அசின் அரசியல் – அரசியல்ரீதியில் சரியா? (Political Correctness) – அசினின் யாழ்-வன்னி விஜயமும் நடிகர் சங்கத்தின் U turn உம்

Sarathkumar_ActorAsin_Actressஇலங்கையில் இடம்பெற்ற இந்திய திரைப்பட விழாவில் ஆரம்பமான தமிழக சினிமாச் சலசலப்பு இன்னமும் ஓயவில்லை. திரைப்பட விழாவின் பின் வன்னி மக்களின் அவலங்களுக்கு உதவும் – மக்கள் உறவைப் பலப்படுத்தும் முயற்சியில் இறங்கிய தென்னிந்திய திரைப்பட நடிகை அசின், சல்மன்கான் ஆகியோர் தங்கள் முயற்சிகளில் குறிப்பிடத்தக்க வெற்றியைக் கண்டுள்ளனர். அவர்கள் விஜயம் செய்த பகுதிகளில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் அவர்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளனர்.

தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராதராவி தங்கள் தீர்மானத்தை மீறி இலங்கை சென்றதற்காக அசினுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து இருந்தார். இலங்கையில் தமிழர்களின் நிலைக்கு இலங்கை அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், படப்பிடிப்புக்காக திரைப் படவிழாவிற்காக நடிகர் நடிகைகள் இலங்கை செல்ல வேண்டாம் என்றும் தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பு கேட்டுக்கொண்டது. இந்த வேண்டுகோளை ஏற்று தமிழ் நடிகர் நடிகைகள் படப்பிடிப்புக்காக இலங்கைக்கு செல்லவில்லை.

ஆனால் தென்னிந்திய நடிகையும் தமிழ் திரையுலகில் முன்னணிக் கதாநாயகியுமான அசின் இதனையும் மீறி திரைப்பட விழாவில் கலந்து கொண்டதுடன் ‘ரெடி’ என்ற ஹிந்திப்படத்தின் படப்பிடிப்பிலும் கலந்துகொண்டுள்ளார். தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை வன்மையாக மறுத்துள்ள அசின் அதற்காக அஞ்சப் போவதில்லை என்றும் தெரிவித்து உள்ளார்.

வவுனியா யாழ்ப்பாணத்தில் நலத்திட்டங்களை முன்னெடுக்கும் நடிகை அசின் யாழ்ப்பாணத்தில் கண் சிகிச்சை முகாமை நடத்தி உள்ளதுடன் பாதிக்கப்பட்ட பெண் பிள்ளைகளையும் தத்தெடுக்கப் போவதாக அறிவித்து உள்ளார்.

தனது யாழ் விஜயம் பற்றி அளித்துள்ள பேட்டியில் வன்னி யாழ்ப்பாண மக்கள் தன்னைப் பரிவோடு அக்கா என்று அழைத்ததாகவும் விஜய் அண்ணாவையும் சுரியா அண்ணாவையும் வரச்சொல்லிக் கேட்டதாகவும் அசின் தெரிவித்துள்ளார்.

நடிகை ஆசினுடைய யாழ்ப்பாண விஜயமும் அவர் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஏற்படுத்திய உறவும் தென்னிந்திய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் முடிவில் யூ ரேன் – U Turn எடுக்கும் நிலைக்குத் தள்ளியுள்ளது. இது இலங்கை அரசின் மக்கள் தொடர்பு – மக்கள் உறவு விடயத்தில் அதற்கு சாதகமாக அமைந்துள்ளது. இலங்கை அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பவர்கள் இன்னமும் பழைய பஞ்சாங்க போராட்ட முறைகளையே கைக்கொள்வதால் அவர்களுக்கு இலங்கை அரசின் அரசியல் நகர்வை எதிர்கொள்வதில் இவ்வாறான சிரமங்கள் ஏற்பட்டு விடுகின்றது

இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிடுவது பற்றி நடிகர் சங்கம் கூடி ஆராயவுள்ளதாக அதன் தலைவர் சரத்குமார் தெரிவித்து உள்ளார். ‘நடிகர் நடிகைகள் அனைவரும் இலங்கை செல்வது பற்றி நடிகர் சங்க செயற்குழுவில் ஆலோசித்து முடிவு செய்யப்படும்’ என்று அவர் கூறியுள்ளார்.  அவர் மேலும் தெரிவிக்கையில் ‘இலங்கையில் நடந்த சர்வதேச பட விழாவுக்கு செல்லக்கூடாது என்று தான் தடை விதிக்கப்பட்டது.’ என்றும் ‘அசின் தொழில்ரீதியாகத்தான் இலங்கை சென்றுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கும் முடிவை மறுபரிசீலனை செய்வோம்’ என்றும் அறிவித்துள்ளார்.

நடிகை அசினுடைய இலங்கை விஜயம் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ள போதும் புலம்பெயர் நாடுகளில் அதற்கு கடுமையான எதிர்ப்பு இருந்து கொண்டே உள்ளது. மேலும் அரசியல் ரீதியாக இப்பயணம் சரியானதா என்ற விவாதமும் இதற்கு மேலாக எழுப்பப்படுகின்றது. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரை அவர்கள் அரசியல் ரீதியாக இதன் சரி பிழைகளை ஆராயும் நிலையில் இல்லை. அரசியல் ரீதியாக சரி என்று முன்னெடுக்கப்பட்ட முடிவுகளே அவர்களை இந்நிலைக்குத் தள்ளியும் இருந்தது.

நடிகை அசினுடைய இலங்கை விஜயமோ அல்லது தமிழக நடிகர் நடிகைகளின் இலங்கை விஜயமோ இலங்கைத் தமிழர்களின் புரையோடிப் போயுள்ள பிரச்சினைக்குத் தீர்வாக அமையப் போவதில்லை. ஆனால் அவை அம்மக்களுக்கு ஒரு கொஞ்சநேர சந்தோசத்தை அளிக்கும். சிறு ஆறுதலைக் கொடுக்கும். அது அரசியல் ரீதியில் தவறா சரியா என்பதை விவாதிக்கும் அடிப்படைச் செழிப்பு அவர்களிடம் இல்லை.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

30 Comments

  • BC
    BC

    இவர்களை யூ ரேன் எடுக்கும் நிலக்கு கொண்டு வந்த அசின் வாழ்க. இனி இவர்கள் அங்கே போகும் போது அந்த மக்களுக்கு அசின் உதவி செய்த படியால் வேறு வழியில்லாமல் தாங்களும் சிறு பங்காவது செய்வார்கள். எல்லாமாக அசின் பல உதவிகள் செய்துள்ளார்.

    Reply
  • Anonymous
    Anonymous

    நடிகை அசினை ஓர் மிகப்பெரிய அபிவிருத்தியாளன் என கருதி மகிந்தவின் பாரியார் வடக்கு கிழக்கை சுற்றி காட்டியமை மிகவும் வெட்க கேடானது. உலகில் எங்குமே இப்படி ஒரு கேவலம் நடக்கவில்லை.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //….அது அரசியல் ரீதியில் தவறா சரியா என்பதை விவாதிக்கும் அடிப்படைச் செழிப்பு அவர்களிடம் இல்லை….//
    அது எமக்குத்தெரியும், அதுதான் அசின் அக்கா, சூரியா அண்ணன் என ”சொல்லவைக்கப்படும்” நிலைக்கு வந்திருக்கிறார்களே?

    ஆனால் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ஜெயபாலன்? அரசியல் ரீதியில் சரியா தவறா? அதைத் தீர்மானிக்கும் பொறுப்பு அவர்களுக்கு மட்டும்தான் உரியது என பதில் தரவேண்டாம்!

    Reply
  • thurai
    thurai

    //என்ன நினைக்கிறீர்கள் ஜெயபாலன்? அரசியல் ரீதியில் சரியா தவறா? அதைத் தீர்மானிக்கும் பொறுப்பு அவர்களுக்கு மட்டும்தான் உரியது என பதில் தரவேண்டாம்//சாந்தன்

    இங்கு ஏழைகள் வேதனைப்பட மாட்டார் என பாடியவர் அரசியலிற்கு மட்டுமல்ல தமிழகத்தின் தலைவராக வந்தும் கூட ஏழ்மை ஒழிந்ததா?

    புலிகளின் தாகம் தமிழீழ்ததாயகம் என கோசம்போட்டவர்கள் எல்லாம் இன்று இராஜபக்சவின் காலில் விழவில்லையா? வெள்ளைக் கொடி பிடிக்கவில்லையா?

    தமிழக அரசியலும், புலிகளின் அரசியலும் ஒன்றுதான். புலிகளிற்கு மட்டுமே இந்த நடிக நடிகைகளை அரசியல் வாதிகளாக்குவது பொருந்தும். மற்ரவர்களிற்கல்ல.

    துரை

    Reply
  • proffessor
    proffessor

    அசினையும் ;விஜய் அன்ரனியையும் நம்பியா தமிழீழ போராட்டம் பிறப்பெடுத்தது? இந்த போராட்டம் பிறக்கும் போது அசின் இந்த உலகத்தில் கூட அவதரிக்கவில்லை. அண்மையில் சிவதம்பி சொன்ன செய்தியும் இதுதான் கருணாநிதியை நம்பியா எமது போராட்டம் தொடங்கியது என்பதும் ஒரே செய்திதான்.

    நாமல் ராஜபக்சவும் அசினும் கொழும்பில் உல்லாசம்!!
    ராஜபக்சேவுக்கு மட்டுமா பிசின் சிங்களவன் எல்லோருக்கும் பிசினாம் !!!!

    மேலேயுள்ள தலையங்கத்தில் தமது வக்கிர எண்ணங்களை கொட்டும் தமிழ்தேசியர்களின் ஊடகங்களில் செய்தியாக பார்க்க கிடைத்த போது ஜெயபாலன் எழுதிய இப்பதிவு மிகவும் பாராட்டுக்குரியது.

