சமீபத்தில் பிரதியமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட மேர்வின் சில்வா நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெயர்ந்த மக்களைப் பார்வையிட்டுள்ளார்.
அன்பளிப்புப் பொருட்களுடன் அவர் அங்கு சென்று பார்வையிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த இரு நாட்களாக அவர் நாட்டிலுள்ள பல பௌத்த ஆலயங்களுக்கு சென்று அங்கு வர்ணம் தீட்டும் பணிக்கு அனுசரணை வழங்கியதாகவும் இப்பணியின் சில அரச தரப்பு உறுப்பினர்களும் பங்கேற்றதாகவும் அவரின் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
தற்போது யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள மேர்வின் சில்வா ராமாவில் பகுதியிலுள்ள இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் நிலையத்திற்குச் சென்றதுடன் பாடசாலைப் பிள்ளைகளுக்கு புத்தகங்களை வழங்கியுள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை களனிய விகாரையில் வர்ணம் தீட்டும் நடவடிக்கைக்கு அனுசரணை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தனது மக்களுக்காக பணியாற்றும் செயற்பாட்டை தொடர்ந்து மேற்கொள்வார் எனவும் ஆங்கில இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.