இன்று Aug 29 -வடக்கு – கிழக்கு – மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் – பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் உடன் சந்திப்பும் கலந்துரையாடலும்

Prof_Hooleயாழ் பல்கலைக் கழகம் தொடர்பாக தேசம்நெற்றில் இடம்பெற்று வரும் விவாதம் பல்வேறு வகையிலும் எமது சமூகத்தின் கல்விநிலை பற்றியதாகவும் விவாதிக்கப்பட்டு வருகின்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பான முன்னைய பதிவுகளைப் பார்க்க:
‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் உடனான நேர்காணல்

சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்

பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்

அவ்வகையில் தனது அமெரிக்க பல்கலைக்கழகத்துடனான கற்பித்தலை நிறைவுசெய்து கொண்டு இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தனது கற்பித்தலை முன்னெடுக்கச் செல்லும் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் அவர்களை தேசம்நெற் லண்டன் வரவழைத்து ஒரு சந்திப்பினை மேற்கொள்ள ஏற்பாடு செய்துள்ளது. அதன் விபரங்கள் வருமாறு:

நோக்கம்: வடக்கு – கிழக்கு – மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் பற்றி விவாதிப்பதும் கலந்துரையாடுவதும். இக்கலந்துரையாடல் பேராசிரியரின் சிறப்புரையைத் தொடர்ந்து இடம்பெறும்.

சிறப்புரையிலும் கலந்துரையாடலிலும் பின்வரும் அம்சங்களை உள்ளடக்க முயற்சிக்கப்படும்.

1. இதுவரையான கல்விமுறையும் அதன் குறைபாடுகளும் அது எதிர்கொள்ளும் பிரச்சினைகளும்.

2. எதிர்காலத்தில் தமிழ் பேசும் சமூகங்களிடையே கல்வி மேம்பாட்டை ஏற்படுத்துவதற்கான வழிமுறைகள்.

3. கல்வி மேம்பாட்டை ஏற்படுத்துவதற்கு தமிழ் பேசும் சமூகங்களிடையே உள்ள பாடசாலைகள் தனியார் கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழகங்கள் எவ்வாறான மாற்றங்களை தம்முள் ஏற்படுத்த வேண்டும்.

4. சமூக மாற்றத்திற்கு கல்வியை எவ்வாறு பயன்படுத்த முடியும்.

5. தமிழ் பேசும் சமூகங்களின் அரசியல் பொருளாதார உரிமைகளை உறுதி செய்ய, வாழ்நிலையை மேம்படுத்த கல்வி மேம்பாட்டை எவ்வாறு பயன்படுத்தலாம்.

காலம்: 29 ஓகஸ்ட் 2010, ஞாயிறு மாலை 15:30

இடம்:
Lord Brooke Hall
Shernhall Street
Walthamstow,
London E17 3EY

தொடர்பு :த ஜெயபாலன் : 07800 596 786 or 02082790354
த சோதிலிங்கம் : 07846322369  ரி கொன்ஸ்ரன்ரைன் : 0208 905 0452

இக்கலந்துரையாடல் விவாதம் தொடர்பாக தங்கள் கருத்துக்களை முன்வைக்க விரும்புபவர்கள் அல்லது பேராசிரியர் ஹூலிடம் கேள்விகளை முன்வைக்க விரும்புபவர்கள் இங்கு அவற்றினைப் பதிவிடவும். முடிந்தவரை விவாதத்தை தொகுத்தும் கேள்விகளுக்கான பதிலைப் பெற்றுத்தரவும் முயற்சிப்போம்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 Comments

  • Suppan
    Suppan

    First of all Jeyabalan summarize the comments made by Rajathurai, Democrazy, Aaivu, Suppan Paranitharan, Thevarasa, Ganakumaran, Gapur, Sppan and other valuable comments made by others and on which Jeyabalan can ask questions. Those are related to the institution and some individuals whom they deteriorated the institution for their pervasive interest.

    The fact is that how the pervasive interest deteriorated the institution to the ground say e.g., Ballasunthrampillai’s activities during his period and even now, based on this facts you can formulate question how those could be rectified in future and how we can get out of this devastation. This is the immediate need of this institution otherwise “PALAIYA KALU PUTHIYA MONTHAI”.

    Simply I can cite an example say S.Kanganathan Ph.D awarding (Prof. Hool is also one of player in this role) is a BAD PRECEDENCE at this institution, moreover this has lead to deterioration in many ways, due to this we are (including Jeyabalan) weeping on the street. Prof. Hool might understand the gravity of this situation. Apart from the above as it is stated earlier Shanmugalingan appointment as a Lecturer is totally irregular: this another kind of deteriorating effort made by Balakrishnan. Certainly I know that most of them are irrecoverable but we can set new path from these experiences that is the need of this society.

    Those are set of guide lines for such interview, also Prof. Hool should explore his past academic activities in Sri Lanka with an open mind not about his family background. In your (Jeyabalan) language SELF-CRITICISM.

    Reply
  • Suppan
    Suppan

    Jeyabalan you must keep in your mind that Prof. Hoole will not be appointed or sworn in as Education Minister, that is, he might be appointed as Vice-Chancellor to the University of Jaffna. In particular, the scope is limited, so that the question should not be in broad area as stated above rather the question should be limited within some bounds, may be about the University Education System and something related to that.

    It should be noted that the above stated concepts in the article are policies; owing to such reason that should come from political leadership and policy makers, not from administrators.

