகிலத்திற்கு சேறடிக்க தொங்கியிருகிறார் இந்த நந்தா!.

    நான்காம் அகிலம் உலகத் தொழிலாளர்கட்சி. சர்வசதேச தொழிலாளர் ஐக்கியம் என்ற குறியீடுயாகவே “அனைத்துகக்குழு” வின் தலைமையில் பலநாடுகளில் தமிழ்மொழி உட்பட பல பத்துபாஷைகளுக்கு மேல் இணையத்தளங்களை நடத்திவருகிறது. நந்தா தனது புரட்டல் கதைகளை எப்படி தொடங்குகிறார் என்றால் இவர்கள் மாக்ஸ் எங்கல்ஸ் லெனின் போன்றவர்களுக்கு சேறுறடிக்கிறார் என்று தொடங்கிறார். நந்தா
    எப்படி பட்ட புரட்டல்வாதி என்பதை வேஎஸ்.வேஎஸ். ஓஆர்ஜி என்ற இணையத்தளத்திற்கு சென்று பார்வையிடலாம். இதில் ஆகக் குறைந்தது கடந்த இருபது வருடபதிவுகளும் ஆவணங்களையும் பார்வையிடமுடியும். ஒருவர் எங்கு மாக்ஸ்சுக்கும் எங்கல்சுக்கும் லெனினுக்கும் சேறடிக்கிறார்கள் என்பதையும் நந்தா ஏன்?ஈடுபட்டிருக்கிறார் என்பதையும் கண்டு கொள்ள முடியும்.

    கியூபாவின் வரலாறு தெரியாதவன் யாரும் உலகஅரசியல் கதைக்கத் அருகதை இல்லாதவனே! கடந்த ஐம்பதுவருடகாலங்களுக்கு மேலாக பலவேதனை சோதனை பெருமைகளையும் கண்டிருக்கிறது.கியூபாமக்கள் நெஞ்சம்நிறைந்த தலைவராக மட்டுமல்ல கணிசமான உலகமக்களின் அன்பையும் பெற்றிருக்கிறார். சின்னம்சிறியா கியூபாநாட்டின் நட்சத்திரமாக ஒளிவிட்டுக் கொண்டிருக்கும் பிடல் கஸ்ரோவை மாக்ஸியவாதியாக ஏற்றுக் கொள்ளுகிறார். ஆனால் இந்த பிடல் கஸ்ரோ வத்திக்கானில் இருக்கும் போப்பிற்கு தம்நாட்டின் கிஸ்தவர்களுக்கு ஆசிகொடுப்பதற்கு தம்நாட்டுக்கு அனுமதி கொடுத்ததும் இந்த நுற்றாண்டில் தான். இதையும் நந்தா வேண்டுமென்றே புரட்டிவிடுகிறார் அல்லது தனது அற்பகாரியங்கள் வெற்றிபெறுவதற்கு மறைத்துவிடுகிறார். கருத்துக்களையும் கருத்துக்களையும் மோதவிடுவதும் தொடர்ந்து விவாதிப்பதும் புதிய கருத்துக்களை பெற்று சமூகத்திற்கு பயன் உள்ளதாக மாறுவதற்கே!அது மதத்திற்கும் ஒருஇனத்திற்கும் சொந்தமாக்க முயல்வது அற்பதனமான காரியமே!.

    நந்தாவிடம் இருகேள்விகள் கேட்டேன். அதை நளுவவிட்டு ஓடிக்கொண்டிருக்கிறார் இவர்பதில் சொல்லாவிட்டாலும் இவர் எண்ணம் எப்படிபட்டதென்பதை அறிவோம்!. மற்றைய மதங்களுக்கு ஆத்திரமூட்டி இந்துமதவெறியை வளர்த்து விடுவதே. இதுவும் பாசிசபோக்கே!!. கடந்தகாலத்தில் பிரபாகரன் செய்த நடவடிக்கைக்கு கொஞ்சமும் குறைந்ததல்ல. உங்கள் மதத்தையும் உங்கள் இனங்களை பாதுகாருங்கள். மற்றையமதங்களும் மற்றையஇனங்களும் தமதுமுடிவுகளை எடுக்கிற சுகந்திரத்தை கொடுங்கள். கடந்த முப்பதுவருட வரலாறு உங்கள் இனத்தில் இருந்துதான் தோற்றம் பெற்றது. நடந்துமுடிந்த காட்டுமிராண்டிதனதில் உங்களுக்கும் பங்குண்டு.மற்றவர்களை பார்த்த காட்டுமிராண்டி என்று சொல்வதற்கு அருகதையில்லை.குறைபாடுகளும் குறைபாடுகளை களைந்துவிடுபடுவதும் காலவிதிக்கேற்ப நடைபெறும்.

    நந்தா! தொழிலாளர்கட்சிக்கு மேலே சேறடித்து புரட்டல்வாதத்தில் ஈடுபடுவதை நிறுத்துங்கள். மற்றைய மதங்களை குறைகூற உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. யார் தந்தது? எரியநெருப்பில் உயிருடன் தள்ளிவீழ்தியது உங்கள் பாட்டன் தான் என்பதை முதலில் உணர்ந்து கொள்ளுங்கள்.

    Reply
  • thurai
    thurai

    //சவுதி அரபிய முஸ்லிம் கலாச்சாரத்தில் பெண்களுக்குரிய ஸ்தானம் என்ன என்பது பற்றியோ, முஸ்லிம் மதத்தில் மற்றைய மதத்தைச் சேர்ந்தவர்கள் எப்படி மதிக்கப்படுகிறார்கள் என்பது பற்றியோ சிறிதும் அறியாத அல்லது அறிய விரும்பாத இந்த “மனிதநேயக்காரர்கள்” தாங்கள் தமிழர்களின் ஏக பிரதினிதிகள் போல கதைக்க முற்பட்டிருக்கிறார்கள்//நந்தா

    தமிழர்களாகப் பிறந்து தமிழர்களையே மதிக்கத்தெரியாத சிலர். தமிழ் பெண்களை திருமணம் பேசி முடிக்கு முன்போ பெற்ரார் திருமணம் பேசும் போதோ கேட்பது.
    முதலில் சாதியென்ன?
    சமயமென்ன?
    படித்திருக்கிறாளா?
    வெள்ளையா கறுப்பா?
    முன்பு யாரையும் காதலித்தவளா?
    சீதனம் எவ்வளவு?
    தாய் தகப்பன் ஏப்படி?

    இவ்வாறு உலகில் படாத பாடு பட்டு இன்னமும் ஒரு கணவனை அடைய முடியாமல் 50 வயதை தாண்டிய தமிழ் பெண்கள் எத்தனை பெயர் புலம் பெயர் நாடுகளில் கூட இருக்கின்றார்கள்.

    இவர்களிற்கெல்லாம் எந்த முஸ்லிம் நாடு காரணமென நந்தா விளக்கம் தருவாரா?

    துரை

    Reply
  • chandran.raja
    chandran.raja

    இதற்கெல்லாம் மறுமொழி சொல்லமுடியாது. நான் இந்துமதவெறியன். தமிழே! எனது மூச்சு. பிரபாகரனின் தம்பி மாக்ஸிய தத்துவத்தில் அன்ரன் பாலசிங்கதின் மருமகன்.

    Reply
  • nantha
    nantha

    முதலில் சாதியென்ன?
    சமயமென்ன?
    படித்திருக்கிறாளா?
    வெள்ளையா கறுப்பா?
    முன்பு யாரையும் காதலித்தவளா?
    சீதனம் எவ்வளவு?
    தாய் தகப்பன் ஏப்படி?

    பேசி முடிக்கும் திருமணங்கள் அனைத்திலும் மேற்படி கேள்விகள் எழுப்பப்படுவது துரைக்குத் தெரியாமல் போனது எப்படி? இலங்கையிலுள்ள அனைவரும் இதனைக் கேட்டு விட்டே அடுத்த படிக்குச் செல்கிறார்கள்!

    Reply
  • nantha
    nantha

    சந்திரன் யாரென்று இப்போது புரிகிறது. “தூண்” உடைக்கும் அவரது கேள்விக்கு எனது கருத்தை சொல்லியிருக்கிறென்.

