1989ஆம் ஆண்டு தொடக்கம் 14 பேரை கொலை செய்த நபர் ஒருவரை 21 வருடங்களின் பின்னர் பொலிஸார் கைது செய்துள்ளனர். சிறிலங்காவின் தென்பகுதியிலுள்ள எம்பிலிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 51 வயதான ஆறு பிள்ளைகளின் தந்தையான நபரே கைது செய்யப்பட்டவராவார். குறித்த நபர் எம்பிலிப்பிட்டிய, தங்காலைப் பகுதிகளைச் சேர்ந்த 13 பேரை படுகொலை செய்து புதைத்ததாக ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
14வது நபரை கொலை செய்து புதைத்ததன் பின்னர் பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இவர் தாம் செய்த கொலைகள் குறித்து ஒப்புக்கொண்டுள்ளார். காணிப் பிரச்சினை காரணமாக அண்மையில் 22 வயதான ஒருவரைக் கொலை செய்து வாழைத் தோட்டமொன்றில் புதைத்தமை குறித்தும் தற்போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடைசியாக கொலையுண்டவருக்கு இறுதியாக கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்பு தொடர்பாக விசாரணை நடத்தியபோதே கொலையாளியை கண்டுபிடிக்க முடிந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
chandran.raja
இவர் முப்பதுவயதில் தான் கொலைசெய்யப் புறப்பட்டிருக்கிறார். எங்களிடம் இதைவிடப் பெரியசாதனைப் பட்டியல் இருக்கிறது. இந்த விஷயத்தில் வடக்கை வெல்லுமா தெற்கு? கும்பிட்டு…கூடாப் படுத்திருந்து….தோளில் கைபோட்டு….சாப்பாட்டில் நஞ்சு கலந்து.. இப்படி அடுக்கிக்கொண்டு போனால்… எம்பிட்டு வரும்?.