    I hope that you (Jeyabalan) are highly politicized as such you do not come to reality. Please thing about the real and viable situation.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    5. தமிழ் பேசும் சமூகங்களின் அரசியல் பொருளாதார உரிமைகளை உறுதி செய்ய, வாழ்நிலையை மேம்படுத்த கல்வி மேம்பாட்டை எவ்வாறு பயன்படுத்தலாம்.
    –சட்டத்திற்கு?!? உட்பட்டு உரிமை பெறுவதற்க்காக “தமிழர் பிரச்சனையா?” அல்லது “சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் உள்ள(உருவான) பிரச்சனைகளை”, பஞ்சாயத்து செய்வதற்கு உதவியை நாடுவதற்கு தேவையான முன்வைப்புகளை ஏற்ப்படுத்துவதற்கு, “சுய திரிபுகளை(INTERPRETATIONS IN WORDS)” செய்யப்பட்ட முயற்சியா இந்த “தமிழர் இனப்பிரச்சனை”?. பல தமிழ்நாட்டுத்தமிழர்கள் (இந்தியா) இதில் உள்வாங்கப்பட்டு குழப்பமடைந்துள்ளனர்!
    /Yes, religious education should be eliminated from the School education system, e.g., India and further in France where religious identities are also eliminated from Schools.-Suppan/- DEMOCRAC(Z)Y was originated in France,was a socio- political evolution to replace Vatican powers such as Luis XIV ect..Mr.Suppan can you say anything such as,to repace religion was happened in India?.I donot accept Gandhi?-Nehruian “secularism”!.
    பலர் இலங்கைத்தமிழரிடம் (புலம்பெயர்ந்த)பணம் இருக்கிறது, பெட்ரோல் பங்கில் முதலிடு, ஹோட்டலில் முதலிடு, ஜப்பான் ஆகிவிடலாம் என்கிறார்கள் (ஆகக்கூடாது என்று நான் சொல்லவில்லை). மனதை தொட்டுச் சொல்லுங்கள், பணம் இருக்கிறதா?. இலங்கையிலுள்ளவர்களைவிட ,இவர்கள் உண்மை பொருளாதாரத்தி பிந்தங்கியுள்ளனர். என்ன இவர்களிடம் இரண்டு இலட்சம் டாலர் பெருமதியான வீடும் – காரும் இருக்கும். ஆனால் தற்போது அதன் கடனை அடைக்க அவர்களின் வாரிசுகளும் கையொப்பம் இடவேண்டும், காப்பீடுகளிலும் உறுப்பினராக வேண்டும். மேற்குலக பொருளாதார நிபுணர்கள் இளிச்சவாயர்கள் அல்ல. ஆனால், ஒரு சில “பில்லியன் டாலர்கள்” “உலாவருகிறது”, குறைந்த வட்டிக்கு கடன் கொடுப்பார்கள், திருப்பி கட்டவில்லையென்றால் தூக்கியடிபார்கள், குத்துபவனுக்கும் கத்தி வாங்கிக் கொடுப்பார்கள், குத்தப்படுபவனுக்கும் கத்தி கொடுத்து குரைந்த செலவில் சாணையும் பிடித்துக் கொடுப்பார்கள். எல்லாம் “தமிழ் உணர்ச்சியின் பெயரால்”!. அப்பாவி மக்களை (அகதி)விலக்கிவிட்டுப் பார்த்தால் இவர்கள் ஒரு சிறு மாஃபியா கும்பலே!. இவர்களுக்கும்,”தமிழ் அரசியலுக்கும்” சம்பந்தமில்லை, ஆனால், இவர்களிடமுள்ள பணத்தால் (சில நாடுகளோ, கார்ப்பரேட் அமைப்புகளோ, மத நிறுவனங்களோ?) “தமிழ் மேடை” அமைத்துக் கொடுக்கப்படுகிறது, அதில் சுலபமாக (ஆழம் தெரியாமல்)பலர் கூத்தடிக்கின்றனர் (நான் தற்போது தேசம்நெட்டில் செய்வது போல?)!. இந்தப் பணத்திற்குதான் பலர் “தமிழின் பெயரால்”, விட்டில் பூச்சிகளாக குறிவைக்கின்றார்கள்!. “தமிழர் உரிமை கேட்பது என்பது” இத்தகைய மாயைகளை நீக்கி, வெளிப்படையான (டிரான்ஸ்பாரண்ட்)ஒன்றாக அமைக்கப்படல் வேண்டும்!….போதும் நன்றி!

    Reply
  • Suppan
    Suppan

    Dear DEMOCRACY, As per your comment on August 24, 2010 2:47 pm

    “Mr.Suppan can you say anything such as, to repace religion was happened in India?.I donot accept Gandhi?-Nehruian “secularism”!.”

    I know that your statement is correct, but the reality of my statement is in different dimension, i.e., within this system (Sri Lanka) it may have some impact among the students. Since social, economical and political structures of Sri Lanka are different from India. This is not an absolute solution, as you know at the present world our scopes are limited within some boundary, otherwise we will have to loose everything as it happened last year.

    Reply
  • Kanthan
    Kanthan

    Dear Prof. Hoole

    1. During the period as a Professor in University of Peradeniya you have created the Computer Science degree and you were the Head of the Dept. for some time. The question is whether the degree was achieved its Goal.

    2. Still there are concern among the true academics about your period as a member of the University Grants Commission (Sri Lanak) regarding some academic appointments based on your effort, such as English Instructors were promoted to the grade of Lecturers or Senior Lecturers.

    Does it comply with the norms of ethics in several ways? Since, it do not produce any positive results rather it produce negative results. The reason is that the recruitment criteria made by you. This is similar to the professorship appointment made on the basis of prior to November 2009 UGC Circular. The above circular is highly criticized by academics in Sri Lanka.

    3. Dr. Rajenthira was appointed by you to the Rector, Vavuniya Campus (it was not materialized) after you had been appointed as Vice-Chanvellor of the University of Jaffna in early part of 2006. The appointment was made by you without consulting others in the University of Jaffna. It was highly criticized by others. As you know his profile was not satisfactory during his tenure as a Dean in the Eastern University of Sri Lanka. Further, he is not an good academic. Always he maintain his pervasive interest. Do you think these type of persons would be a good academic adminstrators? This has been cited earlier in this forum. I humbly request you: do you have any answer in these regards?

    4. In the Interview (at thesamnet) you said that the Vavuniya Campus would be promoted to the level of a University. Is it viable? Since, the Vavuniya Campus does not have adequate human resources and it does not have proper administration. Further to the above there are several anomalies and irregularities in the system. By considering these facts could you feel the Campus would be promoted as a University?

    Reply
  • தமிழன்
    தமிழன்

    பேராசிரியர் இரட்ணஜீவன் ஹூலுக்கு பகிரங்கக் கடிதம்

    பேராசிரியர் இரட்ணஜீவன் ஹூலுக்கு எனது பணிவான வணக்கங்கள்.

    D.Sc (Eng) London, Ph.D. Carnegie Mellon, MSc (Distinction) London, BSc (Ceylon / Katubedde), IEEE Fellow, C.Eng….. எனத் தொடராக அடுக்கப்பட்டுக்கொண்டே போகின்ற உயர்கல்விப் பட்டங்கள், எங்கள் போன்ற அடிமட்ட மனிதர்களால் எட்டிக் கூடப் பார்க்க முடியாத இடங்களிலெல்லாம் ஆய்வுக்கட்டுரைகள், பொறியியலில் பேராசிரியர் தகுதி – அதனுடன் இணைச் சேர்ப்பாக சமூகவியலிலும் பேராசிரியர் என்கின்ற அடையாளம்……

    யாழ் பல்கலைக்கழகத்தினைச் தொடராகச் சீர்குலைக்கின்ற அதிகாரப்பதவிகளின் பின்னால் ஒளிந்து குளிர்காய்கின்ற சண்முகலிங்கன்களை விஞ்சுகின்ற விடய ஞானம், மொழியறிவு…. எழுத்துத் திறமை…. கம்பீரமான தோற்றம்…. நாவன்மை…. வடபிராந்தியத்தில் கால்பதித்தேயாக வேண்டும் என்பதில் உறுதிப்பாடு….

