கொழும்பு கொள்ளுப்பிட்டியில் இயங்கி வந்த பிரித்தானியா வீசா அலுவலகம், கொழும்பு யூனியன் பிளேஸூக்கு இடமாற்றம் செய்யப்பட்டவுள்ளது. எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் வீசா அலுவலகம், யூனியன் பிளேஸில் இலக்கம் 278 , எக்சஸ் டவர் கட்டடத்தின் 5 ஆவது மாடியில் இயங்கவுள்ளது.
அலுவலகம் இடமாற்றம் செய்யப்படுவதால், 22 ஆம் 23 ஆம் திகதிகளில் கொள்ளுப்பிட்டி, டுப்லிகேஷன் வீதியில் உள்ள அலுவலகம் மூடப்பட்டிருக்கும் எனவும் கடவுச்சீட்டுக்களை வழங்குவதற்காக மாத்திரம் 22 ஆம் திகதி பிற்பகல் 3 மணியில் இருந்து 5 மணி வரையும், 23 ஆம் திகதி பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரையும் அலுவலகம் திறந்திருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.