    முதலாளித்துவத்தின் “தூண்”களுக்கு முட்டுக் கொடுக்கும் சந்திரனின் “தொழிலாளி” ஐக்கியம் என்ற போலி நாடகத்துக்கு நான் கருத்துக்கள் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

    நாலாம் அகிலத்துப் புரட்டுக்களை ஒப்புவிக்கும் சந்திரன் ஒரு பாதிரி அடியாள் என்பது தெளிவாகியுள்ளது.

    இந்துக்களை விமர்சிக்க பாதிரிகளுக்கு யார் உரிமை கொடுத்தது என்று சந்திரன் திருவாய் மலர்ந்தால் நல்லது! அல்லது சந்திரனுக்கு யார் உரிமை கொடுத்தது?

    சந்திரனும் பல்லியும் சொல்வது என்னவென்றால் “இந்துக்களை” தாக்கலாம். அது “மனிதநேயம்” ஆனால் பாதிரிகள் அல்லது முஸ்லிம்கள் பற்றியும் அவர்களது கொடூரங்கள் பற்றியும் கருத்து சொல்வது மாத்திரம் “மனிதம்” இல்லையாம்!

    சந்திரனின் “தொழிலாளர் ஐக்கியம்”, பல்லியின் “தமிழ், மனிதநேயம்” ஆகியவற்றுக்குப் பதில் எழுதுவது “வேலை மினக்கேடு” என்பதே என் முடிவு!

    தினமும் ஐந்து வேளை “சவுதி” அரேபியாவின் திசைநோக்கி கும்பிடும் நிஸ்தாரிடம் அதே நாட்டிலிருந்து ஆணிகளோடு வந்த பெண் பற்றி பொருத்தமான விளக்கம் வரும் என்றுதான் எதிர்பார்த்தேன். ஆனால் அந்தக் கொடுமை பற்றி அக்கறையோ அனுதாபமோ தெரிவிக்காத “மனிதநேயம்” கொண்ட பாதிரி அடியாட்கள் தங்களின் கதைகளின் மூலம் பிரச்சனையை திசை திருப்பி அந்தக் கொடுமையை நியாயம் என்று சாதிக்க முயற்சித்துள்ளதாகவே தோன்றுகிறது. சிலவேளைகளில் அந்தப் பெண் “சிங்களம்” என்ற காரணமாகவும் இருக்கலாம்!

    Reply
  • thurai
    thurai

    //பேசி முடிக்கும் திருமணங்கள் அனைத்திலும் மேற்படி கேள்விகள் எழுப்பப்படுவது துரைக்குத் தெரியாமல் போனது எப்படி? இலங்கையிலுள்ள அனைவரும் இதனைக் கேட்டு விட்டே அடுத்த படிக்குச் செல்கிறார்கள்!//நந்தா

    யாழ் முஸ்லிம் ஒருவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பேரழகில்லாத, பண வசதியற்ர, ஓர் பெண்ணை விரும்பி மணந்து வாழ்கின்றார். பெற்ரோரும் எதிர்க்கவில்லை. இவர்கழுடன் யாழ் இந்து வேளாள உயர்குலமென்று சொல்லி பறை தட்டி வாழ்வோரை ஒப்பிட முடியுமா? இதில் உயர்ந்தவர் முஸ்லிமா, இந்துவா?

    துரை

    Reply
  • பல்லி
    பல்லி

    //சந்திரனும் பல்லியும் சொல்வது என்னவென்றால் “இந்துக்களை” தாக்கலாம். அது “மனிதநேயம்” ஆனால் பாதிரிகள் அல்லது முஸ்லிம்கள் பற்றியும் அவர்களது கொடூரங்கள் பற்றியும் கருத்து சொல்வது மாத்திரம் “மனிதம்” இல்லையாம்!/ சந்திராவும் பல்லியும் உருட்டுகட்டையுடன் அயோத்தி சென்றது போல் ஒரு பார்வை, அதுசரி சிலரை விட்டுவிட்டியள் ஏன்??

    //சந்திரன் திருவாய் மலர்ந்தால் நல்லது! அல்லது சந்திரனுக்கு யார் உரிமை கொடுத்தது?//
    உங்களுக்கு இந்துக்களின் வாரிசென யார் காலையில் உரிமை கொடுத்தார்களோ அவர்கள்தான் மாலையில் சந்திராவுக்கும் கொடுத்ததாக எடுத்துக்கலாமே;

    //சந்திரனின் “தொழிலாளர் ஐக்கியம்”, பல்லியின் “தமிழ், மனிதநேயம்” ஆகியவற்றுக்குப் பதில் எழுதுவது “வேலை மினக்கேடு” என்பதே என் முடிவு!//
    நன்றி வணக்கம்;

    //தினமும் ஐந்து வேளை “சவுதி” அரேபியாவின் திசைநோக்கி கும்பிடும் நிஸ்தாரிடம் அதே நாட்டிலிருந்து ஆணிகளோடு வந்த பெண் பற்றி பொருத்தமான விளக்கம் வரும் என்றுதான் எதிர்பார்த்தேன்.//
    பல்லியும்தான் ஆனால் நந்தாவந்து மதம் என்னும் மறைப்பை காட்டி எல்லாத்தையும் கெடுத்து போட்டியள். இதில் அல்ல பல கட்டுரையில் இப்படிதான் நீங்கள்? கண்டிக்கு வழி கேட்டால் கடகரைக்கு கூட்டி செல்வது;

    Reply
  • sahabdeen nana
    sahabdeen nana

    எல்லோருமாக சேர்ந்து நிஸ்தார் நாநாவை பயங்காட்டிப் போட்டியள். அரபு நாடுகளில் இந்த அநியாயம் இன்றைக்கு நேற்று தொடங்கியதல்ல, பல வருடமாக தொடர்கின்றது. சிலது புதைக்கப்பட்டு விட்டது. சிலது புகைந்து கொண்டிருக்கின்றது. இதற்கு எந்த பின்லேடன்களும் வந்து பதில் சொல்ல முடியாது.

    போராட்டத்தின் உச்சக்கட்டத்தில் சகலதையும் இழந்த முஸ்லீம்கள் அரபு நாடுகளுக்கு மலசலகூடம் கழுவப் போன போது, நானும் சேர்ந்து, இதே ரியாத் மாநகரில் (சகோதரி ஆரியவதி வஞ்சிக்கப்பட்ட பிரதேசம்) எட்டு மணிநேரத்துக்கு 164 மலசலகூடங்கள் என கழுவினேன். ஒரு நாள் அந்திப்பொழுது ஐந்து மணி போல் இரண்டு வாட்டசாட்டமான எமன் தேசத்தவர்கள் எமது இருப்பிடத்துக்கு வந்து, தமது நண்பரான சவூதி ஷேக்கின் வீட்டிற்கு புதிதாக வேலைக்கு வந்த ஒரு சிறிலங்கா பெண்ணுக்கு, சொல்வது ஒன்றும் புரியவில்லை. உங்களில் யாராவது வந்து மொழி பெயர்க்க முடியுமா என்கின்றார்.

    என்னுடன் இருந்த தமிழ், முஸ்லீம், சிங்கள சகோதரர்கள், ஐயையோ முடியாது என்றுவிட்டனர். அவர்களது மன்றாட்டம் பார்க்க முடியாமல், நான் வருகின்றேன் என்றேன். இவர்கள் அனைவரும் போக வேண்டாம், எமன்காறன் இப்படித்தான். இளைஞர்களை அழைத்துச் சென்று தன்னினச் சேர்க்கை பண்ணுவார்கள் என்றனர்.

    ஆனால் அவர்களின் மன்றாட்டத்தின் பேரில் வருவது வரட்டும் என புறப்பட்டேன். பக்கத்தில்தான் ஷேக்கின் வீடு என்று சொன்னவர்கள், காரில் ஏறியதும் கிட்டத்தட்ட ஏழு மைல் தூரம் என்னை அழைத்து வந்து, பாலைவனத்தின் மத்தியில் உள்ள ஒரு பாழடைந்த பங்களாவில் என்னை நிறுத்தினார்கள்.