    இப்படியே தங்களைப் பற்றி அடுக்கிக் கொண்டே போகலாம். தாங்கள் ஒரு கல்வியாளர் தான்… யாழ் பல்கலைக்கழகத்தை சீரழிப்போரை விடவும் செயற்திறமை மிக்கவர்தான். இல்லையென்று சொல்ல வரவில்லை.

    ஆனாலும்…. ஆனாலும்….
    தாங்கள் யாழ் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தராக வரப்போவதையிட்டு சற்றுக் கிலேசத்துடன் தான் என்னால் யோசிக்க முடிகின்றது. காலம் காலமாக ஒரு நிகழ்வுக்கோ, ஒரு செயலுக்கோ அடிப்படையாக ‘ஏதோ ஒரு சுயலாபம் காணும் உத்தேசம் அல்லது முயற்சி இருக்கும்…. அல்லது இருக்க வேண்டும்’ என்கின்ற ‘சுத்து மாத்துத்’தனமான எண்ணம் எங்கள் மனதில் ஊறி விட்டது.

    அப்படியானதொரு வாழ்வு முறைக்குத்தான் எங்களை எங்கள் சமூகம் பழக்கியிருக்கின்றது. எங்கள் இலங்கைத் தமிழ் சமூகத்தில் நாங்கள் ‘எங்களைப் பற்றி மட்டுமேயேதான்’ யோசிப்போம். எங்களுக்கு மற்றவன் வீட்டு முற்றத்தில் – எங்கள் வீட்டுக் குப்பையைக் கொட்டிவிட்டு எங்கள் வீட்டு முற்றத்தை பரிசுத்தமாக வைத்திருப்பதில்தான் எப்போதும் கவனம் செல்லும். எங்களது சமூகத்தில் பிழை செய்பவர்கள்தான் பெரியவர்கள்…. அதாவது, அவற்றை (தம் குற்றங்களை) அவர்கள் மூடிமறைத்து உருத்திராட்சப் பூனைகளாக வெற்றிகரமாக வலம் வருவதை நாங்கள் கரகோஷமிட்டு வரவேற்போம்….

    அதனால்தான்…. தாங்கள் அமெரிக்காவில் தங்களது சுகவாழ்வைத் தியாகம் பண்ணிவிட்டு, புழுதி கொட்டிக் கிடக்கின்ற எங்கள் ஊருக்கு வரப் போகின்றீர்கள் என்பதன் பின்னால் ஏதோ சூட்சுமம் இருக்க வேண்டும் என்றே நாங்கள் யோசிப்போம். அது தவிர்க்க முடியாதது. அப்படியெண்ணிச் சந்தேகப்படுவதற்கு நாங்கள் பழக்கப்பட்டு விட்டோம்.

    பேராசிரியர் ஹூல் அவர்களே, யாழ்ப்பாணத்துக்குக் குடும்பத்துடன் இடம்பெயரும் தங்களுக்கும் – ஏதாவது உள்ளார்த்தமான நோக்கம் இருக்கின்றதா? ஏன் அமெரிக்காவின் பெரிய பெரிய பல்கலைக்கழகங்கள் தரும் வசதி மிகுந்த வாழ்வை உதறியெறிந்துவிட்டு இலங்கைக்கு வருவதில் குறியாக இருக்கின்றீர்கள்…. ???

    உண்மையாகவே தாங்கள் தியாக நோக்கில்தான இங்கு வர நினைக்கின்றீர்கள்? விளங்கவில்லையே?

    அப்படியாயின், கேட்கின்றேன்….. “ஏன் ஏறத்தாழ ஒருமாதமாக உலகளாவிய வலைப்பின்னலில் ஏறத்தாழ இருமாதங்களாக தங்கள் வருகை பற்றி செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன?” தியாகிகளும் புனிதர்களும் சுயவிளம்பரம் செய்வதுமில்லை, தம் வருகை பற்றி பிரச்சாரம் செய்வதுமில்லை…. அவர்கள் வாழ்வுகளில் சிலுவைகள்தான் நிதர்சனம்/உண்மையானது.

    பேராசிரியர் அவர்களுக்கு யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி என்பது தாங்கள் கட்டயம் பாரமேற்றுச் ‘சுமக்க வேண்டிய சிலுவையாகத்’ தோன்றுகின்றதா? எனக்கு விளங்கவில்லை….. உங்களுக்கு தெரியுமா பேராசிரியர் அவர்களே?

    பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக (கல்தோன்றி மண்தோன்றிய காலத்துக்கும் முன்னிருந்தா என்று தெரியவில்லை!?) நாங்கள் எங்களுக்குள்ளேயே அடிபட்டுக்கொண்டும், காலைவாரித் தலையில் மண்ணைக் கொட்டிக் கொண்டும், அடையாளமிழந்து, முகவரியிழந்து…. இந்தப் பூமியின் நாலாபக்கங்களிலும் சிதறடிக்கப்பட்டுத் தொலைந்து கிழிஞ்சு போயிருக்கின்றோம். கிழிஞ்சு போன தமிழர்களாகிய எங்களுக்கு எதிர்காலம் எப்படியிருக்கும் என்று கற்பனைகூடப் பண்ணிப் பார்க்க முடிவதில்லை! எங்கள் இறந்தகாலத்தின் கொடூரச் சுவடுகள் – இந்த நிகழ்காலத்திலும் தொடர்சங்கிலித்தாக்கம் போன்று எங்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றன….

    அடியேன் இதற்கு விதிவிலக்கல்ல…. எவரெவர்களினதோ சித்தாந்தங்களை நம்பி, கூச்சலிட்டு என்னினத்தைக் காப்பாற்றவென்று கங்கணம் கட்டிக் கொண்டு கோதாவில் குத்தித்து, என் இளம்பிராயத்தையும் நல்வாழ்வையும் தொலைத்துவிட்டு எங்கோ புலம்பெயர்ந்து அகதியாகி நிர்க்கதியாகி நிற்கின்றேன். எங்களுக்கு அறிவுபூர்வமான வழிகாட்டல் ஒன்று இருந்திருந்தால் நானும் எனது பெயருக்குப் பின்னால் பி.எஸ்.சி என்றோ, எம்.பி.பி.எஸ் என்றோ போட்டுக் கொண்டு வாழ்ந்திருக்க முடியும். என்னைப் போன்றவர்களின் வாழ்க்கை தமிழினத்தின் வரலாற்றில் ஒரு இருண்ட அத்தியாயத்தினுள் முடித்து வைக்கப்பட்டிருக்கின்றது….

    உங்களால் எங்கள் தொலைந்து போன அத்தியாயங்களுக்குப் புத்துயிர்ப்புத் தரமுடியும் என்று நம்புகின்றீர்களா?