    இன்னுமொரு தகவல் செந்தமிழன் சீமானின் வெற்றிபட நாயகி பூஜா இன்னமும் சிங்களபடத்தில் நடித்துக்கொண்டுதான் இருக்கிறார்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    // நடிகை அசினை ஓர் மிகப்பெரிய அபிவிருத்தியாளன் என கருதி மகிந்தவின் பாரியார் வடக்கு கிழக்கை சுற்றி காட்டியமை மிகவும் வெட்க கேடானது. //

    இதில் வெட்கக்கேடாக என்ன இருக்கின்றது. அசின் படப்பிடிப்பிற்கு வருவதைத் தடுக்க தினம் தினம் முட்டாள்த்தனமாக தங்கள் அரசியல் பிழைப்புகளுக்காக சவுண்டு விடும் சீமான் போன்றவர்கள் தான் வெட்கப்பட வேண்டும். அசின் திரைப்படத்தில் நடிப்பதற்கு இலங்கை வந்ததை கண்டு கொள்ளாமல் இருந்திருந்தால், அசினும் சாதாரண நடிகையாகவே இலங்கை வந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டு நாடு திரும்பியிருப்பார். ஆனால் அவருக்கு எதிராக சிலர் சவுண்டு விட, அதையும் மீறி அசின் இலங்கை வர, சந்தர்ப்பத்தை பாவித்து மகிந்த அரசும் அவருக்கு ராஜ உபசாரம் செய்கின்றது. முன்பு இலங்கை அரசு நடாத்திய இந்தியத் திரைப்பட விழாவைப் புறக்கணிக்கும் படி தான் கோரிக்கை வைத்தனர். அதற்கு அநேக தமிழக நடிகர்களும் ஒத்துழைப்புக் கொடுத்தனர். அதை வைத்து அனைத்தையும் ஆட்டிப் படைக்கலாமெனக் கனவு கண்ட சீமான் போன்றவர்கள், தொழில்ரீதீயாக இலங்கை செல்வதையும் தடுக்க வெளிக்கிட்டு மூக்குடைபட்டது தான் மிச்சம். தனியொரு பெண்ணாக அசின் கொடுத்த பதிலடி சரத்குமார் போன்றோரை சிந்திக்க வைத்துள்ளது. இதில் வெட்கப்பட வேண்டியவர்கள் யாரென்று இப்போதாவது புரிந்தால் சரி…….

    Reply
  • BC
    BC

    அசின் அக்கா சூரியா அண்ணன் பதிலாக தாமரை அக்கா, சீமான் அண்ணன், அடேல் அன்ரி என்று சொல்லும்படி மக்களுக்கு உத்தரவே போட்டிருப்பார்கள். நல்ல காலமாக முடியாமல் போய்விட்டது.

    Reply
  • santhanam
    santhanam

    டெல்லியை ஆக்கிரமித்துள்ள கேரள அரசியல் தந்திரம் இது தமிழ்நாட்டு மக்குகளுக்கு புரியவில்லை அசினை அவர்கள் நன்கு பயன்படுத்தியுள்ளனர்.

    Reply
  • கந்தையா
    கந்தையா

    சினிமா பார்க்க விரும்புற சனத்தை மறிச்சு போராட வா எண்டு இழுத்துக்கொண்டு போய் ஆடி முடிஞ்சு இப்ப அந்தச் சனங்கள் திரும்ப தங்கட மனம் எதை விரும்புகிறதெண்டதைக் காட்டுகிறாங்கள். ஊரில் இருப்பவர்கள் போராட மட்டும்தான் பிறந்தவர்கள் என்றமாதிரி வெளிநாடுகளில் இருந்து அரசியல் செய்பவர்களுக்கு இதெல்லாம் எப்பவுமே பிடிக்காதுதானே. இவர்கள் எப்பதான் யு ரேண் எடுத்து மக்களைப்பற்றி அவர்களின் தேவைகளைப்பற்றிச் சிந்திக்கப் போகிறார்களோ பார்ப்பம்..

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    கருத்தாளர்கள் அனைவருக்கும் நன்றி.

    //ஆனால் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ஜெயபாலன்? அரசியல் ரீதியில் சரியா தவறா? அதைத் தீர்மானிக்கும் பொறுப்பு அவர்களுக்கு மட்டும்தான் உரியது என பதில் தரவேண்டாம்!// சாந்தன்

    இந்தத் தலைப்பை வைத்து கேள்விக்குறியையும் போடும் போதே ஜெயபாலனின் கருத்து என்ன என்ற கேள்வி எழும் என்பது தெரியும். பொலிற்றிக்கல் கரக்ட்னஸ் – பொலிற்றிகலி கரக்ற் (Political Correctness – Politically Correct) என்பது பற்றிய விவாதம் ஒன்று அவசியம் எனப்பட்டதாலேயே இந்தத் தலையங்கத்தை தெரிவு செய்திருந்தேன்.

    பிரித்தானிய இனவாத அரசியலில் சிறிது காலத்திற்கு முன்னர் இந்த பொலிற்றிகல் கரகட்னஸ் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது. வெறுங்கோப்பி அதாவது பால்விடாத கோப்பியை பிளக் கொபி – black coffe என்றே அழைத்தனர். ஆனால் இவ்வார்த்தைப் பிரயோகம் அரசியல்ரீதியாக தவறானது (politically incorrect) என நுண் அரசியலாளர்கள் சிலர் வாதிட்டனர். அதற்குப் பதிலாக பாலில்லாத கோப்பி (coffe without milk / coffe no milk) என அதனை அழைக்க வேண்டும் என்று அந்த நுண் அரசியலாளர்கள் தெரிவித்தனர். ஏனெனில் black coffe – பிளக் கோப்பியில் வரும் பிளெக் – black ஓரினத்தினை அடையாளப்படுத்தும் சொல்லாக அமைகிறது என்பது அவர்களின் வாதம்.

    இலங்கையில் இந்திய இராணுவம் தரையிறக்கப்பட்ட போது இலங்கையில் யுத்தத்தில் ஈடுபட்டு இருந்த இலங்கை இராணுவமும் புலிகளும் இணைந்து அந்நிய இராணுவத்தை வெளியெற்றியது பொலிற்றிகலி கரக்ட் – politically correct என்றே குறிப்பிட்ட ஒரு அரசியல் பிரிவு எண்ணியது. ஆனால் இந்திய இராணுவம் வெளியேற்றப்பட்டு 20 வருடங்களுக்கு மேலான நிலையில் அப்போதைய தமிழ் அரசியல் தலைமை எடுத்த முடிவு தவறானது என அன்று அந்த அரசியல் முடிவை எடுத்தவர்களே யு ரேன் – U turn எடுத்துள்ளனர்.

    எந்த ஒரு அரசியல் நடவடிக்கையானாலும் அதன் முடிவுகளை வைத்தே அந்த அரசியல் நடவடிக்கையினை மதிப்பீடு செய்ய முடியும். அந்த வகையில் தென்னிந்திய திரைப்படக் கூட்டமைப்பின் திரைப்பட விழா புறக்கணிப்பும் அசினுக்கு எதிரான நடவடிக்கையும் அரசியல் ரீதியில் பைத்தியகாரத்தனமானது. – Political madness.

    தென்னிந்திய திரைப்படக் கூட்டமைப்பு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நடவடிக்கையில் இறங்கி, திரைப்பட விழாவின் கணிசமான நிதியை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்து, தென்னிலங்கையில் உள்ள சக கலைஞர்களையும் ஒன்று, சேர்த்து வன்னி முகாம்களுக்கு விஜயம் செய்து, அங்குள்ள மக்களது கவலையை மறக்க வைக்கும் சில நிகழ்ச்சிகளை அங்கு ஒழுங்கு செய்திருந்தால், இவர்களது புறக்கணிப்பு எதிர் நடவடிக்கை என்பதிலும் பார்க்க கூடுதலான நன்மை பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்றடைந்திருக்கும். அரசும் வன்னி முகாம்களின் நிலையை மேம்படுத்த நிர்ப்பந்திக்கப்பட்டு இருக்கும்.

    மாறாக இவர்கள் மேற்கொண்ட புறக்கணிப்பு நடவடிக்கையை ஒரு தனி நடிகையின் நடவடிக்கை மாற்றியமைக்க நிர்ப்பந்தித்து உள்ளது. அசின் தனக்கு எதிரான பிரச்சாரங்களை எதிர்கொள்வதற்காகவோ அல்லது மகிந்த அரசின் திட்டப்படியோ அல்லது உண்மையிலேயே பாதிக்கப்பட்ட மக்களில் அன்புகொண்டோ இந்த உதவிகளை மேற்கொண்டு இருக்கலாம். எது எப்படியானாலும் பாதிக்கப்பட்ட மக்கள் ஏதோ சில நன்மைகளைப் பெற்றுள்ளார்கள். ஆனால் புறக்கணிப்பை மேற்கொண்டதனால் அவர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்மை கிடைக்கவில்லை. இந்த நடவடிக்கை சில நீண்டகால நன்மையை ஏற்படுத்தும் என்று சிலர் கூறலாம். ஆனால் விளைவுகள் அதனைப் பிரதிபலிக்கவில்லை. தங்கள் சுயஅரசியல் திருப்திக்காக சில வெற்றுக்கோசங்களும் புறக்கணிப்புகளும் மட்டுமே. இதன் விளைவு இந்த புறக்கணிப்பை யாருக்கு எதிராக மேற்கொண்டார்களோ அவர்களே இறுதியில் தாங்கள் அரசியலில் ஒரு படி மேல் என்பதை நிறுவுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

    //நடிகை அசினை ஓர் மிகப்பெரிய அபிவிருத்தியாளன் என கருதி மகிந்தவின் பாரியார் வடக்கு கிழக்கை சுற்றி காட்டியமை மிகவும் வெட்க கேடானது. உலகில் எங்குமே இப்படி ஒரு கேவலம் நடக்கவில்லை.// அனோனிமஸ்
    தமிழ் மக்களின் மிகப்பெரிய பலவினமே அவர்களுக்கு தங்கள் பலம் பலவீனத்தை மதிப்பிடத் தெரிவதில்லை. அனோனிமஸ் இன் பதிவு இந்தப் பலவீனத்தை தெளிவாகக் காட்டுகின்றது. இராணுவம் தமிழ் பகுதிகளுக்குள் ஊடுருவிய போது உள்ளுக்கு விட்டு அடிக்கிற கதைபோல் தான் இப்பதிவு உள்ளது. இதுதான் மகிந்த அரசின் அரசியல் சாணக்கியம். ஆனால் எம் தலைமைகளின் அரசியல் சாணக்கியம் என்ன தெரியுமா அனோனிமஸ், எமது மக்களை நாமே கொன்று குவித்து இனப்படுகொலை நடைபெற்றது என்று பிரச்சாரப்படுத்துவது. இதில் யாருடைய சாணக்கியம் ஜெயிக்கும்?

