‘2015 ஆண்டுக்கிடையில் யாழ் அபிவிருத்தியில் முழுமை பெற வேண்டும்!’ – யாழ் அரசாங்க அதிபர்

Ganesh_GA_Jaffnaயாழ்.மாவட்டம் 2015ஆம் ஆண்டுக்கிடையில் அதன் அபிவிருத்தியில் பாரிய மாற்றத்தைப் பெற வேண்டும் எனவும்,  அதற்கான திட்டங்களை தயாரித்து திறம்பட செயற்படுமாறும் யாழ்ப்பாண அரசாங்க அதிபர் கே. கணேஸ் திணைக்கள தலைவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். யாழ் செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி தொடர்பான மீளாய்வுக் கூட்டத்தில் திணைக்களத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடுகையிலேயெ அவர் இவ்வாறு பணிப்புரை விடுத்தார்.

யாழ்.மாவட்டம்  சகல தறைகளிலும் வளாச்சியடைய வேண்டும், கல்வி சுகாதாரம், போக்குவரத்து விவசாயம், எனப் பல்வேறு துறைகளையும் கட்டியெழுப்ப வேண்டிய தேவை  இன்றுள்ளது இதற்காக அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Show More
Leave a Reply to rohan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • rohan
    rohan

    அடி வாங்கிய தமது (தமிழ்) சகோதரர்களுக்கு வீடு கட்டித் தரவே ஜனாதிபதியிடம் காசு இல்லை. இதற்குள் நீங்கள் வேறு சுத்த நியூசென்ஸ்.

    Reply