    துணைவேந்தர் கதிரையில் 3 வருடங்கள் இருந்துவிட்டால் மட்டும் இலங்கைத் தமிழ் பேசும் சமூகத்தின் வாழ்வை சுபீட்சமானதாக மாற்றி விட முடியுமா? பல்கலைக்கழகம் என்பது சமூக நிறுவனம். உண்மைதான். அதிலும் – யாழ் பல்கலையென்பது எமது சமூகத்திற்கு ஏகோபித்த தனி அடையாளமாக இருக்க வேண்டியது. அதையும் ஏற்றுக் கொள்கின்றேன்.

    பேராசிரியர் அவர்களே, எங்களது எகோபித்த அடையாளமாகிய யாழ் பல்கலைக்கழகத்தின் தற்போதைய சிதிலப் போக்கினை மாற்ற என்ன செய்யப் போகின்றீர்கள்?

    த. ஜெயபாலன் அவர்களுக்கு நீங்கள் வழங்கியுள்ள மிகவும் நீண்டதான செவ்வியிலிருந்து என்னால்:-

    1. நீங்கள் யாழ்ப்பாணத்தின் உயர்குடும்பத்தினைச் சேர்ந்தவரென்றும்,
    2. நிறையவே கல்வியறிவு பெற்றுள்ளீர்களென்றும்,
    3. உங்கள் மனைவியும் ஒரு கலாநிதி என்றும்,
    4. உங்களுக்கு உங்கள் தொழில் தலங்களில் சிக்கல்கள் (எந்தவொரு தொழிலாளிக்கும் வரக்கூடியது போலவேயே)வந்திருக்கின்றனவென்றும்,
    5. நீங்கள் உங்களது குடும்பத்தின் அடிப்படையான ‘சைவ வேளாண் ஆணாதிக்க’ மூலங்களின்பால் மிகுந்த கோபமுற்றுள்ளீர்களென்றும்,
    6. ஒரு பேராசிரியர்/ஆசிரியர் என்கின்ற வகையில் உங்கள் கடமையை நீங்கள் செய்து வருகின்றீர்களென்றும்……

    என்னால் அறிந்து கொள்ள முடிந்தது….

    ஆனாலும் உங்கள் செவ்வியில் தேடித் தேடிப் பார்க்கின்றேன் – “இதுதானடா, இந்தப் பல்கலைக்கழகம் பற்றிய எனது ஆக்கபூர்வமான சிந்தனைகள்!” என்று ஒரு இடத்திலும் கூட நீங்கள் ‘அழுத்திச்’ சொல்லவில்லையே! அது ஏன்?

    கைலாசபதியாரின் கனவான “ஆசியாவின் தலை சிறந்த பல்கலைக்கழகம்” என்பதைத் திரும்பச் சொல்லிவிட்டு – நீங்கள் மூன்று இலக்குகளை எடுத்துக்காட்டியுள்ளீர்கள்….

    அவையாவன (உங்கள் மொழிநடையிலேயே)……

    1. பொறியியல் பீடத்தை அமைப்பது.
    2. வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக்குவது. (ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் ஒரு சுதந்திரப் பல்கலைக்கழகமாக்கும் பொறுப்புடன் ஒரு வளாகம் கொடுக்கப்பட்டது. இரு தமிழ் பிரதேச வளாகங்கள் மட்டுமே இன்னும் வளாகங்களாக உள்ளன. ஏனைய வளாகங்கள் பல்கலைக்கழகங்களாகி இப்போ பல வருஷங்கள்.)
    3. யாழ் பல்கலைக்கழகத்தை இலங்கையில் நியாய, நீதியான, நிர்வாக வழிகாட்டியாக அமைப்பது.

    பேராசிரியர் ஹூல் அவர்களே……

    1. ஏற்கனவே இருக்கின்ற மருத்துவபீடம் சீர்குலைந்து அடிமாட்டு நிலைக்குப் போய்க்கொண்டிருக்கின்ற வேளையில் – “பொறியியல் பீடத்தையும்” கொண்டு வந்து திணித்தல் சரியான யுக்கிதிதானா?
    2. இ. நந்தகுமாரன், இராசதுரை, மோகனதாஸ், மூக்கையா, பாலகிருஸ்ணன், மகேஸ்வரன் என்று பலரும் சீரழித்த, சீரழித்துக் கொண்டிருக்கின்ற வவுனியா வளாகத்தை தரமுயர்த்தி பல்கலையாக மாற்றி – மேலும் கெடுத்துவிடுவதுதான் உங்கள் நோக்கமா?
    3. யாழ் பல்கலைக்கழகத்தில் நீதி, நியாயம், நேர்மை என்கின்ற வார்த்தைகளுக்கு கொஞ்சம்கூட மதிப்பில்லை… அதனை ஓரிரு வருடங்களில் நேர்மையான அதிகார இயந்திரமாக மீள்வடிவமைக்க முடியுமா உங்களால்?

    கந்தன் (அல்லது காந்தன்?) என்பவர் அழகாக கோர்த்துப் பட்டியலிட்டதன் அடிப்படையில்…. “கனகநாதனுக்கு பி.எச்.டி பட்டத்தை வழங்குவதற்கு தாங்கள் உடந்தையாகவிருந்ததும்/உடன்பட்டதும்…. அதே கனகநாதனிடமிருந்தே….”பேராசிரியர் ஹூல் கணினி துறையில் ஒரு விற்பன்னர்” என்ற்று சத்தியக்கடதாசி பெற்று பல்கலைக்கழக முறைப்பாட்டு குழுவிடம் (USAB) சமர்ப்பித்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கு கணினி துறை பேராசிரியராக வருவதற்கு முன்னொரு காலத்தில் முயன்றதும்….. சரியான, முறையான, நேர்மையான நிர்வாக யுக்திகள் தானா?

    கீழ்தரமான முறையில் சுயலாபம் காண முயற்சிக்கின்றவர் (the man with the ‘pervasive interests’) என்று இந்த விவாத மன்றத்தால் அடையாளம் காணப்பட்டுள்ள கலாநிதி. இராஜேந்திராவுக்கு வவுனியா வளாக முதல்வர் பதவியுயர்வு வழங்க முயற்சி செய்திருக்கின்றீர்களாம் என்று அறிகின்றோம். தன்னலமற்ற தியாக மனப்பாங்குள்ள அறிவாளியொருத்தர் செய்யக்கூடிய நற்காரியமா இதுவும் ?

    ஒரு வகையில் பார்க்கப் போனால்….”சைவ வேளாண் ஆணாதிக்கத்தை” வெளிப்படையாக எதிர்க்கின்ற தாங்கள் – மறைமுகமாக உங்களைப் போன்ற சுண்டிக்குழி உயர்குடி கிறிஸ்தவர்களுக்கு சார்பாக இருக்கின்றீர்கள் என்றும் எங்களால் ஊகிக்க முடிகின்றது….

    “என்னதான் என்றாலும் உயர்சாதியில் தோன்றிய உங்களால் – உங்கள் பாரம்பரியத்தை இலகுவாக விட்டுக் கொடுத்துவிட முடியுமா? என்ன?” அப்படியாயின் ,தாங்களும் அடிப்படையில் பசுத்தோல் போர்த்திய சைவ வேளாண் ஆணாதிக்க குடியினரின் வாரிசு தானா?

