யுத்தம் முடிவடைந்து ஏ-9 பாதை திறந்து விடப்பட்டதும் கொழும்பு – யாழப்பாண தனியார் போக்குவரத்து பஸ்களின் தொகை அதிகரித்துள்ளன. இந்நிலையில் இப்போக்குவரத்து பஸ்கள் பயணிகளிடம் பல்வேறு விதமான கட்டணங்களை அறவிட்டு வருகின்றன. சொகுசு பஸ்கள். அரை சொகுசு பஸ்கள் என போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்கள் யாழ்ப்பாத்திலிருந்து கொழும்பிற்கு 600ரூபா தொடக்கம் 1500 ரூபா வரை கட்டணமாக அறவிடுகின்றன. இது தொடர்பாக தற்போது பயணிகள் போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது பற்றி பஸ் உரிமையாளாகள் சிலர் கருத்துத் தெரிவிக்கையில் பயணச்சீட்டை விநியோகம் செய்யும் முகவர்களே இவ்வாறு அதிக கட்டணங்களை அறவிடுவதாக கூறுகின்றனர். இதே வேளை, பயணிகளிடம் அதிக கட்டணம் அறவிடும் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து ஆணைக்குழு எச்சரிக்கை செய்துள்ளது.