    உள்ளே ஒரு சிங்கள பெண் ( 21 வயது) அரை குறை ஆடையில் இருந்தார். ஆம் அந்தப் பெண் நாலு மாதத்துக்கு முன் வந்து, ஷேக்கினால் தினமும் கற்பழிக்கப்பட்டு, ஷேக்கின் மனைவியின் கையால் தினமும் உருட்டுக் கட்டை அடிவாங்கி, பொறுக்க முடியாமல் ஒரு நாள் அதிகாலை வீட்டை விட்டு புறப்பட்டு தடுமாறிக் கொண்டிருக்கும் போது, இந்த எமன் காறர்கள் இவளை உதவுகின்றோம் என கூட்டிவந்து, இரண்டு தினங்கள் கதறக் கதற இரவு பகலாக கற்பழித்து விட்டு, சீச்சீ இனி இந்தப் பழம் புளிக்கும் என்ற நிலையில் எம்மிடம் வந்துள்ளார்கள்.

    நான் வேலை செய்த கம்பனியில் சில நல்ல சிங்கள நண்பர்கள் இருந்தார்கள். அன்று நள்ளிரவு அந்த சிங்கள நண்பர்களின் உதவியுடன் ஒரு அம்பியுலன்ஸ் வண்டியில் அவரை அழைத்து வந்து, எமது தங்கும் விடுதிக்கு வெளியே நிறுத்திவிட்டு. அவரை ஆசுவாசப்படுத்தி அடுத்த நாள் காலையில் சிறிலங்கா தூதுவராலயத்தில் விடுவதாக கூறினோம்.

    அவளை அழைத்து வந்த பின் ஒவ்வொருவராக அவரை போய் பார்ப்பதும், குசு குசுப்பதுமாக ஒவ்வொருவரும் தூங்கச் சென்றோம். நடு இரவு இரண்டு மணிக்கு வேலை முடிந்து றூமுக்கு வந்த. ஒரு பாகிஸ்தானிய நண்பர். என்னை எழுப்பி என்ன அமுபியுலன்ஸ்சுக்குள் இருந்து ஒரு பெண்ணின் முனகல் சத்தம் கேட்கின்றது என்றார்.

    வெளியே வந்து அம்பியுலன்சுக்குள் எட்டிப் பார்க்கின்றேன். அங்கே அந்த தாயை, அந்த கற்பழிக்குற்பட்டு நார் நாராக கிழிக்கப்பட்டிருந்த அந்த தாயை நம்மவன், என்னுடன் வர மறுத்த நம்மவன், என்னவன், எனது இனத்தைச் சேர்ந்த சோனகன், கொழும்பு முஸ்லீம் பிளஸ் ஹாஜியார், அந்த பேதையை கற்பழித்துக் கொண்டிருந்தார். இது ஒரு சோறு.

    இப்படி ஓராயிரம் கதைகளும், காட்சிகளும் அரேபியரைப்பற்றி சொல்ல இருக்கின்றது. நாங்கள் அவர்களை பின்பற்றி இஸ்லாத்தை தழுவல. நாங்க சொல்ற இஸ்லாம் குர்ஆன். நாங்க அதை தான் பின்பற்றுகின்றோம். இல்ல நாங்களும் முஸ்லீம்கள்தான் எனக்கூறிக் கொண்டு டுபாயிலும், கட்டாரிலும் அனாச்சாரங்கள் நடாத்தும் அந்த முஸ்லீம்களை எங்களுக்கு தெரியாது.

    Reply
  • Mohamed SR. Nisthar
    Mohamed SR. Nisthar

    எல்லாரும் கேற்கிறிர்கள் என்ன நிஸ்தாரை காணவில்லை என்று. பார்த்துகொண்டுத்தான் இருக்கிறேன். வருவோமா, இல்லை விடுவோமா என்ற யோசனைதான். நந்தா பிள்ளயார் சுழி போட்டுவிட்டார், இருந்தும் நான் வந்தால், இதோ வந்துவிட்டான், கதையை திசை திருப்பிவிட்டான் என்று சிலர் கூறுவார்களோ என்ற யோசனை தான். நோன்புடன் படு பிஸி. அத்துடன் 9/11 வேறு வருகிறது அது பற்றியும் எழுத வேண்டாமா. பொறுத்திருங்கள்.

    Reply
  • BC
    BC

    சஹாப்தீன் நாநா, அந்த பெண்விடயத்தில் நீங்கள் நடந்து கொண்ட முறைக்கு உங்களுக்கு ஒரு சல்யூட் அடிக்கிறேன்.

    Reply
  • murugas
    murugas

    Dear friends,
    Thesamnet provides a wonderful forum to argue and discuss varied subjects.We should not misuse and abuse.Different view points-are welcome.Nantha-it is not correct to speak about Islam because the incident took place in Saudi Arabia.Tamil nadu is a home for many famous hindu temples.Could we condemn Hinduism because of many atrocities taking place in Tamilnadu.arasaratnam says that speaking about lower caste in Jaffna is not a good thing.I dont agree with that.Caste discrimination is a major human right issue.Caste discrimination in Jaffna is a matter for further discussion.Muslim people in Jaffna fully respectd the lower caste tamils.Europeans are mostly christians.They respect dignity of labour and they dont discriminate generlly.They are advanced people.Saudi people are yet to be civilized.Till such time the cruel treatment will continue.

    Reply
  • nantha
    nantha

    சகாப்நானாவின் திறந்த மனதுக்கு எனது பாராட்டுக்கள்!

    Reply
  • nantha
    nantha

    murugas,
    தமிழ்நாட்டை சவுதி அரேபியாவுடன் எந்தநிலையில் ஒப்பீடு செய்கிறீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை.

    சவுதி அரேபியா இஸ்லாத்தின் பிறப்பிடம். இன்று இஸ்லாத்தின் காவலர்கள் சவுதி மன்னர் குடும்பம். சவுதியில் வேற்று மதத்தினர் தங்கள் வணக்க ஸ்தலங்களை ஸ்தாபிக்க முடியாது. இஸ்லாமியர்கள் தினமும் ஐந்து வேளை சவுதி அரேபியாவின் திசைநோக்கி கும்பிட வேண்டும் என்பது இஸ்லாமியருக்கு விதிக்கப்பட்ட கட்டளை.

    சவுதி அரேபியாவையும் தமிழையும் தமிழ்நாட்டையும் போட்டுக் குழப்புவது பொருத்தமாகத் தெரியவில்லை!

    இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டுத் தமிழர்களோடு “சினிமா” ஒன்றைத் தவிர எந்த கலாச்சாரதோடும் ஒத்துப் போனதாகத் தெரியவில்லை! தமிழ்நாட்டில் தமிழில் கற்பிப்பது இலங்கையளவுக்குக் கிடையாது.

    தமிழ்நாட்டு அரசுக்கும் இந்து மதத்துக்கும் என்ன சம்பந்தம்? சரியாகப் பார்க்கப் போனால் இந்து மதநம்பிக்கைகளை துவேஷிக்கும் திமுக ஆட்சியில் உள்ளது. இந்துக் கோவிலுக்குப் போனால் மூடநம்பிக்கை என்று கூறும் கருணாநிதி பள்ளி வாசலில் கஞ்சி குடிக்கிறார்.

    இஸ்லாம் “சமத்துவத்தைப்” போதிப்பதாக கருணாநிதி சொல்லுகிறார். ஆனால் இஸ்லாம் முஸ்லிம் அல்லாதவர்களைக் கொல்ல வேண்டும் என்று முஸ்லிம்களைக் கேட்கிறது. இந்தியாவில் நடக்கும் குண்டு வெடிப்புக்கள் அதற்குச் சாட்சி!

    என்வே இஸ்லாம் பற்றி முதலில் சிறிது படித்துவிட்டு என்னை கண்டிக்கும் தொழிலை ஆரம்பியுங்கள்!

