முரளிதரனின் ஓய்வுடன் இலங்கை அணி இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளால் அபார வெற்றியீட்டியது மட்டுமல்லாமல் முரளியின் ஓய்வின் பரிசாகவும் சமர்ப்பணம் செய்துள்ளது.
இலங்கை அணிக்கு வெற்றி இலக்கை 95 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் 2வது இன்னிங்சைத் தொடர்ந்த இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 96 ஓட்டங்களைப் பெற்றது.
அதேநேரம் இலங்கை அணி தொடரை 1-0 என முன்னிலையில் உள்ளது. இப் போட்டியின் ஆட்டநாயகனாக மலிங்க தெரிவு செய்யப்பட்டார்.
ஸ்கோர் விபரம்
இலங்கை முதல் இன்னிங்ஸ் 520-8
பரணவிதாரன 111, சங்கக்கார 103, ஹேரத் 80 (ஆ- இ) மலிங்க 64 மிதுன் 105-4, சர்மா 3-145
இந்தியா முதல் இன்னிங்ஸ் 276
செவாக்-109, யுவராஜ் சிங் 52, முரளிதரன் 5-63, மலிங்க 2-55
இந்தியா 2வது இன்னிங்ஸ் 228
டெண்டுல்கர் 84, லஷ்மன் 69
இலங்கை இரண்டாவது இன்னிங்ஸ் 96
பரணவிதாரன 23 (ஆ/இ), டில்சான் 68 (ஆ/இ)