    //டெல்லியை ஆக்கிரமித்துள்ள கேரள அரசியல் தந்திரம் இது தமிழ்நாட்டு மக்குகளுக்கு புரியவில்லை அசினை அவர்கள் நன்கு பயன்படுத்தியுள்ளனர்.// சந்தானம்
    இந்தத் தமிழ் தேசியவாதத்தின் இனவாதத்திற்கும் சந்தர்ப்பவாதத்திற்கும் எல்லையே இல்லை என்பதற்கு சந்தானத்தின் பதிவு சான்று. எங்களுடைய அரசியல் பலவீனத்தை மற்றவர்களின் தலையில் கட்டி இனவாதத்தை கக்குவதன் மூலம் எவ்வித பலனும் கிடைக்கப் போவதில்லை. பழைய பஞ்சாங்க அரசியலை மூடிவைத்துவிட்டு புதிதாகச் சிந்திக்க முயல வேண்டும். அசின் மலையாளி, விஜய் நம்பியார் மலையாளி, எம் கே நாராயணன் மலையாளி கருணாநிதி கன்னடம், கருணா மட்டக்களப்பு, சோனி தொப்பி பிரட்டி, சிங்களவன் மொக்கன்…. இந்த உலுத்தப் போன அரசியலை வைத்துச் செய்யத அரசியலுக்கு முடிவுகட்டங்கள்.

    எமது சமூகத்தின் அரசியல் நடவடிக்கைகளுக்கு நாமே பொறுப்பு. அதற்கேன் மற்ற சமூகங்களின் மீது இனவாதத்தை கக்குவான். எமது அரசியலின் வக்கற்ற தனத்தை மாற்றியமைக்க முயலுங்கள்.

    Reply
  • ராஜதுரை
    ராஜதுரை

    பார்த்திபனின் 14ம் திகதி பி.ப 6.21ற்கு பதியப்பட்ட கருத்துக்களுக்கு நன்றிகள்!

    தத்தமக்கே உரிய பொறுப்புக்களிலிருந்தும் பிறழ்ந்து, தம் சுயலாபம் கருதித் ‘தமிழ் தேசியம்” என்கின்ற வெறியைக் கட்டவிழ்ப்பவர்களின் வெட்கக்கேடான செயல்கள்தான் சாதாரண நடிகைக்களுக்கும், கிரிக்கட் வீரர்களும் ‘புனிதர்களின்’ (saints) அந்தஸ்தை வழங்கி விடுகின்றது.

    “நடிகர்கள், திரைப்படங்கள் – அவதூறுகள்” என்கின்ற வகையில் தம் கோட்பாடற்ற வெறியாட்டங்களுக்காக – தமிழ் தேசியவாதம் கதைத்துக் கொண்டு அலையும் கிணற்றுத் தவளைகளின் நிலை – சேகுவேராவின் உருவப்படம் பொறித்த டீ-சேர்ட் அணிந்து கொண்டு போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடும் நிழலுக அடியாள்களின் (drug traffickers) நிலைக்கு ஒப்பானது!

    ‘சீமான்’ தமிழின் அறங்காவலருமல்ல! தமிழர்களுக்கு வாழ்வழிக்க வந்த யேசு நாதர் போன்ற messaiahவுமல்ல!

    தமிழனின் ‘சோற்றுக்கு அல்லாடுகின்ற போராட்டத்தினுள்’ இனிமேலும் சினிமாவைக் கலக்க வேண்டாமே! சினிமா ஒரு ஊடகம் மட்டுமே…

    //மேலும் அரசியல் ரீதியாக அசினின் வருகை சரியானதா (?) என்ற விவாதமும் இதற்கு மேலாக எழுப்பப்படுகின்றது// >> மேற்படிக் கூற்றின் அடிப்படையில், “தமிழ் தேசக் கொள்கையியலுக்குள் (Tamil nation’s ideologies) சமூகப் பிரக்ஞையற்ற, அரசியல்/ பொருளாதார/ சமூகவியல்/ கலாச்சார அறிவற்ற ‘படம் காட்டுகின்ற’, கதாநாயகர் வழிபாட்டைத் (hero worship) தூண்டி இலாபம் காண முயல்கின்ற சுயவிளம்பரதாரிகளின் அற்பத்தனமான ஊடுருவல் சரியானதா (?) ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதா (?)” என்கின்ற கேள்வியை எழுப்பியதன் மூலம் ஜெயபாலன் எம்மைச் சரியான வழியில் தான் சிந்திக்க வைக்க முயன்று கொண்டிருக்கின்றார். நன்றிகள் ஜெயபாலன்!

    எது தமிழ் தேசக் கொள்கையியல்? அதற்கும் தமிழ் தேசியத்துக்கும் என்ன வேறுபாடு? இதற்குள் மிதவாதிகளினதும், தீவிரச்சிந்தனையுள்ளவர்களினதும் பங்களிப்பும் தாக்கங்களும்தான் என்ன? இதற்கான பதிலை தயவுசெய்து யாரும் கூற முடியுமா???

    தேசம் என்றால் nation! தேசத்துக்கும் தேசீயத்துக்கும் வேறுபாடுண்டு! அது என்னவோ?

    இப்படிக்கு,
    ராஜதுரை

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    /என்ன நினைக்கிறீர்கள் ஜெயபாலன்? அரசியல் ரீதியில் சரியா தவறா? அதைத் தீர்மானிக்கும் பொறுப்பு அவர்களுக்கு மட்டும்தான் உரியது என பதில் தரவேண்டாம்//சாந்தன்.
    “அசின்” யழ்ப்பாணத்திற்கு சென்றது சரியா, தவறா? என்று விவாதிக்கும் நீங்கள், டாக்டர்? அருட்குமார், சார்ள்ஸ் அந்தோனிதாஸ், போன்றோர்கள் யாழ்- வன்னி விஜயத்தை மட்டும் சரியா தவறா என்று விவாதிப்பதில் ஏன் “selective amnesia”?!. “தமிழர் எதிர்ப்புணர்வில்” ஊறியிருக்கும்? இலங்கை இராணுவத்துடன் இணைந்து, தடுத்து வைக்கப்பட்டிருக்கும், முன்னாள் விடுதலைப்புலிகள்? உறுப்பினர்களை தவறாக (இந்தியாவுக்கு எதிராக?)வழிநடத்தும் கே.பி. யை பற்றி விவாதிக்காதது ஏன்?. தெற்காசியாவிலிருந்து புலம்பெயர்ந்த பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபால், இந்தியா போன்ற நாடுகளின் மக்கள் தொகையில் புலம்பெயர்ந்தவர்கள் தொகை கணக்கிலெடுக்கும் அளவில் இல்லை, ஆனால் இலங்கைத்தமிழர்களில் பெரும்பாலனோர் புலம்பெயர்ந்தவர்கள்!. இவர்களுக்கு ஒரு மாயை உள்ளது, இது காலனித்துவ வாதிகள் கட்டிவிட்ட “தலைப்பாகை(STATUS QUO)” என்று பலர் கூறுகின்றனர். ஆனால் புறநிலையான இந்த மாயை, தற்போது இல்லை, அதாவது நாம்தான் காலனித்துவ வாதிகளின் கழுத்தை கட்டிக்கொண்டு அழுகிறோம், அவர்கள் உதவி எதுவும் செய்யவில்லை என்பது முள்ளியவாய்க்காலில் தெரிந்துவிட்டது!. ஆனால் “அகநிலையாக”, உள்ளுக்குள்ளிருந்து கொல்லும் வியாதியாக, “SUPER-EGO DELUSION” உள்ளது!. அதற்கான அகராதி விளக்கம் -super-ego:A person’s ideals for himself or herself, acting like a conscience in directing his or her behaviour. Delusion:A false belief or opinion, a persistent false belief that is a symptom or form of madness -.
    இந்த அகநிலை மாயையே, இலங்கையிலுள்ள தமிழ் பேசும் மக்களின் பிரச்சனையாக வைக்கப்படுகிறது, தமிழ் இனத்தின், தமிழ்தேசியத்தின் பிரச்சனையாக வைக்கப்படுகிறது!. இதற்கு காரணம், புலம்பெயர்ந்த இலங்கைத்தமிழரின் சதவிகிதம்!. இவர்களின் கூற்றை தவறாக விளங்கிக் கொண்டுள்ள “தமிழ்நாட்டு மக்கள்” குழம்பிப் போயுள்ளனர். இந்த மாயையை “நடிகை அசின்” உடைத்துள்ளார்!. அதற்கு பாராட்டலாம்!.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    //எதுதமிழ் தேசிய கொள்கையில்?அதற்கும் தமிழ் தேசியத்திற்கும் என்ன வேறுபாடு…
    இதற்கான பதிலை தயவு செய்து யாராவது தர முடியுமா?//இராஜதுரை.
    மதிப்புக்குரிய ராஜதுரை அவர்களே! உங்கள் கேள்வி இடக்குமுடக்காக இருக்கிறது இருந்தாலும் என்னளவில் கொண்ட விளக்கத்தை கொண்டு சில விஷயங்களைக் கொண்டு சில தரவுகளைத் தரலாம். உங்களுக்கு சம்மதம்-உடன்பாடு இல்லாத போது தொடர்ந்து விவாதிக்கலாம்…
    ஒரு உதாரணத்திற்கு தான் தொடங்குகிறேன்.
    ஆசியாவில் இருந்து ஒருகப்பலில் அகதிகளாக நடுக்கடலில் பிரயாணத்தை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. அதில் இந்தியர்கள் இலங்கையர்கள் ஆப்கானிஸ்தான்காரர்கள் பங்களாதேஷ்காரர்கள் பாகிஸ்தான்காரர்கள் இன்னும் ஈரான் ஈராக் குறிதீஸ்காரர் துருக்கிகாரர் எனவும் வகைப்படுத்தலாம்.
    இதில் ஏதோஒரு இடைத்துறைமுகத்தில்லிருந்து ஒரு இலங்கைத்தமிழன்-குடும்பவும் எதிர்காலக் கனவுகளை மனத்தில் கொண்டு கப்பலில் ஏறுகிறது. அவர்களின் நோக்கம் அமெரிக்கா கனடா அவுஸ்ரேலியா என வகைப்படுத்த முடியும். இடைத்துறைமுகத்தில் ஏறிய இந்த இலங்கைத் தமிழன் அல்லது குடும்பம் அந்த கப்பலில் உள்ள தனது இனத்தோடுதான் முதலில் தொடர்பை ஏற்படுத்துவான். இதுவே நியதி. இதுவே இனத்திற்கான தேவை. இதுவே இனத்தின் அடையாளம். பலம்.
    உலகமயமாக்கப் பட்ட இன்றைய நிகழ்வில்…தனது அடையாளத்தை தனது பெருமையை வெளிக்கொண்டுவர வேண்டும் என அங்கலாப்பதும் அதற்கு முத்திரை குத்துவதும் போலியானவை ஏமாற்றுவகைக்குட்பட்டவை.
    ஒருநாட்டில் ஒருதேசத்தில் ஒருகண்டத்தில் தங்கள் இனமனிதகுல தேவைகளை பூர்த்தி செய்யவேண்டுமென்றால் அந்த நாட்டின்-தேசத்தின்-கண்டத்தின் உழைப்பாளி மக்கள் நாட்டையும் தேசத்தையும் கண்டத்தையும் காப்பதற்கு தனியொரு மனிதனாக தனியொரு வர்கமாக எழுந்து நிற்கவேண்டும். இந்த புரிந்துணர்வால் மட்டுமே! இப்படியான இனம் தேசம் தேசியம் என்ற வழுக்கு படிக்கட்டுகளில் பயணம் செய்வதை விட்டு நேர்தியான பாதையை கண்டுபிடிப்பதுமல்லாமல் தமிழினமும் ஒரு மகத்தான இனம் என்பதை அடையாளப் படுத்த முடியும்.
    மிகுதியை தொடருங்கள் ராஜதுரை.