    ஐந்து நூற்றாண்டுகளுக்கு மேலாக இந்தியாவையும், இலஙகையையும் தமது அடிமைநாடுகளாக வைத்திருந்த ஐரோப்பியர்கள் “சாதிப்” பிரச்சனையை ஏன் தீர்க்கவில்லை என்பதனை சிந்தியுங்கள்!

    Reply
  • Mohamed Nisthar
    Mohamed Nisthar

    குறும் நாடகம்: ஆரியவதி எதிர் அறபுப் பெண்

    இந்த நாடகம் உண்மை சம்பமொன்றையும், அது தொடர்பாக தேசம்நெற்றில் வெளியாகிய முதல் பின்னூட்டத்தையும், கடைசியாக வெளியாகிய ஆணி என்ற கவிதையையும் அடிப்படைகளாகக் கொண்டது.

    மாக்ஸியத்தை கரைத்துக் குடித்த, டஸ் கபிடால்(Das Kapital) என்ற புத்தகத்தை படித்து கிழித்த நந்தா என்ற எல்லாம் அறிந்த நபர் மேற்படி வழக்கில் ஆரியவதி சார்பாக வாதிட வருகிறார். அறபுப் பெண் சார்பாக சட்ட பிரதிநிதிகள் யாரும் இல்லை.

    கோர்ட் முதலியார்( usher): அமைதி! அமைதி! நீதிபதி வருகிறார் அமைதி.
    எல்லாரும் எழுந்து நின்று நீதிபதிக்கு மா¢யாதை செலுத்துகின்றனர்.

    நீதிபதி: வணக்கம், எல்லாரும் அமருங்கள். இந்த வழக்கின் எதிராளி தன் குற்றத்தை ஏற்றுக் கொண்டுள்ளதால், இன்றைய அமர்வு தீர்ப்பு கூறலுக்கு(sentencing hearing)மாத்திரமே.

    இந்த வழக்கு தொடர்பான நீதிமன்றத்தின் நிலைப்பாடு என்ன என்பதை அறிவிக்க முன் வழமைப்படி குற்றவாளிக்கு அவர் குற்றம் தொடர்பாக சில அறிவுறுத்தல்கள் செய்ய வேண்டியுள்ளது.

    கோர்ட் முதலியார்: அறபுப் பெண்ணே எழுந்து நில்.
    (அந்த பெண் வேண்டா வெறுப்பாக எழுந்து நிற்கின்றார்)

    நீதிபதி: பெண்ணே, நீ உண்மையில் ஒரு பெண் தானா?, அதுவும் ஒரு இஸ்லாமியப் பெண்ணா? மனிதன் என்பவன் மிருகம் பாதி, கடவுள் பாதி கலந்து படைக்கப்பட்ட பிறவியாக நம்ம கமால் ஹாசன் ஸார் சொல்றாரு. ஆனா உன்னைப் பார்த்தால் மொத்த மிருகங்களின் பிரதி நிதி போலல்லவா தொரிகிறது. அதுவேறே முஸ்லிம் பெண் என்கிறாய். சிச்சீ, உனக்கு வெற்கமா இல்ல? காட்டு அறபியே! உன்னைப் போல் ஆளுங்களுக்காகத்தானே குர்-ஆன் உன் மொழியில், அறபு மொழியில் எழுதப்பட்டுள்ளது. உனக்கு படிப் பறிவென்பதே இல்லையா? அட மோட்டுப் பெண்ணே! குர்-ஆன் என்பது தினமும் வாசிக்க, வாசிக்க வென்றால் அம்புலிமாமா கதை புத்தகம் போலல்ல. அதை விளங்கி வாசிக்க வேண்டும், விளங்கியதை உன் நடத்தையில் செயல் படுத்த வேண்டும்.

    நந்தா: That’s exactly my point, Your Honour!, (நான் சொலும் விடயமும் சரியாக அதுதான், பிரவுவே)

    நீதிபதி: Mr. Nantha, don’t interrupt me whilst I’m addressing( திரு. நந்தா, நான் பேசிக் கொண்டிருக்கும் போது இடையூறு செய்ய வேண்டாம்)

    நந்தா: I appreciate Your Honour. My apology. ( ஏற்றுக் கொள்கிறேன் பிரபுவே. மன்னிக்க வேண்டும்.)

    நீதிபதி தொடர்கிறார், இதற்கவே குர்-ஆன் அருளப்பட நீ அதை சில்க் துணியில் சுற்றிவைத்து, முன்று முறை முத்தமிட்டு உனது புத்தக ராக்கையின்( book shelf) மேல் தட்டில் வைக்க அல்லவே. புத்தகம் படிக்காமலும், அது விளங்காமலும் , அதை துணியில் சுற்றி வைத்து யாரும் பரிட்சையில் பாஸாகி விட முடியுமா? அசடு, அசடு.

    ஆனா நீ வாசித்ததாகவும் தொரியவில்லை. அப்படியே வாசித்தி¡¢ந்தாலும் விளங்கி வாசித்ததற்கான அறிகுறியே இல்லாயே. ஓரு வேளை தலை கீழாக வாசித்தாயோ( நீதிபதி, மனதுக்குள் நந்தா மாதிரி) ? நீ இரண்டு மாத சம்பளம் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. அட மாட்டுப் பெண்ணே! நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த முன் உன் தொழிலாளிக்கு அவருக் குறிய வேதனத்தை கொடுத்துவிடு என்ற பொருள் பட எத்தனை அறிவுறுத்தல்கள்.ஓன்றாவது உன் கண்ணில் படவில்லையா? அல்லது ஒன்றும் தொரியாயாதது போல் நடிக்கின்றாயா? “நீங்கள் இதை விளங்கிக் கொள்ளும் பொறுட்டு இந்த குர்-ஆனை நாம் இலகுவாக்கியுள்ளோம்” என்று தானே குர்-ஆன் சொல்கிறது. எங்கோ ஒரு மூலையில் கிடக்கும் மக்கள் பேசும் தமிழ், இந்த வழக்காளியின் சிங்கள மொழி போன்று 112 மொழிகளில்( நீதிபதி, மனதுக்குள் இதை சஹாப்தீன் நாநா கொஞ்சம் காதில் போட்டுக் கொண்டால் நல்லது) குர்-ஆன் மொழி பெயர்க்கப் பட்டுள்ளன. அதன் மூலம் அந்தந்த மொழி பேசுவோர் அதை நன்கு அறிந்திருக்கும் போது நீ மட்டும் அறியவில்லை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளது.

    இந்தியாவில் தான் மாமி ஸ்தானத்தில் உள்ள பெண் என்று சொல்லும் பேய் மருமகள் என்ற ஸ்தானத்திலுள்ள பெண்ணை சீதனப் பிரச்சினையில் உயிருடன் தீயிட்டு கொழுத்தும் விடயங்கள் கேள்விப்பட்டிருக்கிறேன், பக்கத்தில் பாக்கிஸ்தானில் கெளரவ கொலை( நிதிபதி மனதுக்குள், கொலை அதில் என்ன கண்டரியாத கெளரவம் வேண்டிக் கிடக்கிறது) என்று பெண்ணை கொல்லும் சங்கதிகளையும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஏன் மூக்கு, காதுகளும் மாணவ பேரவை காரர்களால் ( இது தாடி வைத்து, தொப்பி போட்டோர்)) அறுக்கப்படும் விடயங்களும் நடங்தேறுவதை கேள்விப்பட்டிருக்கிறேன். அங்கெல்லாம் கோடு, நாடு எல்லாம் இருக்கிறது ஆனா யாரும் வாய் திறக்கிறானுகள் இல்லையாம். ஆயுதத்தை காட்டியும், பணத்தை அடித்தும் எல்லாத்தையும் அமுக்கிறாங்களாம். ஆனா அது இங்க சரிவராது. அது சரி இந்த ஆணியடிக்கும் டெக்னிக் யார் சொல்லித் தந்தார். ரோமர்கள் கல்வர்களை மரத்தில் கட்டிவைத்து ஆணியடிக்கும் நடை முறை கொண்டவர்கள். இந்த நவீன உலகத்தில் இந்த காட்டுமிராண்டி வேலையை யார் செய்வார்? உன்னைத் தவிர.