    இந்த விவாத மேடைத் தளத்தில் சொல்லாடிய ராஜதுரை, யாழ்ப்பாணன், ஜெயபாலன், கஃபூர், பரணிதரன், ஆய்வு, தளபதி, பி.சி போன்றவர்கள் – “தற்போதுள்ள காலகட்டத்தில் ஹூலைவிடவும் மேலானதொரு தீர்வில்லை” என்று முடிவு கட்டியிருக்கின்றார்கள்.

    அப்படியாக என்னவாவது உங்களால் சாதிக்க முடியும் என்று நீங்கள் உண்மையாகவே நினைக்கின்றீர்களா? உங்கள் மனச்சாட்சியிடம் கேட்டுச் சொல்லுங்கள் பேராசிரியர் அவர்களே!

    “ஒரு தலை சிறந்த நிர்வாகிக்கான உவமேயம் அல்லது உதாரணம்” என்று இவ்விவாத மேடையினால் அடையாளம் காணப்பட்டுள்ள தாங்கள் – தங்களால் எதுவுமே செய்ய முடியாது போயின் – உங்களைப் போற்றி, உங்களை ஆதரித்த இந்த விவாதமேடையே – உங்களைக் கடுமையாக விமர்சித்துக் கண்டனம் தெரிவிக்கவும் கூடும் என்கின்ற உண்மை உங்களுக்கு உறைக்கின்றதா பேராசிரியர் அவர்களே?

    ஏறத்தாழ இருமாதங்களாக நீண்டுகொண்டிருக்கின்ற இம்மாபெரும் விவாதமேடைக்கு – “யாழ் பல்கலைக்கழகத்தின் எதிர்காலம் இதுதான்” என்று ஏன் ஒருவிதமான கருத்துக்களையும் இன்னமும் முன்வைக்காது வாளாவிருக்கின்றீர்கள் பேராசிரியர் ஹூல் அவர்களே? இதில் ஏதாவது சூட்சுமம் இருக்கின்றதா?

    எனக்கென்னவோ….. தாங்கள் தங்கள் பெயர் துலங்க வேண்டும் என்பதற்காக செய்யும் ஒரு சாகசச் செயல்தான் துணைவேந்தர் பதவி என்று நினைத்துக் கொண்டுதான் யாழ் வருகின்றீர்கள் என்று அடிமனதில் உறைக்கின்றது. சந்தேகக் கண்ணுடனேயே எதனையும் பார்த்துப் பழகி விட்ட என் போன்றவர்களின் இந்தப் பார்வைக்கும் நீங்கள் பதில் கூறத்தான் வேண்டும்….

    யாழ்ப்பாணன் கேட்டது போல… “கனகநாதனை தப்ப விட்டது போலத்தானா நீங்கள் சண்முகலிங்கனையும், கந்தசாமியையும்…. நந்தகுமாரனையும்… அவர்கள் சுயலாபம் கண்டு தப்பிக் கொள்ள விடப் போகின்றீர்களா?”

    துணைவேந்தர் கதிரையிலிருந்து…. மூன்று வருடத்தில் உலகத்தை தலைகீழாக மாற்றித் திருத்த முடியாது. இயலுமானால்… தோதான உபாயங்கள் கொண்டு நிர்வாகத் தந்திரம், தொழிற்சுத்தம், மற்றும் நேர்மையின் அடிப்படையில் நிலைக்கக் கூடிய சிறிய சிறிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும். அந்த வித்துக்கள் சரியான கவனிப்பு இருந்தால் மட்டுமேயே – மாபெரும் விருட்சமாகப் பரிணமிக்கும். உண்மை/நேர்மையின் அடிப்படையிலான பாரபட்சமற்ற அறிவைத் தேடி முன்னெறக்கூடிய பல்கலைக்கழகம் ஒன்றை விருட்சமாகப் பரிணமிக்கச் செய்யும் வித்தையூன்றிப் பராமரித்து வளர்க்க முடியுமா உங்களால்…. பேராசிரியர் அவர்களே???

    அது முடியுமாயின்…”தாராளமாகவே வாருங்கள்… வந்து சாதித்துக் காட்டுங்கள்…”

    எப்படியாயினும் எங்களுக்கு விடிவும் அறிவார்த்தமான மறுமலர்ச்சியும் தேவை. அதுதான் எம் கனவு. அது நனவாகுமா?

    ஐயா, தாங்கள் எங்கள் போன்ற அடிமட்ட மனிதர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தேயாகத்தான் வேண்டும். அது உங்கள் தார்மிகக் கடமை. நன்றி.

    இப்படிக்கு…. பணிவுடன்….
    தமிழன்

    Reply
  • Thalaphathy
    Thalaphathy

    திரு. தமிழன் அவர்களே!
    ஏன் என்னுடைய பெயரை உங்களுடைய வேண்டுதலுக்குள் இணைத்துக்கொண்டீர்கள். நான் எனது பின்னூட்டங்கள் எதிலும் எந்த சிபார்சையும் பண்ணவில்லையே. முடிந்தால் இன்னுமொருமுறை படித்துவிட்டு, எனது இந்த கேள்விக்கு உங்களது சரியான பதிலை எதிர்பார்க்கிறேன்.

    Reply
  • தமிழன்
    தமிழன்

    நண்பர் தளபதி அவர்களுக்கு,
    என்னை மன்னிக்கவும்.தாங்கள் ஹூலுக்காக வக்காலத்து வாங்கிக் கொண்டு சிபார்செதுவும் பண்ணவில்லைத்தான். ஏற்கின்றேன்.

    ஆனாலும், தங்கள் கருத்துக்களின் தொனிப்பொருள் தங்கள் சித்தம் ஹூலின் சிந்தனைகளின்பால் சார்ந்திருப்பதாகவே புலப்படுகின்றது. அது வெளிப்படையாகவும் தென்படுகின்றது.

    மேலும்…..

    //“வரம்புயர நீருயரும் நீருயர நெல் உயரும்
    நெல்லுயர குடி உயரும் குடி உயர கோன் உயரும்”//

    என்பதில் ‘வரம்புயர’ என்பது ‘வரப்புயர’ என்று வர வேண்டும். இது தமிழ் மூதாட்டி அவ்வையினால் பாடப்பட்டது…

    இரத்தினச் சுருக்கமாக ‘வரப்புயர’ என்று சொன்னாலேயே போதும். நண்பர் தளபதி குறிப்பிட்ட வகையில் ‘வரப்புயர’ என்பதன் பின்னால், பல பல அர்த்தங்கள் நிறைந்து மறைந்துள்ளன.