    Reply
  • ராஜதுரை
    ராஜதுரை

    உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள் சந்திரன்.ராஜா!

    ஜெயபாலன் சுட்டிக்காட்ட விரும்புவது, “political correctness” என்கின்ற பார்வையின் (perspective) முக்கியத்துவத்தை!

    அதனடிப்படையில், “தமிழ் தேசத்தைச் சார்ந்த அனைவருமே தமிழ் தேசீயவாதிகள் அல்ல!” என்பதுவும்… “தமிழர் என்று தமது பிறப்புச் சான்றிதழ்களில் குறிப்பிட்டுக் கொள்பவர்கள் மட்டுமே தமிழரல்ல!” என்பதுவும் நிறுவப்படலாம்.

    இதனடிப்படையில் உலகமென்கின்ற நவீனமயப்படுத்தப்பட்ட பெரும் கிராமத்தில் (global village), ‘தமிழ் தேசீயவாதம் கதைப்பவர்கள்’ சமூகத்துக்கொவ்வாத தீண்டத்தகாதவர்களாகத்தான் (outcastes or anomalies) கருதப்படுவார்கள்! ஒருவகையில் ‘தீண்டத்தகாதவர்’ என்கின்ற பதமும் “political correctness” பார்வையினடிப்படையில் பிழையானதுதான்!

    எனது கேள்விகளுக்கு இன்னமும் சரியான விடைகள் கிடைக்கவில்லை! தொடருங்கள் சந்திரன்.ராஜா….

    கருத்தொன்றைச் சுட்டிக் காட்டுவதற்காக மீண்டும் நான் வந்து போக வேண்டியிருக்கிறது.

    //வாழ்வழிக்க வந்த messaiahவுமல்ல!// என்கின்ற என்கூற்றில்… “வாழ்வழித்தல்” என்பதன் “political correctness”உடன் தேசிய/தேச கோட்பாடுகளைத் தொடர்பு படுத்தியும் பாருங்கள் சந்திரன்.ராஜா!

    Reply
  • palli
    palli

    ஜெயபாலன் சரியா தவறா என ஒரு பட்டிமன்றம் தொடங்கி இருக்கிறியள். அசினனைவைத்து அரசியல் செய்ய நடிகர்கள் சிலர் முடிவெடுத்து அதற்கு சங்கத்தையும் இலவசமாய் துனைக்கு கூட்டி கும்மாளம் போட்டதில் இன்று நாமும் அசின் அரசியல் பேசும்படி வந்துவிட்டது; இதில் சில நடிகர் மட்டுமே சங்கத்தை சிறை வைத்திருப்பது பலர் அறிந்த உன்மைதானே, அசின் கொழும்பு வருவதும் கண்டியில் தூங்குவதும் மகிந்தா வீட்டில் சாப்பிடுவது எல்லாம் ராஜதுரை சொன்னது போல் அவரது தனி விவகாரம்;

    இந்தியாவால் தடை செய்யபட்ட புலி அமைப்பின் தலைவரை பாரதிராஜா சந்திக்க சென்றபோது சங்கத்தின் அனுமதி பெற்றா சென்றார், சீமான் புலிகளின் இலக்கிய வார்த்தையான ஒட்டுகுழு என புலம்பெயர் தேசத்தில் பினாமிகளை மகிள்விக்க அடிக்கடி கதறியபோது மூடியிட்டு இருந்த சங்கம் இன்று பிழைப்புக்காய் இலங்கை சென்ற அசின் மீது கல்வீசுவது அவர்களது பிழைப்புக்காய் எனவே எண்ண தோன்றுகிறது, ஆனாலும் இவர்களது கல்வீச்சால் ஏதோ தன்னால் முடிந்த உதவியை இன்னல்படும் மக்களுக்கு அசின் செய்துள்ளார், அதுக்காக அவருக்கு தமிழனாய் எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்; இங்கு அசினின் அழகு பற்றி கட்டுரையும் இல்லை, அவரது அளவு திட்டங்கள் பற்றிய பின்னோட்டங்களும் இல்லை; ஒரு தொழிலாளி மீது சகதொழிலாளிகளை வைத்து அரசியல் செய்யும் வியாபாரிகளின் கேடுகெட்ட எண்ணங்களை எழுதுகிறோம்;

    ராதாரவி ஈழதமிழருக்கு மிக எதிரானவர் என்பது பல ஈழதமிழருக்கு தெரியும், அவருக்கு கூட இப்போது ஈழதமிழர் மீது கரிசனையாம்;

    தொடரும்பல்லி;;

    Reply
  • chandran.raja
    chandran.raja

    //வாழ்வழிக்க…..//என்கிற என்கூற்றில்…”வாழ்வழித்தல்” என்பதன்…உடன்தேசிய
    /தேசக் கோட்பாடுகளையும் தொடர்பு படுத்திப்பாருங்கள்..// ராஜதுரை.
    திரு.ராஜதுரை இச் சொல்லாடல்கள் என்னை அறியஊருக்கு அழைத்துப் போவதாக நினைக்கிறேன். இது பற்றி நீங்கள்தான் எமக்கு புரியவைக்க வேண்டும். நீண்டகால உள்நாட்டுயுத்தத்தில் எமது பாடசாலைகள் கல்லூரிகள் ஒரு ஆயுதக்குழுக்களால் சீரழிக்கப்பட்டதும் அல்லாமல் கல்லூரி அதிபர்கள்களுக்கும் போராசியருக்கும் மரணதண்டனையும் வழங்கப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் ஒட்டுமொத்தக் கல்வியுமே சிதறடிக்கப் பட்டிருக்கிறது. இதில் பல்கலைகழகம் சீரளிக்கப்பட்டது. சிதிலைமடைந்து கொண்டிருக்கிறது அங்குள்ள ஒருசிலரின் தவறானபோக்கில் தான் என்ற உங்கள் வாதத்தை திரும்பவும் எனக்கு நினைவூட்டுகிறது. தயவுசெய்து இதில் கவனம் எடுக்கவும் திரு.ராஜதுரை.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    தினம் தினம் முட்டாள்த்தனமாக தங்கள் அரசியல் பிழைப்புகளுக்காக சவுண்டு விடும் சீமான், ராதாரவி போன்றவர்கள் வெட்கப்பட வேண்டும். அசின் திரைப்படத்தில் நடிப்பதற்கு இலங்கை வந்ததை கண்டு கொள்ளாமல் இருந்திருந்தால், அசினும் சாதாரண நடிகையாகவே இலங்கை வந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டு நாடு திரும்பியிருப்பார். ஆனால் அவருக்கு எதிராக சிலர் சவுண்டு விட, அதையும் மீறி அசின் இலங்கை வர, சந்தர்ப்பத்தை பாவித்து மகிந்த அரசும் அவருக்கு ராஜ உபசாரம் செய்கின்றது. முன்பு இலங்கை அரசு நடாத்திய இந்தியத் திரைப்பட விழாவைப் புறக்கணிக்கும் படி தான் கோரிக்கை வைத்தனர். அதற்கு அநேக தமிழக நடிகர்களும் ஒத்துழைப்புக் கொடுத்தனர். அதை வைத்து அனைத்தையும் ஆட்டிப் படைக்கலாமெனக் கனவு கண்ட சீமான் போன்றவர்கள், தொழில்ரீதீயாக இலங்கை செல்வதையும் தடுக்க வெளிக்கிட்டு மூக்குடைபட்டது தான் மிச்சம். தனியொரு பெண்ணாக அசின் கொடுத்த பதிலடி சரத்குமார் போன்றோரை சிந்திக்க வைத்துள்ளது.

    Reply
  • thurai
    thurai

    கலைகழும், விளையாட்டுகழும் உலகினை சமாதானத்தை நோக்கி நகர்த்துவன. சீமான், வைகோ, புலத்துப்புலிகள் சமாதானத்திற்கு விரோதமானவர்கள்.

    புலிகளின் ஆதரவாளர் கொலைகளையும், மரணங்களையும், பார்த்து ரசித்தவர்கள். சீமான்,வைக்கோ, தெருவில் கூட்டங்களைக் கூட்டி மகிழ்பவர்கள். மக்களை மகிழ்விக்கப் பிறந்தவர்களை, கொலைகளைச் செய்து மகிழ்ந்தவர்கள் கட்டுப்படுத்தவும் கூடாது, கட்டுப்படுத்தவும் முடியாது.

