வட மாகாணத்திற்குள் இடம்பெயர்ந்த மக்கள் மீள் குடியமர்த்தப்பட்டவுடன் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு குடும்பதிற்கும் 25 ஆயிரம் ரூபா வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக உலக வங்கியின் அபிவிருத்தி நிறுவனத்தினூடாக 10.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அவசர வடக்கு புனரமைப்பு திட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினூடாக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படும். இந்தத் திட்டம் 2012 டிசம்பர் வரை மேற்கொள்ளப்படும். நிரந்தர வழிவகைகள் மூலம் வருமானம் கிடைக்கும் வகையில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் தொழி லொன்றில் ஈடுபடுவதற்காக இந்த உதவி வழங்கப்படும். நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்படி அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளார்.