    வரப்பினை உயர்த்தல் – என்பது மறைமுகமாக…. இயற்கை வளங்களை கண்ணியமாக முகாமைத்துவம் செய்து, நீர்வளம் – நில வளத்தைப் பேணி… நிலைத்த நீடித்த… அபிவிருத்தியை தூண்டி (inducing sustainable development)… சமூகத்தையும்… அரசினையும் ஸ்திரப்படுத்தி சுகவாழ்வு வாழ்தலைச் சுட்டி நிற்கின்றது…

    உண்மையில்… யாழ் பல்கலைக்கழகத்தினர் ‘வரப்புயர’ என்கின்ற தாரக மந்திரத்தை தம் பணிக்கூற்றாக (vision statement) எடுத்துக் கொண்டு… ஆக்கபூர்வமாக சிந்திக்க வேண்டிய காலகட்டம் இது. அதை நண்பர் தளபதி ஏற்றுக் கொள்வார் என்று எண்ணுகின்றேன்.

    மேலும் இந்த விவாத மேடையில் ‘விவாதம்’ என்பதின் அடிப்படை விழுமியங்களை விளங்கி ஏற்றுக் கொண்டு கண்ணியமான முறையில், காத்திரமாகக் கருத்துக்களை சொல்பவர்களில் தாங்களும் ஒருத்தர் என்பதனையும் சொல்ல விரும்புகின்றேன். உங்களது ஆக்கபூர்வமான பின்னூட்டம் வரவேற்கத்தக்கது.

    You are an excellent example of a debater who always moves/functions in accordance to the basic rules of engagement in debates/discussions!

    நிற்க….

    வடகிழக்கிலங்கையின் வரப்புயரவும்…. குடியுயரவும்…. பேராசிரியர் ஹூல் ஒரு கல்வியாளர் என்கின்ற வகையில் ஏதாவது ஆக்கபூர்வமாக செய்துள்ளாரா? செய்வாரா? அவரால் அப்படிச் செய்யத்தான் முடியுமா? இது தொடர்பாக நண்பர் தளபதி தம் கருத்துக்களைச் சொல்ல முடியுமா?

    ‘வரப்புயர’ என்பதன் உண்மையான அர்த்தம் ஹூலுக்கு விளங்குமா?

    வரப்பினைப் பற்றியும்…. தம் வாழ்வாதாரத்துக்காகப் போராடும் ஏழைக் குடிகளைப் பற்றியும் சண்முகலிங்கன்களுக்கும் அவர்களது குழுவினருக்கும் சிந்திக்க நேரமுமில்லை… தேவையுமில்லை… ‘சமூகப்பிரக்ஞையற்ற புல்லுருவித்தனமான சிந்தனையுள்ள’ தமது இழிநிலை பற்றி அவர்களுக்கு விளக்கமுமில்லை….

    ஆனால்…. ஏறத்தாழ இருமாதகாலமாக யாழ் பல்கலை தொடர்பான தனது ஈடுபாடு பற்றி் உலகளாவிய வலைப்பின்னலில் பகிரங்கமாக அறிக்கைகள் விடுத்துள்ள பேராசிரியர் ஹூலுக்கு ‘வரப்புயர’ என்பதன் அடிப்படை விளங்கியேதான் ஆக வேண்டும்.

    ‘வரப்புயர’ என்பதன் அடிப்படையில் அவர் தம் செயற்பாடுகளைக் கொண்டு நடத்தாது போனால்…. அவர் தனது தனிப்பட்ட ‘பெயருக்கும் புகழுக்காகவும்’ யாழ் மண்ணில் கால் பதித்து ‘சாகசங்கள்’ காட்டிச் சென்றவர் ஒருவராகவே கணிக்கப்படுவார்.

    அப்படியாயின்… காலனித்துவ ஆட்சியின் போது… யானைகள் மீதேறி விலங்குகளை வளைத்து வேட்டையாடி, புகைப்படம் எடுத்து, அவ் விலங்குகளின் தலைகளை இங்கிலாந்தில் உள்ள தம் வசதியான மாளிகைகளில் மாட்டிக் குதூகலித்த வெள்ளைக்காரக் கனவான்களுக்கும் ஹூலுக்கும் வித்தியாசம் இல்லாது போய் விடும். வெள்ளைக்காரக் கனவான்கள் சாகச விளையாட்டுக்களுக்காக இலங்கை வந்து போயினர், சுரண்டிக் கொண்டு தம் நாட்டில் குதூகலித்தனர். அவர்களின் பார்வையில் நமது பிரதேசம் ஒரு பெரிய பையன்களின் விளையாட்டு மைதானமாகவே (big boys’ play ground) பார்க்கப்பட்டது….ஹூலும் அப்படித்தானா நினைக்கின்றார்?

    சமீபத்தைய நடைமுறைகளைப் பார்க்கும் போது ஹூலும் ‘பிரித்தானிய மகாராணியின் கனவான்கள் குழுவைச்’ சார்ந்ததொருவர் போல்தான் தென்படுகின்றார்…என்னதான் நடக்கப் போகின்றதோ? தெரியவில்லை! எமது இலங்கைத் தமிழ் பேசும் சமூகத்தின் அறிவார்த்தமான எதிர்காலம் பற்றி யோசிக்கவே பயமாகவிருக்கின்றது. இதற்கு நண்பர் தளபதியும் உடன்படுவார் என்றே நினைக்கின்றேன். கடைசியில் எல்லாமே “குரங்கின் கையில் பூமாலை” என்பது போலாகி விடுமா? பயமாகவிருக்கின்றது!

    Reply
  • தேவராசா
    தேவராசா

    நாளை (29/08/2010 அன்று) இடம்பெறவிருக்கின்ற பேராசிரியர் ஹூலுடனான கலந்துரையாடலுக்காக எனது கேள்விகள்:

    1. யாழ் பல்கலைக்கழகம் தற்போது இருக்கின்ற கவலைக்கிடமான நிலையைக் கருதும் போது – இனிமேல் அது உய்யக் கூடிய சந்தர்ப்பம் வரக்கூடுமா?
    2. புதியதொரு மாற்றத்தை முன்னெடுக்கப் போகின்ற பேராசிரியர் ஹூல் அவர்கள், யாழ் பல்கலைக்குள் இருந்து கொண்டு அதனைத் தம் சுயலாபத்துக்காக ஒரு ஏ.டி.எம் இயந்திரம் (automated teller machine or CASH macine at a bank) போன்று பயன்படுத்திக்கொண்டிருக்கின்ற சண்முகலிங்கன் போன்றவர்களுக்கு என்ன பதிலளிக்கப் போகின்றார்? அவர்களை அவர் எவ்வாறு கட்டுப்படுத்துவார்?
    3. ஒரு தனிமனிதனாக இருந்துகொண்டு செல்லரித்துப் போய்விட்ட ஒரு சமூகத்தின் சிதிலப்போக்கின் ஏகபோக அடையாளமாக இருக்கின்ற யாழ் பல்கலையின் போக்கினையும், பாங்கினையும் பேராசிரியரால் 3 வருடங்களுக்குள் மாற்றியமைக்க முடியுமா?
    4. மேலும், ‘தமிழன்’ கேட்டது போல…. பேராசிரியர் ஹூல் யாழ் மண்ணுக்கு வருவதன் பின்னால் ஏதாவது சுயலாபச் சூட்சுமம் உள்ளதா? இல்லையா?
    5. யாழ் பல்கலைக்கான தனியொரு தீர்வு பேராசிரியர் ஹூல் மட்டுமே(யே)தானா??

