அவுஸ்திரேலியாவில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற பொதுத் தேர்தலில் பிரதமர் ஜூலியா கில்லார்ட் தலைமையிலான தொழிற்கட்சி தோல்வியைத் தழுவும் சாத்தியம் காணப்படுகிறது.
12.5 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் ஜூலியாவின் தொழிற்கட்சி 49.2 சதவீத வாக்குகளையும் கன்சர்வேட்டிவ் லிபரல் கட்சி தலைமையிலான கூட்டணி 50.8 சதவீத வாக்குகளையும் பெற்றிருப்பதாக அவுஸ்திரேலிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்தது.
2007 தேர்தலில் தொழிற்கட்சி பெற்றிருந்த வாக்குகளின் 3.5 சதவீதம் எதிரணிக் கூட்டணி வசம் சென்றுள்ளது. 3 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளால் தொழிற்கட்சி ஆட்சியை இழக்கக் கூடும் என்று எதிர்வு கூறப்படுகிறது.