    உனது உயிருக்கே நீ சொந்தகாரி இல்லை. அப்படியிருக்க இன்னொருவரின் உடலிலும், உயிரிலும் உனக்கு என்ன உரிமை இருக்கிறது? நல்ல வேளை குற்றத்தை நீயே ஒப்புக் கொண்டதால், உனது தண்டனை சற்று குறைக்கப் பட்டுள்ளது. நீ உன் குற்றத்தை மறைத்திருக்க , உன் குற்றம் நியாயமான சந்தேகங்களுக் கப்பால் (beyond reasonable doubts)நிரூபனமாகி இருக்க உனக்கான தண்டனை இன்னும் கடுமையாக இருந்திருக்கும். ஏதோ இம்முறை தப்பித்துக் கொண்டாய்.இனி நீ ஒரு ஒழுங்கான பெண்ணாய், நீதியான மனிதனாய் வாழப் பழகிக் கொள்.

    (எல்லாரும் அமைதியாக நீதிபதியை பார்த்துக் கொண்டிருக்க, பல தஸ்தா வேஜுகளையும் தட்டிப்பார்த்த பிறகு மீண்டும் நீதிபதி)

    நான் எனது தீர்ப்பை வழங்க முன் என் அதிகார எல்லயை இந்த நீதிமன்றத்தில் உள்ளோருக்கு அறியதருவது எனது கடமை. தண்டனை சட்டம்(Penal Code) 4:135ன்( குர்-ஆன், அத்தியாயம் 4, வசணம் 135) “விசுவாசங் கொண்டோரே! நீங்கள் சாட்சியம் கூறினால்/ தீர்பளித்தால் அது உங்களுக்கோ, அல்லது உங்கள் பெற்றோருக்கோ, அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருந்த போதிலும் நீதியை நிலை நிறுத்தியவர்களாக சாட்சி/நீதி கூறுங்கள். அவர்கள் பணக்காரர்களாயினும், ஏழைகளாயினும் உண்மையின் படியே சாட்சி/நீதி கூறுங்கள். இறைவன் அவ்விருவருக்கும் உரியவன். இன்னும் நீங்கள் நியாயம் வழங்கும் போது உங்கள் மனோ இச்சையை பின்பற்றாதீர்கள். நீங்கள் சாட்சியத்தை/ நீதியை மாற்றினாலும், அல்லது சாட்சி/நீதி கூறாது புறக்கணித்தாலும் நிச்சயமாக இறைவன் நீங்கள் செய்பவற்றை நன்குணர்பவனாகவே இருக்கின்றான்.” இதுவே நான் பின் பற்ற வேண்டிய அறிவுறுத்தல்( guidance), எனது நீயாயாதிக்கம்( jurisdiction).ஆகவே நான் வழங்கும் தீர்ப்பு எது நீதியோ அதன் பக்கமே சாரவேண்டும். பு¡¢கிறதா?

    (வழக்காளியும், எதிராளியும் ஒரே நேரத்தில் தலையாட்டுகிறார்கள்)

    இந்த அடிப்படையில் இதோ எனது தீர்ப்பு; அறபுப் பெண்ணே இந்த வழக்காளி ஆரியவதியிடம் நீ மனம் வருந்தி மன்னிப்பு கேட்பதோடு, இனி இத்தகைய கொடுமை யாருக்கும் செய்யமாட்டேன் என்று இந்த நீதி மன்றத்துக்கு உறுதி கூற வேண்டும். இந்த பெண்மணிக்கு தகுந்த நட்ட ஈடும் கொடுக்கவேண்டும். இந்த நட்ட ஈட்டுத்தொகை அவவின் வைத்திய செலவு, தேவையற்ற பிரயாண செலவு, உடல், உள ரிதியாக ஏற்பட்ட காயங்ககுக்கான செலவு என்பதுடன் உன் நல்லெண்ணத்தை தொரியப்படுத்தும் தொகை ஓன்றையும் செலுத்த வேண்டும். இந்த தொகை அவவுக்கு நியாயமாக சேர வேண்டிய சம்பளப் பணத்துக்கு மேலாக செலுத்தப் பட வேண்டும். வட்டி இந்த நீதி மன்றத்துக்கு தடை செய்யப் பட்டுள்ளதால், நிலுவையில் உள்ள எத் தொகைகும் வட்டி எதிபார்க்கப் படவோ வழங்க முன் வரவோ கூடாது. இதையே இன் நீதிமன்று பகிரங்க தீர்ப்பாக அறிவிக்கின்றது.

    இந்த தீர்வுக்கு பதிலாக பாதிக்கப் பட்ட வழக்காளி தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு சமமான உடல் ரிதியான தண்டனை குற்றவாளிக்கு வழங்கப்பட வேண்டுமென கோறுவாராயின் அதற்கும் இந் நீதி மன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. அதன்படி ஆ¡¢யவதியே, அந்த அறபுப் பெண்னுக்கு 25 ஆணியும் 5 ஊசிகளும் உனக்கு எங்கெங்கு செலுத்தப் பட்டதோ அங்கே நீயும் செலுத்தலாம். ஆனால் அது பழிவாங்கும் நோக்கத்தில் செய்யப்படலாகாது. இந்த நீதி மன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பை நிறை வேற்றுவதாக மட்டுமே இருக்க வேண்டும். எந்த விதத்திலும் உன் நோவினைக்கு மேலாக அந்த பெண்னை நோவினை படுத்தலாகாது. தேர்வு உன்னுடையது.

    ஆரியவதி: தெய்யனே, மமனங் ஏக்கட கெமத்தி நே மஹத்தையா (கடவுளே, அதற்கு நான் சம்மதம் இல்லை ஐயா),
    மகே நோனா ஹித்தன் நெத்துவ மே வெறத கரலா எத்தி( எனது எசமானி யோசிக்காமல் இந்த பிழையை செய்திருக்க வேண்டும்), கொகம உனுத் மமனங் ஏ வகே வெறதக் கரண்ட கெமத்திம நே மஹத்தயா.( எது எப்படி இருந்தாலும் இதே குற்றத்தை நான் செய்ய உடண்படவே மாட்டேன் ஐயா)என்று அழுத வண்ணம் கூறுகிறார்.

    நீதிபதி: அதை நீ செய்துதான் ஆக வேண்டும் என்பதல்ல. உன்னை வற்புறுத்த இந்த நீதி மன்றத்துக்கு அதிகாரமும் இல்லை. நீ விரும்பினால் மாத்திரம் உனக்கு பூரண சுதந்திரம் உண்டு. நல்லது உன் முடிவை இந்த நீதிமன்றம் மதிக்கின்றது. இந்த அடிப்படையில் நட்ட ஈட்டுத் தீர்ப்பை நீர் ஏற்றுக் கொள்கிறீர் என இந்த நீதி மன்றம் நம்புகிறது. அப்படித்தானே?

    ஆரியவதி: ஒவ் மஹத்தையா. எஹமய்.(ஆம் ஐயா, அப்படித்தான்)

    நீதிபதி: அறபுப் பெண்ணே!, இந்த தீர்ப்பு பிழையானது(defective) என்று கண்டால் உமது வக்கீல் மூலமாக மேன் முறையீடு செய்யலாம்.

    ஆரியவதி! உமக்கான நட்ட ஈட்டுத்தொகை உமது அசெளகரியங்களுக்கு ஏற்றதாக இல்லை(disproportionate) என்றால் நீர் இந் நீதிமன்றம் அதை வேறோர் நீதிபதியின் மூலம் மறு பரிசீலணை செய்ய விண்ணப் பிக்கலாம்.

    அறபுப் பெண்னே! உனது மன்னிப்பை ஏற்பதும், ஏற்காது விடுவதும் அந்த பாதிக்கப்பட்ட பெண்மணியைப் பொறுத்தது. ஆனால் எல்லா சந்தர்பத்திலும் அவரின் தீர்ப்பு தொகை( judgment sum) செலுத்தப்படவே வேண்டும். இத்துடன் இன் நீதிமன்றின் அமர்வு முடிவுக்கு வருகிறது. (நீதிபதி மெதுவாக எழ முயற்சிக்கின்றார்.)

