மீண்டும் ஒரு புதிய புரட்டாசி பதினொன்றா? :நோர்வே நக்கீரா

pst1.jpg
அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத்தகர்ப்புப் போன்ற பெரிய ஒரு பயங்கரவாத நடவடிக்கை நோர்வேயால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக 3 முஸ்லீம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் உஸ்பேக்கர்கள் என்று கருதப்படுகிறது. மற்றவர் சீனாவைச் சேர்ந்த உருகு இனத்தவராக இருக்கலாம்.

இவர்கள் வெடிகுண்டு தயாரிப்பதற்குப் பாவிக்கும் ஷய்ரோயின் பரவொக்சைட் எனும் திராவகத்தை மருந்துக்கடையில் வாங்க முயற்சித்தனர். இவர்களைத் தொடர்ந்து திரிந்த உளவுப்பொலிசார் இந்தத்திராவகத்துக்குப் பதிலாக அதேபோன்ற பாதிப்பற்ற வேறு திராவகத்தை மாறிக் கொடுக்கச் செய்தார்கள். இதன் காரணமாக நடக்கவிருந்த பெரிய பயங்கரப்பேரழிவு கொண்ட நடவடிக்கை தடுக்கப்பட்டுள்ளது. இந்த பயங்கரவாத நடவடிக்கை நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவிலும் யேர்மனியில் உள்ள புயிஸ்பர்க்கிலும் நடக்க இருந்தது.

இது சம்பந்தமாகக் கைதுசெய்யப்பட்டுள்ள மூவரும் ஒஸ்லோ யேர்மனுக்கிடையில் பல தொடர்புளை ஏற்படுத்தியிருந்தனர். சென்ற வின்ரறில் வெடிகுண்டு தயாரிப்பதற்கான சகலபொருட்களும் வாங்கப்பட்டு விட்டன. இதுபற்றிய மேலதிகவிபரங்கள் துப்புத்துலக்கப்படுகிறது. பொலிசின் தியறி என்னவெனில் இந்தக்குண்டுகள் நோர்வேயில் மாத்திரம் வைக்கப்பட்டிருக்கும் என்று சொல்ல முடியாது. அயல்நாடுகள் வேறுநாடுகளிலும் வைப்பதற்குச் சாத்தியம் இருந்திருக்கும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

 • chandran.raja
  chandran.raja

  நக்கீரனின் செய்தி தமிழ்சினிமா பார்த்த உணர்வை ஏற்படுத்தியது. நக்கீரா வினாடிக்கு வினாடி ஆயிரம் விதமான செய்திகள் வெளிவருகின்றன.இதில் எது உண்மை? எப்படி அறிந்து கொள்வது?.
  அமெரிக்க அரசுவின் பொருள் உதவியுடன் தான் இரட்டைகோபுரம் தாக்குதலுக்குள்ளான தாகவும் ஒரு செய்தி உள்ளது. இது எப்படி? முதாளித்துவம் தமதுதேட்டங்களில்அதற்கு வருவாயை பெருக்கவேண்டுமானால் உற்பத்திசக்திகளையும் மனிதகுலத்தின் ஒரு பகுதியையும் காவு குடுக்கவேண்டிய தேவையிருக்கிறது.வேறு வார்த்தைகளில் சொல்வதானால் வணிகப் போர் ஆரம்பிக்கப்பட்டவிட்டது. இதை எப்படி துவங்குவது?
  ஒன்று இனத்தை இனத்திற்கு எதிராக மோதவிடவேண்டும்.அல்லது மதத்தை மதத்துக்கெதிராக மோத விடவேண்டும். கடந்தகாலங்களில் மூஸ்லீம் மக்களக்கெதிரான திட்டமிட்ட பிரசாரங்கள் இதைத்தான் எமக்கு அறிவுறுத்துகின்றன.
  நிச்சியம் இப்படியான பிரச்சாரங்களில் இருந்து நீங்கள் விடுபடவேண்டும். இதன் உண்மைத்தன்மையை அறிய முயற்சிக்க வேண்டும்.

  Reply