நாளை (June 24 2010) தமிழ் நாடு கோவையில் ஆரம்பமாகவுள்ள உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் இலங்கை மலையக மக்களின் பாரம்பரிய கலையான ‘காமன் கூத்து’ அரங்கேற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஹட்டன் தமிழ்ச்சங்கத் தலைவரும். கவிஞருமான சு.முரளிதரன் மேற்கொண்டுள்ளர். செம்மொழி மாநாட்டின் இலங்கைக் குழுத்தலைவரான பேராசிரியர் கா.சிவத்தம்பியின் வேண்டுகோளுக்கிணங்கவே காமன் கூத்துக் கலைஞர்கள் அங்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மலையத்தைச் சேர்ந்த நாடகக் கலைஞர் இரா.பிரான்சிஸ் ஹெலன் நெறியாள்கையில் 14 பேர் கலைஞர்கள் அடங்கிய குழுவினர் இதற்காக தமிழகம் செல்கின்றனர்.