    Reply
  • BC
    BC

    தமிழன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பற்றி எனக்கு தெரியாத பல விடயங்களை தேசம்நெற் முலம் அறிந்து கொண்டேன். நீங்கள் தற்போதுள்ள காலகட்டத்தில் ஹூலைவிடவும் மேலானதொரு தீர்வில்லை என்று முடிவு கட்டியிருப்போர் பட்டியலில் என்னையும் சேர்த்துள்ளீர்கள். நான் அப்படி ஒரு கருத்து கூறவில்லை. சமயக் கல்வியே மனித உரிமைகளுக்கோ அடிப்படை என்ற பேராசிரியர் கருத்தோடு எனக்கு எனக்கு சிறிதும் உடன்பாடு கிடையாது. ஏமாற்றம் தான்.

    Reply
  • Kanthan
    Kanthan

    It should be noted that there are some illogical perception centered in this forum, i.e., the so-called “சைவ வேளாண் ஆணாதிக்க” was the reason that prevent Prof. Hoole to assume to his office as the Vice Chancellor, University of Jaffna. This is not exactly true, since at that time Prof. Hoole did not align or refused align with Tamil Nationalist. Since he failed to understand the political current and he played only with Colombo political structures. This was the main obstacle laid on his mission. If one read the history of the University of Jaffna the said statement would become clear.

    Still there are some doubts about his political alignment among the people.

    In view of the above facts whether Prof. Hoole has reasonable awareness of the current social, economical and political structures of our society. Since, that would play the major role in his mission may be in his vision.

    Reply
  • Thalaphathy
    Thalaphathy

    எனது எழுத்துப்பிழையையும், அதனூடாக ஏற்பட இருந்த பொருட் பிழையையும் திருத்தியமைத்ததற்கு திரு. தமிழனுக்கு எனது நன்றிகள் – இதுவும் சிறுவயதிலேயே மனப்பாடம் செய்யத்தூண்டியவர்களால் வந்த வினைகளின் பிழைகளில் ஒன்றாகவிருக்கலாம். நிற்க

    திரு. கூல் அவர்கள் ஒரு சிறந்த கல்வியாளன் என்ற வகையில் தான் பொறுப்பேற்கவிருக்கும் தனது பதவியைப்பற்றியும், அந்தப்பதவியின் ஆயுட்காலம் பற்றியும் நன்கு அறிந்திருப்பார் என நான் நம்புகின்றேன். இந்த பதவிக்காலத்தில் அவர் தனக்கு ஒப்படைக்கப்பட்ட ஒரு திட்டத்தை(Project) எப்படி கையாளப்போகிறார் என்பதிலேயே இந்த திட்டத்தின்(Project) விளைவுகளும் அதன் பலன்களும் இருக்கப்போகின்றன. அந்த வகையில் திரு. கூல் அவர்கள் தனக்கு கொடுக்கப்படவுள்ள திட்டத்தைப்(Project) பற்றியும் அதன் பிரச்சனைகள்(problematic), சவால்கள்(challenges) பற்றியும், இந்த “தேசம்நெற்” பின்னூட்டங்களினூடாக நன்கு அறிந்து வைத்திருப்பாரென நம்புகிறேன். இதன் அடிப்படையில் அவர் தனது பதவிக்காலத்தில் யாழ் பல்கலைக்கழகத்தில் செய்ய இருக்கும் மாற்றங்கள்(reform) பற்றி, அவரது தேசம்நெற்றினூடான சந்திப்பில் முன்வைப்பாரென எதிர்பார்க்கின்றேன், அல்லாது போனால் – தேசம் நெற் வாசகர்கள் அவருக்கு “வரப்புயர” என்ற ஒரு திட்டத்தை(project) கால அட்டவனையுடன் முன்வைப்போமாக!

    Reply
  • கரவை ஜெயம்
    கரவை ஜெயம்

    யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் மேம்படுத்தப் படுவதற்கு எனது அறிவுக்கெட்டிய சில ஆலோசனைகள்:

    1.மாணவர்கள்:

    பல்கலைக்கழக அனுமதி பெற்றுவரும் மாணவர்களில் பெரும்பாலானோர் ஆங்கில அறிவு பற்றாக்குறையுள்ளவர்களாக காணப்படுகிறார்கள். அவர்கள் தமது ஆங்கில அறிவை பெருக்கிக் கொள்ள அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும்.முதலாம் வருடத்தில் மட்டுமன்றி ஏனைய வருடங்களிலும் ஆங்கிலம் பயில்வதற்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.

    2.சிறப்பான தனித்திறன் கொண்ட மாணவர்களின் திறமை ஊக்குவிக்கப்பட்டு விருத்தி செய்யப்படுவதற்கான வழிவகைகள் மேற்கொள்ளப் பட வேண்டும்.

    3.மாணவர்களிடையே ஆய்வு மனப்பாங்கு விருத்தி செய்யப்படுவதற்கு அவர்கள் எழுதும் தரமான ஆய்வுக் கட்டுரைகளுக்கு சன்மானம் வழங்கலாம். அத்துடன் கல்விப்பீட மட்டத்தில், மாணவர்களின் கட்டுரைகளை வெளியிடக் கூடிய பருவ இதழ்/சஞ்சிகைகள் வெளிவர பல்கலைக் கழக நிர்வாகம் பொறுப்பு ஏற்க வேண்டும்.

    4.இறுதியாண்டு மாணவர்கள் தமது சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களை சரியான முறையில் உணர்ந்து கொள்ளும் வகையில், சமூகத்துடனான தொடர்பை ஏற்படுத்தக் கூடிய முறைகள் வகுக்கப்பட வேண்டும். நாம் மற்றவர்களிலிருந்து ஒருபடி மேலே என்ற மனப்பாங்கில் அவர்கள் சமூகத்திடம் செல்லும் வழமை மாற்றப்பட வேண்டும்.

    5.மாணவர்களுக்கிடையேயான கல்வித்துறை சார்ந்த வேறுபாடுகள் கொண்ட மனோபாவம் களையப்பட வேண்டும்.(விரிவுரையாளர் மற்றும் பேராசிரியர்களுக்கும் இது பொருந்தும்) ஒரு பாட நெறி கற்பவர் இன்னொரு பாடத்தைக் கற்பவரை விட எவ்வித்திலும் உயர்ந்தவரோ அன்றி தாழ்ந்தவரோ அல்ல என்ற மனப்பான்மையும், சகல மாணவர்களினதும் சகமதிப்பு, மனித உரிமைகளை மதிக்கும் பாங்கு என்பனவும் ஊக்குவிக்கப் பட வேண்டும்.

