பொஸன் நோன்மதி தினத்தை முன்னிட்டு யாழ். நாகவிகாரையில் மாபெரும் பொஸன் அலங்காரப் பந்தல் நாளை (June 25 2010) முதல் காட்சிப்படுத்தப்படவுள்ளது. யுத்தம் காரணமாக 30 வருடங்களின் பின்னர் பொஸன் அலங்காரப் பந்தல் காட்சிப் படுத்தப்படவிருப்பதாக படைத்தரப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடூர யுத்தம் காரணமாக முப்பது வருடங்களின் பின் முதல் முறையாக யாழ்.பிரதேசத்தில் மக்கள் கண்டு களிப்பதற்காக யாழ்ப்பாண நாகவிகாரையின் விகாராதிபதி, உத்தரலங்கா பிரதான சங்க நாயக்கர் ஞானரத்தின தேரரின் உபதேசத்திற்கமைய யாழ்.பாதுகாப்புப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க உட்பட இராணுவ விரர்கள், பொலிஸார் ஆகியயோரின் ஏற்பாட்டில் நாளை (25-06-2010) மாலை 6.30 மணிக்கு மாபெரும் பொஸன் அலங்காரப் பந்தல் காட்சிப்படுத்தப்படும். இதன்மூலம் விருது ஜாதகக் கதை பற்றிய விளக்கமளிக்கப்படும். தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு இந்த அலங்காரப் பந்தல் மக்களுக்கு காட்சிப்படுத்தப்படும்.
இவ்வாறு அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.