    முதலியார்: எல்லோரும் எழுந்து நில்லுங்கள், கெளரவ நீதி பதி நீதிமன்றை விட்டு வெளியேறுகிறார்.
    (எல்லாரும் எழுந்து நின்று நீதிபதிக்கு மரியாதை செலுத்துகின்றனர்)

    (நீதி மன்ற அறைக்கு வெளியே ஆரியவதியின் வழக்கறிஞ்சர் தலையை தொங்கப் போட்டுக் கொண்டு இருப்பதை நீதிபதி தற்செயலாக பார்த்துவிடுகிறார், முதலியாரை அழைத்த நீதிபதி ஏதோ குசு, குசுக்கிறார்)

    முதலியார்: திரு. நந்தா அவர்களே!, உங்களை நீதிபதி தன் அலுவலக அறைக்கு(Chamber) வரும் படி அன்பாக அழைக்கின்றார். (நந்தாவும் வேண்டா வெறுப்பாக தனது சம்மதத்தை தொரிவிக்கின்றார்.)

    நந்தா: Am I allowed to come in Sir?(நான் உள்ளே வர அனுமதியுண்டா ஐயா?)

    நீதிபதி: Of course. Please do come in Mr. Nantha,( நிச்சயமாக. உள்ளே வாருங்கள் நந்தா அவர்களே)
    (கடுப்பில் இருக்கும் நந்தா உள்ளே சென்றவுடன்)

    நந்தா: ஐயா, நீங்கள் வழங்கிய தீர்ப்பு பிழையானது. என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாது.

    நீதிபதி: (சற்று மெளனம் சாதித்து விட்டு) உங்கள் கட்சிக்காரர் ஆரியவதி விரும்பினால் நஸ்ட ஈட்டு தொகை தொடர்பாக மறு பி¡¢சீலனைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தீர்ப்பு கூறினேனே. அதில் என்ன பிழை என்று கூறுகிறிர்கள்? அல்லது ஆணியடிக்கும் உ¡¢மையும் அவவுக்கு உள்ளதாக கூறினேன். ஆரியவதி நஸ்ட ஈட்டு தீர்ப்பை ஏற்றுக் கொண்டாவே.

    நந்தா: நான் சொல்வது அதையல்ல. சட்டப்படி அந்த அறபுப் பெண் என் கட்சிகாரரான ஆரியவதியை கொன்றிருக்க வேண்டும். அல்லது இந்த நீதி மன்றம் அந்த அனுமதியை அறபுப் பெண்ணுக்கு வழங்கி இருக்க வேண்டும். ஆனால் இரண்டும் நடை பெறவில்லை.

    நீதிபதி: (ஆச்சரியத்துடன்) மிஸ்டர். நந்தா, நீங்கள் ஆரியவதியின் வழக்கறிஞ்சர் என்பதை மறந்து விட வேண்டாம். ஆரியவதிகாக அல்லவா நீங்கள் வாதாட வேண்டும். இந்த நட்ட ஈட்டுத் தொகை போதாதது என்று நீங்கள் வாதிடுவதற்கு பதிலாக ஏதோ பேசுகிறிர்களே?.

    நந்தா: (மனதுக்குள், இவன் யாருடா இவன். ஒன்னும் விளங்காத மாங்காய் மடையனா யிருக்கிறான். ஆரியவதி செத்தால் என்ன வாழ்ந்தால் எனக் கென்ன? அல்லது அவ வாழ்ந்து தான் என்னத்தை கிழிக்கப் போரா. நான் வந்தது வேறு விளையாட்டுக் கென்பது இவனுக்கு எப்படி புறியவைப்பது) ஸார்! நீங்கள் குர்-ஆன் படி தீர்ப்பு வழங்கியதாக சென்னீர்கள் அல்லவா?

    நீதிபதி: அது சரி.

    நந்தா: ஸார்! ஆரியவதி ஒரு “காபீர்”( ஏகத்துவ கொள்கையை ஏற்காதவர் என்பதற்கான அறபு வார்த்தை)

    நீதிபதி: அதில் என்ன சந்தேகம் நந்தா அவர்களே? அத்துடன் இந்த வழக்கு ஒரு மனிதனுக்கு, இன்னெரு மனிதனால் இழைக்கப் பட்ட தீங்கு சம்பந்தமானது. இதில் நியாயத்தின் அடிப்படையில் நீதி அமைய வேண்டுமே இல்லாமல். அவர் சார்ந்த மத( நீதிபதி மனதுக்குள், இவனுக்கு இந்த சொல் பிடிக்காது என்று கேள்விபட்டேன்) I mean (நான் சொல்வது) சமயம் அடிப்படையில் அல்லவே.

    நந்தா: அங்கு தான் பிழை விடுகிறீர்கள், ஐயா.

    நீதிபதி:(சற்று குழப்பம் அடைந்தவராக) Well, can you be more specific Mr. Nantha?( நல்லது, என்ன வென்று இன்னும் சற்று சா¢யாக சொல்ல முடியுமா நந்தா அவர்களே)

    நந்தா(மனதுக்குள் பொறு படிப்பிக்கின்றேன் உனக்கு பாடம்) It’s very simple Sir, (இது மிகவும் இலகுவானது ஐயா). ஐயா, குர்-ஆன் சொல்கிறது “காபிர்” களை கொலை செய் என்று. ஆ¡¢யவதி ஒரு காபிர். அறபுப் பெண்(மனதுக்குள் இதுகளை பெண் என்று சொல்வதே பாவம்) ஒரு முஸ்லிம். அப்படியானால் ஆரியவதியை அவள் என்ன செய்திருக்க வேண்டும்?

    நீதிபதி:(மேலும் குழப்பம் அடைந்தவராக) என்ன செய்திருக்க வேண்டும்? Yes, go ahead Mr. Nantha( மேலே சொலுங்கள் நந்தா)

    நந்தா:( மனதுக்குள், வசமா மாட்டிட்டான், இரண்டு யானை பெட்டி கதை சொல்லி “கோட்”டை கலக்கிய தமிழனும் நம்மாள் என்பதை இப்போதாவது பு¡¢ந்து கொள் மகனே.) குர்-ஆன் படி ஆ¡¢யவதி இன்நேரம் க்லோஸ். ஆனா பாருங்க ஆரியவதி துண்டு கட்டையாட்டும் நிக்கிறா. ஆகவே அறபுப் பெண் குர்-ஆன் சொல்வதை வேண்டும் என்றே செய்ய மறுக்கிறார். இந்த அடிப்படையில் இவர் இஸ்லாத்தில் இருந்து வெளியேறுகிறார். இவரை உயிர்வாழ நீங்கள் எப்படி அனுமதிக்க முடியும்? ( நந்தா மனதுக்குள், நெற்றி கண்ணை காட்டினாலும் குற்றம் குற்றமே என்று கடவுளுக்கே சவால் விட்ட ஆதி பரம்பரையில் வந்த என்னிடம் சேட்டையா)

    எந்த பக்கத்தில் பார்த்தாலும் இன்று நீங்கள் ஒரு கொலை செய்ய அனுமதிக்கும் தீர்ப் போன்றைத்தான் வழங்கி இருக்க வேண்டும். அறபிப் பெண்ணால் நம்ம ஆரியவதி கொல்லப்பட வேண்டும். அல்லது ஆரியவதியால் அறபிப் பெண் கொல்லப் பட அனுமதி வழங்கப் பட்டிருக்க வேண்டும் (நந்தா மனதுக்குள், அப்பதானே நமக்கு விளையாட்டு காட்ட வாய்ப்பு. எப்பிடி வச்சேன் முற்றுப் புள்ளி. பனை மரத்திலே வெளவாலா?ஆதி வாசிக்கிட்டே சவ்வாலா?)