    துரை

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…..இந்தத் தலைப்பை வைத்து கேள்விக்குறியையும் போடும் போதே ஜெயபாலனின் கருத்து என்ன என்ற கேள்வி எழும் என்பது தெரியும். பொலிற்றிக்கல் கரக்ட்னஸ் – பொலிற்றிகலி கரக்ற் (Political Correctness – Politically Correct) என்பது பற்றிய விவாதம் ஒன்று அவசியம் எனப்பட்டதாலேயே இந்தத் தலையங்கத்தை தெரிவு செய்திருந்தேன்….//

    கேள்வி வரும் எனத்தெரிந்து கொண்டிருப்பது பரவாயில்லை. உங்களின் பதிலையும் இட்டு பின்னர் மற்றவர்களின் கருத்தையும் கேட்டிருந்திருக்கலாம் அல்லவா?
    பொலிற்றிக்கல் கரெக்ட்னஸ் – பொலிற்றிக்கலி கரெக்ட் பற்றிய விவாத்தை ஆரம்பிக்க அசினின் விஜயம்தான் உங்களுக்கு கிடைத்த்து என்பதனை என்னால் நம்ப முடியவில்லை. இதனை இங்கு வேறொரு கருத்தாளர் சொன்னது போல அருள்குமாரின்/சாள்ஸ் அந்தோனிதாசின் விஜத்தில் ஆரம்பித்திருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்.

    //…. ஆனால் இவ்வார்த்தைப் பிரயோகம் அரசியல்ரீதியாக தவறானது (politically incorrect) என நுண் அரசியலாளர்கள் சிலர் வாதிட்டனர். அதற்குப் பதிலாக பாலில்லாத கோப்பி (coffe without milk / coffe no milk) என அதனை அழைக்க வேண்டும் என்று அந்த நுண் அரசியலாளர்கள் தெரிவித்தனர். ஏனெனில் black coffe – பிளக் கோப்பியில் வரும் பிளெக் – black ஓரினத்தினை அடையாளப்படுத்தும் சொல்லாக அமைகிறது என்பது அவர்களின் வாதம்….//

    ஆம் மேற்குறித்த இது பொலிற்றிக்கல் கெரெக்ற்னஸ் விடயம் தான் ஆனால் இலங்கையில் இந்திய ராணுவ தரையிறக்கம் பற்றிய விடயம் பொலிற்றிக்கல் கரெக்னஸ் பற்றியதல்ல. அது ஒரு இராணூவ திட்டமிடல்/தாக்குதல் பற்றியது. அதாவது பொலிற்றிக்கல் கரெக்ற்னஸ் என்பது ஒரு அரசியல் ராணுவ நடவடிக்கை பற்றியதல்ல மாறாக ஒரு இனத்தை அதன் சமூக பொருளாதார அரசியல் பாலியல் மத விடயங்களில் அவர்கள் கொண்டிருக்கும் பழக்க வழக்கங்களை அவ்வினத்தை சிறுமைப்படுத்த உபயோகிப்பதே! உதாரணமாக அமெரிக்கா ஆப்கானிஸ்தானுக்கு போனதோ அன்றி அங்கு மக்களைக்கொன்றதோ பொலிற்றிக்கல் கரெக்ட்னஸ் அல்லது இன் – க்ரெக்ட்னஸ் அல்ல மாறாக அவர்கள் அம்மக்களை படிப்பறிவற்ற பாமர்ர்கள் என்றும் கொஞ்சம் பணத்தை அள்ளி வீசினால் எல்லோரையும் காடிக்கொடுப்பர் எனவும் இஸ்லாமிய மத்த்தில் மறுக்கப்பட்ட நாய்/பன்றி போன்றனவற்றை ஏவி சிறிமைப்படுத்துதலே பொலிற்றிக்கல் கரெக்ட்னஸ் விவாதத்தில் வரும்.

    //……லங்கையில் இந்திய இராணுவம் தரையிறக்கப்பட்ட போது இலங்கையில் யுத்தத்தில் ஈடுபட்டு இருந்த இலங்கை இராணுவமும் புலிகளும் இணைந்து அந்நிய இராணுவத்தை வெளியெற்றியது பொலிற்றிகலி கரக்ட் – politically correct என்றே குறிப்பிட்ட ஒரு அரசியல் பிரிவு எண்ணியது….//

    இல்லை அது ஸ்றறஜிக்கலி கெரெக்ட் அல்லது இல்லை எனவரும், அது பொலிற்றிக்கல் கரெக்னசில் வராது. மாறாக வந்து இறங்கிய சீக்கிய படைவீர்ர்களில் கடலை எண்ணை நாற்றம், குளிக்காமல் திரிபவர்கள் எனச்சொல்லி சிறுமைப்படுத்தியது பொலிற்றிக்கல் கரெக்ட்னஸ் விவாத்த்துக்குரியது. (: conforming to a belief that language and practices which could offend political sensibilities (as in matters of sex or race) should be eliminated — political correctness noun )

    /…..ஆனால் இந்திய இராணுவம் வெளியேற்றப்பட்டு 20 வருடங்களுக்கு மேலான நிலையில் அப்போதைய தமிழ் அரசியல் தலைமை எடுத்த முடிவு தவறானது என அன்று அந்த அரசியல் முடிவை எடுத்தவர்களே யு ரேன் – U turn எடுத்துள்ளனர்….//
    அது கரெக்ட் பொலிற்றிக்கல் டிசிசன் எனச் சொல்லப்படும்.

    //…..எந்த ஒரு அரசியல் நடவடிக்கையானாலும் அதன் முடிவுகளை வைத்தே அந்த அரசியல் நடவடிக்கையினை மதிப்பீடு செய்ய முடியும். அந்த வகையில் தென்னிந்திய திரைப்படக் கூட்டமைப்பின் திரைப்பட விழா புறக்கணிப்பும் அசினுக்கு எதிரான நடவடிக்கையும் அரசியல் ரீதியில் பைத்தியகாரத்தனமானது. – Political madness….//
    ஆம் ஆனால் அது பொலிற்றிக்கல் கரெக்ட்னஸ் பற்றியதல்ல!
    நீங்களே ஒத்துக்கொண்டிருக்கிறீர்கள் அது பொலிற்றிக்கல் மாட்னஸ் என.

    //…… அங்குள்ள மக்களது கவலையை மறக்க வைக்கும் சில நிகழ்ச்சிகளை அங்கு ஒழுங்கு செய்திருந்தால், இவர்களது புறக்கணிப்பு எதிர் நடவடிக்கை என்பதிலும் பார்க்க கூடுதலான நன்மை பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்றடைந்திருக்கும். ….//
    அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்ட மக்களை ‘ஆடல் பாடல்’ செய்து ‘மகிழ்வித்தல்’ பொலிற்றிக்கல் கரெக்ட்னஸ் அல்ல. இதை அமெரிக்காவோ அன்றி இஸ்ரேலே செய்தால் என்ன நடக்கும்? மக்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தல் என்கின்ற பொலிற்றிக்கல் கரெக்ட்னஸ் வாத்தில் வரும். சொல்லப்போனால் அமெரிக்கா இவ்வாறான நடவடிக்கை ஒன்றுக்கு ஹொலிவூட் நடிகர்களை ஈடுபடுத்த திட்டமிட்டிருந்த்து ஆனால் யாரும் ஒத்துழைக்கவில்லை. காரணம் ’நிகழ்ச்சிகள்’ பொலிற்றிக்கலி கரெக்ட் ஆனவை அல்ல என ஹொலிவூட் கருதியது!
    இதேபோல மலையாள அசினுக்கு ‘சூரியா அண்னை விஜய் அண்ணை ஏன் வரவில்லை அக்கா’ என அங்குள்ள ‘மக்கள்’ கூறியதாக சொன்னதை நான் ”கடைஞ்செடுத்த டப்பிங் கேஸ் அசினுக்கு யாழ்ப்பாணத் தமிழ் விளங்கிச்சுதாமோ” எனக்கேட்பது பொலிற்றிக்கல் இன் – கரெக்ட் ஆகக்கொள்ளலாம். அதேபோல ஆனந்த சங்கரி பல பொலிற்றிக்கலி இன்கரெக்ட்னசாக செய்த வேலைகளே இன்று அவரை இந்நிலைக்கு ஆளாக்கி இருக்கின்றன. (புலிக்கு இங்கிலீஸ் தெரியுமோ, இழப்பு எனக்கில்லை யாழ்ப்பானத்தானுக்குத்தான்…என பல….)
    அதேபோல வன்னிக்குப்போன கனிமொழி ஒவ்வொரு முகாமுக்கும் போகும் போது ஒவ்வொரு வண்னச்சேலை உடுத்தியது பொலிற்றிக்கலி இன்கரெக்ட்.

    //….அரசும் வன்னி முகாம்களின் நிலையை மேம்படுத்த நிர்ப்பந்திக்கப்பட்டு இருக்கும்….//
    அப்படியா, ஸ்ரீலங்கா அரசு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதி நிதிகளை விடவில்லை, சர்வதேச மனிதவுரிமை நிறுவனங்களை விடவில்லை நடிகைகளை விட்டு அவர்கள் போய் நிர்ப்பந்திப்பார்களாக்கும். நல்ல கதை ஜெயபாலன் !

    //…..மாறாக இவர்கள் மேற்கொண்ட புறக்கணிப்பு நடவடிக்கையை ஒரு தனி நடிகையின் நடவடிக்கை மாற்றியமைக்க நிர்ப்பந்தித்து உள்ளது. அசின் தனக்கு எதிரான பிரச்சாரங்களை எதிர்கொள்வதற்காகவோ அல்லது மகிந்த அரசின் திட்டப்படியோ அல்லது உண்மையிலேயே பாதிக்கப்பட்ட மக்களில் அன்புகொண்டோ இந்த உதவிகளை மேற்கொண்டு இருக்கலாம். எது எப்படியானாலும் பாதிக்கப்பட்ட மக்கள் ஏதோ சில நன்மைகளைப் பெற்றுள்ளார்கள்…..//
    ஜெயபாலன் இதனை முதலில் கட்டுரையில் நீங்கள் சொல்லி இருக்கலாம், அல்லது ஐஃபா சம்பந்தமான பல விவாதங்களிலாவது வந்து சொல்லி இருக்கலாமே? ஏன் இவ்வளவு காலம் உங்களுக்கு எடுக்க வேண்டும்?

