ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் ஆளும் கட்சிக்குத் தாவப்போவதாக வெளியான வதந்திகளை அவர் மறுத்துள்ளார். கடந்த சிலதினங்களுக்கு முன்பு ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலர் யாழ். கந்தர்மடத்திலுள்ள காலம்சென்ற அமைச்சர் மகேஸ்வரனின் இல்லத்திற்கு விஜயம் செய்திருந்தனர். இதற்கு முன்னதாகவே விஜயகலா மகேஸ்வரன் ஆளும் கட்சியுடன் இணையப்போகிறார் என்கின்ற வதந்திகள் பரவியிருந்தன. இந்நிலையில், இச்செய்திகளில் எந்த உண்மையுமில்லை என விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்திருக்கின்றார்.
மகேஸ்வரன் உயிருடன் இருந்த காலத்திலேயே தற்போதைய ஆளும் கட்சியைச சேர்ந்தவர்கள் அவரது இல்லத்திற்கு வருகை தந்துள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.