தமிழ்ச்செம்மொழி மாநாடு நாளை கோவையில் ஆரம்பம் – மாநாட்டில் மலையக காமன் கூத்து

semmoli.jpgஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நாளை கோயம்புத்தூரில் (கோவையில்) கோலாகலமாக ஆரம்பமாகிறது. நாளை ஆரம்பமாகும் மாநாடு எதிர்வரும் 27ம் திகதி வரை நடைபெறவுள்ளது. நாளைய தினம் காலை 10.30 மணிக்கு ஜனாதிபதி பிரதீபா பட்டீல் செம்மொழி மாநாட்டைத் தொடக்கி வைக்கிறார்.

முதலமைச்சர் மு. கருணாநிதி தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டிற்கு உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து தமிழ் அறிஞர்கள் கலந்து கொள்கின்றனர். 49 நாடுகளைச் சேர்ந்த 536 தமிழறிஞர்கள் பங்குபற்றுகின்றனர். இந்தியாவிலிருந்து 5000 அறிஞர்கள் பங்குபெறுகின்றனர். தமிழ் மொழிக்குச் சிறப்புகள் சேர்க்கும் வகையில் தமிழ்ச் சமுதாயம் உலக அரங்கில் உன்னத நிலை பெற வேண்டும். இந்த மண்ணில் பிறக்கும் எல்லா உயிர்களுக்கும் சமதர்மம் கிடைக்க திருவள்ளுவர் சொன்ன மணிமொழியாம் தமிழ்மொழி வழிவகை செய்ய வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, செம்மொழி என்ற சிறப்பைச் சங்க இலக்கியங்கள் மூலம் தமிழ் அடைந்திருந்தாலும், அதற்கு முறையான ஒப்புதல் 2004 ஆம் ஆண்டில்தான் கிடைக்கப் பெற்றது. இந்தப் பெருமையைக் கொண்டாடும் வகையிலேயே உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டிற்கு உலகெங்கிலுமிருந்து தமிழறிஞர்கள் பலர் வருகை தரவுள்ளனர் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த்துறைத் தலைவராக விளங்கும் பேராசிரியர் முனைவர் ஜார்ஜ் ஹார்ட் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளார் எனவும் அவர் கூறினார்.

செம்மொழி மாநாட்டில் மலையக காமன் கூத்து

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் மலையக பாரம்பரிய கலையான காமன் கூத்து அரங்கேற உள்ளது. எதிர்வரும் 24ம் திகதி கலாசார நிகழ்வின் போது காமன்கூத்து அரங்கேறவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை இலங்கை குழுவில் இடம்பெற்றுள்ள ஹட்டன் தமிழ்ச் சங்கத் தலைவரும், கவிஞருமான சு. முரளிதரன் மேற்கொண் டுள்ளார். இலங்கை குழுவின் தலைவரான பேராசிரியர் கா. சிவதம்பியின் வேண்டுகோளின்படி முரளிதரன் இதனை ஏற்பாடு செய்துள்ளார்.

மலையக மக்கள் கலை அரங்க ஏற்பாட்டில் 14 கலைஞர்கள் இடம்பெறுகின்றனர். மலையகத்தைச் சேர்ந்த நாடக கலைஞர் இரா. பிரான்ஸிஸ், ஹெலன் நெறியாள்கையில் என் சாம்பசிவன் மூர்த்தி, எஸ். சிறிவேதா, பி. விஜயகோபால், எஸ். பிரேமகுமார், எம். தியாகராஜா, வி. இராமர், எஸ். போல் பெரேரோ, வசந்தி ஹெலன், கிறிஸ்டிலா இராமர், பி. டலாதேவி உட்பட 14 பேர் குழுவில் செல்கின்றனர்.

Show More
Leave a Reply to Rohan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • Rohan
    Rohan

    தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் இஸ்லாமியத் தமிழர்களே குரல் கொடுக்க வேண்டியிருக்கிறது!

    “Tamil Nadu Chief Minister M.Karunanidhi should remember that it was a Lankan Tamil, Fr. Xavier S.Thaninayagam (1913-1980), who had organised the First World Conference on Tamil Studies in Kuala Lumpur in 1966,” Azwer said.

    Two years earlier, the Catholic priest, scholar and linguist from Jaffna, had founded the International Association of Tamil Research (IATR). Popularly known as Thaninayagam Adigalar, he was instrumental in organising world Tamil conferences in Chennai, Paris, Jaffna and Madurai. To commemorate his contribution to the internationalisation of Tamil, the people of Madurai had installed his statue.

    Tamil professor, R.E.Asher of Edinburgh University, had said that Fr.Thaninayagam had contributed more to the internationalisation of Tamil than , Beschi, Caldwell and Pope. The fact that he knew all the major European languages enabled him to approach Tamil from a pathbreaking universal angle.

    “There should have been a portrait of Thaninayagam Adigalar on the stage at Coimbatore or there should have been a venue named after him.But nothing of this kind happened,” Azwer said.

    Reply