    //…. அது அரசியல் ரீதியில் தவறா சரியா என்பதை விவாதிக்கும் அடிப்படைச் செழிப்பு அவர்களிடம் இல்லை…//
    மக்களுக்கு அடிப்படைச் ‘செழிப்பு’ இல்லை எனச்சொல்வது பொலிற்றிக்கல் கரெக்ட்னஸ் இல்லை. ஏதோ நாம்தான் ‘செழிப்பு’ உள்ளவர்கள் எனச் சொல்லும் நீங்கள் ஏன் அச்செழிப்பு இல்லாதவர்களுக்காக போராடக்கூடாது? அது உங்கள் கடமை அல்லவா? இதேபோலத்தான் சங்கரியின் இங்கிலீஸ் கதை மற்றும் பேராசிரியர் ஹூலின் ‘ஆனந்த விகடன் குமுதம் வாசியுங்கள்’ என்கின்ற கதையும் (எக்ஸைல் ரிற்றேண்ட் புத்தக விவாதம் என நினைக்கிறேன்)

    ஜெயபாலன் நீங்கள் பொலிற்றிக்கல் கரெக்ட்னஸ் என்கின்ற பரந்த ஒரு சிந்தனை/சொல்லாடலையும் ராணுவ அரசியல் தந்திரோபாயங்கள் திட்டமிடல்களான கரெக்ட் பொலிட்டிகல் மூவ் ஐயும் ஒன்றாக போட்டு குழப்புகிறீர்கள்.

    கீழே பொலிற்றிக்கல் கரெக்ட்னஸ் பற்றிய
    பிரின்ஸ்ரன் பல்கலைக்கழக டிக்சனறி, மற்றும் மரியம்-வெப்ஸ்ர்ர், ஒக்ஸ்ஃபோட் டிக்சனரி, விக்கிப்பீடியா குறிப்புகள்…….
    •avoidance of expressions or actions that can be perceived to exclude or marginalize or insult people who are socially disadvantaged or discriminated against
    wordnetweb.princeton.edu/perl/webwn
    •Political correctness (adjectivally, politically correct; both forms commonly abbreviated to PC) is a term which denotes language, ideas, policies, and behavior seen as seeking to minimize social and institutional offense in occupational, gender, racial, cultural, sexual orientation, handicap …
    en.wikipedia.org/wiki/Political_correctness
    Political correctness (adjectivally, politically correct; both forms commonly abbreviated to PC) is a term which denotes language, ideas, policies, and behavior seen as seeking to minimize social and institutional offense in occupational, gender, racial, cultural, sexual orientation, disability, and age-related contexts. In current usage, the term is primarily pejorative,[1][2] while the term politically incorrect has been used as an implicitly positive self-description. Examples of the latter include the conservative Politically Incorrect Guides published by the Regnery editorial house[3] and the television talk show Politically Incorrect. In these cases, the term politically incorrect connotes language, ideas, and behavior unconstrained by a perceived orthodoxy or by concerns about offending or expressing bias regarding various groups of people.

    Reply
  • விஸ்வா
    விஸ்வா

    “இலங்கைத் தமிழர்கள் குறித்து பேசுவதை விடவும் அறிக்கைகள் விடுவதை விடவும் அவர்களுக்கு நேரில் சென்று உதவலாமே” – நடிகை அசின் தெரிவிப்பு!

    “நான் இலங்கை சென்றபின் அங்குள்ள தமிழர்கள் படும் துயரைக் கேட்டறிந்து அவர்களுக்கு உதவி செய்ய முடிவு செய்தேன்இ தைரியமாக யாழ்ப்பாணம் சென்றேன். யாழ்ப்பாணத்திலுள்ள மருத்துவமனையில் நோயினால் பாதிப்புற்றுள்ள தமிழர்களைப் பார்த்து கண்கலங்கினேன். அவர்களுக்கு உதவுவதற்காக அறக்கட்டளை தொடங்கியிருக்கிறேன். அதன்மூலம் 300 இற்கும் மேற்பட்ட தமிழர்களுக்கு என் சொந்த செலவில் கண்சிகிச்சை நடத்தினேன். இந்தியாவிலிருந்து என் சொந்த செலவில் கண் மருத்துவத்தில் புகழ்பெற்ற ஐந்து மருத்துவர்களை அழைத்துச் சென்று சிகிச்சை முகாமை நடத்தினேன். ஒரு நோயாளிக்கான ‘லென்சின்’ விலை ஐயாயிரம் ரூபா. பத்தாயிரம் பேருக்கு கண்சத்திரசிகிச்சை நடத்த திட்டமிட்டிருக்கின்றேன். நடந்து முடிந்த போரில் பெற்றோரை இழந்த ஒரு வயது முதல் 16 வயது வரையிலான 150 பெண்களைத் தத்தெடுத்துள்ளேன். இவை தவறா? தமிழ்நாட்டிலிருந்து கொண்டு இலங்கைத் தமிழர்கள் குறித்து பேசுவதையும், அறிக்கை விடுவதையும் விட இலங்கைக்குச் சென்று அங்குள்ள தமிழர்களுக்கு உதவலாமே!”

    இவ்வாறு நடிகை அசின் பேட்டியொன்றில் கூறியிருக்கின்றார். தென்னிந்தியத் திரைப்படக் கூட்டமைப்பினரின் தடையை மீறி அசின் இலங்கையில் நடைபெற்ற திரைப்பட விழாவிற்குச் சென்றமை ‘ரெடி’ திரைப்படத்தில் நடிப்பதற்காக இலங்கை சென்றுள்ளமை தொடர்பாக தமிழ்திரையுலகில் பெரும் சாச்சை நிலவி வரும் வேளையில் நடிகை அசின் இவ்வாறான கருத்துக்களை தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். தன் மீது வேண்டும் என்றே சர்ச்சையை கிளப்புபவர்கள் பற்றி கவலைப்படப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    /அதேபோல ஆனந்த சங்கரி பல பொலிற்றிக்கலி இன்கரெக்ட்னசாக செய்த வேலைகளே இன்று அவரை இந்நிலைக்கு ஆளாக்கி இருக்கின்றன. (புலிக்கு இங்கிலீஸ் தெரியுமோ, இழப்பு எனக்கில்லை யாழ்ப்பானத்தானுக்குத்தான்…என பல….)/– சாந்தன்.
    இதற்காகத்தான் “வன்னி மக்கள்” பழிவாங்கப்பட்டார்களா?- விளக்கம் தேவை?- இது “உள் குத்துவெட்டு போல் உள்ளது”,இதற்கு அடிப்படை காரணம் என்ன?.
    1994 ல் நடந்த ருவாண்டா படுகொலையில்,ஆப்பிரிக்க மக்கள் பத்துலட்சம் பேர் ஒரு சில நாட்களில் கொல்லப்பட்டனர்!.இதில் “தங்களை உயர்வாக கருதிக் கொண்ட(SUPER-EGO DELUSION)” “டுட்சி இன மக்களை”,”மோட்டு ஹுட்டு இனத்தினர்” என்று கேவலப்படுத்தப்பட்டவர்கள் கொன்று குவித்தனர்!.இதில் எங்கே “பொலிட்டிகல் கரக்ட்னெஸ்” வருகிறது?.
    /‘கற்பித்தலும் ஆய்வும் இணைந்து பாரபட்சமற்ற உண்மையைத் தேடுவதே பல்கலைக்கழகம்’ என்பதே 19ம் நூற்றாண்டில் ஜேர்மனியின் பல்கலைக்கழகத்தின் கருத்துருவமாக இருந்தது./-ஜெயபாலன்.
    /இப்படியான, முன்னேற்றத்தடைக் காரணிகளை TQM செயற்பாடுகள் மூலம் எப்படிக் கட்டுப்படுத்தலாம், இல்லாதொழிக்கலாம் என்பது பற்றியும் DEMOCRACY தனது கருத்துக்களை சொன்னால் நன்றாகவிருக்கும்…/–ராஜதுரை on July 15, 2010.
    Colonial influences

    Both GERMANY(before World War I) and Belgium ruled the area in a colonial capacity. The Germans, like the Belgians before them, theorized that the Tutsi were originally not from sub-Saharan Africa at all. They thought that they had migrated from somewhere else.The GERMAN COLONIAL GOVERNMENT gave special status to the Tutsi, in part because they believed them to possess racial superiority(SUPER-EGO DELUSION). The Germans considered the Tutsi more ‘presentable’ compared to the Hutu, whom they viewed as short and homely(DALITHS?). As a result, it became colonial policy that only Tutsis could be educated, and only Tutsis could participate in the colonial government. Since the Hutus were in the majority such policies engendered some intense hostility between the groups, “who had been PEACEFUL enough with each other BEFORE colonization”. The situation was exacerbated when the Belgians assumed control following World War I. Recognizing their ignorance of this part of Africa, they sought advice from the Germans, who told them to continue promoting the Tutsis, which they did.

    When the Belgians took over the colony in 1916, they felt that the colony would be better governed if they continued to classify the different populations in a hierarchical form. Belgian colonists viewed Africans in general as children who needed to be guided, but noted the Tutsi to be the ruling culture in Rwanda-Burundi. In 1959, Belgium “REVERSED(because of CHRISTIAN MISSIONARIES(Dalith help?))ITS STANCE”and allowed the majority Hutu to assume control of the government through universal elections.

    Reply
  • BC
    BC

    புலிகளில் இறந்தவர்களுக்கு தீபம் ஏற்றும் நிகழ்வில் புலிக்கு காசு சேர்ப்பவர்களின் குடும்பத்து ஆட்கள் ஆடம்பரமான சேலைகள் அணிந்து கலந்து கொள்வதாக புலி ஆட்கள் சிலர் குறைபட்டவர்கள். இப்ப தான் தெரியும் அது ஒரு பொலிற்றிக்கலி இன்கரெக்ட் என்ற விடயம் என்பது.
    //வன்னிக்குப்போன கனிமொழி ஒவ்வொரு முகாமுக்கும் போகும் போது ஒவ்வொரு வண்னச்சேலை உடுத்தியது பொலிற்றிக்கலி இன்கரெக்ட். //

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    நான் பொலிடிக்கல் கரக்ட்னசையும் இராணுவ ஸ்ரர்ஜியையும் போட்டுக் குளப்பவில்லை. நீங்கள் தான் அதற்குள் இறங்கி உள்ளீர்கள்.

