இந்தச் சம்பவம் புத்தள நகர பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். புத்தளையைச் சேர்ந்த முகமட் ரஸ்மி என்ற மூன்று வயதுச் சிறுவனே கடத்தப்பட்டவராவார்.
சிறுவனைக் கடத்திய நபர் குறிப்பிட்ட வீட்டில் தங்கியிருந்து சிறுவனுக்கு இனிப்பு பண்டங்களைக் கொடுத்து சிறுவன் மீது அளவற்ற பாசம் கொண்டவர் போல் நடித்து சிறுவனை அயலிலுள்ள கடையொன்றிற்கு தூக்கிச் சென்றுள்ளார். சிறுவனைக் காணாத தாய், சிறுவனைக் கூட்டிச் சென்றவரின் கையடக்கத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சிறுவனை உடன் கூட்டி வருமாறு கேட்டுள்ளார்.
விரைவில் கூட்டிவருவதாகக் கூறிய அந்நபர் சிறிது நேரம் சென்றதும் சிறுவனின் தாய்க்கு தொலைபேசி மூலம் தொடர்பினை ஏற்படுத்தி ஏழரை இலட்சம் ரூபாவின் கப்பமாக தரும் பட்சத்தில் சிறுவனை விடுவிக்கலாம் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து தாய் அயலிலுள்ள கடைப்பக்கம் சென்ற போது சிறுவன் மோட்டார் சைக்கிளொன்றில் கூட்டிச் செல்லப்பட்டதாகவும் தகவல் கிடைத்தது. கடத்தல்காரர்களினால் கடத்தப்பட்ட சிறுவனையும் தாயுடன் கதைக்குமாறு தொலைபேசி தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்தாகவும் தாய், புத்தளைப் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட புகாரில் தெரிவித்துள்ளார்.
சிறுவனைக் கடத்திய நபர் வர்த்தகம் தொடர்பான விடயல்களை கதைக்கும் பொருட்டு வீடு வந்து தங்கியிருந்த போதே சிறுவன் கடத்தப்பட்டதாகவும் பொலிஸ் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.