உலகளாவிய ரீதியில் நாடுகளின் பணத்தைக் குறிக்கும் வகையில் பல்வேறு குறியீடுகள் இருப்பது போல இந்திய நாணயத்திற்கும் புதிய குறியீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இனிமேல் இந்திய பணத்திற்கு இந்த குறியீடுதான் பயன்படுத்தப்படும்.இந்த ரூபாய் அடையாள குறியீட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தத் தகவலை மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அம்பிகாசோனி டில்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார்.
சர்வதேச நாணயங்களான அமெரிக்க டொலருக்கு யூரோவுக்கு பவுண்ஸுக்கு ஜப்பான் யென் அடையாள குறியீடு இருப்பது போல இந்திய ரூபாய்க்கும் அடையாள குறியீடு வழங்கப்பட மத்திய அரசு முடிவு எடுத்தது.
ஸ்டாலின்
சென்னை: இந்திய ரூபாய்க்கான சின்னத்தை உருவாக்கிய உதயக்குமார் சென்னையைச் சேர்ந்த தமிழர் ஆவார்.
டாலர், யூரோ, யென் போன்றவற்றுக்கு தனி அடையாளச் சின்னம் உள்ளது. அந்த மதிப்பு மிகுந்த நாணய வரிசையில் தற்போது இந்திய ரூபாயும் சேருகிறது. இந்திய ரூபாய்க்கான தனி சின்னத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. மும்பை ஐஐடியில் படித்தவரான உதயக்குமார் என்பவர்தான் இதற்கான சின்னத்தை வடிவமைத்துள்ளார்.
தண்டையார்பேட்டையில் வசித்து வரும் உதயக்குமார் திமுக குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை தர்மலிங்கம் முன்னாள் எம்.எல்.ஏ ஆவார். தாயார் பெயர் ஜெயலட்சுமி. சொந்த ஊர், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மரூர் ஆகும்.—http://thatstamil.oneindia.in/art-culture/essays/2010/india-rupee-symbol-udayakumar-tamilian-chennai.html