    அரசியல் ரீதியாக சரியாக இருக்க வேண்டும் என்ற புத்தகக் கோட்பாட்டு அரசியலை பின்பற்றுபவர்கள் யதார்த்த அரசியலை பொலிற்றிகலி இன்கொரக்ட் என்ற அடிப்படையில் நிராகரிக்கின்றனர். இந்த முட்டாள்தனமான அரசியலைப் பற்றியே எனது கருத்தை வெளியிட்டு இருந்தேன். விளிம்புநிலை மக்கள் தொடர்பாக பேசுகின்ற பொலிற்றிகல் கரக்ட்னஸ் பற்றி நான் கவனம் கொள்ளவில்லை. பிளக்கொபி என்ற உதாரணம் இந்த நுண் அரசியலாளர்களால் சகட்டுமேனிக்கு வைக்கப்படும் கருத்தியலை வெளிப்படுத்தவே எடுத்துக் கொண்டேன்.

    பொது எதிரிக்கு எதிராக ஐக்கியப்பட்டுப் போராட வேண்டும் என்றொரு கருத்தாக்கம் உண்டு. புலிகளும் இலங்கை அரசும் யுத்தத்தில் ஈடுபட்டாலும் அந்நிய இராணுவம் இலங்கைக்குள் நுழைந்தபோது பொது எதிரியான இந்திய இராணுவத்திற்கு எதிராக புலிகள் இலங்கை அரசுடன் இணைந்து கொண்டது பொலிற்றிகலி கரக்ட் என்பது பல இடதுசாரி சிந்தனையாளர்கள் மத்தியிலும் இருந்தது. இங்கு சாந்தன் குறிப்பிடும் இராணுவத்திட்டமிடல் அல்ல பிரச்சினை. அரசியல் கொள்கைப் புத்தகத்தில் உள்ள பொது எதிரிக்கு எதிராக ஐக்கியப்பாடு தான் பொலிற்றிகலி கரகட் என்பதையே நான் சுட்டிக்காட்டி உள்ளேன். இந்திய இராணுவத்தில் எண்ணை மணக்குது சப்பாத்தி மணக்கின்றது என்ற பிரச்சினை நூண் அரசியலாளர்களுடையது. என் போன்ற சாதாரணர்களின் பிரச்சினை தலையாய பிரச்சினைகளை எவ்வாறு யதார்த்தமாக மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் அணுகுவதென்பது.

    இதேவிடயம் புலிகளை ஆயுதங்களைக் கைவிடும்படி சரணடையும்படி வற்புறுத்துவதிலும் ஏற்பட்டது. இலங்கையில் தமிழ் மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் ஏந்திய புலிகளை ஆயுதங்களைக் கீழே போடச்சொல்வது அல்லது சரணடையச் சொல்வது பொலிற்றிகலி இன்கரக்ட் எனப் பலர் மெளனமாக இருந்தனர். ஆனால் பல்லாயிரம் மக்கள் இதன் விளைவாகக் கொல்லப்படப் போகின்றார்கள் என்பது அவர்களுக்கு பொலிற்றிகலி இன்கரக்ட் ஆகத் தெரியவில்லை. இந்த பொலிற்றிகல் கரக்ட்னஸில் உள்ள பொலிற்றிக்கல் மாட்னஸ் பற்றியே நான் குறிப்பிட விளைந்திருந்தென்.

    ஆனால் சாந்தன் சோபா சக்தியின் பாணியில் சொல்வதானால் எலியை அடிப்பதற்கு நீங்கள் ஏகே போட்டி செவன் பாவித்த மாதிரி இருக்கிறது. நீங்கள் ஓவர் குவாலிபைட் என்று நினைக்கிறேன்.

    //ஜெயபாலன் நீங்கள் பொலிற்றிக்கல் கரெக்ட்னஸ் என்கின்ற பரந்த ஒரு சிந்தனை/சொல்லாடலையும் ராணுவ அரசியல் தந்திரோபாயங்கள் திட்டமிடல்களான கரெக்ட் பொலிட்டிகல் மூவ் ஐயும் ஒன்றாக போட்டு குழப்புகிறீர்கள்.// சாந்தன்

    ரெக்ஸ்ற் புக் பொலிற்றிக்ஸ்க்கு பொலிற்றிகலி கரக்ட்டாக இருக்க வேண்டும் என்ற சிந்தனைப் போக்கையே நான் இங்கு சுட்டிக்காட்டி உள்ளேன். நீங்கள் மேல் குறிப்பிட்ட விடயங்கள் முற்றிலும் வேறுபட்டவை. தாங்கள் பொலிற்றிகலி கரக்ட் ஆக இருக்க வேண்டும் என்பதற்காக யதார்த்தத்தை நிராகரிக்கும் பொலிற்றிகல் கரகட்னஸ் ஒரு வகையில் பொலிற்றிகல் மாட்னஸ்.

    யார் என்ன சொல்லியுள்ளார்கள் என்று மேற்கோள் காட்டுவதற்கு அவர்கள் என்ன சொல்லியுள்ளார்கள் என்பது எனக்குத் தெரியாது. இது எனது சிந்தனைக்கு எட்டிய பார்வை.

    எது பொலிற்றிகல் கரக்ட்னஸ்க்குள் வரும் எது பொலிற்றிகல் கரக்ட்னஸ் இற்குள் வராது என்ற தீவிர ஆய்வில் நீங்கள் இறங்கி உள்ளீர்கள். எனது நிலைப்பாடு சாதாரணமானது. ஒடுக்கப்படுகின்ற மக்களுக்கு நன்மை பயக்காத எந்தக் கொள்கையும் விதியும் அர்த்தமற்றது. போலியானது. விதிகளுக்காகவும் கொள்கைகளுக்காகவும் மக்கள் வாழ்வதில்லை. மக்களுக்காகவே விதிகளும் கொள்கைகளும் அமைக்கப்படுகின்றன.

    இவை பைபிளோ குர்ஆனோ வேதஆகமங்களோ அல்ல. இவை காலத்திற்குக் காலம் மீளாய்வு மீள்மதிப்பீடு செய்யப்பட்டு தேவையேற்படி மாற்றியும் அமைக்கப்பட வேண்டும்.

    //ஸ்ரீலங்கா அரசு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதி நிதிகளை விடவில்லை சர்வதேச மனிதவுரிமை நிறுவனங்களை விடவில்லை நடிகைகளை விட்டு அவர்கள் போய் நிர்ப்பந்திப்பார்களாக்கும். நல்ல கதை ஜெயபாலன் ! // சாந்தன்
    பிபிஸ் ஹாட்ரொக் ஸ் ரீபன் சாக்கர் எந்தப்படத்தில் நடித்தார். அவர் வடக்கின் முக்கிய பகுதிகளுக்கும் முகாம்களுக்கும் சென்றுள்ளார். அல்ஜசீரா சென்றுள்ளது. இவர்கள் அசினின் சொந்த பந்தங்களா. பிபிசியும் அல்ஜசிராவும் தங்கள் இலக்கில் குறியாக இருந்து இலங்கை அரசை நிர்ப்பந்தித்து தம் இலக்கை அடைந்துள்ளனர்.

    ”…..மாறாக இவர்கள் மேற்கொண்ட புறக்கணிப்பு நடவடிக்கையை ஒரு தனி நடிகையின் நடவடிக்கை மாற்றியமைக்க நிர்ப்பந்தித்து உள்ளது. அசின் தனக்கு எதிரான பிரச்சாரங்களை எதிர்கொள்வதற்காகவோ அல்லது மகிந்த அரசின் திட்டப்படியோ அல்லது உண்மையிலேயே பாதிக்கப்பட்ட மக்களில் அன்புகொண்டோ இந்த உதவிகளை மேற்கொண்டு இருக்கலாம். எது எப்படியானாலும் பாதிக்கப்பட்ட மக்கள் ஏதோ சில நன்மைகளைப் பெற்றுள்ளார்கள்…..”
    //ஜெயபாலன் இதனை முதலில் கட்டுரையில் நீங்கள் சொல்லி இருக்கலாம், அல்லது ஐஃபா சம்பந்தமான பல விவாதங்களிலாவது வந்து சொல்லி இருக்கலாமே? ஏன் இவ்வளவு காலம் உங்களுக்கு எடுக்க வேண்டும்?//

    ஒரு கட்டுரை எழுதப்படும் போது அதன் ஓட்டத்திலே அதற்கான வாதப் பிரதிவாதங்கள் தன்னியல்பாக வருவதுண்டு. இந்த இடத்தில் இந்தக் கருத்து ஏன் வந்தது என்று கேள்வி கேட்பது குதர்க்கமானது. இந்த இடத்தில் இந்தக் கருத்தில் உள்ள தவறு என்ன என்பதை சாந்தன் வெளிப்படுத்தி இருக்க வேண்டும். ஏன் அப்ப சொல்லவில்லை. இப்ப சொல்கிறீர்கள் என்றால் என்ன சொல்ல வருகின்றீர்கள். நீங்கள் திட்டமிடும் நேரத்தில் அல்லது நீங்கள் நிர்ணயிக்கும் நேரத்தில்தான் நான் சிந்திக்க வேண்டும் என்று அவசியமில்லையே சாந்தன்.

    Reply
  • vithuran
    vithuran

    பிரபாகரனை நம்பியிருந்த எங்கட பிள்ளையல் அசினிடம் விஜய் அண்ணாவும் சூர்யா அண்ணாவும் வரமாட்டார்களா என்று கேட்டதை நினைக்க கவலையாகத்தானுள்ளது.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //பிரபாகரனை நம்பியிருந்த எங்கட பிள்ளையல் //

    எந்தக் காலத்தில் நம்பியிருந்தார்கள் ?? துப்பாக்கிமுனையில் வைத்திருப்தற்கு பெயர் உங்கள் அகராதியில் நம்பிக்கையோ ??

    Reply
  • nantha
    nantha

    தமிழ்வாதம் ஒரு பாரிச வாதம். இயக்கவாதம் ஒரு முடக்கு வாதம். சந்தர்ப்பவாதம் என்பது யாழ்ப்பாண தமிழ்வாதம். ஈழம் ஒரு மூளைச்சலவை. இதற்கிடையில் இந்த வாதங்களோடு “சம்பந்தப்பட்டவர்கள்” political correctness பற்றி பேசி என்ன பயன்?

