மருத்துவமாது ச.தர்சிகாவின் சடலத்தை தோண்டியெடுத்து வைத்தியப் பரிசோதனை செய்ய ஊர்காவற்றுறை நீதவான் ஆர். வசந்தசேனன் நேற்று (July 20 2010) உத்தரவிட்டுள்ளார். தர்சிகாவின் தாயார் கொடுத்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதவான் தர்சிகாவின் சடலத்தை எதிர்வரும் 28ம் திகதி மீண்டும் தோண்டியெடுத்து கொழும்பிற்கு அனுப்பி சட்டவைத்திய அதிகாரி முன்னிலையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.
இவ்வழக்கு நேற்று முன்தினம் (July 19 2010) நடைபெற்ற போது தர்சிகாவின் தாயார் தனது மகள் தற்கொலை செய்யவில்லை அவரது சடலம் தோண்டியெடுக்கப்பட்டு மீண்டும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட வேண்டும் என நீதவானிடம் மனுவொன்றை கைளித்திருந்தார். அதனைப் பரிசீலித்த நீதவான் சடலத்தை பொலிசார் முன்னிலையில் தோண்டியெடுத்து மருத்துவ பரிசோதனைக்கு அனுப்புமாறு உத்தரவிட்டார். இவ்வழக்கு விசாரண மீண்டும் எதிர்வரும் 26ம் திகதி நடைபெறவுள்ளது.