‘ரெடி’ திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக பிரபல ஹிந்தித் திரைப்பட நடிகர் சல்மான் கான் நேற்று இலங்கை வந்து சேர்ந்தார். இப்படத்தில் சல்மான்கான் நடிக்கும் முதல்காட்சி நேற்றுக் கொழும்பில் படமாக்கப்பட்டது.
கொழும்பையும் அதனைச்சூழவு ள்ள பகுதிகளிலுமே ‘ரெடி’ திரைப் படத்தின் படப்பிடிப்பு இடம்பெற வுள்ளது. இத்திரைப்படத்தின் வெளிப்புறப் படப்பிடிப்பு முழுவதும் இலங்கையிலேயே இடம்பெறவுள்ளது.