    கம்யூனிச கோட்பாடுகளை எதிர்ப்பவர்கள் மாவோ சே துங்கின் “பொது எதிரி” என்ற வார்த்தைப் பிரயோகத்தை தங்கள் இனவாதத்துக்கு வசதியாக பயன்படுத்தி தமிழர்களைக் காட்டுக்குள் அனுப்பினார்கள். புலிகள் இலங்கை அரசோடு சேர்ந்து இந்தியாவுக்கு எதிராக கக்கிய விஷத்தை என்னுடைய பாஷையில் “வெறும் வேசித்தனம்” என்றே சொல்லுவேன். இயக்க முடக்கு வாதக்காரர்களுக்கு இந்தியா எப்படி பொது எதிரியானது என்பது இன்னமும் கண்டு பிடிக்கப்படாத விஷயம். இலங்கைத் தமிழ் மக்களுக்கு இந்தியா பொது எதிரியா? அப்படியானால் எப்படி என்பதை தமிழ் மக்களுக்கு “ஆயுதம்” மூலம் பிரச்சனைகள் தீர்க்க புறப்பட்ட மேதாவிகள் எங்களுக்குச் சொன்னால் நல்லது.

    தவிர ஒரு நடிகை மீது தடை விதிக்கும் தமிழ் நாட்டுச் சினிமாகாரர்கள் யாரும் இதுவரையில் இந்தியாவிலுள்ள இலங்கை அகதி முகாம்களுக்கு போனதாக சரித்திரம் இல்லை. இந்த நிலையில் ஹிந்தி சினிமாவிலும், தென் இந்திய சினிமாவிலும் பிரபலமான அசின் போன்றவர்கள் இலங்கை வந்து இலங்கை தமிழர்களுக்கு எந்த உதவிகள் செய்தாலும் அவை வரவேற்கத் தக்கவையே!

    ஈனவும் மாட்டேன்! நக்கவும் மாட்டேன்! செத்தால் சந்தோஷப்படுவேன் என்று பரட்டை வேதாந்தாந்தம் பேசுபவர்கள் முதலில் பத்துக் காசை இலங்கையிலுள்ள தமிழ் மக்களுக்கு செலவு பண்ணி அந்த மக்களின் பாராட்டைப் பெறட்டும்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…நான் பொலிடிக்கல் கரக்ட்னசையும் இராணுவ ஸ்ரர்ஜியையும் போட்டுக் குளப்பவில்லை. நீங்கள் தான் அதற்குள் இறங்கி உள்ளீர்கள். ….//

    //……இலங்கையில் இந்திய இராணுவம் தரையிறக்கப்பட்ட போது இலங்கையில் யுத்தத்தில் ஈடுபட்டு இருந்த இலங்கை இராணுவமும் புலிகளும் இணைந்து அந்நிய இராணுவத்தை வெளியெற்றியது பொலிற்றிகலி கரக்ட் – politically correct என்றே குறிப்பிட்ட ஒரு அரசியல் பிரிவு எண்ணியது…//

    பொலிற்றிக்கல் கரெக்ட்னஸ் பற்றி கோப்பி உதாரணம் கொடுத்ததும் நீங்கள் தான் அடுத்த பந்தியில் இராணுவ நடவடிக்கையை இழுத்ததும் நீங்கள் தான். இங்கே விவாதம் பொலிற்றிக்கல் கரெக்ட்னஸ் பற்றியே ஆனால் பொலிற்றிக்கலி கெரெக்ட் மூவ் என்கின்ற ஒன்றை போட்டு (மாட்டைப்பற்றி எழுதச்சொல்ல மரத்தில் கட்டி மரத்தைப்பற்றீ எழுதுவது போலவா) பொலிற்றிக்கல் கரெக்னசுக்கும் பொலிற்றிக்கல்/ஸ்ரற்றஜிக்கல் க்கும் முடிச்சுப்போட்டது நானல்ல!

    //…..பொது எதிரிக்கு எதிராக ஐக்கியப்பட்டுப் போராட வேண்டும் என்றொரு கருத்தாக்கம் உண்டு. புலிகளும் இலங்கை அரசும் யுத்தத்தில் ஈடுபட்டாலும் அந்நிய இராணுவம் இலங்கைக்குள் நுழைந்தபோது பொது எதிரியான இந்திய இராணுவத்திற்கு எதிராக புலிகள் இலங்கை அரசுடன் இணைந்து கொண்டது பொலிற்றிகலி கரக்ட்…//
    ஆனால் அது ’பொலிற்றிக்கல் கரெக்ட்னஸ்’ என்கின்ற சொல்லாடல்/கருத்தாக்கத்தில் பார்க்கப்படுவதில்லை.
    பொலிற்றிக்கல் கரெக்ட்னஸ் என்றால் என்ன என்பதனை விளக்கி இருந்தேன்.

    //…..ஒரு கட்டுரை எழுதப்படும் போது அதன் ஓட்டத்திலே அதற்கான வாதப் பிரதிவாதங்கள் தன்னியல்பாக வருவதுண்டு. இந்த இடத்தில் இந்தக் கருத்து ஏன் வந்தது என்று கேள்வி கேட்பது குதர்க்கமானது…//
    அப்படி ஒன்றுமில்லை. உங்கள் தேசம்…உங்கள் கட்டுரை. ஆனால் இதே கருப்பொருளில் ஒரு விவாதம் நடைபெற்றதே. உங்களுக்கு அப்போது இவ்விவாதத்ங்களில் பொலிற்றிக்கல் கரெக்ட்னஸ் மேலோங்கி நிற்பது தெரியவில்லையா என்று கேட்டேன். இக்கேள்வி உங்கள் பத்திரிகைதிறன்/ சிந்திக்கும்திறன் போன்றவற்றைல் நம்பிக்கை வைத்தே கேட்கப்பட்டது. இதனை பொலிற்றிக்கலி இன்கரெக்ட் ஆக நினைத்து தாக்க வேண்டாம். நான் ‘செழிப்பு’ இல்லாதவன்தான்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //..இந்த நிலையில் ஹிந்தி சினிமாவிலும், தென் இந்திய சினிமாவிலும் பிரபலமான அசின் போன்றவர்கள் இலங்கை வந்து இலங்கை தமிழர்களுக்கு எந்த உதவிகள் செய்தாலும் அவை வரவேற்கத் தக்கவையே!…//

    நல்ல விசயம். ஆனால் முதலில் ஸ்ரீலங்கா (ஒரே நாடு -அப்படித்தான் சொல்கிறார்கள்)மக்களால் ‘ஜனநாயகமுறையில்’ ‘தெரிவுசெய்யப்பட்ட’ பிரதிநிதிகளுக்கு அனுமதி கொடுங்கள். போனால் போகிறது ஜே.வீ.பிக்காவது அனுமதி உண்டா? அதை எல்லாம் தாண்டி அசினிடம் ஏன் போக வேண்டும்?

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    திரு.த.ஜெயபாலன் அவர்கள், என்னுடைய தரவாவான “SUPER-EGO DELUSION”னை, “பொலிட்டிகல் மேட்னஸ் (political madness)” ஸாக, மாற்றீடு செய்கிறார்!. அதை ஏற்றுக் கொள்கிறேன்!. இதற்கு காரணமாக, அப்பாவி மக்களை காப்பாற்ற எடுக்கப்பட்டிருக்கும் முயற்சியே, “சரியான அரசியல்” என்று வாதிடுகிறார்- அது முற்றிலும் சரி!. அதற்கு “லிட்டில் எய்ட்” சரியான வழி என்று கூறுகிறார். இதில் உடன்பாடு என்றாலும், “பொலிட்டிகல் கரைக்ட்னெஸ்” என்பது ஏட்டலவிலான சிந்தாந்தம் என்பதிலில்லாமல், “மாயைகளை” தவிர்த்த, “பொலிட்டிகலி கரைக்ட்” என்பதாக முன்வைக்கப்பட்டால், “லிட்டில் எய்ட்” போன்றவைகளை ஊழல் மயப்படுத்தவேண்டும் என்ற காழ்ப்புணர்ச்சி (இனவெறி?, MOTIVATION)தவிர்க்கப்பட்டு, சகமனிதர்கள் என்ற அன்புணர்வு மேலோங்கி, உதவிகள் இயல்பாக(தங்கள் குடும்ப அங்கத்தினர்களுக்கு மாய்ந்து, மாய்ந்து செய்வது போல)மக்களை சென்றடையும்!.

    Reply
  • nantha
    nantha

    இலங்கை இன்னமும் “ஒருநாடு” என்பதை புரியாதவர்கள் இலங்கையின் பிரச்சனைகள் பற்றி பேசுவது வெறும் ஆசாடபூதிதனம் என்றுதான் எண்ணுகிறேன்! புலிகள் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காகப் போராட்டம் நடத்துகிறார்கள் என்று விட்ட கரடிகளை நம்பியது மாத்திரமின்றி முள்ளி வாய்க்காலில் கூண்டோடு கைலாசம் போன செய்திகளை இதுவரையில் வெளியிட முடியாமல் முக்கி முனகி இலங்கை அரசுக்கெதிராக சகல பொய் பிரச்சாரங்களையும் வெட்கம், மானம் இன்றி வெளியிட்டு தமிழர்களை “மூடர்களாக்கும்” முயற்சியில் இன்றும் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் முதலில் “நாட்டு நடப்புக்களை” அறிந்து கொள்வது நல்லது. இதுவும் POLITICAL CORRECTNESS அல்லது POLITICAL STRATEGY என்று வாதிட்டு மற்றவர்களின் நேரத்தை மண்ணாக்கவும் சில தமிழ் மேதாவிகள் முயலக் கூடும்! தமிழர்களுக்கு அல்வா கொடுப்பதும் ஒரு POLITICAL STRATEGY என்றுதான் தோன்றுகிறது!

    மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் என்பது “சகல” அதிகாரங்களும்” அவர்களுக்கு உண்டு என்பதல்ல! பொன்சேகாவுக்கு வாக்களித்து யுன்பியுடன் கை கோர்த்து ஆடிய கூத்துக்கள் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஒரு கோவணத்தைத் தானும் கொடுக்க முடியவில்லை என்ற யதார்த்தத்தை இன்னமும் புரியாமல் ஜே வி பி நாசகாரிகளை யாழ்ப்பாணத்தில் “கூத்தடிக்க’ விடவில்லை என்பது வெறும் அரசியல் பரட்டைத்தனம் என்றே தோன்றுகிறது. தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் தமிழர்களுக்கு தொடர்ந்தும் “சுடலை” மார்க்கத்தையே உபதேசிக்கிறார்கள். அதை இன்னமும் புரியாமல் “தமிழ்” என்று முழங்கி என்ன சாதனைகள் புரியப் போகிறார்களோ தெரியவில்லை!

    Reply