உள்ளூராட்சி மன்றங்களால் தீர்க்கப்படாதி ருக்கும் பிரச்சினைகள் குறித்து தொலைபேசி ஊடாக புகார் தெரிவிக்கவென உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சு விஷேட பிரிவொன்றை அமைத்துள்ளது.
உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் ஏ. எல். எம். அதாஉல்லாவின் ஆலோசனைக்கு அமைய இப்பிரிவு ஸ்தாபிக்கப்பட்டிருப்பதுடன் இது கடந்த சனியன்று திறந்து வைக்கப்பட்டதாகவும் அமைச்சின் அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றங்களினால் தீர்க்கப் படாதுள்ள பிரச்சினைகள் குறித்து இப்பிரிவில் புகார் செய்ய முடியும்.
அதேநேரம் தீர்க்கப்படாதுள்ள பிரச்சினைகள் குறித்து தேவையான ஆலோசனைகளையும், தகவல்களையும் இப்பிரிவிலிருந்து தொலைபேசி ஊடாக பெற்றுக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப் பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இப்பிரிவுக்கான 0112328428, 0112328282 என்ற தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. அப்பிரிவுக்கு தெரிவிக்கப்படும் புகார்கள் குறித்து விஷேட கவனம் செலுத்தவும் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.