இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான யுவராஜ் சிங் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் நாளை திங்கட்கிழமை தம்ப்புள்ளையில் நடைபெறவுள்ள இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதும் சர்வதேச முக்கோண ஒருநாள் போட்டியில் அவர் பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.