    நீதிபதி: So, your argument is,(ஆகவே உங்கள் வாதாட்டம் என்ன வென்றால்) “காபிர்” ஒருவர் கொல்லப்பட வேண்டும் என குர்-ஆன் சொல்கிறது (நீதிபதி மனதுக்குள் ம்ம்ம், ம்ம்ம், அப்படியானால் இவன் எப்போதோ கொல்லபப்ட்டிருக்க வேண்டுமே? மூன்று நேரமும் தவராமல் திண்டு கொளுத்து தள, தள வென்று இருக்கிறானே) அப்படித்தானே? இங்கு ஆ¡¢யவதி ஒரு காபிர் ஆகவே ஆணி அடித்தாவது அவள் கொல்லப்பட்டிருக்க வேண்டும். அல்லது சந்தர்பம் கிடைத்தும் அந்த அறபு முஸ்லிம் பெண் அதை செய்யவில்லை, ஆகவே அவள் இஸ்லாத்தை வெளிப்படையாக மறுதழித்துவிடாள் எனவே அவவும் கொல்லப்பட வேண்டும்( நீதிபதி மனதுக்குள், இவன் என்ன கொலை, கொலை என்று அழைகின்றான். புலிப் படையில் இருந்திருப்பானோ?). அப்படித்தானே?

    நந்தா:( மனதுக்குள் அப்பாடா இந்த மர மண்டைக்கு விளங்கக்படுத்த வேண்டாம் எண்டாகிவிட்டது. நம்ம ஆளுங்களா இருக்க வேணும் ஒரு செக்கனில விசயத்தை டப் பெண்டு விடித்துடுவாங்க.) ஐயா, இதைத்தான் கோட்டில் சொல்ல வெளிக்கிட்டேன். நீங்கள் விடலேயே, விடலயே, ஹஹக விடலேயே.

    நீதிபதி: என் நீண்ட அனுபவத்தில் இப்படி ஒரு விடயத்தை பார்க்கவில்லையே. ( ம்ம்ம்ம், சரி அப்படி இருந்தா நம்ம ஆளுங்க சும்மா இருக்க மாடானுகளே. ஆடு, மாடு அதுகளேயே விட்டு வைக்காத நம்மாளுங்க இதை எப்படி இது வரை விளங்காம இருந்தானுங்க. ஆகக் குறைந்தது இந்த “காபிர்” ஆம்புள்ள ஆக்களை எல்லாம் தட்டிபோட்டு, பொம்பிளை எல்லாரையும் அபேஸ் பண்ணீருப்பாங்களே என்று மனதுக்குள் நினைக்கிறார்) சரி, நந்தா அந்த குர்-ஆன் பிரதியை கொண்டு வாருங்கள். நான் இந்த வழக்கை மீள் விசாரணை செய்ய ஆவனசெய்கிறேன்.

    நந்தா: ஐயா! (தலையை சொறிந்தவாறு)அந்த குர்-ஆன் இருக்கிறது. ஆனா… இல்லை.

    நீதிபதி: என்ன சொல்கிறீர்?

    நந்தா:( மனதுக்குள், இதை இவனுக்கு விளங்கப் படுத்த வெளிக் கிட்டா நான் வீடு சென்ற மாதி¡¢தான். இருகிறது இல்லை என்ற phyloshopy(தத்துவம்) விளங்கிற மூஞ்சா இது, அந்த மூளை எல்லாம் தமிழனுக்கு ஐயா, தமிழனுக்கு) அது என்னிடம் இல்லை ஐயா.

    நீதிபதி: அதற் கென்ன? உங்களிடம் தான் இருக்க வேண்டும் என்பதல்ல. எங்கிருந்தாலும் கொண்டு வாருங்கள்.

    நந்தா: யாரிடமும் இல்லை ஐயா.

    நீதிபதி: (ஆச்சா¢யத்துடன்) என்ன சொல்கிறீர்கள் நந்தா?

    நந்தா: அது வந்து, வந்து…. Politicalislam இணை ய த… ள.. த்….தில்..(என்று இழுக்கிறார்)

    நீதிபதி: No, No. Mr. Nantha. That’s hearsay evidence (இல்லை, இல்லை நந்தா அது ஒருவர் சொல்வதை கேட்டு சொல்லும் சங்கதி, வாய் வழி செய்தி ). it’s not acceptable in any criminal proceedings( குற்றவியல் வழக்கில் இது ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது). நீங்கள் சொல்லும் ஒரு குர்-ஆன் பிரதி இந்த நீதி மன்றத்துக்கு போதுமானது. காலத்தை வீண்ணடிக்காமல் ஒரு குர்-ஆன் பிரதியை எடுக்க ஆவனசெய்யுங்கள். நீங்கள் இருக்கும் கனடாவில் அந்த McNally Robinson, பிரசித்தி பெற்ற புத்தகக் கடையில் கேளுங்கள் நிச்சயம் கிடைக்கும்.

    நந்தா: Politicalislam விடயத்தை புத்தகம் போல் பிரதி எடுத்து தருகிறேனே ஐயா?

    நீதிபதி: (மனதுக்குள், யாருடா இவன் சட்டம் தொரியாம கோட்டுக்கு வந்திருக்கிறான்) Still it’s hearsay evidence, isn’t it? (இன்னும் அது கேட்டு சொல்லும் சங்கதி தானே. அப்படி இல்லையா?)

    நந்தா: (மனதுக்குள் ஆமா, கண்டா¢யாத அறிவுறுத்தல். ஏன் எங்களுக்கு தொரியாதா அந்த புத்தகக் கடை. Politicalislam காரனுகள நம்பி ஆள மடக்க பார்த்தா விடயம் பிழைக்கும் போல தொ¢கிறதே. ஆள சுத்த முடியவிலலையே) நான் முயற்சிக்கிறேன் ஸார்.

    நீதிபதி: நல்லது. நந்தா இன்னுமொரு விடயத்தை உங்களுக்கு ஞாபக படுத்த வேண்டும். சென்ற முறை அந்த “குண்டு சட்டி” வழக்கை ஆராயும் போதும், தீர்ப்பு சொல்லும் போதும் ஏதோ கொக்கடிச்சோலை அல்லது கொரகொல்ல- மட்டையடி- இளம் பெண்- கைக் குழந்தை என்று (மனதுக்குள், கொக்கரித்து) சொல்லிக் கொண்டே இருந்தீர்கள். கவனித்தேன். நான் எப்படி அந்த விவகாரத்தில் தலை இட முடியும். “குண்டு சட்டி ” வழக்கு மான நஸ்டம் தொடர்பானது. கொரகொல்ல விடயம் குற்றவியல் சம்பந்தமானது. இரண்டையும் போட்டு குழப்பி இருக்க தேவையில்லை. இதை தனியாக தாக்கல் செய்திருக்க நாம் விசா¡¢த்து தீர்ப்பு கூறியிருக்கலாம். இப்போதும் காலம் கடக்கவில்லை.

    அனுபவம் வாய்ந்த நீங்களே இப்படி சம்பந்தமில்லாத வழக்குகளை இணைத்து கதைக்கும் போது உங்களுக்கு கீழ் பயிற்சி பெறும் குசும்பு போன்றேர் எப்படி தங்கள் திறமைகளை வெளிக் கொண்டு வர முடியும்? அவர் ஒரு திறமைசாளி. அதாவது எந்த ஜென்மத்திலும் தான் தேற முடியாது என்றாலும் பில் கேட் தரத்துக்கு முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் உடையவர். ஆ.., குசும்பு என்றதும் தான் ஞாபகம் வருகிறது. மிஸ்டர். நந்தா இரண்டு மூன்று வழக்குகளுக்கு நல்ல வழக்கறிஞ்சர்கள் தேவைபடுவதாக தகவல் வந்தது.

