கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில வவனியா நிவாரண முகாம்களிலுள்ள மக்களில் ஒரு தொகுதியினர் எதிர்வரும் 26ம் 27ம் திகதிகளில் மீள்குடியேற்றப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிவாரண முகாம்களிலிருந்து வெளியேறி வன்னிக்கு வெளியே வேறு மாவட்டங்களில் உறவினர் நண்பர்கள் வீடுகிளில் தங்கியிருக்கும் மக்களுக்கான மீள் குடியேற்ற நடவடிக்கைகள் எதிர்வரும் ஓகஸ்ட மாதம் 4ம் திகதியிலிருந்து அம்மாதம் மழுவதும் மேற்கொள்ளப்படும் என கிளிநொச்சி மாவட்ட செயலக வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளாக இம்மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.