மடு மாதாவின் ஆவணித் திருவிழாவின் இறுதிநாள் திருப்பலிப் பூஜைகள் இன்று காலை மன்னார் மறை மாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகையின் தலைமையில் நடைபெறு கிறது.
இன்று காலை 5.15 க்கு தமிழ், சிங் கள மொழிகளில் முதல் திருப்பலி பூஜையும் காலை 6.30 க்கு திருவிழா திருப்பலிப் பூஜையும் ஒப்புக் கொடுக்கப் படும். மன்னார் மறை மாவட்ட ஆயரின் தலைமையில் நடைபெறும் திருப்பலி பூஜையின் போது கொழும்பு பேராயர் அதிவந்தனைக்குரிய மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகையுடன் ஏனைய மறை மாவட்ட ஆயர்களும் இதில் கலந்து கொள்ளவுள்ளனர். இதனைத் தொடர்ந்து மடு மாதாவின் திருச் சொரூப பவனியும் இடம்பெறும் என அருட்தந்தை அலெக்ஸாண்டர் பெனோ அடிகளார் தெரிவித்தார்.