    ஒரு வழக்கு, Mayotte என்ற ஒரு சிறிய ஆபிரிக்க நாட்டு விடயம். ஆதாவது ஒரு லொறி சாரதி தன் வாகனத்தை மரத்துடன் மோதவிட்டு அந்த லொறியில் சென்ற நான்கு ஆபிக்க பெண்களுக்கு சின்ன கிராய்ப்புகள் ஏற்படுத்தி உள்ளான். அவர்களுடன் லொறியில் இருந்த மூன்று ஆடுகளுக்கும் சின்ன காயம், அதனுடன் ஒரு கன்று குட்டியும் இருந்ததாம் நல்ல வேளை காயம் ஏதும் இல்லை. ஆனால் சாரதி ஒரு முஸ்லிமாம். இனி தொ¢யும் தானே, ஆடு, மாடு, நாலு பொம்பிளை வேறு. ஏதோ இஸ்லாத்திற்கும், இந்த சம்பவத்திற்கும் பயங்கர கனக்சன் இருப்பதாக உலக நாடுகளில் பேசப்படுகிறதாம். இந்த ஆடு, மாடு, பெண்கள் விடயத்திலே குசும்பு எக்ஸ்பேர்ட் எண்டு தொ¢யும் தானே. அவரை அந்த வழக்குக்கு போடுங்கள். இளைஞர் பேரவை அது, இது என்று சர்வதேச(ஹீ, ஹீ ,ஹீ) விவகாரங்கள் எல்லாம் பேசுபராச்சே. You know he is very intelligent guy.

    நீங்கள் மற்ற வழக்குகளை பேசலாம். அதில ஒன்று இந்த பாகிஸ்தான் காரங்கள் நோன்பு நேரம், நாட்டிலே வெள்ளப் பெருக்கு என்று இருக்க எதிலுமே அக்கறை படாம லண்டனிலே match fixing ஊழல் என்று பொ¢ரிய கதை. எப்படியும் இதற்கும் இஸ்லாத்துக்கும் connection இருக்க வேண்டும். இல்லாட்டி இந்த மாதிரி கப்சிப் என்று சத்தம் போடாம இருக்க மாட்டானுகள். என்னா துல்லு, துல்லுகிறான்கள் நந்தா இவனுகள். நாட்டிலே இவ்வளவு பொ¢ய அனர்த்தம் நடக்கும் போது இங்கு கிரிக்கட் விளையாட்டு. சீச் சீ, வெட்கக் கேடு.

    அடுத்த case ரொம்ப ஸீரியசாகத் தான் என்னால் பார்க்க முடியுது. அது தான் மிஸ்டர் நந்தா இந்த சிலி (Chile) நாட்டு சுரங்க விவகாரம். சிலி நாட்டில் தான் உலகத்தில் அதிக கூடிய பலஸ்தீனியர்கள் அகதிகளாக இருக்கிறானுகள். அவனுகளுள முஸ்லிம் பலஸ்தீனியங்கள் குர்-ஆன், அல் -அக்ஸா அது, இது என்று தொரியுந்தானே உங்களுக்கு. அவனுகளுட இந்த “காபிர்”கள கொலை செய்யும் முயற்சியாகத்தான் இந்த சரங்க விவகாரம் இருக்க வேண்டும். இவனுகள் தான் ஏதோ மாயம் பண்ணீ அந்த சுரங்கத்திலே மண் சா¢வை ஏற்படுத்தி, அதை மூடப்பண்ணி 33 சுரங்கத் தொழிலாளிகளையும் அமுக்கி இருப்பானுக. எப்படியும் விசயம் வெளியே வராமலா போகப் போகுது. இது நல்ல கேஸ் எடுத்து நடத்துங்க. உங்க புகழ் உலகம் பூரவும் பேசப்படும், சீக்கிரமே நீங்களும் high flying international lawyer ராகிடலாம்.

    அப்புறம் கவனித்திருப்பீங்க என நினைக்கிறேன். அப்துல்லாவோ அல்லது அப்துலோ என்று ஒரு நீதிபதி இந்த தேசம்நெற்றிலே வலம் வாராரு. அவரையும் நீதி சொல்ல அழைக்கலாம். ஆனா அவர் ஒரு கறார் மனுசன். இந்த சட்டம் ஒழுங்கு விடயத்தில் எல்லாம் கண்டிப்பானவர். நம்ம மாதி¡¢ softy, softy touch இல்லே. நீங்கள் திறமைசாளி யார் வந்தாலும் உள்ளால் விட்டு அடிப்பீர்கள் (மனதுக்குள், கற்பனையில் புலி மாதிரி ) பயப்பிட வேண்டாம் தொடருங்கள்.

    மிஸ்டர் நந்தா எங்கே உங்கள் கட்சி காரரை(Client) காணவே இல்லையே? “குண்டு சட்டி” வழக்குக்கான தீர்ப்பு வழங்கியாகி விட்டது. அவர் குற்றத்துக்கு துணை பு¡¢ந்தவர்களான (accomplice), பல்லி நீதிமன்ற தீர்ப்பை மதித்து மன்னிப்பு கேட்டு விட்டார். BC என்பவர், மன்னிப்பு கேட்கவில்லை, மாறாக தான் ” கூடியிருந்து கொண்டாடி கெடுப்பதென்ற விடயத்தோடு உடன்படவில்லை” என்கிறார். ஆனால் அந்த வழக்கின் பிரதான குற்றவாளீ குலம் சத்தமில்லாமல் இருக்கிறாரே? பிடியாணை பிறப்பிக்க முன் நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பளிக்கச் சொல்லுங்கள்.

    நந்தா:( மனதுக்குள், யோவ்! அறுக்காம ஆள விடுயா) நல்லது ஐயா, போய் வருகிறேன்.

    நீதிபதி:(மனதுக்குள், வரப் போரியா, ஓடி தப்பிவிடு) நல்லது, நல்லது சென்று வாருங்கள். இன்னொரு வழக்கில் சந்திப்போம்.

    Reply
  • nantha
    nantha

    நிஸ்தார் எப்படி “காமெடி” பண்ணினாலும் நான் கேட்ட கேள்விகளுக்கு பதிலே கொடுக்காமல் “டேக்கா” கொடுத்து ஓடிக் கொண்டே இருக்கிறார்.

    கொக்கரல்ல மட்டையடி பற்றி விசாரித்து எழுத்வதாக கூறிய சகாப்தீன்நானாவின் பதிலையும் காணவில்லை. நிஸ்தாரும் அந்த விஷயத்தில் பயங்கர மவுனம்! அதுவே இந்த இஸ்லாத்தின் பயங்கரத்தை சொல்லுகிறது.

    காபிர், முகம்மது+ஆயிஷா கலியாணம், வயது என்பன பற்றி நிஸ்தார் வாயே திறக்கப் போவதில்லை. ஏனென்றால் நந்தா உண்மைகளை எழுதியுள்ளார். அதற்கு இஸ்லாமிய முறைப்படி “மரண” தண்டனை எந்த அயதொல்லா வித்தித்திருக்கிறார் என்பதை நிஸ்தார் சொன்னால் இன்னமும் காமெடியாக இருக்கும்!

    நிஸ்தார் “எல்லாம் பொய்” என்று சொன்னார்.
    ஆதாரம் பொலிடிகல் இஸ்லாம் என்றவுடன் அதனை “பொய்” என்று மறுதலிக்க முடியாமல் திண்டாடுகிறார்.

    முகமது, ஆய்ஷா, காபிர் என்பனபற்றி இச்லாத்தின் குரான், சிரா, கதீஸ் ஆகியவற்றில் கூறப்பட்டவை நான் கேட்ட கேள்விகளுக்குப் பதில் தராது ஒளிந்து கொண்டு விட்டு இப்போது காமெடி.

    விவாகரத்துப் பற்றி பெரிதாகப் சொன்ன நிஸ்தார் இந்திய முச்லிம் பெண் “பானு”வின் சுப்ரீம் கோர்ட் வழக்கு பற்றி எழுதியவுடன் ஓட்டம் பிடித்துவிட்டு இப்போது வந்து ஒரு அலம்பல்.

    தைரியம் இருந்தால் பொலிடிகல் இஸ்லாம் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும் விஷயங்களில் எது பொய் என்று எழுத தயாரா?

    Reply
  • palli
    palli

    // அது தொடர்பாக தேசம்நெற்றில் வெளியாகிய முதல் பின்னூட்டத்தையும், கடைசியாக வெளியாகிய ஆணி என்ற கவிதையையும் அடிப்படைகளாகக் கொண்டது.//
    அது சரி இத்தனை கூத்தும் நடக்கும்போது பல்லி எங்கே போனேன்,?? பல்லி ஸ்கேப்;

    Reply