கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனின் கப்பல்களுக்கும் ஏனைய சொத்துக்களுக்கும் என்ன நடந்தது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
கே.பியின் 18 கப்பல்களுக்கும் என்ன நடந்தது? அவருக்குச் சொந்தமான 500 பெற்றோல் நிலையங்களுக்கும் என்ன நடந்தது? என நாம் தெரிந்துகொள்ள விரும்புகிறோம். என ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பினார். மேற்படி சொத்துக்களை அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்குப் பயன்படுத்த முடியும் எனவும் அவர் கூறினார்.
indiani
கேபியின் விடுதலைக்கு உதவிசெய்யவே இலங்கைக் கடற்பரப்புக்குள் வந்து நிற்கிறது.