    6.மாணவர்களிடையே மனத்தடையற்ற திறந்த விவாதங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். எதிர்க் கருத்துடையவர் எதிரி என்ற மனப்பாங்கும் கருத்துக்களுக்காக உடல் மற்றும் உள வன்முறையில் ஈடுபடும் மனப்பாங்கும் தவறு என்பது பயிற்றுவிக்கப்பட வேண்டும்..உனது கருத்தை நான் ஏற்காவிட்டாலும் அதை சொல்வதற்கான உனது உரிமையைக் காப்பாற்ற நான் உயிரையும் கொடுப்பேன் என்ற ரூசோவின் சிந்தனை போற்றப் பட வேண்டும்.

    பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் போதனாசிரியர்கள்

    பல்கலைக் கழகம் ஒன்றின் பெயரும் புகழும் அதன் ஆசிரியக் குழுமத்தின் அறிவார்ந்த ஆய்வு முயற்சியிலேயே தங்கியுள்ளது என்பது வெளிப்படை. எனவே ஆசிரியர்களின் தொடர்ந்த அறிவுத் தேடலும் தரமான ஆய்வு முனைப்பும் தொடர்ந்து ஊக்குவிக்கப் பட வேண்டும்.

    தனித்திறமையுள்ள மாணவர் இனங்காணப்பட்டு அவர்களின் முன்னேற்றத்திற்கான ஆலோசனைகளை வழங்க ஆசிரியர்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். உறவினர்கள் வேண்டப்பட்டவர்கள் மாணவர்களாக அமையுமிடத்து அவர்களுக்கு சிறப்பு சலுகை காட்டும் மனப்பான்மை ஒரு ஆசிரியருக்குத் தரக்குறைவான விஷயமாக கருதப்பட வேண்டும்.

    ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் அவற்றை வெளியிடுவதற்குமான நிதி மற்றும் ஆதாரங்களை பல்கலைக் கழக நிர்வாகம் வழங்க வேண்டும்..வெளிநாட்டு, உள்நாட்டு ஆய்வுப் பயணங்கள் மேற்கொள்ளப் படுவதற்கும் வசதிகள் செய்து கொடுக்கப் படல் வேண்டும்.

    புதிய ஆசிரிய நியமனங்களின் பணிக்காலம் ஆய்வுப் பணி மற்றும் கற்பித்தல் தேவை என்பவற்றின் அடிப்படையில் முடிவு செய்யப்பட வேண்டும். பதவிகளின் நிரந்தரத் தன்மை பல எதிர்மறைப் போக்குகள் தோன்றுவதற்கு வழி வகுப்பது தடுக்கப்பட வேண்டும்.

    வெளிநாட்டு, உள்நாட்டு பல்கலைக் கழகங்கள்,மற்றும் ஆய்வு நிறுவனங்களில் பணிபுரியும் அறிஞர்கள் சிறப்பு விரிவுரையாளர்களாக அழைக்கப் பட்டு மாணவர்களுடனான தொடர்புகளை (interaction) விருத்தி செய்யக் கூடிய வழிவகைகள் மேற்ள்ளகொப்பட வேண்டும். வெளியிலிருந்து வருபவர்கள் தமது மதிப்பைக் கெடுத்துவிடுவார்கள் என்ற மனப்பான்மையிலிருந்து நிரந்தரப் பதவி வகிப்பவர்கள் விடுபட வேண்டும்.

    வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் மேற்படிப்பு மற்றும் ஆய்வை மேற்கொண்டவரது கல்வித் தகமைகள் ஒரு சுயாதீன அறிஞர் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பின்பே அது பல்கலைகழகத்தால் ஏற்கப்பட வேண்டும்.

    மாணவர்களுடனான தொடர்பாடல் முறை குறித்து ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய நியமங்கள் மற்றும் விதிகள் உருவாக்கப்பட்டு அமுல் செய்யப் பட வேண்டும்.

    நிர்வாகம்

    பல்கலைக் கழகத்தினுள் மற்றொரு அதிகார மையமாக இயங்கும் முறையும் அது சார்ந்த ஊழிய மனோபவமும் இல்லாதொழிக்கப்படல் வேண்டும். மாணவர்களுடைய உரிமைகள் மதிக்கப்பட்டு அவர்களுடைய நெருக்கடியான நிலைமைகளில் உதவும் மனப்பாங்கு வளர்க்கப்படல் வேண்டும்.

    ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கு ஏற்படும் நிர்வாக சிக்கல்கள் தொடர்பாக தரமான ஆலோசனை வழங்கும் அமைப்பும் முறையும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

    Reply
  • Myl
    Myl

    Colombo Seven’s favoured chihuahuas, the likes of Prof. Hoole, may well be the worst suited to initiate discussion on the current plight of Tamil students. Politico-social challenges of the open prisons are unlikely to have bothered even the nightmares of the pampered few.

    Most students I’ve spoken to, from my family, cite security as foremost concern when choosing tertiary education; there’s still prevalent fear that graduation out of Jaffna and Eastern Universities is via the graveyard. How can we stop the Sri Lankan military and their associated paramilitaries from preying on our students, both males and females?

    Second concern is social. Many families can not afford to have a son or daughter of working age spend ‘valuable hours’ in the lecture theatres and dormitories, let alone pay for one’s increased living and academic costs. There ought to be a mechanism in place to subsidise tertiary education for the most vulnerable.

    My humble suggestion is that you invite academics who live and work in our homeland; people who are most likely to have their own children or immediate relatives strive to study in our homeland; individuals who understand, through experience, the challenges of being Tamil in modern Sri Lanka.

    Reply
  • Nirthanan
    Nirthanan

    I totally understand Myl’s concern as I was a student of Dr. Rajan Hoole and Dr. Sriharan. I do agree all of them are academically talented in their respective areas of studies. However, like it or not, they also have some hidden political agenda(s).

    I also passed in First Class as they did in their undergraduate studies. Only difference is that they were not involved in any sort of political activities until late 1986. They gave us assignments in U of Jaffna based on western culture and examples (e.g. Mozzarella Cheese, Pizza, etc) on Number theory and differential equations. It would have been much understood by the majority of the students, if they know the student’s culture to teach the subjects. They basically lack the culture to understand our problems.

    I am not sure this has been changed in any manner with Dr. Ratna Jeevan Hoole, as this is still an applicable issue. I think they should be able to describe their specific objectves why they are intereted in Tamil issues and Jaffna Universiy (purely academical or some political interests). They have to explain this in plain language, so that every one can undestand thir objective(s) and welcome them for all of our better future.

    Reply